14 October 2016

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)

நாய்க்குக் கூட தெரிஞ்சுருக்கு :)
    ''நம்ம தலைவரோட நாய்க்கு விசுவாசம் அதிகமா ,எப்படி ?’’
     ''தலைவரோட 'சின்ன வீடு' வந்தா மட்டும் வாலாட்டுதே !''

இப்படியும் அலர்ஜி ஆகுமா ?
              ''அலர்ஜி என்கிற வார்த்தையைக் கேட்டாலே பத்திக்கிட்டு வருதா,ஏன் ?''
            ''அலர் 'ஜி'க்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு ?''

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)
            ''என்னங்க ,ஆயுத பூஜையில் வைக்க ஆயுதம் கொண்டு வரச் சொல்லிட்டு ,கையிலே சின்ன பாட்டிலை எதுக்கு கொடுக்கிறீங்க ?''
             ''கண்ணீரைப் பிடிக்கத்தான் ...அதைத்தானே நீ ஆயுதமா பயன்படுத்தி காரியம் சாதிச்சுக்கிறே!''
இந்திய பல்கலைக் கழகங்கள் TOP 10ல் வரும் ,எதில் ?
உலகத்திலே  தலைசிறந்த நூறு பல்கலைகழகங்களில்  ஒன்றுகூட இந்தியாவில் இல்லையாம் ...
இந்த ஆராய்ச்சி முடிவை அறிவித்தவர்கள் ...
நன்கொடை எனும் முக்கிய காரணியை முக்கிய விசயமாய் எடுத்துக் கொண்டு புள்ளி விவரத்தை திரட்டவில்லை போலிருக்கிறது !

20 comments:

 1. 01. நாயும் அந்த ஜாதியோ…?
  02. அதானே...
  03. ஹாஹாஹா
  04. மானக்கேடுதான்

  ReplyDelete
  Replies
  1. நாய்க்கு ஏது பெரிய வீடு சின்ன வீடு :)
   ஜி,நமக்கு மட்டும்தானே சொந்தம் :)
   இதைவிட பொருத்தமான ஆயுதம் உண்டா :)
   சொல்லாட்டி வெட்கக் கேடு :)

   Delete
 2. எல்லா நாய்க்கும் சின்னவீடுதான் பிடிக்கிது...!

  ‘அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ’ மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்று பாட முடியாது...ஜி!

  அழுது அழுது பெத்தாலும் அவதான் பெக்கனுமுன்னு... நீங்கதான் அடிக்கடி சொல்வீங்களே... மாமா...! ஆமா தீபாவளிக்கு இன்னும் பட்டுப்புடவையே எடுக்கலை... ஹுக்கும்...!

  இந்தியா வளரும் நாடுதானே... பல்கலையிலும் பணம் வாங்கி வாங்கி வளருது...! விரைவில் டாப் 10 வரிசையில் முதல் இடம் பிடிக்கும்...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. நாய் பிஸ்கட் இங்கேதானே கிடைக்குது :)

   அலர்முலைச் செவிலியம்.....?பெண்டியம் மட்டுமே தெரியும் எனக்கு :)

   பட்டுப் புடவை எடுக்கலைன்னா என்கூட பேசாதீங்க :)

   நல்லாவே வளருது ,வாங்குவதில் :)

   Delete
 3. Replies
  1. ஆனாலும் ,அந்த நாய்க்கு விசுவாசம் அதிகம்தானே :)

   Delete
 4. Replies
  1. சக்தியின் வடிவமாய் இருக்கிற பெண்ணிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதத்தை ரசிக்க முடியுதா :)

   Delete
 5. இந்தியாவின் கல்வி முறை அத்தனை கேவலமாக இருக்கிறது.
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. வெளிநாட்டில் ,குறிப்பாக இந்திய மூளைக்கு அதிக வரவேற்பு இருக்கே ,அதெப்படி :)

   Delete
 6. சின்ன வீடு ஊட்டி வளர்க்கிறாங்க போல் அதுதான் நாய் வாலை ஆட்டி விசுவாசம் காட்டுது போல
  அலர்ஜிக்கு மரியாதை காட்டத்தான் வேண்டும் இல்லையென்றால் .......
  மனைவிக்கே ஆயுத பூசை செய்ய வேண்டும்
  அப்படித்தான் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வளைத்துப் போட்டுக் கொள்வதில் கெட்டிக் காரங்கதான் :)
   ஜி ஹைச்சில் இருக்க வேண்டியிருக்குமா :)
   ஆயுதத்தை பிரயோக்கிக்காமல் இருப்பதற்கா:)
   அதில் நம்மை அடிச்சுக்க ஆளில்லை :)

   Delete
 7. 'சின்ன வீடு' போடுற சாப்பாட்டில
  நாய் மடங்கிட்டுதோ

  ReplyDelete
  Replies
  1. நாய் மட்டுமா :)

   Delete
 8. கல்லூரிக் கல்வியில் மனப்பாடக் கல்வியே அதிகம் செலுத்தினால் எப்படி இடம் பிடிக்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. புதிய கல்விக் கொள்கையிலாவது இது மாறுமா :)

   Delete
 9. டாஸ்மாக் நாட்டில் கண்ணீர் ஆயதம் கிஞ்சித்தும் பயன்படவில்லையே........

  ReplyDelete
  Replies
  1. இதற்கான காரணத்தை ,கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் :)

   Delete
 10. 1. நாய் யாரைப்பார்த்தாலும் வாலாட்டும் நாய் போல!!!

  2. ஆயுத பூஜை ஹஹஹஹ

  நம் கல்வி முறையை மாற்றாத வரையில் உருப்படப் போவதில்லை நம் நாடு..

  ReplyDelete
  Replies
  1. தலைவியைப் பார்த்தால் அதிகமாவே ஆட்டும் :)

   ஆயுதம் சரிதானே :)

   இந்த கல்வி முறை ,கிளர்க்குகளை உருவாக்க வெள்ளையர்கள் கொண்டு வந்தது என்று தெரிந்தும் மாற்றம் வரவில்லையே :)

   Delete