15 October 2016

மனைவியின் அமைதி சந்தோஷம் ,மாணவனின் அமைதி ...:)

 டாக்டருக்குத்தான்  கற்பனை அதிகம் போலிருக்கு   :)   
        ''கற்பனை ஓடலேன்னு சொன்னா , இரும்புச் சத்து மாத்திரை எதுக்கு கொடுக்கிறீங்க ,டாக்டர் ?''
        ''மூளையிலே துரு பிடிச்சிருந்தா சரியா போகும், அதுக்குத்தான் !'' 

இப்படி பதில் சொன்னால் வாத்தியார் என்ன செய்வார் :)
              ''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
            ''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
             ''அதிலேயே எழுதி இருக்கும் !''

ஆப்ரேசன்  பண்ணிக் கொல்லாம விட்டாரே :)
            ''அந்த டாக்டர் ஏன் உன்னை அடித்தார் ?''
             ''நீங்க சிவில் சர்ஜனா ,கிரிமினல் சர்ஜனான்னு கேட்டு தொலைச்சிட்டேன்!''
மனைவியின்  அமைதி சந்தோஷம்  ,மாணவனின்  அமைதி ...:)
         ''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
         ''முட்டாளோட கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''

கொசுக் கடியில் இருந்து விடுதலையாக ....!
தக்காளிக்கு கொசுவை விரட்டும் சக்தி உண்டென்று ஆராய்ந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
தக்காளி சாறை பூசிக் கொள்வதா ?
தக்காளி சாஸை தடவிக் கொள்வதா ?
தக்காளி ரசத்தைக் குடித்தால் போதுமா ?
தக்காளியை கடித்தாலே போதுமா ?
தக்காளி செடியை படுக்கையை சுற்றி வைத்துக் கொள்ளலாமா ?
தக்காளியை  படுக்கை முழுவதும் பிழியலாமா ?
இதில் எதை செய்தால் கொசுக்கடியில் தப்பிக்கலாம் என்று ஆராய வேண்டியது உங்கள் பொறுப்பு ...
இதுக்கு கொசுக்கடியே தேவலை என்றால் ...விட்டு விடுங்கள் !

24 comments:

 1. நல்லவேளை ஸ்பீட் பெட்ரோல் குடிங்க.. வேகமா ஓடும் கற்பனைக்கு குதிரைன்னு சொல்லாம இருந்தாரே...!!

  "நீங்க எங்கே இருக்கீங்க?
  "அவருக்குப் பக்கத்து வீட்டுல சார்"
  :ஓ... அவர் எங்க இருக்கார்?"
  "எனக்குப்பக்கத்து வீட்டுல சார்" டைப் ஜோக்!

  ஹா.... ஹா.... ஹா...

  ஹா... ஹா... பாவங்க வாத்யார்.

  ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. கற்பனைக் குதிரை எத்தாமல் இருக்க ,எத்தினால் கலந்த பெட்ரோலைக் குடிக்கச் சொன்னாலும் சொல்லுவார் :)

   எ கா ஜோக் சூப்பர் :)

   வாயாலே கெட்டாரா வாத்தியார் :)

   Delete
 2. மூளை கெட்ட ஆளா இருக்கீங்க... எது இருக்கு...? எது இல்லைன்னு கூடத் தெரியலை...! மூளை நல்லா பெரிசா வளர்ற மாதிரி மாத்திரையக் கொடுங்க... ஏமாத்திராதிங்க...!

  பிராக்டிகல் நோட் அடிக்கடி யாரோ திருடிட்டு போயிடுறாங்க... திருட்டு பயலுக... நா ஒஙகள சொல்லலை சார்... அதுக்காக மார்க்க மட்டும் குறைச்சிடாதிங்க... ஒங்க மனசு பெரிய மனசுன்னு எனக்குத் தெரியும்...!

  சர்ஜிக்கல் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் சிக்கல் ஆகி கிரிமி பரவும்... அப்புறம்தான் ஒங்களுக்கே தெரியுமே...!

  இதுக்குத்தான் கூமுட்டைய ஆம்லேட் போட்டுத் திங்காதிங்கிறது...!

  எத்தனை தக்காளிய பாத்திருப்போம்... நாங்க பார்க்காத தக்காளியா...? நீங்க அணுகுண்டே போட்டாலும் அசைய மாட்டோம் தெரியுமில்ல...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. மயிர் வளர்சசிக்கு தரலாம் ,மூளை வளர்ச்சிக்கா :)

   பையன் ரொம்ப பிராக்டிகலா யோசிக்கிறானே :)

   கிருமி பரவும் என்று டாக்டரும் நோயாளியை பார்க்கலைன்னா ,என்னதான் பண்றது :)

   அதைதானே ,செம டேஸ்டுன்னு சொல்றான் :)

   தக்காளியில் தானே எங்க பிறப்பேன்னு சொல்லவும் கூடும் :)

   Delete
 3. Replies
  1. தன பெயரை மறந்த மாணவனை ரசிக்க முடியுதா :)

   Delete
 4. 1. அப்ப முதல்ல மருந்துக் கடைக்குப் போய் இரும்புச் சத்து மாத்திரை வாங்கணும்...பின்ன மூளை துருப் பிடிச்சுருக்கே..!!

  2. பையன் செம கில்லாடிதான் ..

  3. ஹஹஹஹஹ்ஹ் சிவில், கிரிமினல்...

  4. ஹஹஹ்ஹ வாத்தியார் மாட்டிக்கிட்டாரா..

  ReplyDelete
  Replies
  1. பதிவர்களுக்கு மருந்தின் பாதி விலை தள்ளுபடியாமே :)
   நல்லா வருவான்னா சொல்றீங்க :)
   லாயர் இருக்கலாம் டாக்டர் இருக்கக்கூடாதா:)
   போட்டு வாங்கிகிட்டாரோ :)

   Delete
 5. 01. இவருதான் ஒரிஜினல் டாக்டர்
  02. நல்ல பதில்
  03. பின்னால் நிழல் அப்படித்தான் இருக்கு
  04. புரிஞ்சுடுத்து
  05. தக்காளி தோட்டத்துக்குள்ளே போய் படுத்துக்கிறலாம்

  ReplyDelete
  Replies
  1. கூட்டம் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தே சந்தேகப் பட்டேன் :)
   அவனுக்கு வாத்தியார் யாரு :)
   நிஜம் ஒன்று நிழலாடுகிறதோ:)
   இது மட்டும் நல்லா புரியுமே :)
   செடி மேலே கட்டிலைப் போட்டுகிட்டா :)

   Delete
 6. இரும்பு சத்து துருவை நீக்குமா
  இது பழைய டைப் ஜோக்
  கிரிமினல் சர்ஜன் என்று நிரூபித்து விட்டார்
  நன்றாகப்[ புரிந்து கொண்ட மாணவன்
  மீண்டும் கொசுவா. நீங்கள் எந்த மாத்திரை சாப்பிட வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இரும்பின் பலம் குறைந்தால் துரு தானே வரும் :)
   எல்லா டைப்பும் எல்லா நேரமும் பொருந்தும்தானே :)
   படத்தைப் பார்த்தாலே தெரியுதே :)
   இது மட்டும் தெளிவா புரியும் :)
   கொசு புராணம் இத்துடன் முடிந்தது :)

   Delete
 7. கொசுக்கடியை விட உங்களது தக்காளி கடி நன்றாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நாட்டு தக்காளியாச்சே,சுவைக்குச் சொல்லவா வேணும் :)

   Delete
 8. ரசித்தேன் ஜி! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆப்ரேசன் பண்ணிக் கொல்லாம விட்டதையுமா :)

   Delete
 9. வாத்தியாருக்கே இந்தக் கதியா....??????

  ReplyDelete
  Replies
  1. யானைக்கு அடி சறுக்குவதில்லையா :)

   Delete
 10. Replies
  1. த ம வாக்குரிமையை, நீங்க பயன்படுத்தினால்தான் ரசித்ததை ஒப்புக் கொள்வேன் :)

   Delete
 11. ரசித்தேன்.
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. முட்டாளோட கேள்விக்கு பதில் சொல்லக் கூடாதுதானே :)

   Delete
 12. கொசுக்கடியில் தப்பிக்கலாம் என்று
  தக்காளியின் விலையை ஏற்றப்போறாங்களே!

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொன்னாலும் தக்காளி விவசாயிக்கு கிடைக்கும் பலன் அற்பம்தான் :)

   Delete