16 October 2016

இப்படியும் வழிக்குக் கொண்டு வரலாமா :)

இப்படியும் வழிக்குக் கொண்டு வரலாமா :)  
             ''திருட்டுக் கேசிலே உள்ளே இருக்கிற என்னை ,முன்பின் தெரியாத நீங்க ஜாமீன்லே எடுக்கிறீங்களே ...உங்களுக்கு எப்படி கைமாறு செய்வேன் ?''
             ''ஏரியா இன்ஸ்பெக்டரிடம் இனிமேல் ஒழுங்கா மாமூலைக் கொடுத்தாலே போதும் !''

இது என் சொந்த அனுபவம் இல்லை :)
          ''வலைப் பதிவரா இருந்துகிட்டு ,பையன்கிட்டே  ஒரு வார்த்தையை சொல்ல முடியலையா ,ஏன் ?''
          ''முதல் ரேங்க் வரணும்டா என்று சொன்னால் ,நீங்க முதல்லே தமிழ்மணத்தில் வந்து காட்டுங்க என்று சொல்றானே !''

ஆனாலும் இம்புட்டு வாய் ஆகாது :)
          '' காஸ் சிலிண்டர்  போடுகிறவரோட  பெண்டாட்டிக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்னு ஏன் சொல்றே ?''
         ''பலபேர் வீட்டிலே அடுப்பு எரிய என் வீட்டுக்காரர்தான் காரணம்னு சொல்றாளே ''!
மனைவிக்கு சயனைட்டே  பெட்டர் :)
             ''என்னங்க ,சயனைட்டை பற்றி கேட்டா 'அதுவும் உன்னே மாதிரிதான், ஆனால் குணத்திலே நேர் எதிர் 'னு சொல்றீங்களே ,எப்படி ?''
            ''அது உடனே ஆளைக் கொல்லும்,ஆனா நீ அப்படி இல்லையே !''

NRI க்கள் அந்நிய நாட்டில் சுதந்திர பிரஜைகள் :)
அமெரிக்க நரி நாட்டாண்மை செய்தே கிடைக்கு ரெண்டு ஆடுகளை தின்று கொழுத்துப் போய் திரிவது கருத்துக்கணிப்பில் நிரூபணம் ஆகியுள்ளது ...
இருபது நாட்டவர்களின் அறிவுத்திறனை ஆய்வு செய்ததில்  கடைசி  இடம் அமெரிக்கர்களுக்குத் தானாம் !
முதலிடம் வகிப்பவர்கள்  ஜப்பானியர்களாம்...
ஹிரோசிமா ,நாகசாகியில் அணுகுண்டு விழுந்தாலும் அவர்கள் எழுந்து நிற்கிறார்கள் !
குட்டையாய் இருந்தாலும் அவர்கள் வளர்ச்சியில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள் !
வெளிநாட்டுக்கு அறிவுத் திறனை விற்றுக் காசாக்கும் அடிமைகள் வரிசையில் நமக்கு முதல் இடம் இருக்கக் கூடும் !

20 comments:

 1. 01. கைமாறு விளக்கமாரு மாதிரி இருக்கு.
  02. ஆஹா எல்லா பதிவரையும் சூடேற்றி விட்டீர்களே ஜி
  03. அப்படீனாக்கா.. தீப்பெட்டி கடைகாரன் ?
  04. இது வாழ்நாள் கொலையாளியா ?
  05. உண்மையான வார்த்தை ஜி

  ReplyDelete
  Replies
  1. வெளக்கமாறை ஏன் அசிங்கப் படுத்துறீங்க :)
   வாரிசுக்கு பதில் சொல்லித்தானே ஆகணும் :)
   காஸ் லைட்டர் விற்பவரையும் சொல்லலாம் :)
   வாழ்நாள் சாதனையாளியை அப்படி சொல்லப்படாது :)
   நீங்கள் சொன்னால் சரிதான் :)

   Delete
 2. இதுதான் கைமாறு கருதிச் செய்த உதவியோ...?!

  பால் மணக்குது, பழம் மணக்குது, தமிழ் மணக்குது அழகர் மலையிலே! பாரைச் சுற்றி, பகவான்ஜீ நாமம், எங்கும் ஒலிக்குதாம்!

  இருந்தாலும் ஒங்க வீட்டுக்காரர்... இத்தனை சின்னவீடு வச்சுக்ககூடாது...! முடியலை...! அவ்...அவ்...!

  ஏங்க... எ கழுத்தில தாலி கட்டிட்டு... ஒங்க கழுத்தில சயனைடு குப்பியக் கட்டிக்கிட்டீங்க...!

  நரிக்கு நாட்டாண்மை கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேக்கத்தானே செய்யும்...!
  விழுவதல்ல... விழுந்தவுடன் எழுவதில்தானே வெற்றி...! குட்டையாய் இருந்தாலும் வியந்து உயரப்பார்க்க வைத்த உயந்தவர்கள் அல்லவா...?
  “காசேதான் கடவுளப்பா... அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா...” என்று சொல்லும் உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது... உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது...!

  த.ம. 1


  ReplyDelete
  Replies
  1. கைமாமூல் கருதி செய்த உடவின்னும் சொல்லலாம் :)
   டாஸ்மாக் பாரைச் சுற்றியா:)
   அடுப்'பெரிய' என்றாலே சின்ன வீடுதானா :)
   விடுதலைக்கு அது ஒண்ணுதானே வழி:)
   யானை படுத்தாலும் குதிரை மட்டம்னு நாமதான் பெருமையாய் சொல்லிக்கணும் :)

   Delete
 3. Replies
  1. பச்சைக் கலர் கேஸ் டிவுப் அருமைதானே :)

   Delete
 4. கேஸ் காரர் மனைவி சொன்னது சரிதான் - ஒரு வகையில்!

  ReplyDelete
  Replies
  1. பாவம் , புருஷன் தயவால் இன்னொரு வீட்டிலும் அடுப்பெரிவது :)

   Delete
 5. Replies
  1. சிலிண்டர் சிகப்பையும்தானே :)

   Delete
 6. அடடா... முன்பின் தெரியாதவருக்குத்தான் எம்புட்டு பெரிய்......ய்ய்ய்...ய மனசு...இந்த மனசுலதான் இந்தீயா பணக்கார நாடாக ம இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நம்பர் ஒன் ஆகக்கூடும் :)

   Delete
 7. மிகவும் ரசித்தேன் சகோதரா
  நன்று நன்று

  ReplyDelete
  Replies
  1. பலபேர் வீட்டிலே அடுப்பு எரிய காரணமாய் இருப்பவர் ,அதிக காசு கேட்டு வயிறு எரிய காரணமாகி விடக்கூடாது :)

   Delete
 8. அனைத்தும் ரசித்தேன். நன்று

  ReplyDelete
  Replies
  1. காஸ் சிலிண்டர் போடுகிறவரோட பெண்டாட்டியையும்தானே :)

   Delete

 9. வலைப்பதிவரா இருந்துகிட்டு
  பையன்
  முதல் ரேங்க் வாங்க முன்...

  அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. நல்ல மிரட்டல்தானா :)

   Delete
 10. ராங்கும், காஸ்காரரின் மனைவியின் வார்த்தையும் சரிதானோ!!!

  அனைத்தையும் ரசித்தோம்!!

  ReplyDelete
  Replies
  1. ரேங்க் என்ன நிரந்தரமா :)
   காசு வாங்காமல் சப்ளை செய்தால் சரியென்று ஒத்துக்கலாம் :)

   Delete