18 October 2016

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ :)

மறுபடியும் நிரப்ப முடிந்தால் தானே ரீஃபில் :)             
              ''காலியான  ரீஃபிலை  பார்த்து  என்ன யோசிக்கிறே ?''
             ''மறுபடியும்   மையை  ரீ  ஃபில்  பண்ண முடியுமான்னுதான் !''
ஆகா ,என்ன பொருத்தம் :)
            'அந்த மர்மக் கதை எழுத்தாளர் திடீரென்று எப்படி இறந்தார் ?''
           ''மர்மக் காய்ச்சல்  வந்துதான்  !''

தாலி கட்டுற நேரத்தில் இப்படி ஒரு சோதனையா :)
            ''ஐயரைப் பார்த்ததும் , மேடையில் இருந்த மாப்பிள்ளை தலைதெறிக்க  ஒடுறாரே ,ஏன் ?''
            ''ஏற்கனவே ஐயரோட  பொண்ணைத்தான்  கல்யாணம் கட்டிகிட்டு  இருந்தாராமே  !''

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ :)
            ''உனக்கு லவ் லெட்டர் கொடுத்தவர் ப்ராய்லர் கோழிக்கறிக் கடை வச்சிருப்பார் போல இருக்குன்னு ஏன் சொல்றே ?''
             ''புரட்டாசி மாசம் எப்போ முடியும்னு காத்துக்கிடக்கிற ப்ராய்லர் கடைக்காரன் மாதிரி ,உன் பதிலுக்காக தவிச்சுக்கிட்டு இருக்கேன்னு எழுதியிருக்காரே !''

பழைய பாட்டைப் பாடும் மருமகள்  :)
          "உன் பொண்டாட்டிகிட்டே ஜாடை மாடையா பாடுறத நிறுத்த சொல்லுடா !"
          "என்னம்மா , பாடுனா ?"
          "கிழவிக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் சுடுகிறதுன்னு பாடுறா !"

28 comments:

 1. 01. இப்படித்தான் யோசிக்கணும் சீக்கிரமே விஞ்ஞானியாகி விடலாம்
  02. இனிமேல் மர்மக்கதை எழுதக்கூடாது
  03. மாமனாருக்கு பயப்படலாமா ? கெத்தாக பேசணும்
  04. கோழிக்கடைகாரன் எழுத்து இப்படித்தான்.
  05. எப்பத்தான் பாடகியாவது ?

  ReplyDelete
  Replies
  1. மையை நிரப்பி எழுதி பெரிய ஞானிகூட ஆகலாம் :)
   இனிமேல் அவர் கதையைத்தான் யாராவது எழுத வேண்டும் :)
   கொத்தாக தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்தால் என்ன செய்வது :)
   புரட்டாசி அப்படி படுத்துதே :)
   பாடகி ஆகணும்னு இப்படி பாடாவதியாய் பாடலாமா :)

   Delete
 2. சுருளிராஜனுக்கு அண்ணனோ!

  எல்லாமே மர்மம்!

  திடீர்த் திருப்பம்!

  டைம்லி ஜோக்!

  ஹா.... ஹா... டைம்லி ஸாங்!

  ReplyDelete
  Replies
  1. அந்த மாந்தோப்பு கிளிகூட மனதை விட்டு பறந்து விட்டது ,சுருளி வாழ்கிறாரே :)

   போன பிறகுமா :)

   நாதஸ்வரம் ஈனஸ்வரத்தில் பாடியிருக்குமோ :)

   புரட்டாசி பிறந்தாலே கொண்டாட்டம் ,கறிக் கடைகளுக்கு :)

   இதில் எங்கே வந்தது டைம்லி :)

   Delete
 3. எல்லாமே ஒன்ஸ் யூஸ்... அண்ட் துரோதான்... தப்பா நெனச்சுக்காதே டார்லிங்... நா ஒன்னச் சொல்லலை...!

  ஒன்னுமே புரியல உலகத்துல என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

  ஐயரோட பொண்னை ஓட்டிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கிட்ட மாப்பிள்ளை... அத ஓட்டிவிட்டிட்டு... இப்ப கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போக விடுவாரா...?!

  ‘ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச சேதி சொன்ன மன்னவரு தான்...!’ புரட்டாசி கார்காலம் முடியறதுக்குள்ள... பதில எதிர்பார்க்கிறாரு... இல்லைன்னா குளிர்காலத்த எப்படி தாங்குவாரு... தாக்குப்பிடிக்க முடியாதில்ல...!

  ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே... கிழவின்னு மட்டும் சொல்லித் திட்ட வேண்டாம்... வேற எப்படி வேணுமுன்னாலும் திட்டட்டும்...! என்னோட இமேஸ் பாதிக்கிது...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. ரீஃபில் என்றால் என்னவென்று மணவையார் விளக்குவார் என எதிர்பார்த்தேன்.

   பின்னூட்டங்களுக்கான பகவானின் கவுண்டர் வரக் காத்திருக்கிறேன்.

   ஹ ஹ ஹா

   த ம

   Delete
  2. கலிகாலமோ இல்லையோ ,நிச்சயமாய் இது யூஸ்அண்ட் துரோ காலம்தான் :)

   நீங்க எந்த மர்மத்தை சொல்றீங்க ,அப்போலோ மர்மத்தையா :)

   விடுவாரா மாட்டாரான்னு பொறுத்திருந்து பார்ப்போமே :)

   அதுவும் வளைச்சு வளைச்சு கறியும் சோறும் சாப்பிட்டு சும்மா இருக்க முடியுமா :)

   பார்ற ,கிழவியை கிழவின்னு சொல்லாம குமரின்னா சொல்ல முடியும் :)

   Delete
  3. எங்கிருந்தாலும் மணவையார் மேடைக்கு அழைக்கப் படுகிறார் ,ஃரீபிள் உடன் வரவும் :)

   Delete
  4. ரீஃபில் பற்றி விளக்கினால் அப்புறம் பீல் பண்ண வேண்டியிருக்கும்...! நோ அப் பீல்...!

   Delete
 4. ரிஃபில்லில் மை போட்டு எழுதியவர்களைப் பார்த்திருக்கிறேன்
  மர்மமென்ன மர்மம் அதான் இறந்து விட்டாரே
  நல்ல காலம் ஐயரைப் பார்த்தார்ஐயர் இவரைப்பார்க்கவில்லையா
  செய்யும் தொழிலே தெய்வம் என்பது எல்லாச் செய்கைகளிலும் தெரிகிறதே
  மாமிக்கு என் மேல் என்னடி கோபம் என்று பாடியிருக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ரீபில்லில் சாதா மையை திணிக்க முடியாதே ,ஒரு வேளை,திணித்தாலும் கூட எழுதும்போது வெளியே வருமா ?வந்தாலும் தெளிவாக தெரியுமா ?
   இருந்தாலும் அவருக்கு இப்படியொரு சாவு வந்திருக்கக் கூடாது :)
   அவர் பார்ப்பதற்குள் ஓட்டம் பிடித்து விட்டாரே :)
   அப்படின்னா ,அவரைக் காதலிக்கலாமா :)
   அப்படி ஒரு ஒட்டுதல் இருந்தால் பாட்டே வந்திருக்காதே :)

   Delete
 5. அனைத்தையும் ரசித்தேன். ரீபில்லை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. நன்றாய் எழுதும் ஃரீபில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் தானே :)

   Delete
 6. புராட்டாசி மாதம் என்பதால்.. வாங்கிய பொருள்களுக்கு பணம் வேண்டாமுனு ஒரு பயலும் சொல்ல மாட்டேன்கிறாங்கேளே... தலைவரே....

  ReplyDelete
  Replies
  1. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்னு சொல்வாங்களே தவிர இலவசமா எதயும் தர மாட்டாங்க :)

   Delete
 7. Replies
  1. தாலி கட்டுற நேரத்தில் வந்த சோதனையை ரசிக்க முடியுதா :)

   Delete
 8. அனைத்தும் ரசித்தேன்.
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. மருமகளின் பழைய பாட்டைக் கூடவா :)

   Delete
 9. ஐயர் மருமகன் நிலை கமடியில் உச்சம் ஜீ! நலம்தானே ஜீ?

  ReplyDelete
  Replies
  1. நீங்க கடைசியா போட்ட 'அவனைப் பார்' பதிவில் வந்த பையனின் நிலை போலவே ,இந்த மருமகன் நிலையம் பரிதாபம்தான் :)
   நலத்துடன் இருக்கப் போய்த்தானே தினசரி உங்களைக் 'கடிக்க' முடிகிறது :)

   Delete
 10. ரீ பில் - மர்மக் கதை..- ஐயர் பொண்ணு
  எல்லாம் படு ஜோரு...
  மிக ரசித்தேன்.
  கருத்துகளும் சுவை சகோதரா.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் சரி ,உங்க ஜனநாயக கடமையை மறந்து விட்டீர்களே :)

   Delete
  2. கடமையை 'லேட்டா' செய்தாலும் ,இன்றைய பதிவு த ம மகுடத்தில் 'லேட்டஸ்ட்'டா வர ஆதரவு தந்தமைக்கு நன்றி :)

   Delete
 11. ரீபிள் முதல் ஐயர் பொண்ணு உட்பட அனைத்தும் நன்று

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளைப் பையனுக்கு,இரண்டாம் மாங்கல்ய பாக்கியம் இல்லை போலிருக்கே :)

   Delete
 12. அனைத்தையும் இரசித்தேன். அதுவும் அந்த மர்மக்கதை எழுத்தாளர் மர்மக்காய்ச்சல் வந்து இறந்தார் என்பது காலத்திற்கேற்ற நகைச்சுவை. தொடருங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மர்மக் காய்ச்சல் மட்டுமா ,மருத்துவமனையில் நடப்பதும் கூட மர்மமாவே இருக்கே :)

   Delete