19 October 2016

பொட்டுக்கு சொந்தக்காரி சொன்னா கேட்டுக்கணும் :)

விவரமான தலைவர்தான் :)
             ''உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லைன்னு தலைவர் சொல்றாரே ,இவ்வளவு  தைரியம்  அவருக்கு எப்படி வந்தது ?''
              ''வானம் இடிந்து விழாதுங்கிற  தைரியம்தான் !''

 பொட்டுக்கு சொந்தக்காரி சொன்னா கேட்டுக்கணும் :)
             ''உன் நெற்றிப் பொட்டு  காணாமல் போனதுக்கு ,போலீஸில்  புகார்  சொல்லச் சொல்றீயே,நியாயமா  ?''
              ''என் பொட்டுக்கு சொந்தக்காரரான  நீங்களே இப்படி கேட்கிறீங்களே  ,நியாயமா ?''
போலீஸ்  சார்ஜ்னா  இவருக்கு  தெரியாது போலிருக்கு  !
              ''போலீஸ்காரன் என்கிட்டே வந்து ,எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க ?''
             ''நீங்க நல்லா சார்ஜ் பண்ணுவீங்க என்று எல்லோரும் சொன்னாங்களே !''

சாப்பாட்டு ராமனுக்கு படிப்பு ஏறணும்னா....!
                ''என்னங்க ,நம்ம பையனுக்கு வித வித வாசனையோடு நான் சமைச்சுக் கொடுக்கிறதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
                ''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு ,இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டும்னுதான்   !''

தோசைன்னா ரொம்ப ஆசைதான்!
           "இரண்டு தோசைக் கல்லை ஏன் வாங்குறே ?"
          "தோசை ரெடிஆகிற வேகத்தைவிட,நீங்க  அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே !"

24 comments:

 1. 01. உண்மைதானோ ?
  02. அவனா இவன் ?
  03. நல்ல யோசனைதான்
  04. ஃபாஸ்ட் புட்டு

  ReplyDelete
  Replies
  1. வான் என்ன ,சென்னை ஏர்போர்ட் கண்ணாடியா இடிந்து விழ :)
   இல்லை இவன்தான் அந்த அவன் :)
   மஞ்சிவாடுன்னு சொல்லலாமா :)
   வேஸ்ட் புட்டு ஆகாமல் போனால் சரிதான் :)

   Delete
 2. Replies
  1. தினசரி நீங்கதான் ,உங்க ராசியான கையாலே முதல் வாக்கைப் போடணும் ,ஏன்னா ... இன்றைய 1950 வது பதிவு த ம மகுடம் சூடிக் கொண்டு விட்டதே :)

   Delete
 3. மேல இருக்கிற பாரதி பார்த்திக்கு வாருங்கிற தைரியம்தான்... !

  நன்னா... நெத்திப் பொட்டுல்ல அடிச்ச மாதிரி கேட்டீங்கோ...!

  லத்தி சார்ஜ் பண்ணுவேன்... ‘விசாரணை’ பண்ணி நோக்கும் பண்ணட்டுமா...?!

  வித வித வாசனையோடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிராண்டு ஊதுபத்திய பத்தவச்சு ஒரே சாப்பாட்டைச் சமைச்சுப் போட்டாப் போதுமா...?

  தோசைன்னு இட்லியளவுக்குச் சுட்டுப்போட்டா எப்பூடி...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. பாரதியை இந்த அளவுக்காவது நம்புறாரே :)

   கேட்டது சரி ,மனுஷனுக்கு உறைச்ச மாதிரி தெரியலியே :)

   லாடம் கட்டி அடிக்காம விட்டா சரிதான் :)

   பத்தியச் சாப்பாடு தெரியும் ,இதென்ன பத்திச் சாப்பாடு :)

   அதுக்காக ,வீட்டிலே ஹோட்டல்தோசைக் கல்லா வாங்கி வச்சுக்க முடியும் :)

   Delete
 4. போலீஸ்காரர் கிட்ட போய் இப்படி மொக்கை போட்டா அவர் வேற ஏதாவது கேஸ்ல இவரை உள்ள தள்ளிடப் போறாரு!!!

  அப்புறம் கடைசி விஷயம் ஜோக் இல்லை.. எங்கள் வீட்டில் ஏழு டிக்கெட். ரெண்டு தோசைக்கல் எங்கள் வீட்டிலும் இருக்கிறது.

  :)))

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டில் மூன்று பேர் மூன்று தோசைக்கல் இருக்கிறது

   Delete
  2. சந்தோசப் படணும் , லத்தி சார்ஜ் பண்ணாமல் போனாரே :)

   ஏழு டிக்கெட்டுக்கு இரண்டு என்றால் பரவாயில்லை ,ஒருவருக்கே இரண்டா :)

   Delete
  3. மூன்று தோசைக்கல் எதுக்கு ? தோசை ,சப்பாத்தி ,ஆம்லேட்டை தனித் தனியா போடவா :)

   Delete
 5. படிப்பு வாசனை ஜோக் அருமை

  ReplyDelete
  Replies
  1. படிப்பு வாசனை புரியணும்னா மோப்ப சக்தி அதிகம் வேண்டியிருக்குமோ :)

   Delete
 6. Replies
  1. இரண்டு தோசைக் கல்லையும்தானே :)

   Delete
 7. ரசித்தேன்!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. அந்த பொட்டின் நடுவே பதித்து இருந்த வைரக் கல்லையும்தானே :)

   Delete
 8. Replies
  1. பாரதியார் இருந்திருந்தாலும் ரசித்திருப்பாரோ :)

   Delete
 9. சாப்பாட்டு ராமனுக்கு படிப்பு ஏறணும்னா...!
  இப்படியா பண்ணுறது

  ReplyDelete
  Replies
  1. அப்படியாவது படிக்க மாட்டானா என்ற நப்பாசைதான் :)

   Delete
 10. நல்லவேளை... நான் எந்தப் பொட்டுக்கும் சொந்தக்காரனாக இருக்கக்கூடாதுன்னு என் அம்மா அப்பவே தடுத்துவிட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. சொந்தக காரனோ இல்லையோ வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தாலே போதும் :)

   Delete
 11. பாரதி எழுதியதும் அந்த தைரியத்தில்தானோ
  பொட்டுக்கு சொந்தக்காரர் காணாமல் போகவில்லையே
  அவர் நன்றாக லத்தி சார்ஜ் தானே செய்வார்
  ஒரு வாசனை இன்னொரு வாசனைக்குத் தடங்கலா
  தோசை தின்பதில் அவுட்டாக்க முடியாதவர்

  ReplyDelete
  Replies
  1. மகாகவியை இதிலே வம்புக்கு இழுக்காதீங்க :)
   அப்படி போயிருந்தால் கூட மகிழ்ந்திருப்பார் :)
   இப்போ செய்யாமல் விட்டாரே :)
   இவனுக்கு அப்படியிருக்கே :)
   இட்லி போல் மொத்தமாய் தோசை சுட முடிந்தால் தேவலை :)

   Delete