20 October 2016

இரண்டு மனைவிகளுக்கும் ஒரே பெயரா :)

அவரை  பெரிய படிப்பாளின்னு நினைச்சது ,நம்ம தப்பு.:)
              ''தலைவரே ,பார்வை மங்கிகிட்டு வருதுன்னு சொல்றீங்க ,கண்  டெஸ்ட்  பண்ணிக்க வேண்டியதுதானே ?''
             ''எதையாவது  படிச்சு காட்டச் சொன்னா என்ன பண்றதுன்னுதான்  யோசிக்கிறேன் !''
        
இரண்டு மனைவிகளுக்கும் ஒரே பெயரா :)    
             ''மனைவி ஞாபகார்த்தமா  ஷாஜஹான் ,தாஜ் மகாலைக் கட்டி இருக்கார் , நீங்க என்ன செய்வீங்க ?''
             ''உன் பெயருள்ள இன்னொருத்தியைக் கட்டிக்குவேன் !''

இந்த சிம்பிள் பதில் ,சரிதானே :)
       ''நீங்க எப்படிப்பட்ட வரனை எதிர்பார்க்கிறீங்க ?''
        ''அதிக சவரன் கேட்காத வரனைத்தான் !''

கடவுளும் எவ்வளவுதான்  தாங்குவார் :)
          ''சாமி சிலை நொறுங்கி கிடக்குன்னு என்னை ஏன் கைது பண்றீங்க ?''
          ''என் பாரத்தை எல்லாம்  உன் மேலே போட்டுட்டேன்னு  ,நீங்க சொன்ங்களா ,இல்லையா ?''

அதுவும் பாதி இதுவும் பாதியா:)
            "நீங்க சைவமா ,அசைவமான்னு கேட்டா,யானை பாதி ,சிங்கம் பாதின்னு சொல்றீங்களே ,ஏன் ?"
             "யானை சைவமும்,சிங்கம் அசைவமும் மட்டுமே சாப்பிடும்,அதனாலேதான் !''

ஐ போனுக்காக ஐ யையும் விற்பார்களோ:)
கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா என்ற  நமது பழமொழியை  பொய்ப்பித்து விட்டார்கள் சீனர்கள் ...
தம்பதிகள் இரண்டு வயது மகளை விற்று இருக்கிறார்கள் ...
இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று இருக்கிறார் ...  
வந்த காசில் இவர்கள் வாங்கியது ...
வாழ்க்கைக்கு தேவையான ...
அடிப்படைத்  தேவைகளில் ஒன்றான ...
ஐ போனை தான்  !

20 comments:

 1. 01. ஹாஹாஹா அரசியல்வாதியா ?
  02. யோசனை மஞ்சிவாடு
  03. நியாயம்தானே ?
  04. இதுக்கும் மௌனமாக பிரார்த்திக்கணும்.
  05. இப்படியும் சொல்லாமா ?
  06. பழமொழி பொருத்தமாகத்தான் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட மேதைகள் நிறைய பேர் தலைவர்கள் ஆகி விட்டார்களே :)
   ஞாபகார்த்தம் வச்சுக்க நல்ல ஐடியாதானே :)
   பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்னு தெரிஞ்சு வச்சிருக்காரே :)
   இப்படியுமா சோதனை வரும் :)
   கலந்து செய்த கலவை நான்னு சொல்லிக்குவாரோ :)
   சீனர்களுக்கு இது தெரியுமா :)

   Delete
 2. ''உன் பெயருள்ள இன்னொருத்தியைக் கட்டிக்குவேன் !''
  அப்படி பேருள்ளவ கிடைக்காட்டி அவ பேர மாத்தி கட்டிக்குவேன்!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே ! முதல் மனைவி பேயாய் வந்து பயமுறுத்த மாட்டாரே :)

   Delete
  2. செல்வதுரை ஜி ,சரியாக ஒரு வருடம் கழித்து இங்கே வந்திருக்கீங்க !ஏதேனும் வேண்டுதலா ,வருடம் ஒரு முறை மட்டுமே பின்னூட்டம் இடுவதென்று :)

   Delete
 3. ஹா... ஹா.... ஹா... இப்படியும் ஒரு சங்கடமா!

  பெயர் மேல் காதல்! (Male love!!)

  வரன் - சவரன்! அட!

  சிலை நொறுங்குமளவு பாரமா?

  ரசித்தேன், ரசித்தேன்!


  ReplyDelete
  Replies
  1. விரலைப் பார்த்து சொன்னால் தன்மானத்துக்கு இழுக்கு என்று நினைக்கிறாரே :)

   மனைவி மீதான லவ்வுக்கு இந்த மேல் லவ்வே மேல்தானா :)

   அதிக சவரன் கேட்டா ,பொண்ணோட அப்பன் ரன் ஆகி விடுகிறாரே :)

   ரொம்பத்தான் நொந்து கிடக்கார் போல :)

   இரண்டாவது ரசித்தேன் படத்துக்ககாகவா :)

   Delete
 4. நீங்க ‘படிக்காத மேதை’ன்னு தெரியுமே...!

  உன் பெயருள்ளவர்களைத் தேடி தேடி கட்டிக்குவேன்...!

  எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறவரைத்தான் வரனா எதிர்பார்க்கிறேன்...! கராத்தேவில பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன்ல்ல...!

  சாமி சிலைக்குள்ளே இருக்காரான்னு உடைச்சுப் பார்த்தேன்...!

  காய் கறி விரும்பிச் சாப்பிடுவேன்...!

  ஐ... போன்...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. பெரிய பதவியில் வந்த பிறகு அப்படி சொல்லிக்கலாம்னு இருக்கார் :)

   ஏகப்பட்ட 'பேர் 'கள் இருப்பார்களே .பேர் ரீப்பேர் ஆயிடாதா:)

   கஷ்டம்தாம்மா உனக்கு கல்யாணம் நடக்கிறது :)

   தூணிலும் துரும்பிலும் இருப்பவர்,சிலையில் ஏன் இல்லாமல் போனாரோ :)

   அதாவது ,காயும் கறியுமா :)

   ஆமாம் eye போன்தான்:)

   Delete
 5. Replies
  1. தூணிலும் துரும்பிலும் இருப்பவரையுமா:)

   Delete
 6. Replies
  1. உங்க 'அருமை'க்கு நான் ரொம்ப பெருமை படுகிறேன் ஜி :)

   Delete
 7. கண்டெஸ்ட் செய்தால் இருக்கும் எக்ஸ்க்யூஸ் போய்விடுமே
  இதுவும் நல்ல ஐடியாதான்
  தட்சிணையாகக் கேட்டால்
  அப்படியானால் நிறைய சாமி சிலைகள் நொறுங்கிக் கிடக்க வேண்டுமே
  முழு அசைவம் என்று உண்டா
  தகவலாக எடுத்துக் கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. எக்ஸ்க்யூஸ் மீ ,என்ன சொல்றீங்கன்னு புரியலையே :)
   ஆனால் பெண்டாட்டிக்கு ஏன் பிடிக்கலே :)
   வராத தட்சிணை ஆகிவிடும் :)
   ஏன் எல்லோரும் பாரத்தை அங்கேதான் வைக்கிறாங்களா :)
   சிங்கம் சைவம் சாப்பிடாதாமே :)
   விழிப்புணர்வு தகவலாகவும் கொள்ளலாம் :)

   Delete
 8. கொடுத்து வச்சவர்..........

  ReplyDelete
  Replies
  1. கொடுத்து வைத்தவர் யார் ,ஒரு பெயருள்ள இருவரைக் கட்டிக் கொண்டவரா :)

   Delete
 9. அனைத்தையும் ரசித்தேன் நண்பரே!
  த ம 6

  ReplyDelete
 10. வரனும் சவரனும்! :))))

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அந்த ச தானே பல குடும்பத்தை அலைக்கழிக்குது:)

   Delete