23 October 2016

இந்தச் சீரழிவு ,சினிமாவால் வந்ததுதானே:)

 இதை மட்டும் சொல்லிட்டா ,உண்மையில்  அவர் 'மைண்ட் ரீடர்தான் ':)                                                 ''ஒருத்தரைப்  பார்த்தாலே அவர் மனசிலே  உள்ளதைச்  சொல்லும்  சக்தி, உங்களிடம்   இருக்கா ?''
            ''ஆமாம் ,உங்களுக்கு  என்ன தேவை ?'' 
              ''என் பக்கத்துக்கு வீட்டுக்காரரைக்  கூட்டிக்கிட்டு வர்றேன்...அவரோட வீட்டில் இருந்து  'வை ஃபை' கிடைக்குது ,அவர் மனசிலே இருக்கிற பாஸ்வேர்டைக்  கண்டுபிடிச்சு சொல்ல  முடியுமா ?''
       
பஸ்ஸிலே சேட்டை ,தர்ம அடி கிடைக்கும்தானே :)                 
       '' கை எலும்புதான் முறிவு , தலையிலே  ஏன்  ஸ்கேன் பண்றீங்க டாக்டர் ?''
      ''   கை சேட்டை பண்ணும்போது , மூளை எங்கே போச்சுன்னு பார்க்க வேண்டாமா ?''

கொடுமைகொடுமைன்னுகோவிலுக்குப் போனா :)               
       ''என் வீட்டிலே கொள்ளை போயிருக்கு ,FIR போட ஏன் சார்  தாமதம் பண்றீங்க ?''
        ''ஸ்டேசன்லே நாலு துப்பாக்கி களவு போயிருக்கு ,அதை விசாரிச்சுகிட்டு இருக்கோம் !''
நல்லது மட்டுமே நினைக்கும் நண்பேண்டா :)
             ''ஆம்புலன்ஸ் சக்கரத்தில் விழுந்து செத்த  நம்ம ஆறுமுகம் பாடியை, அதே வண்டியிலேயே  வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்களாமே ?''
             ''அட பரவாயில்லையே ,கெட்டதிலும் நல்லது நடந்துருக்கே !''

இந்தச் சீரழிவு ,சினிமாவால் வந்ததுதானே:)
( இரண்டாண்டுக்கு முந்தைய பதிவு இது )
சென்ற வாரம் நடந்த கொடூரம் ...
வங்கி மேலாளரைக் கொன்ற ஆறுபசங்க...  
மோப்ப நாய்க்கு டிமிக்கி தர ...
அறையெங்கும் மிளகாய்ப் பொடியை தூவி சென்று இருக்கிறார்கள் ...
முதல் கொலைக்காரர்களுக்கே இந்த டெக்னிக்கை கற்று தந்தது 'கில்லி 'படம்தான் !
இந்த வாரம் நடந்த கொள்ளை ...
வங்கி அலுவல் முடியும் நேரம் ...
ஒரே ஒரு முகமூடிக் கொள்ளையன் ...
ஒரே ஒரு கத்தியை 'காசாளி 'பெண்மணியின் கழுத்தில் வைத்து ...
மற்றவர்களை மேலாளரின் அறையில் பூட்டி ...
எட்டே நிமிடத்தில் பத்தரை லட்சத்தை அள்ளி சென்று இருக்கிறான் ...
அந்த பத்தரை மாற்று தங்கத்திற்கு ஞானம் தந்தது ...
நிச்சயமாய் 'ருத்ரா 'என்னும் திரைக்காவியமாய்த்தான் இருக்கும் !
நல்ல படிப்பினைகளை கற்று தரும் நம்சினிமாவை 
நூறாண்டு வாழ்கவென கூத்திடமுடியவில்லை !
ஏற்கனவே நூறாண்டு நிறைவடைந்து விட்டதால் !

28 comments:

 1. மூளை எங்கே போச்சுன்னு அறிய
  மருத்துவ சிகிச்சையா?

  ReplyDelete
  Replies
  1. இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்க வேண்டாமா :)

   Delete
 2. ‘உங்களுக்கு என்ன தேவை?’ன்னு கேக்குறீங்களே...! அப்ப மனசிலே உள்ளதைச் சொல்லும் சக்தி உங்கள்ட்ட இல்லையா... குட் பை...!

  மூளை கெட்டு அலையுது... கெட்டுப் போச்சு...! அத மாத்தி வையுங்க டாக்டர்...!

  ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி...’ ஓம் சாந்தி...!நீங்களும் கள்ளாட்டம் ஆடுறீங்களா...?

  ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...!’ வீட்டைவிட்டு மேலே என்னை இந்த உயரத்திற்கு உயர்த்திய ஆம்புலன்ஸ் அண்ணனுக்கு மிக்க நன்றி.

  ‘களவும் கற்று மற’ சினிமாவும் கற்றுத் தருதுன்னு சொல்லுங்க...! பரவாயில்லையே...!

  த.ம.1  ReplyDelete
  Replies
  1. யார் மனசிலே யாருன்னு சொல்ற சக்தி யாருக்கும் கிடையாதே :)

   இனிமேல் தான் வரணும் , மூளை மாற்று சிகிச்சை :)

   ஓடுற பஸ்ஸிலே துப்பாக்கிச் சூடு நடந்ததே ,இங்கே களவு போனால் துப்பாக்கியால்தானா :)

   நாலு பேருக்கு நன்றி ,இவர் ஐந்தாவது ஆளா :)

   எங்கே மறக்கிறது,அதுதானே வாழ வைக்குது பலரையும் :)

   Delete
 3. Replies
  1. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா...என்பதையும்தானே :)

   Delete
 4. Replies
  1. தர்ம அடியையும்தானே :)

   Delete
 5. சினிமாவில் கொள்ளை அடிக்க கற்றுக் கொண்டான். ஆனால் இதுபோல் நடந்தால் என்ன செய்வது என்று வங்கிகள் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமே!

  ReplyDelete
  Replies
  1. கற்றுக் கொள்ளாமல் இல்லை ,உயிர் மேல் ஆசை விட மாட்டேங்குதே :)

   Delete
 6. சினிமாவில் கொள்ளை அடிக்க கற்றுக் கொண்டான். ஆனால் இதுபோல் நடந்தால் என்ன செய்வது என்று வங்கிகள் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமே!

  ReplyDelete
  Replies
  1. ஏழைகளிடம் கொள்ளை அடிக்கத்தான் வங்கிகள் கற்றுக் கொண்டுள்ளன :)

   Delete
 7. 01. இது ரொம்ப முக்கியமானதுதான்
  02. ஒரிஜினல் டாக்டர்தான்
  03. இதுவும் நியாயமான பதில்தான்
  04. இந்தப் பழமொழியை இதுக்கும் சொல்லாம்தான்
  05. 113 ஆண்டுகள் ஆயிடுச்சு கொண்டாட முடியாதுதான்

  ReplyDelete
  Replies
  1. இப்படி சொல்ல முடிந்தால் யாரவது பாஸ் வேர்ட் வைத்துக் கொள்ள முடியுமா :)
   சைக்காலஜிஸ்ட் டாக்டரா இருப்பாரோ :)
   அதுதானே முக்கியம் :)
   கொடுமை கொடுமையைதானே:)
   இருந்தும் உலகளவில் சாதனை ஏதுமில்லையே :)

   Delete
 8. Replies
  1. ஒரே ஒரு கத்தியை 'காசாளி 'பெண்மணியின் கழுத்தில் வைத்து ...என்பதை ரசிக்க முடியுதா :)

   Delete
 9. true ji
  cinema has been misguiding youths quite a lot
  cinema has been ruining girls women
  cinema contributes nothing good to the society..

  ReplyDelete
  Replies
  1. சினிமாவில் விசுவலாய் காட்டுவது ,மனதிலே நச்சென்று பதிந்து விடுகிறதோ :)

   Delete
 10. சீ சீரழிவு இல்லை தலைவரே.. வளர்ந்துவிட்ட தொழில்நுட்பம் தலைவரே.......

  ReplyDelete
  Replies
  1. மிளகாய் பொடியா தொழில் நுட்பம் :)

   Delete
 11. மிளகாய் பொடி நன்றாக தூவீ விட்டார்களா ?

  ReplyDelete
  Replies
  1. மோப்பம் பிடிக்க முடியாத ளவுக்கு தூவியே விட்டார்கள் :)

   Delete
 12. Replies
  1. உங்க டென்னை ரசித்'டென்':)

   Delete
 13. ரசித்தேன் சகோதரா.
  மிளகாய் பொடி தூவுவது கற்றதை
  இன்னும் உரக்கக் கூறுங்கள்.
  நானும் ஆதரிக்கிறேன்.
  நன்றி சகோதரா.
  tamil manam, may be 11.

  ReplyDelete
  Replies
  1. may be இல்லை ,sure eleven :)

   Delete
 14. பாஸ்வேர்ட் சொன்னால்..... :)

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மைண்ட் ரீடர் யாராவது இருக்காங்களா :)

   Delete