25 October 2016

வீட்டுக்கு வரக்கூடாத அந்நியன்:)

தங்கப் பல்லு கட்டிகிட்டவன்  ஈன்னு சிரிச்சுகிட்டே இருப்பானாமே:)
               ''நம்ம அருண்,  தினசரி மாலை நேரத்தில்  'குட் மார்னிங் 'னு  முகநூலில்  சொல்லிகிட்டே இருக்கானே ,ஏன் ?''
                '' அமெரிக்காவில் இருப்பதை நாசூக்கா  சொல்றானாம் !''

தெரிந்ததைச் சொன்னால் தப்பா :)           
              ''என் பையன் சரியான சாப்பாட்டு ராமனா வருவான்னு  ஏன் சொல்றீங்க ?''
              '' ஆனாவுக்கு  அப்பம் ,ஆவன்னாவுக்கு  ஆப்பம் ,ஈனாவுக்கு  இடியாப்பம்னு சொல்றானே !''

வம்பு பிடிச்ச ஆட்டோ டிரைவர் :)               
              '' ஆஸ்பத்திரி  வாசலில் இறக்கி விட்டுட்டு காசு  கேட்கிறே,பிறகேன்  'பிரசவத்துக்கு இலவசம்'னு ஆட்டோவிலே எழுதியிருக்கே?''
               ''ஆட்டோவில் பிரசவமானால்தான் இலவசம் !''

சமர்த்துப் பேச்சால் கணவனை ஜெயிக்கலாம்...ஆனால் :)
             ''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
              ''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டை   ஒரு  ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிக்கிறீங்களா ?''

வீட்டுக்கு வரக்கூடாத அந்நியன்:)
          "புருஷனோட சொற்ப  வருமானத்திலே இவ்வளவு ஆடம்பரமா அவ இருக்க காரணம் ,அன்னியன் முதலீடா ?''
         " ஆமா ,ஒரு  அன்னியன் நடமாட்டம் அந்த வீட்டிலே அடிக்கடி தெரியுதே ! "

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே:) 
கோவிலபாக்கம்  சகோதரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் ...
சூலமங்கலம் சகோதரிகளைத் தெரியும் ...
யாரிந்த புது சகோதரிகள் ?
ஐந்து வருசமா நடிச்சுக்கிட்டு  இருந்திருக்காங்க ...
ஒரு படத்தில் கூடப் பார்த்ததில்லையேன்னு நீங்க கேட்கிறது எனக்கும் புரியுது !
அவங்க படத்தில் நடிக்கலே...
நிஜத்திலே 'வசூல் ராணி MBBS 'களாய் கிளினிக் வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள் ...
ஒரிஜினல் டாக்டர்களே செய்யத் தயங்கும்
கருக்கலைப்புக் கூட செய்து இருப்பதாக புகார் வந்து உள்ளதாம் ...
இந்த புண்ணிய காரியங்களை ஒரு வருஷம் ,இரண்டு வருசமல்ல ...
ஐந்து ஆண்டுகளாய் செய்துள்ளார்கள் ...
பத்தாவதுகூடப் படிக்காத சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் சென்னை மாநகரத்திலேயே ...
போலி டாக்டர்களாய்  கொடிகட்டிப் பறக்க முடியும் என்றால் ...
கிராமங்களில் நிலை என்ன என்பதை யாராவது 'சபீனா'வாய்  விளக்கி சொன்னால் நல்லது !
தமிழகத்தில் இன்னும் ஐந்தாயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக அபாயச் 'சங்கு ' ஊதுகிறார் ஒரிஜினல்  டாக்டர்கள் சங்கத் தலைவர் !

22 comments:

 1. அடடே.... இது நல்லாருக்கே....

  எனாவுக்கெல்லாம் என்ன சொல்லுவான்?

  தாத்தாவுக்குத் தம்பியா இருப்பான் போல!

  அப்பக் கூட சும்மா தராம ஒரு ரூபாய் வாங்கறார் வியாபாரி!

  ஐயையே....

  ஓ.....

  ReplyDelete
  Replies
  1. தங்கப் பல் மாதிரிதானே :)

   எளனின்னு வேணா சொல்லுவான் :)

   சித்தப்பனா,எட்டப்பனா :)

   வாடி வதங்கினாலும் காசுதான் :)

   விடுங்க அது அவ புருஷன் பாடு :)

   வக்கீலகளிலும் போலி ,எப்படி போலி டாக்டர் மேல் கேசைப் போடுறது :)

   Delete
 2. இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் ... அருண் அமெரிக்கா போனதில இருந்து தலைகீழா மாறிட்டான்... காலம் அவன மாத்திடுச்சு...!

  ராமன் எத்தனை ராமனடி...? ராமன் தேடிய சீதை படத்துக்குப் போயி ஆக்கிக் கொட்ட சீதையைத் தேடிக்கிட்ட இருக்கான்...!

  பிரசவம் இலவசமா ‘லைவ்’ல பார்க்கனுமுன்னு சொல்லு...!

  அந்த கீரைக்கட்டை நாளைக்கு ஓசியா வாங்கிக்கிறேன்...! என்ன சரியா...?

  அன்னிய முதலீடுன்னா... முன்னேற்றம் இருக்குமுல்ல... அவ வயிறே காட்டிக் கொடுக்குதில்ல...!

  அவுங்க பரம்பரையே மருத்துவச்சி பரம்பரையாம்...!

  த.ம.2  ReplyDelete
  Replies
  1. உலகம் ஒண்ணுதான் ,அவன்தான் இரண்டா மாறிட்டானா :)
   ராமன் தேடிய சீடை என்றுகூட ஆக்கித் தரட்டுமே :)
   கழுவி விட காசு கேட்க மாட்டீங்களே :)
   மாடு திங்கலைன்னா கொடு வந்து தர்றேனே:)
   நல்ல முன்னேற்றம்னு ஊரே சொல்லுதே :)
   கிளினிக் திறந்ததுதான் தப்பா :)


   Delete
 3. Replies
  1. பையன் தெரிந்ததைச் சொன்னால் தப்பா :)

   Delete
 4. Replies
  1. உங்க த ம ,அந்த தங்க பல்லுக்கா:)

   Delete
 5. 01. பந்சா பரமசிவமா ?
  02. அடடே அழிவாளி
  03. நல்ல பதில்
  04. டீலிங் ஸூப்பர்
  06. இதுவும் காரணமா ?
  06. யாரைத்தான் நம்புவது ?

  ReplyDelete
  Replies
  1. அவரோட பிள்ளைதான் இப்படி :)
   அப்பன் சொத்தை சாப்பிட்டே அளிக்க வந்த அழிவாளியா:)
   பதிலா இது ,எமாற்றாச்சே:)
   ஆமா பெரிய பல கோடி டீலிங் :)
   இதுதான் காரணம்:)
   பேதையின் நெஞ்சம் :)

   Delete
 6. சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் போல உலாவும் 'வசூல் ராணி MBBS' களை வலை விரித்துப் பிடித்தால் நாடு உருப்படும் அண்ணே!
  நம்மட பூட்டப் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளும் உருப்படியாகப் பண்பாட்டைப் பேணி வளரும் அண்ணே!

  சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்ய அனுமதி தாருங்கள் அண்ணே!
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு இல்லாத உரிமையா ?தாராளமா சபீனாவை போட்டு வெளுத்து வாங்குங்க :)

   Delete
 7. அட!

  நல்ல விவரமான பையன் ஹஹஹ அ அப்பம், ஆ ஆப்பம், இ இடியாப்பம், ஈ ஈச்சம்பழம் உ உளுந்து வடை, ஊ ஊத்தப்பம், எ எள்ளு சாதம், ஏ ஏப்பம்தான் ஹஹ இப்படிப் போகலாமோ...

  ஆட்டோட்ரைவர் சொல்லுவது சரிதான்...

  அனைத்தும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. ஆகா ,சூப்பர் ஆத்திச் சூடியா இருக்கே :)

   Delete
 8. அவனுக்கு ஒரு குட் நைட் சொல்ல வேண்டியதுதானே
  அவனுக்குச் சொல்லிக் கொடுத்ததைச் சொல்கிறான்
  பிரசவத்துக்கு இலவசம் என்றுதானே எழுதி இருக்கு. பிரசவ ஆசுபத்திரிக்கா
  கீரைக்கட்டுக்குப் பேரம் பேசும் மனிதர்கள் சூப்பர் மார்க்கெட்டில் சொன்ன விலையைக் கொடுத்து விடுவார்கள்
  அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர் அன்னியனைத் தரக்குறைவாக கூறுகிறீர்கள்
  சமீனா சபீனாஒரு விழிப்புணர்வு

  ReplyDelete
  Replies
  1. நாம் இருப்பது மாலையிலாச்சே ,மாற்றிச் சொல்ல மனசு வரலையே :)
   வாயில் கடித்ததை சொல்கிறான் :)
   நல்ல விளக்கம்தான் இது :)
   தீபாவளி போனஸ் வேறு கொடுத்து விட்டு வருவார்கள் :)
   இந்த அன்னியனுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனையோ :)
   இருந்தாலும் இன்னும் பலர் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் :)

   Delete
 9. அன்னிய முதலீடு எப்படி நாட்ட நாசப்படுத்துதோ..அதே மாதிரி அன்னியன் முதலீடு குடும்பத்த நாசப்படுத்தாமலா இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. நாசகார கொள்கையைத் தானே மக்கள் விரும்புகிறார்கள் :)

   Delete
 10. Replies
  1. அப்பம் , ஆப்பம்,இடியாப்பத்தையுமா :)

   Delete
 11. நகைச்சுவைகள் அனைத்தும் இனிமை சகோதரா.
  10க்கு - 11க்கு நன்றி திருத்தியாச்சு.
  தமிழ் மணம் 10

  ReplyDelete
  Replies
  1. அவர் அபாயச் 'சங்கு ' ஊதி என்ன பயன் ?மக்களுக்கு அல்லவா, சங்கு ஊதப்பட்டுக் கொண்டிருக்கிறதே:)

   Delete