27 October 2016

'குடி'மகனா ,கொக்கா :)

சமூக ஆர்வலர்  ஒருவர் ,ஒரு டம்ளரில் தண்ணீரும் இன்னொரு டம்ளரில் சாராயமும் ஊற்றி, தண்ணீர் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் சாராயம் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் போட்டார்.
தண்ணீரில் போட்ட பூச்சி உயிரோடிருந்தது. சாராயத்தில் போட்ட பூச்சி இறந்துவிட்டது.
சமூக ஆர்வலர்  கேட்டார் :
''இதிலிருந்து என்ன தெரிகிறது?''
குடிமகன்கள் ஒரே குரலில்  சொன்னார்கள் :
''சாராயத்தில்  போட்ட பூச்சிக்கு நீந்தத் தெரியவில்லை! ''

இலவசமா கொடுத்தாலும் வாங்க மாட்டாங்களோ :)                 
               ''டிவி வாங்கினா, கவிதைப் புத்தகம் இலவசம்னு போட்டீங்களே ,வியாபாரம் அமோகம்தானா ?''
             ''அட நீங்க ஒண்ணு,புத்தகத்தை நீங்களே வைச்சுகிட்டு  , டிவி  விலையில் தள்ளுபடி கொடுங்கன்னு கேட்கிறாங்களே !''

இனியும் தொண்டர்களை ஏமாற்ற முடியாதோ :)             
              ''ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறைன்னு தொண்டர்களிடம் கேட்டது தப்பாப் போச்சா ,ஏன் தலைவா ?''
             ''ஆளும் கட்சி முதல்வரின் காலை நக்கிட்டு இருந்தா ஆள முடியாது ,நீங்க வேணா வாழ முடியும்னு திருப்பித் தாக்குறாங்களே !''

கிளி மூக்கு பொண்ணுக்கு மூக்குடைந்த மாப்பிள்ளையா :)
               ''தரகரே ,நீங்க சொன்ன பையன் ...எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைச்சி 'மூக்குடை'படுவாராமே ,உண்மையா ?''
                ''அப்படின்னா மூக்கிலே தழும்பு இருக்குமே ,நீங்களே நேரிலே பார்த்து முடிவு பண்ணுங்க !''

143ன்னா I love you ஆச்சே :)
               ''எந்த  வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருட  காந்தி ஜெயந்தியை காதலர்கள் கொண்டாட காரணம் என்ன?''
              ''காதலர்களுக்கு பிடித்த '143'வது காந்தி ஜெயந்தி  ஆச்சே இது !''
(குறிப்பு ,இது வெளிவந்தது 2014ம் ஆண்டு )

ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல !
அடுத்தவர் பேசுவதை ஒட்டுகேட்பது பெண்கள் குணம் என்றுதான் நம் தமிழ் திரைப்படங்களில் காட்டி வந்து இருக்கிறார்கள்...
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் ,ராணுவ மையமான பென்டகனுக்கும் அந்த குணம் உண்டென்று தெரிய வந்துள்ளது ...
உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் முப்பத்தைந்து பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டுள்ளது ...
இதனால் கொதிப்படைந்த ஜெர்மன் தன் கண்டனத்தை தெரிவிக்க ...
இனிமேல் இப்படி நடக்காதென்று உறுதி  அளித்துள்ளார் ஒபாமா !
ஏற்கனவே பேஸ்புக் ,கூகுள்,யாகூ இணைய தளங்கள் மூலமாய் நம் அனைவரின் அந்தரங்கத்திலும் 'கழுகு'மூக்கை நுழைத்தது அம்பலமானது...
அமெரிக்கா தனி மனித சுதந்திரத்தை ...மிகவும் மதிக்கும் நாடல்ல ...
மிதிக்கும் நாடு என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது !
இந்த கேடு கேட்ட காரியத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய நம் இந்தியா ...
நம் பிரதமருக்கு செல்போனும் இல்லை ,இ மெயில் முகவரியும் இல்லை ...
ஒட்டு கேட்டிருப்பதற்கு வழியே இல்லை என இயலாமையை பறைசாற்றிக் கொண்டுள்ளது !
(குறிப்பு ,இது ஒரு காங்கிரஸ் காலத்து பதிவு )

18 comments:

 1. சாராயத்தில் போட்ட பூச்சி பொம்பளப் பூச்சின்னு தெரியுது...!

  ‘வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா...?’ இந்த டி.வி. பக்கம் யாருமே... பக்கம் வரலை... பக்... பக்...கிங்கிது...!

  தொல்காப்பியத் திருவிடம் உருவான பேச்சா...?

  எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைக்க மாட்டார்... எதுல மூக்கை நுழைக்கனுமுன்னு அவருக்குத் தெரியும்...!

  காந்தி படத்தைத்தான் எல்லோரும் காதலிக்கிறார்களே...!

  நாம ஓட்டுத்தானே கேட்போம்...!

  த.ம. 1  ReplyDelete
  Replies
  1. ஆகா ,இது நல்ல ஆராய்ச்சியா இருக்கே :)
   சீரியல் பார்க்க்கவே நேரமில்லை ,கவிதைப் படிக்கவா நேரம் கிடைக்கும் :)
   உருவான பேச்சு பேச்சாதானே இருக்கு :)
   தெரிந்தும் ஏன் நுனி மூககைக் காணோம் :)
   அதுவும் ஒருதலைக் காதலா இருக்கே :)
   அதுவும் த ம வோட்டு மட்டும்தான் :)

   Delete
 2. சாராயம் சாப்பிட்டா வயிற்றில் இருக்கும் பூச்சி எல்லாம் செத்துடும்னு தெரியுது என்று சொல்வார்கள் இந்த ஜோக்கை. மாற்றி எழுதி அசத்தி விட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் சொன்னதையே திருப்பி சொல்லிக் கொண்டே இருக்க முடியுமா ?நமக்குன்னு ஒரு 'பாணி '(அந்த தண்ணி இல்லே ) இருக்கில்லே :)

   Delete
 3. Replies
  1. தனி மனித சுதந்திரம் மிதிபடுவதைக் கண்டால் , நம்மால் ரசிக்க முடியாதுதானே :)

   Delete
 4. .இதிலிருந்து தெரிவது..குடிக்காதவன் எல்லாம் குடிமகன் இல்லை என்று தெரிகிறது...

  ReplyDelete
  Replies
  1. 'குடி'மகன்,தன் தவறை ஒப்புக்கொள்ளவே மாட்டான் என்பதும் புரிகிறதா இல்லையா :)

   Delete
 5. எப்பவும் போல இன்றும் அருமை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. செல்போனும் இல்லை ,இ மெயில் முகவரியும் இல்லாத பிரதமர் என்றால் நம்ப முடிகிறதா :)

   Delete
 6. அனைத்தையும் ரசித்தேன். தம6

  ReplyDelete
  Replies
  1. ''சாராயத்தில் போட்ட பூச்சிக்கு நீந்தத் தெரியவில்லை! '' என்ற குடிகாரர்களின் கண்டுபிடிப்பை ரசிக்க முடியுதா :)

   Delete
 7. 01. மிகச்சரியான கண்டுபிடிப்பு
  02. புத்தகம் எழுதியவர் யாரோ...
  03. நல்ல சவுக்கடி
  04. தழும்பும் வேணுமோ...
  05. நல்ல பொருத்தம்
  06. நல்லாத்தான் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. நோபல் பரிசை தரலாமா :)
   தெரியாத மாதிரியே கேட்கிறீங்களே :)
   சுயநலத்துக்கு பயன்படுத்திகிட்டா இப்படித்தான் :)
   அடி ஆறவில்லை என்றால் களிம்பு தடவலாம்னுதான் :)
   சாந்தி, ஜெயந்தியிடமும் இதை சொல்லி விடலாமா :)
   'கழுகு'க்கும் மூக்கு வியர்க்கும் போலிருக்கே :)

   Delete
 8. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி:)

   Delete