29 October 2016

லேடிஸ் லெக்கின்ஸ் உடைக்கு ,முன்னோடி ஏது தெரியுமா :)

குடிகார அப்பனின் யோசனையோ :)               
               ''காலி  பிராந்தி பாட்டில்லே வச்சு, ராக்கெட்டை விட்டால் ரெண்டு மடங்கு உயரம் போகுமாமே ,உண்மையா ?''
                ''இதுவும் ஒரு மனப் பிராந்திதான் !''  

லேடிஸ் லெக்கின்ஸ் உடைக்கு ,முன்னோடி ஏது தெரியுமா :)
              ''என்னங்க ,வெள்ளை நிற லெக்கின்ஸ் டிரஸ்ஸை நான் போட்டுக்கவே கூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
   ''ஜெகன் மோகினி படத்திலே வர்ற பேய் ஞாபகம் வருதே !'' 
ஃபேஷன் டீவியை இன்னுமா மறக்கலே :)
             ''குருவே ,அந்த சிஷ்யன்   என்ன கேட்டார் ,ஆசிரமத்தில் இருந்து உடனே 'கல்தா 'கொடுத்து விட்டீர்களே ?''
             ''ஞானக் கண்ணால் ஃபேஷன் டீவியைப் பார்க்க அருள் புரியுங்கள் என்று கேட்கிறானே !''

சர்வருக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் :)
            ''சர்வர் யாருமே ஒத்துழைக்காம நஷ்டமாகி ஓட்டலை மூடிட்டீங்க ...கம்ப்யூட்டர் சென்டர் வைங்கன்னு  சொன்னா ,ஏன் வேண்டாங்கிறீங்க?''
            ''அதுக்கும் 'சர்வர் 'ஒத்துழைப்பு  தேவைப்படுமே!''

பேஸ் புக் வடிவில் வந்த எமன் :)
எமன் எருமை வாகனத்தில் வருவான்னு சொல்வார்கள் ...
இந்த நவீன காலத்தில் ...
சென்னையில் பணிபுரிந்த சாப்ட்வேர்  என்ஜினியருக்கு பேஸ் புக் வடிவில் எமன் வந்துள்ளான் ...
ஜார்கண்ட் பையன் ,கேரளக் குட்டியை மூன்றாண்டு டாவடித்து  ...
இரு வீட்டார்  சம்மதமின்றி பதிவுத் திருமணம் முடித்து ...
ஹனி மூனை வெளிநாட்டில் கொண்டாடி மூன்று மாதமாகி விட்டது ...
இளம் மனைவி ஹனிமூன் படங்களை பேஸ் புக்கில் போட ...
படங்களைப் பார்த்த பையனின் பெற்றோர்க்கு கோபம் தலைக்கேற ...
படங்களை டெலிட் செய்ய பெற்றோரின் கட்டளை ஒருபுறம் ...
முடியவே முடியாதென்று மனைவியின் பிடிவாதம் மறுபுறம் ...
செய்வதறியாதவன் தொங்கிவிட்டான்  தூக்கில் !
பேஸ்புக்கில்  படங்கள் சிரிக்கின்றன ...
போட்டோவில் சிரிப்பவன்தான் உயிருடன் இல்லை !

18 comments:

 1. 01. இதுவும் பிராந்தாதானே ?
  02. ஹாஹாஹா ஸூப்பர் பேய்
  03. காலம் மாறும் பொழுது காட்சியும் மாறுவதில் தப்பில்லையே....
  04. பழைய சர்வர்களையே சேர்க்கலாமே...
  05. இதைப் பார்த்தாவது நாலுபேர் திருந்தட்டும்

  ReplyDelete
  Replies
  1. இரண்டு பிராந்தியும் கெடுதல்தான் :)
   காலை எங்கே வச்சிருக்குன்னு பார்த்தீங்களா :)
   ஞானக் கண்ணால் பார்க்க வேண்டிய செனல்தானா அது :)
   கல்லாவுக்கு காசு வந்து சேர மாட்டேங்குதே :)
   திருடனா பார்த்து திருந்தினால் தான் உண்டு :)

   Delete
 2. காலிப் பய புள்ள... ராக்கெட் விடுறப்ப தேங்காய ஒடச்சு... சாமி கும்பிட்டில்ல விடனுங்கிறான்...! அப்பத்தான் மேல போயி நல்லா வெடிக்குங்கிறான்...!

  ஏங்க... இப்பப் போயி பழச எல்லாம் ஞாபகப் படுத்துறீங்க...!

  நாளைக்கு உள்ள நடக்கிறத எல்லாம் வெளியே இருந்தே ஞானக் கண்ணால் பார்க்க அருள் புரியுங்கன்னு கேட்டாளும் கேட்பான்...!

  ‘சர்வர் சுந்தரம்...’ அவரக் கூப்பிட்டாலும் வரமாட்டார்...! தேவலோகத்தில் தேவாமிர்தம் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கார்...!

  இதுக்குத்தான் நாக்கப் பிடிங்கிட்டுச் சாகிறமாதிரி கேள்வி கேட்கப்ப படாதுங்கிறது...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. இஸ்ரோ விஞ்ஞானிங்க எப்படி தேங்காய் உடைக்க உடன்படுறாங்கன்னு தெரியலையே :)

   புதுசு அப்படித்தானே இருக்கு :)

   கண்ணுக்கு நேர நடப்பதே தெரியலே ,நாளைக்கு நடப்பதை ....:)

   நல்ல காரியம் ,அதே காரியத்தைச் செய்யட்டும் :)

   புரிய வேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன் ஜி. ஃபேஷன் டீவி பார்க்க விரும்பிய சிஷ்யன் தூள்!

  ReplyDelete
  Replies
  1. குருவுக்கே இரண்டு கண்ணும் தெரியலை ,சிஷ்யனுக்கு இப்படி ஒரு ஆசையா :)

   Delete
 4. அனைத்தும் ரசித்தேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. பேஸ் புக் வடிவில் வந்த எமனையும் ரசிக்க முடிந்ததா :)

   Delete
 5. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி ஜி :)

   Delete
 6. Replies
  1. மிக்க நன்றி அய்யா :)

   Delete
 7. அந்த பேய்... ''ஜெகன் மோகினி படத்திலே வர்ற அந்த பேய் ஞாபகம் வந்திருச்சு..............

  ReplyDelete
  Replies
  1. லெக்கின்ஸ் அணிந்த பொண்ணுங்க எதிர்லே வந்தா இனி பயப்பட மாட்டீங்களே :)

   Delete
 8. Replies
  1. லெக்கின்ஸ் பொருத்தம் சரிதானே :)

   Delete
 9. ஜோக்குகள் அனைத்தையும் ரசித்தேன் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலசுப்ரமணியா'வை நானும் ரசித்தேன் !
   வாழ்த்துக்கு நன்றி :)

   Delete