30 October 2016

பெண்களின் மெமரி பவருக்கு இதுதான் காரணமா :)

             ''கோலம் போடணும்னு ஏண்டா  ஆசைப் படுறே ?''
              ''அதனாலே மெமரி பவர் கூடும்னு சொல்றாங்களே !''

மாமூலை வீட்டிலேயும் வாங்குவாரோ :)           
            ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாட்டு விளையாடினா, ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
            ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''

இந்த தம்பதிக்குள் வாக்குவாதம் ஏன் வரப் போவுது :)
            ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
             ''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''

I T வேலை என்பதும் இப்படித்தானா ?:)
             ''முதலாளிகிட்டே கால்லே ஆணின்னு ஒருநாள் லீவு கேட்டது தப்பாப் போச்சா ,ஏண்டா ?''
             ''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி  வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''

அதுக்கு இப்படியும் அர்த்தமா:)
             ''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
             ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்னு சொன்னேனே!''

ரஜினி காந்த் ,பிரியங்கா சோப்ரா ...யார்  நினைப்பு சரி ?
நீங்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என ...
நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரைக் கேட்டபோது ...
அடிப்படையில் சில மாற்றங்கள் வந்தால் மட்டுமே ,நான் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கும் என்று கூறினார் !
இப்போது இருக்கின்ற சட்ட திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது என்று அவரும் நினைக்கிறார் !
இப்படியே இருந்தால் என்னால் மட்டுமல்ல ,ஆண்டவனாலும் நாட்டை திருத்த முடியாது என்பதுதான் அதன் பொருள் !
தமிழன் என்றொரு தமிழ் படத்தில் முதலும் ,கடைசியும் நடித்த பிரியங்கா சோப்ரா ...
நான் பிரதமரானால் ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் ...
பிரியங்கா காந்திக்கே வராத ஆசை இவருக்கு வந்து இருக்கிறது ...
ஆசைப்படுவதில் தவறில்லை ...
பிரதமர் பதவியை கால் ஷீட் கொடுத்து பெற்று விட முடியாது ...
பொருளாதார மேதைக்கு அடித்த  அதிர்ஷ்டம் ,அவருக்கும் அடிக்குமாவென தெரியவில்லை !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
ரசிகர்களின் மனம் மகிழ ,உடலை திறந்து காட்டியது போல் ...
நாட்டு மக்களின் மனம் மகிழ ,ஊழலை ஒழிக்கும் ரகசியத்தை மனம் திறந்து கூற வேண்டும் !

18 comments:

 1. கோலம் போட்டா மெமரி பவர் வளருமா? யார் சொன்னா!

  பம்பரமா சுத்தற ஜோக் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் சொல்லிக்கிறாங்களே:)

   சர்வரின் வேதனை ,முதலாளிக்கு நக்கலா இருக்கே :)

   Delete
 2. ‘என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்... மரகதவல்லிக்கு மணக்கோலம்...’ போடச் சொன்னேன்...புரியலை...?!

  நீங்க என்னிட்ட வந்து மாசா மாசம் மாமூலா கொடுக்கிறது அவனுக்குத் தெரியாதில்ல...! ஒன்னும் தெரியாத ஓநாய் கத்துனத காதுல போட்டிட்டு... காரியத்த கெடுத்திடாதிங்க...!

  நல்ல விளக்கமாறு நாலு கொடுத்திருக்கேன் மாப்ளே...! விளக்கமாறு பிஞ்சிடாம பாத்துங்கங்க மாப்ளே...! எ கண்ணையே ஒங்கள்ட்ட ஒப்படைக்கிறேன்...!

  ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே... தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே...!’ எதுக்கும் நல்ல கயிறா கேட்டு வாங்கி வைங்க...!

  நா சொன்னத... ஒங்க காது சரியா கேக்கலைன்னு இப்பத்தானே தெரியுது...!

  ‘ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன்...’ என்று புது தில்லிக்கு வந்தவங்க எல்லாம் அங்கிங்கெனாதபடி இப்ப மூட்டை மூட்டையா ஊழலைச் சுருட்டிக் கட்டிக்கிறாங்களாம்...! ‘இங்’ அடிச்சத வாங்கிட்டு தியாகி பட்டம் வேற கேக்கிறாங்களாம்...! ஊழலை ஒழிக்கும் ரகசியம்... அது ரகசியம்... வெளியே சொல்லக்கூடாது... நீங்களும் கிளம்பிட்டீங்கன்னா...! கண்ணா லட்டு திங்க ஆசையா...?!

  த.ம. 1  ReplyDelete
  Replies
  1. புரியுது ,கோல மயிலின் அழகுக்கு இன்னொரு கோலமும் போட கசக்கவா செய்யும் :)

   எதுக்கு சொல்லப் போறேன் ,மாமூல் ,மாமூலா போறது அந்த வழியிலேதானே :)

   விளக்குமாறைப் பார்த்துக்கிறேன் மாமா ,கண் கலங்காமயிருங்க மாமா :)

   நல்ல கயிறா வாங்கி முடிச்சு போட்டால் ,மனுசனை தவிக்க விட மாட்டாளே :)

   அடப் பாவி ,அவளோட என்னையும் சேர்த்துட்டீயே :)

   திங்க எல்லாம் ஆசையில்லை ,லட்டைப் பார்த்தாலே போதும் :)   Delete
 3. Replies
  1. புள்ளி (மயிலின்) கோலத்தையும் தானே :)

   Delete
 4. மெமொரி வளர்க்க இப்படியும் ஒரு வழியா
  வீட்டில் எல்லோரும் சேர்ந்தா திருடன் போலீஸ் ஆட்டம் ஆடுவார்கள்
  பம்பரமாய்ச் சுத்தினா கால் ஆணி போய்விடும் என்கிறாரா
  எள்ளுன்னா எண்ணை என்பதற்கு இப்படியும் ஒரு அர்த்தமா
  நிஜத்தில் சினிமாவும் திரையும் ஒன்றாகுமா

  ReplyDelete
  Replies
  1. புள்ளிகளில்,கோடுகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் ஞாபக சக்தி கூடுமாமே :)
   காசு வைத்து விளையாடுவார்களா :)
   உள்ளே போகவும் ,வெளியே வரவும் அதை இரும்பாணின்னு நினைச்சிட்டாரோ :)
   தரகர் நாக்கு எப்படியும் சொல்லும் :)
   ஒரு நாள் முதல்வர் ஆவ்துகூட சினிமாவில்தான் சாத்தியமாகும் :)

   Delete
 5. 01. ஆஹா இவ்வளவு நாளா தெரியாமல் போச்சே...
  02. பழக்கதோஷம்
  03. சரியாக்கிடலாம்
  04. பக்குவமாக பேசணும்
  05. அதானே...
  06. பக்குவமாக கொக்கி போட்டீங்களே.... ஜி

  ReplyDelete
  Replies
  1. முன்பே தெரிந்திருந்தால் கோலம் போட்டிருப்பீர்களா :)
   மாமூலான தோஷம் தானா :)
   நாக்கை அறுக்கவா முடியும் :)
   அப்படியே செய்றேன் ,இன்னைக்கு லீவைக் கொடுங்கன்னா :)
   புரியுறமாதிரிதானே சொல்லியிருக்கார் :)
   கொக்கி கழலும் போல தெரியவில்லையே :)

   Delete
 6. கோலம் போட்டால் மெமரி வரும் என்றால் நான் கோலம் போடா விரும்ப வில்லை காரணம் நான் அப்படி செய்தால் என் பழைய காதலிகள் நினைவுகள் என்னை வதைக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ,ஆமாம் ....வதைக்கும் நினைவுகளால் மெலிந்து போவீர்கள் ,இடுப்பிலே பேண்ட் (என்னதான் பெல்ட்டை இழுத்துக் கட்டினாலும்) நிற்காது ,எதுக்கு வம்பு ? கோலம் போட நினைக்காமல் , கோலம் போடுறவங்களை மட்டும் பார்த்து பூரிக்கட்டை அடி வாங்கிட்டு நிம்மதியா இருங்க :)

   Delete
 7. அப்படியா...!! கூடுமா...? அப்போ செல்லுக்கு மெமரி கார்டே தேவையில்லை போலிருக்கே.....அடடா இத்தன நாளும் தெரியாம...போச்சே....

  ReplyDelete
  Replies
  1. செல் எப்படி கோலம் போடும் ?அலங்கோலம் வேண்டுமானால் அதில் வரும் :)

   Delete

 8. கோலம் போட்டால்
  மெமரி பவர் கூடுமா
  கண்டுபிடித்தவரைப் பாராட்டலாம்.

  ReplyDelete
  Replies
  1. யார் கண்டுபிடித்தார் என்றே என் நினைவுக்கு வரலே ,கோலம் போட்டு பார்க்கிறேன் :)

   Delete
 9. மெமரி பவரும் கோலமும்.... :)

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கோலம் அழகா இருக்கோ இல்லையோ ,மெமரி பவர் கூடினால் சரிதானே :)

   Delete