4 October 2016

விதவை ,வெள்ளைச் சேலை கட்டியது அந்த காலம் :)

இப்படியும் சொல்லலாமா :)            
           ''நானே கால்நடை டாக்டர் ....யாருக்கும்  மேஜர் ஆப்பரேசனா  செய்யப் போறேன் ?உடனே  கிளம்புங்கன்னு  ஏன் பறக்கிறே ? ''
             ''தெருவிலே  பூனை ஒண்ணு  குறுக்கே போவுது ,உங்க தொழிலுக்கு அது நல்ல சகுனம்னு  சொன்னேங்க  !''

விதவை ,வெள்ளைச் சேலை கட்டினது எல்லாம் அந்த காலம் :)
          ''நர்ஸ்  யூனிபார்ம் போட்டுக்கிட்டுத்தான் டூட்டி பார்ப்பேன்னு  ஏன்  சொல்றீங்க ?''
         '' நான் வெள்ளைச் சேலை கட்டிட்டு போனா ....பேஷண்ட்  ஒருவர், 'மறுமணம் பண்ணிக்க நான் ரெடி ,நீங்க ரெடியா 'ன்னு  கேட்கிறாரே !''
இவரோட கொள் 'கை'ப் பிடிப்பு யாருக்கு வரும் :)
          ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
          ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்  !''

நடிகை சமந்தா ரெட்டி ஞாபகமாவே இருக்காங்க :)
             ''காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம் பண்றதாலே ,வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?''
              ''இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''

இந்தியா சுய காலில் நிற்பது எப்போது ?
யானைக்கும் அடி சறுக்கும் ...
அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ...
தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறி கட்டணுமே...
இங்கே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரச் சரிவு தான் காரணம் என்றார்கள் !
உலக தாதா அமெரிக்க யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளட்டும் ...
அந்த மண் நம் தலையிலும் விழும் என்றால்... 
நாம் கடைப் பிடிப்பது சுய சார்பு பொருளாதாரக் கொள்கைதானா ?

23 comments:

 1. இந்தியா
  சுய காலில் நிற்பது எப்போது?
  அருமையான சிந்தனை

  ReplyDelete
  Replies
  1. போற போக்கைப் பார்த்தால் மோசமாக்கத்தான் உள்ளது :)

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மறுமணம் பண்ணிக்க நான் ரெடி ,நீங்க ரெடியா ?இந்த கேள்வியைக் கேட்டு சிஸ்டர் மனம் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கும் :)

   Delete
 3. ‘பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போய்விடும்!?’ -என்று நான் நினைக்கிறதா சொல்கிறார்களே...! நான் யாரிடம் சொன்னேன்...? எனக்கென்ன அறிவாயில்லை...! நீங்கள் செல்வதைப்போல்... எனக்கு உயிர் இருப்பதால் அங்குமிங்கும் செல்லத்தானே செய்வேன்... இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...?

  பெண் வேடமிட்ட ஆம்பிள நர்ஸ்ன்னு தெரியாம கேட்டிட்டேன்...!

  அதுக்கின்னு வெறும் கையை மட்டுமா கொடுப்பது... ‘கை கொடுக்கும் கையா...?!’ அய்யா...!

  சமத்தா 'சமந்தா ரொட்டி'ய பய புள்ளைங்க காசு கொடுக்காம அப்படியே சாப்புடுவேன்னு அள்ளிகிட்டு போயிட்டாங்க...!

  வந்தாரை வாழவைக்கும் நாடல்லவா...? உலகத்தை தாராளமயமாக்கி... உள்ளுர் கையேந்தி நிற்க...! நிற்க...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. நான் வேட்டைக்கு கிளம்பும் போது மனுசங்க யாரும் குறுக்கே வந்தா ,நானே சகுனத் தடைன்னு சொல்றதில்லை !ஆறறிவுன்னு சொல்லிக்கிட்டு நீங்க சொல்லலாமா :)

   இவர்தான் வரப்போற ரெமோ படத்தின் ஹீரோவா :)

   அப்படின்னா ,அவரோட துணைக்கு கிளம்பிட வேண்டியதானே :)

   கெட்டு போன ரொட்டிதானே சாப்பிட்டுப் போகட்டும் :)

   'தாராள'மயத்தை நடிகைகள் கடைப்பிடிப்பது போதாதா ,நாடுமா :)

   Delete
 4. கொள்கைப்பிடிப்பினை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அதையே அவர் தொடரட்டுமா :)

   Delete
 5. நகைச்சுவை அனைத்தையும் .ரசித்தேன் சகோதரா.
  தமிழ் மணம் ஓட்டு போட்டுள்ளேன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இது உங்களிடமிருந்து முதன் முதலாய் வரும் வோட்டு,அதான் இந்த பதிவு த ம மணி மகுடம் சூடிக் கொண்டதோ,நன்றி :)

   Delete
 6. பாவம் பேஷண்ட் அவர் கண்ணிலும் கோளாறு....

  ReplyDelete
  Replies
  1. கண்ணிலே கோளாறா ,மனசிலே கோளாறா :)

   Delete
 7. அனைத்தையும் ரசித்தேன்!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. 'சமந்தா ரொட்டி ' ரொம்ப டேஸ்ட் தான் ,இல்லையா :)

   Delete
 8. கால்நடை டாக்டருக்கு பூனை குறுகே போவது நல்ல சகுனமா
  யூனிஃபார்மில் போனால் சிஸ்டர் ஆகிவிடுவார்களே
  பிச்சை போடும்போது இடது கை வலது கையைப் பிடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்
  யெஸ் சார் .
  ஆனால் அயல் நாட்டிலிருந்து வரும் பணம் இந்திய ரூபாயில் கூடுமே

  ReplyDelete
  Replies
  1. இருமிகிட்டே நோயாளி வந்தா ,'மனுஷ' டாக்டர் நல்ல சகுனம்னு நினைக்கிறாரே :)
   சேலைக் கட்டிட்டு வந்தா அப்படி தோணாதா :)
   ஒரு கையால் கொடுக்க முடியாத அளவுக்கு கொடுப்பதால் ,சப்போர்ட் :)
   இந்த எஸ் ,சமந்தா நினைவில் இருப்பார் என்பதாலா :)
   உள்நாட்டில் இருப்பவர்களுக்கு விலைவாசி கூடுதே :)

   Delete
 9. 01. எவன் வீட்ல இலவோ....
  02. இப்படியும் ஆபத்தா
  03. நல்ல பாலிசிதான்
  04. நல்ல தந்திரம்
  05. நல்ல கேள்வி ஜி

  ReplyDelete
  Replies
  1. இழவோ என்னவோ .காசுதானே :)
   சைக்கோக்கள் பெருகி விட்டார்களே :)
   பாலிஸி காலாவதி ஆகாமல் தொடரட்டும் :)
   இல்லைன்னா சரக்கு விக்காதே :)
   பதில்தான் தெரியவில்லை :)

   Delete
 10. அனைத்தையும் ரசித்தோம் ஜி!!!

  ReplyDelete
  Replies
  1. யானைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மைதானே :)

   Delete
 11. கொள்கை பிடிப்பு உட்பட அனைத்தும் நன்று

  ReplyDelete
  Replies
  1. நான் ரெடி நீங்க ரெடியான்னு கேட்கிறவர் ,நல்லவர்தானே :)

   Delete