28 October 2016

மனைவியின் சந்தேகம் தீரணுமா ,நிவர்த்தியாகணுமா :)

                 ''என்னோட சந்தேகம் உண்மையாகணும்னு வேண்டிகிட்டீங்களா,ஏன் ?''
                  ''எனக்கு பல பெண்களோட தொடர்பு  இருக்குங்கிறதுதானே உன்  சந்தேகம் !''
கூகுளில் தேடச் சொன்ன கூமுட்டை :)
               ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''
              '' வீட்டை விட்டு ஓடிப் போன அவரோட பொண்ணு ,எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''

பகல் கனவில் கனவுக் கன்னி  வருவாளா :)
               ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
               ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
              ''ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''

தீர்த்தம் குடிப்பதில் தீர்க்கமான முடிவு:)
               ''குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா சொல்றாங்க ,அதனாலே ....''
               ''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
               ''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''

மலை முழுங்கி அவர்தானா :)
             ''நீண்ட  நாளுக்கு  பிறகு இப்போதான் ஊருக்கு வர்றேன் ,யானை மலை ஸ்டாப்பிலே இறக்கி விடச் சொன்னா ,கண்மாய் கரையிலே  இறக்கி விடுறது ,நியாயமா கண்டக்டர் ?''
            ''உங்க நியாயத்தை அங்கிருந்த மலையை  உடைச்ச குவாரி காண்ட்ராக்டர்கிட்டே போய்க் கேளுங்க  !''

மனிதம் மறந்தவர்களுக்கு மகாத்மாவும் ,மலாலாவும் ஒன்றுதான் !
அன்று ...
'இந்து 'மகாத்மாவைக் கொன்றது இந்து மதத் தீவிரவாதம் ...
இன்று ...
'முஸ்லீம் 'மலாலாவைக் கொல்லத் துடிக்கிறது  முஸ்லீம் தீவிரவாதம் ..
மகாத்மா காந்தி நல்லவர்தான் ,நாட்டுக்காக பாடுபட்டவர்தான் ...
வெள்ளையருக்கு எதிராகவும் ,முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும்தான் பதினெட்டு முறை உண்ணாவிரதம் இருந்தார் ...
ஒருமுறைக் கூட இந்துக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததில்லை ...
நான் ஒரு இந்து ,ஆனால் காந்தி இந்துவாக ஒருபோதும் நடந்துக் கொள்ளவில்லை ...
முகமத் கரம்சந்த் காந்தி என்றே அவரை சொல்வேன் ...
இது ...மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் கருத்து !
அதே நேரத்தில் ...ஒரு உண்மை இந்து மறைந்தார் என கருத்தை சொன்னார் முகமது அலி ஜின்னா !
தாலிபான்களின் துப்பாக்கி சூட்டிலிருந்து உயிர் தப்பிய மலாலா 'நான் மலாலா 'என புத்தகம் எழுதியுள்ளார் ...
அதை பாகிஸ்தானில் விற்கவிடாமல் தடைசெய்த தாலிபான்கள் ...
மலாலா எங்களிடம் சிக்குவார் ,கொல்லுவோம் என்று கொக்கரித்து இருக்கிறார்கள் !
அன்றும் ,இன்றும் ...
எந்த ம[ட ]தத் தீவிரவாதிகள்  ஆனாலும் மனிதம் மறந்துதான்  செயல்படுகிறார்கள் !

14 comments:

 1. 01. பயலுக்கு தொடர்பு வைக்க ஆசையோ ?
  02. விபரமானவருதான்.
  03. இதுக்கு டாக்டருதான் வேணுமா ?
  04. பகல் குடிகாரன்
  05. காண்ட்ராக்டர் மலையவே முழுங்கிட்டாரா ?
  06. நல்ல கருத்து ஜி

  ReplyDelete
  Replies
  1. மனைவியே சந்தேகப்படும் போது ஆசை வரத்தானே செய்யும் :)
   நல்ல வேளை,மாசமா இருக்கான்னு பார்க்கச் சொல்லாம போனாரே :)
   தூக்கத்துக்கு மருந்து அவர்தானே தரணும்:)
   இப்படியும் ஒரு பிரிவா :)
   நிஜத்திலும் நடந்திருக்கே :)
   இயற்கை சீரழிவைக் கூட முன்னேற்பாடுடன் சமாளித்து விடலாம் ,தீவிரவாதத்தை என்ன செய்வது :)

   Delete
 2. ஓடிப்போன பொண்ணோட செல்ஃபோனோட ஐ எம் ஈ ஐ (சரிதானே?) நம்பர் இருந்தால் அதைக் கூடாக கண்டு பிடிக்கலாம் ஜி!

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஐ எம் ஈ ஐ யை கூகுளில் சலித்துப் பார்த்ததில் சரியென்றே வருகிறது :)

   Delete
 3. அதெல்லாம் ஒன்றும் இல்லை... என்னோட கனவுல... பல நடிகர்கள் வந்து தொந்தரவு கொடுக்கிறார்கள்... இனி அவர்களெல்லாம் கனவுல மட்டும் வரக்கூடாதுன்னு வேண்டிகிட்டேன்...!

  மாப்பிள்ளையோட ‘ஊட்டி வரை உறவு’க்குச் சென்றிருக்கிறார்களாம்...!

  இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு...‘பகலில் ஓர் இரவு’ படம் பார்க்க வேண்டியதுதானே...!

  விடிய விடியக் குடிச்சிட்டு... யார்ட்டையும் பேசாம... விடிஞ்சதுக்கு அப்புறம் பேசப் போறேன்...!

  நா உயிரோட இருக்கிற ஒங்களுக்கும் பிடிக்கலையா...?! யாரும் எனக்கு சகாயம் பண்ற மாதிரி தெரியலையே...!

  மதம் பிடித்த மாக்கள்... மகாத்மாக்களை உருவாக்கும் மாக்கள்... அட கொக்க மக்கா...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. உன் வேண்டுதலுக்கு நீதான் கும்பிட்டுக்கணும் :)

   உறவு ,ஊட்டிவளர்க்கும் பிள்ளையைத் தராமல் போனால் சரி :)

   பார்த்தால் 'அதிலே ஒரு சுகம்' கிடைக்குமா :)

   ஆமா ,இவர் பெரியார் பேரன் ,இவர் பேசிட்டாலும் :)

   கண்மாயிலேயே அமுக்கி கொன்னுடுவாரோ :)

   மக்களில் மகாத்மாவும் உண்டு ,கொக்க மக்காவும் உண்டா :)

   Delete
 4. Replies
  1. தீர்த்தம் குடிக்க அவர் எடுத்து இருக்கும் தீர்க்கமான முடிவை ரசிக்க முடியுதா :)

   Delete
 5. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 6. உண்மையிலே அவர்கள் மடத் தீவிரவாதிகள்தான்.
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. வன்முறையின் மூலம் அவர்கள் அடைவது தற்காலிக வெற்றிதானே :)

   Delete
 7. அண்ணனுக்கு போர் அடிச்சுருச்சு...அதான் சந்தேகம் நிவர்த்திக்க விரும்புறாரு.....

  ReplyDelete
  Replies
  1. உண்மையான போரே இனிமேதானே ஆரம்பம் :)

   Delete