26 October 2016

பொண்ணு வாந்தி எடுத்தாலே 'அது 'தானா ?

F  போய்  P  ஆனது :)
             ''முப்பது வருஷம்  filesகளோட மல்லுகட்டி ரிடையர் ஆனாரே ,இப்போ என்ன பண்றார் ?''
              ''pilesசோட மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார் !''

பின்னழகில் மோகினி ,முன்னழகில்... :)
        '' என்னை பின்னாலே பார்த்தவங்க எத்தனை பேர் முன்னாடியும் வந்து பார்க்கிறாங்கன்னு உனக்கு  தெரியுமாடீ ?''
          ''பார்த்துட்டு 'ப்பூ ,இம்புட்டுதானா ' ன்னு நினைக்கிறது உனக்குத் தெரியுமா ,ரொம்பவும் அலட்டிக்காதே !''
பொண்ணு வாந்தி எடுத்தாலே 'அது 'தானா ?
          ''என்னங்க,நம்ம பையன் வாந்தி எடுக்கிறான்னு  சொல்றேன் ...கொஞ்சமும் அலட்டிக்காம இருக்கீங்களே ,ஏன் ?''
          ''பொண்ணு வாந்தி எடுத்தாதான் ஏதோ சிக்கல்னு அர்த்தம் ,அதான் !''

மனைவியின்  சுகரால்  கணவனுக்கு வந்த கஷ்டம் :)
               ''என்ன முத்தம்மா ,சீனிவாசன்ங்கிற என் பெயரை  மாற்றிகிட்டாதான் ,  பக்கத்திலே வருவேன்னு  அடம் பிடிக்கிறீயே ,ஏன் ?''
                ''சர்க்கரை கூடுதலா இருக்கு ...சீனி 'வாசனை 'கூட பக்கத்திலே வராம பார்த்துக்குங்கன்னு , டாக்டரு கறாரா சொல்லி இருக்காருங்க !''

கெமிஸ்ட்ரி அப்டேட் ஆகலையே :)
              "கெமிஸ்ட்ரி பாடத்திலே பர்ஸ்ட் ரேங்க்  வாங்கி பிரயோஜனம்  இல்லையா ,ஏண்டி ?'' 
               "கல்யாணம் ஆனதில் இருந்து சண்டை தான் எனக்கும் அவருக்கும் ...கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதே   !"

'சின்ன வீடு'க்கு அங்கீகாரமா இந்த தீர்ப்பு :)
முதல் திருமணத்தை மறைத்து  2வது திருமணம் செய்திருந்தால் ,ஹிந்து திருமண சட்டப்படி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு 2வது மனைவிக்கும் உரிமை உண்டு ...
இப்படி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதி மன்றம் !
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது பண்பாடு என்று சொல்லிக்கொண்டே ...
ஊருக்கு ஒருத்தியை வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பால் நெருக்கடி அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது ...
இதுவரை தாலி இல்லாமல் இருந்த கள்ளக்காதலிகள்  சட்டப் பாதுகாப்புக்காக தாலி கட்டச் சொல்லி நெருக்கடி தந்தால் ...
கள்ளக் காதலன் தாலியும் தரலாம் ...
இதென்ன வம்பு என்று ஒரேயடியாய் ஜோலியும் முடிக்கலாம் ...
கள்ளக் காதல் கொலைகளுக்கு இனி பஞ்சம் இருக்காது ...
முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்று ஜீவனாம்ச வழக்குகளுக்கும்  இனி பஞ்சம் இருக்காது ...
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் உற்சாகத்தால்  சின்னவீடு பெருக்கத்திற்கும் இனி பஞ்சம் இருக்காது ...

22 comments:

 1. 01. ரொம்பவும் வித்தியாசம் இல்லையே...
  02. ஹி....ஹி...ஹி
  03. உண்மைதானே...
  04. உசார் பார்ட்டிதான்
  05. பொருத்தம் பார்க்கலையோ....
  06. எல்லாம் நன்மைக்கே...

  ReplyDelete
  Replies
  1. சமையலுக்கும் மையலுக்கும் ஒரேழுத்து பேதம் என்பதைப் போலத்தான் :)
   நீங்க பல்பு வாங்கலியே:)
   பெண்களும் தண்ணி அடிக்கிற காலம் என்பதை மறந்துட்டீங்களா :)
   கறாரா கடைபிடிக்கிறாரோ:)
   ஜாதகம் பார்த்தா மட்டும் சாதகமாவா இருக்கு :)
   நாரதர் கலகம் நன்மையில் முடியுமா :)

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. முன்னழகையும் சேர்த்தா :)

   Delete
 3. Replies
  1. சின்னவீடு பெருக்கத்திற்கு ஊக்குவிப்பு தேவையில்லைதானே :)

   Delete
 4. ரிஷி மூலம்... நதி மூலம் பார்க்கக் கூடாது... அதுபோல இதுவும் பார்க்க முடியாதில்ல...!

  உன்னோட தாராள மனதப் பார்க்கலாமுன்னுதான்...!

  பூந்திய நிறையா திங்காதேன்னா எங்கே கேக்கிறான்...!

  ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்னன்ன எண்ணங்கள்... சீனி வாசனையால் அதைக் கண்டு கொண்டாயோ...?!

  ஆனாப் பாரு... ஆகலைன்னா... குடுவையில போட்டு எரிச்சு விட்டிடு...! இருக்கவே இருக்கு முதுமக்கள் தாழி...!

  முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் பெண் செய்திருந்தால்... ஜீவனாம்சம் பெறுவதற்கு கணவருக்கு உரிமையுண்டா...? கொஞ்சம் தீர்ப்ப மாத்திச் சொல்லுங்க...! பிரசாத(ந்)ம் கொஞ்சம் குடுங்கோ...! அந்தக் கடவுளாவது கண்ணத் தொறக்கட்டும்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. மூலம் வந்ததுக்கு மூலக் காரணமே ஒய்வில்லாமல் உட்கார்ந்து வேலை செய்ததுதானே :)
   அந்த பெண்மணிக்கு க்கு ஏது தாராள மனசு :)
   வாந்திக்கு காரணம் பூந்தி என்றால் கூட சந்தோஷப் படலாமே:)
   சந்திரபோசின் கணீர்குரலில் வந்த பாடல் இதுக்குத்தானா :)
   ஊமைக் கனவுகள் விஜூ ஸாரின் ஆசீவகத்தில் பார்த்த முதுமக்கள் தாழிதானே :)
   வேற வினையே வேண்டாம் ,கணவருக்கு ஜீவனாம்சமா :)

   Delete
 5. அனைத்தும் அருமை. தம4

  ReplyDelete
  Replies
  1. F போய் P வந்ததுமா :)

   Delete
 6. files and piles! :)

  ரசித்தேன்..

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. அந்த fileல் அவர் lifeபே முடிஞ்சு போச்சோ :)

   Delete
 7. படிப்பினை ....ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் பைல்ஸ் வரலாம்
  எனக்கு ஒரு சர்தார்ஜி ஜோக் நினைவுக்கு வருகிறது
  கண்டதைத் தின்றால் பெண்ணும் வாந்தி எடுக்கலாம்
  சீனிவாசன் ரசிக்க வைக்கிறார்
  முதலில் physics வொர்க் அவுட் ஆச்சா
  சின்ன வீட்டை நட்டாற்றில் விடக் கூடாதே

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலோருக்கு அப்படித்தான் :)
   அதையும் சொல்லுங்களேன், அனேகமா பின்னாலே எஞ்சின் வச்ச கார்ன்னு நினைக்கிறேன் :)
   அதனால் வந்த வாந்தி என்றால் வருத்தப் படவும் வேண்டியதில்லை :)
   மனைவிக்கு வருத்தம் கொடுக்கிறாரே :)
   ஸ்டேட் பர்ஸ்ட் :)
   இவ்வளவு கரிசனமா :)

   Delete
 8. பொன்னு எடுக்கும் வாந்தி பித்த அல்லது தின்டது செமிக்காம கூட இருக்கலாம் அல்லவா...

  ReplyDelete
  Replies
  1. நான் இல்லைன்னா சொன்னேன் ,நீங்களா ஏன் வேற கற்பனை பண்றீங்க :)

   Delete
 9. அன்பின் சகோதரா அத்தனையும் ரசனை
  ரசித்தேன்
  ஜீவனாம்சமும்- சீனியும் மிகவும் தூக்கல்
  தமிழ் மணம் 11

  ReplyDelete
  Replies
  1. ஜீவனாம்சத்துக்கும், சீனிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிற மாதிரி தோணுதே ,உங்களுக்கு :)

   Delete
 10. பின்னழகைகை கண்ட பேதை மடநெஞ்சே முன்னழகைக் காண முந்தாதே!

  ReplyDelete
  Replies
  1. மடந்தையை நோக்கும் விஷயத்தில் ,இந்த எச்சரிக்கை பலன் அளிக்கவில்லையே ,அய்யா :)

   Delete
 11. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி :)

   Delete