9 October 2016

இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....:)

கடன் வெட்கமறியாது :)
        ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 
        ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேங்கிறாங்களே !''

கடகம்னா நண்டு, தெரியும்தானே :)
             '' வாழ்க்கைக் 'கடலில் 'நீந்தி விளையாடுவீர்கள் என்று மணமக்களுக்கு ஜோதிடர் சொன்ன வாழ்த்து  பலிக்கும்னு எப்படி நம்புறே ?''
            ''பொண்ணு 'மீன'ராசி ,பையன் 'கடக'ராசியாச்சே !''

இந்த ஜோடி பெத்துகிட்டது ரெண்டுதான் !
                   ''வீட்டிலே அரை டஜன் பிள்ளைங்களை  வச்சுகிட்டு,குடும்பக்கட்டுபாட்டைக் கடைப்பிடிக்கிறோம்னு  சொல்றது ,நியாயமா ?''
                   'நாங்க பெத்துகிட்டது ரெண்டுதாங்க ,கல்யாணத்திற்கு முன்னாடி  அவளுக்கு ரெண்டு,எனக்கு ரெண்டு குழந்தைங்க இருந்ததே !''

அடுத்தவங்க  டைரியைப் படிப்பதில்  'கிக் ' உண்டா : )*
             'அடுத்து நீங்க  எடுக்க  போற  படத்தின்  பெயர் 'ஒரு பைத்தியத்தின் டைரி 'யாமே ? '
           '  'ஆமாம் ,அதுக்கு நீங்கதான் உங்க டைரியை கொடுத்து உதவணும் ,ப்ளீஸ்!'   
    *முன்னொரு காலத்தில் ,பிரசுரித்த ஜூனியர் விகடனுக்கு நன்றி !   
இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....:)
இந்திய ஜனத் தொகையோ 120கோடி ,அதில்  இணையத்தை பயன்படுத்துவோர் 15கோடி ,அதில் ஆண்களின் எண்ணிக்கை 9கோடி ,
6கோடி பெண்களில் ...
பதினெட்டில் இருந்து முப்பத்தைந்து வயதுள்ள ஆயிரம் பெண்களை சர்வே செய்ததில் அவர்கள் இணையத்தில் பார்ப்பது ...
உடை ,உணவு ,நகைகள் சம்பந்தமாகத் தானாம் !இது கூகுள் சர்வே ... ஆண்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதையும் சர்வே செய்தால் ......?அவ்வ்வ்வ் ...
கூகுள் ஆண்டவர் ஆண்களை காப்பாற்றி விட்டார் என்றே படுகிறது !

24 comments:

 1. 01. நல்ல யோசனைதான்
  02. நல்ல பொருத்தமே...
  03. நல்ல ஜோடி வாழ்க வளமுடன்ய
  04. நல்ல படியாக ஓடும் படம்.
  05. நல்ல தகவல் ஆண்களி்ன் சர்வே ஜொள்ளி இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தேவைன்னா எப்படியும் பேசுவாங்க :)
   ஆனால் நீச்சல் வருமான்னு தெரியலே :)
   இன்னும் பதினாரும் பெற்றுத்தானே:)
   பார்க்கத்தான் கிறுக்கர்கள் நிறைய இருக்கிறார்களே :)
   சொல்லாமல் தெரியாதா என்ன :)

   Delete
 2. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாதிங்கிறப்ப... தெரியாதவங்களுக்குக் கொடுங்க... கொடுத்துக்கிட்டே இருங்க... அப்பத்தான் நீங்க எட்டாவது வள்ளலாக முடியும்...!

  “வாழ்க்கைக் 'கடலில் 'நீந்தி விளையாடுவீர்கள்” சொன்னதத் தப்பா புரிஞ்சிக்கிட்டு எப்பவும் தண்ணியிலயே குடியும் குடித்தனம் பண்றாரே...! 'கடக' ராசின்னு அவரும் முன் ஏற மாட்டேங்கிறாரு... என்னையும் முன் ஏற விடமாட்டேன்னு இழுக்கிறாரு...! இதுல ‘நான் ஒரு ராசி இல்லா ராசா’ன்னு பாட்டு வேற பாடுறாரு...!

  ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதாங்க...!’ என்னதான் இருந்தாலும் பழச மறக்கக்கூடாதுதானே...!

  படம் எடுக்கிற பைத்தியமாயிடுச்சா...? நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்துட்டேன்... இருங்க... அந்த டைரியப் பாத்து அட்ரஸ் தாரேன்...! கைராசிக்கார வைத்தியரு... போயிப்பாருங்க...!

  உணவு உடை உறையுள்(தங்க) தானே முக்கியம்...! ‘ஆண்டவன் படைச்சான் எங்கிட்டக் கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்...’ ஆண்டவர் கட்டளைய சாமான்ய ஆண்கள் மாத்த முடியாதில்ல...!

  த.ம. 2
  ReplyDelete
  Replies

  1. உங்கள் பதிவும் அதற்கு மணவையாரின் பின்னூட்டமும் ரசனை பகவானே!
   உங்கள் பதிலையும் படிக்க மீண்டும் வருவேன்.

   த ம

   நன்றி.

   Delete
  2. எட்டாவது வள்ளல் ஏற்கனவே வாழ்ந்து மறைந்து விட்டாராமே :)
   இந்திய கடகங்கள் அப்படித்தான் காலை இழுக்கும் :)
   பழசை மறந்தால் அவன் மனுசனே இல்லை .புதுசை நினைக்காமல் இருந்தால் சரி :)
   கை ராசி டாக்டர் மண்டையில் உள்ளதை வாசிப்பாரா :)
   பதினெட்டில் இருந்து முப்பத்தைந்து வயது ஆண் மட்டுமா ,உறையுள்ளே மாட்டியிருக்கு :)

   Delete
  3. உடன் மறுமொழி கூற எனக்கும் ஆசைதான் ,பிழைப்பூ ,வலைப்பூவுக்கு வராமல் தடுக்கிறதே :)

   Delete
 3. கடன் இப்பல்லாம் எலும்பைத்தான் முறிக்குது!

  அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. முறிச்சா பரவாயில்லை ,உயிரையே குடிக்குதே :)

   Delete
 4. Replies
  1. மீன ராசி கடக ராசி, பொருத்தம்தானே :)

   Delete
 5. பல்லெல்லாம் தெரியக் காட்டி சொல் எல்லாம் சொல்லி நாட்டிக் கடன் கேட்டாலும் நட்பு முறியும் என்று கடன் கிடைப்பதில்லை. ஆகவே நட்பில்லாத ஒருவரிடம் கடன் அல்ல பிச்சை எடுக்கிறார் போலும்
  மீனும் நண்டும் சேர்ந்து நீந்தி மகிழுமா
  உன்குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளுடன் விளையாடுகின்றன
  பிறரது டைரிகளைப்படிப்பது தவறு
  நம்மை மேயாமல் இருந்தால் சரி

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் .தெரிந்தவர்களிடம் கேட்டால் கடன் ,தெரியாதவர்களிடம் கேட்டால் பிச்சை :)
   நீந்துவதைப் பார்த்து நாம் வேண்டுமானால் மகிழுவோம்:)
   ஆங்கிலத்தில் சொல்வார்கள் ,அதான் இப்படி :)
   கொடுத்தாலுமா :)
   எதுவும் கண்ட்ரோலில் இருக்கணும் ,அப்படித்தானே :)

   Delete
 6. முந்தி அவவுக்கு இரண்டு
  முந்தி இவருக்கு இரண்டு
  இப்ப இருவருக்கும் இரண்டு
  ஆக மொத்தம் ஆறு
  நானும்
  கணக்குப் படித்தேனே!

  ReplyDelete
  Replies
  1. பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் விவாகரத்தான கணக்கு வரவில்லை :)

   Delete
 7. ரசித்தேன். அருமை.
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. ஒரு கைதியின் டைரி வந்த போது ,ஜூ வியில் பிரசுரமான ஜோக்கையும் ரசிக்க முடிந்ததா :)

   Delete
 8. Replies
  1. கடன் வெட்கமறியாதுதானே :)

   Delete
 9. ஹா...ஹா...
  ஹா...ஹா....
  ஹா...ஹா.....

  இப்படி சிரித்து ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் உங்க சிரிப்பு சத்தம் கேட்டதே :)

   Delete
 10. இறுதியில் சுவாரசியமான புள்ளி விவரம்

  ReplyDelete
  Replies
  1. முற்றுப் பெறாத புள்ளி விவரமும் கூட :)

   Delete
 11. கூகுளிலும் ஆண் ஆதிக்கமா இருப்பதால் போடாமல் இருப்பார்கள்.........

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்க யானைதானே விரும்பும் :)

   Delete