8 October 2016

Rampaa,Urvasi,Menaka இருப்பது இங்கே :)

கணவன் மேல் சந்தேகம்னா இப்படியா குத்திகாட்டுவது ?
             '' இன்னைக்கு வேலைக்காரி கேட்ட 'டிடர்ஜென்ட்  கேக்' சோப்பை  வாங்கி வந்தேன் ,இனிமேல் வாங்கி வரக் கூடாதுன்னு சொல்லிட்டா  என் மனைவி !''
              ''ஏண்டா ?''
               ''என் பையன் பத்து நாளா கேட்கிற 'பட்டர் ஜாம் கேக் 'வாங்கிட்டு வர மறந்து விட்டேனாம்!''

ரம்பா ,ஊர்வசி ,மேனகா இருப்பது  இங்கே :)
              ''அவர் ஏன் 'ரம்'மட்டுமே குடிக்கிறார் ?''
             ''Rampaa,Urvasi,Menaka மூவரோட டான்சையும் பார்த்த த்ரில் அதிலேதான் அவருக்கு கிடைக்குதாம் !''

விஜய்யின் துப்பாக்கியை சத்தியமா நான் பார்க்கலே!
          ''விஜய்யோட  துப்பாக்கியை  பார்த்தீயா ?''
         ''அவர் எப்போ தொலைச்சாரு ?துப்பாக்கி லைசென்ஸ் அவருக்கு இருக்கா ?''

டெங்குக்கு மருந்தில்லை !கொசுவுக்கும் ஒரு முடிவில்லையா ?
கின்னஸ் சாதனை செய்ததற்காக 
பாராட்ட முடியவில்லை ...
காரணம் ,இந்த சாதனையால் வருடம் தோறும் 
இறந்தோர் எண்ணிக்கை இருபது கோடியாம் !
உலகிலேயே மோசமான உயிரினம் என்று 
சாதனைக் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பவர் ...
திருவாளர் 'கொசு 'வார்  தான் !

ரீசார்ஜ் ஆகுமா காதல் ?
மூன்றாண்டு காதல் முறிந்தது 
மூன்று நாளாய் முடங்கியது செல்போன் ...
அவளுக்காக ,அவன்  ரீசார்ஜ்  செய்யாததால் !

  குறிப்பு ....இரண்டு நாள் பணி  நிமித்தமாய் நாகர் கோவில் செல்வதால் ,இந்த மீள் பதிவு !என்  மறுமொழியும்  தாமதமாகும்  பொறுத்தருள்க :)

24 comments:


 1. 01. பின்னே மகன் முக்கியமில்லையா ?
  02. ஆஹா..... ஸூப்பர்
  03. நல்ல நக்கல்ஸ்
  04. அவருக்கு அவார்டு கொடுக்கலாம்
  05. தெய்வீக காதல்

  ReplyDelete
  Replies
  1. அது அவருக்கு புரிந்தால் சரி :)
   ரம்,சும்மா கும்ன்னு இருக்கா :)
   பொம்மை துப்பாக்கி காட்டி பயமுறுத்துறாங்களே :)
   கொல்வார் அவார்டா :)
   அதான் கண்ணுக்குத் தெரியாமல் போச்சோ :)

   Delete
 2. ''Rampaa,Urvasi,Menaka மூவரோட
  டான்சையும் பார்த்த த்ரில்
  'ரம்' மட்டுமே குடிக்க வரலாம்...
  ஆனால், குடிப்பதால்
  சாவு நெருங்கலாம் என்பதை
  படிக்காமல் இருக்கலாமோ?

  ReplyDelete
  Replies
  1. இறக்கும் வரை அனுபவிக்க விரும்புகிறார்களே :)

   Delete
 3. ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா... என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்...’ பையன் வீட்டை விட்டுப் போக மாட்டான்... வேலைக்காரி வீட்டை விட்டுப் போயிடக்கூடாதில்ல...!

  XXX பேதை... போதை... பாதை... உபாதை...!

  அந்தத் துப்பாக்கி பார்க்கிற துர்பாக்கியம் கிடைக்கல...!

  கொசு‘ரு’ செய்திங்கிறது இதுதானோ...?!

  யாராரையோ காதலிச்சு உருப்படல ... ‘நயன்’படல...ஒன்னும் சரிப்படல... வாழ்கையிலே என்றும் சுகப்படல...வர வர காதல் கசக்குதையா... ‘தமன்’ சமன் படுமான்னு ரீசார்ஜ் செய்து பார்ப்போம்....!

  த.ம. 3
  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா பட்டர் ஜாம் செர்த்ஹி வாங்கிட்டு வாங்க :)
   வாழ்க்கையே தை தை ஆட்டம்தானா :)
   இதுவும் அதிர்ஷ்டம் தான் :)
   ஆனாலும்,முக்கியமான செய்தியாச்சே :)
   சமன் கணக்கு திரிசமன் ஆகாமல் போகட்டும் :)

   Delete
 4. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. rum பிடித்ததா ஸ்ரீ ram ஜி
   :)

   Delete
 5. வேலைக்காரி பட்டர் ஜாம் கேக் கேட்டிருந்தால் வாங்கி வந்திருப்பாரா

  ReplyDelete
  Replies
  1. ஜாம்ஜாம்னு வாங்கி வந்திருப்பார் :)

   Delete
 6. மூவரோட டான்சையும் பார்க்காாமலே..இங்கே அப்பல்லோவில த்ரில் கிடைக்குதே...தலீவரே

  ReplyDelete
  Replies
  1. பார்த்ததால் வந்த வினைதானே இது :)

   Delete
 7. ஹாஹா! ரம்முக்கு இப்படி விளக்கமா . எதையெல்லாம் ஆராய்ச்சி செஞ்சுருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு ,குடிகாரங்க வேற விளக்கம் சொல்றாங்களே :)

   Delete
 8. ஹாஹா! ரம்முக்கு இப்படி விளக்கமா . எதையெல்லாம் ஆராய்ச்சி செஞ்சுருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. குடிக்காரங்க வேற விளக்கம் சொல்றாங்களே :)

   Delete
 9. சிரித்தேன்.
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்கும் படியா பதிவு போடுற நீங்க ,சிரித்தமைக்கு நன்றி :)

   Delete
 10. Replies
  1. ரீசார்ஜ் செய்யாத மாயத்தையும் தானே :)

   Delete
 11. திலோத்தமா காண என்ன குடிக்க வேண்டும்
  நானும் பார்க்கலை
  உங்கள் இருப்பிடத்தில் கொசுவால் அதிக தொல்லைப் படுகிறீர்களா கொசுவைபதிவில் அதிகம்காண்கிறேன்
  செல் ரிசார்ஜ் ஆகாததால் காதலும் சார்ஜ் ஆகவில்லையோ

  ReplyDelete
  Replies
  1. திலோத்தமை என்ன டான்சரா ?எதுக்கு பார்க்கணும் :)
   உங்களுக்கு கொடுப்பினை இல்லை :)
   நேற்று ,நாகர்கோவிலில் தங்கினேன் ,அங்கேயும் கொசுவாரின் தொல்லைதான் :)
   அப்படித்தான் பலரின் காதல் முடிவுக்கு வருகிறது :)

   Delete
 12. ரம் அடித்தால் மூவரும் ஆடுவார்களா...? மூதேவியின்னு அடி விழுகுமா...?
  கொசுவார் சாதனையாளர்தான்...
  வேலைக்காரி... செல் எல்லாம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கனவில் அது ,நிஜத்தில் இது :)
   கொசுவாரை அடிக்க வார் எடுக்கலாமா :)

   Delete