11 November 2016

தமன்னா ஞாபகம் இவருக்குமா:)

இவரோட பொய் ,அடுத்தவங்களுக்கு போஜனம் கொடுக்கும் :)                
                ''என்ன சொல்றீங்க ,இன்னும் நான் ஆயிரம் பொய்  சொல்ல வேண்டியிருக்குமா ?'
                ''இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிற யோகம் உங்களுக்கு இருக்கே !''

அரசவை நர்த்தகியின் நடனத்தைக் கூட  ரசிக்க முடியலியாம் :)
             ''அரிப்பாசனத்தை உடனே மாற்றுங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள் ,மன்னா ?''
             ''அரியாசனமா இது ?மூட்டைத் தொல்லை தாங்க முடியவில்லை !''

தற்கொலை நடிகைக்கு கவிதாஞ்சலி :)
              ''அவர் ,கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
             ''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் , தூக்கமாத்திரையை  அதிகமாய்  உண்டு ,துக்கத்தை ஏன் கொடுத்தாய்ன்னு எழுதி இருக்காரே !''

தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம் :)
               ''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா ?''
              ''டி வி மெகா சீரியலைப் பார்த்து அழுதுகிட்டு  இருக்காங்கப்பா !''

தமன்னா ஞாபகம் இவருக்குமா:)
                ''மன்னான்னு அழைக்கக் கூடாதுன்னு அரசர் கட்டளையாமே ,ஏன்?''
                ''தமன்னா ஞாபகம் வந்து வந்து விடுகிறதாம் அவருக்கு !''

பொன்மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ?
       'தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாய் உழைக்கணும் ,நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் வெற்றியே நிலைக்கும் ,தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லை ,ஊட்டி விடப்படும் எந்த உணவிலும் சக்தி இல்லை ,ஒரு அரிசி என்றாலும் விதைத்து வளர்த்து ,அறுவடைசெய்து சாப்பிடு ,பிரபஞ்சத்தின் சுவையை அனுபவிப்பாய் !'
         இப்படி நெஞ்சைத் தொடும் விதத்தில் தந்தை சொல்லும் அறிவுரையை எத்தனைப் பிள்ளைகள் கேட்பார்கள் ?
ஆனால் ,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வேத வாக்காய் ஏற்று சாதித்துக் காட்டிவுள்ளார் ஒரு பிரபல நட்சத்திரம் ...
அட்வைஸ் சொன்னவர் ...
இந்தியாவின் சார்பில் உலக அளவில் பேட்மிண்டன் பந்தாடியவர் !
அட்வைஸ்  கேட்டவர் ...
வாலிப நெஞ்சங்களை பந்தாடிக் கொண்டிருப்பவர் !
தந்தையின் பெயரை சொன்னால் ...
அப்படி ஒருவரை தெரியாதே என்பீர்கள் ...
மகளின் பெயரை சொன்னால் ...
இவரை தெரியாதவர்களும் இருக்கிறார்களா என்பீர்கள் ...
தந்தை பிரகாஷ் படுகோன் ????
மகள் தீபிகா படுகோன் !!!!
தீபிகா படுகோன் தன் ரசிக கண்மணிகளுக்கு ஒரு நல்ல காரியம் செய்வதாய்  இருந்தால் ...
 தந்தையின் பொன்மொழிவுடன் கூடிய ஆட்டோகிராப் போட்டோவைக்  கொடுக்கலாம் ...
ஆனால் ஒரேஒரு கண்டிஷன்...
அந்த போட்டோவிலாவது உடம்பு  முழுவதையும் மறைத்துக் கொண்டு போஸ்  கொடுப்பது  நல்லது !32 comments:

 1. Replies
  1. பொன்மொழி அருமைதானே :)

   Delete
 2. ஓராயிரம் பொய்யச் சொல்ல நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்... ம்...ம்... என்ன பண்றது யோகம் இருக்கிறப்ப... செரமப்பட்டுத்தானே ஆகனும்...!

  அரியாசனத்தில் நான் அமர்ந்து பார்த்துச் சொல்கிறேன் மன்னா... நீங்கள் சொல்வது உண்மைதானா என்று... எங்கே கொஞ்சம் எழுந்திருங்கள் மன்னா...!

  நான் இருக்கும் போது தூக்கி எடை பார்த்தார்கள்... என்னிடம் தங்கி... உரசிப் பாத்து... எங்கள் தங்கமென்று சொல்லிச் சொல்லி... தங்கமெல்லாம் கொடுத்தார்கள்... பிறகுதான் அதை உரசிப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது... போலித் தங்கம் என்று...! துக்கம் தாங்காமல் தூக்க மாத்திரை... யாக்கையின் இறுதி யாத்திரை...! வாங்க... எப்படியும் அங்க வந்துதானே ஆகனும்... அங்க வச்சுக்கிறேன்...!

  சீரியல் சீரியஸா போயிட்டு இருக்கு...! இப்ப அழுதாலும் பிள்ள பால் குடிக்க முடியாது...! தாயைப் போல் பிள்ளை இதுதானோ...?!

  த... மன்னா... தமன்னா... வாயிலில் தலைவிரி கோலமாகத் தங்களைக் காண காத்திருக்கிறார் மன்னா...! உள்ளே வரச் சொல்லட்டுமா... இல்லே வெளியே நான் கூட்டிச் செல்லட்டுமா...? மன்னா... என்ன சொல்கிறீர்கள்....? தங்களின் உத்தரவுக்குக்காகக் காத்து நிற்கிறேன் மன்னா...!

  தீ... பி... கா... படு... கோன்... தீயா வேலை செய்யனும்... இது விசுவாசத்தின் மறைபொருள்...! ஒரு வார்த்தை மட்டும் சொல்லி அருளும் என் ஆன்மா குணமடையும்...!

  த.ம. 1
  ReplyDelete
  Replies
  1. அதானே பார்த்தேன் உத்தமர் ஆயிட்டீங்களா என்று :)

   இதென்ன பேச்சு ,அமர்ந்து பார்க்கிறேன்,ராணியை மடியில் வைத்துக் கொள்கிறேன் என்று:)

   ஏமாற்றுக்காரன் நிறைந்த உலகம் இது இன்னிக்கெல்லாம் இருந்து இருந்தால் ,இரண்டாயிரம் நோட்டு கட்டா வாங்கி இருக்கலாம் :)

   அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பதும் பொய்யா போச்சே :)

   யாரங்கே காவலா ,ராஜத் துரோகம் செய்ய நினைக்கும் இவரை இழுத்து சென்று சிறையில் அடை:)

   மறை பொருள் புரியுது ,சிற்றின்ப சுவையே போதுமா , பிரபஞ்சத்தின் சுவையை அனுபவிக்க எண்ணமில்லையா :)   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அரசரின் அவஸ்தையை ரசிக்க முடியுதா:)

   Delete
 4. ர்சித்தேன் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. ஒருவரின் பொய் பல பேருக்கு போஜனம் தருகிறதுதானே:)

   Delete
 5. //''டி வி மெகா சீரியலைப் பார்த்து அழுதுகிட்டு இருக்காங்கப்பா !''//

  இந்த அழு மூஞ்சிகளை நினைத்தால் அழுகை அழுகையாக வருகிறது!

  ReplyDelete
  Replies
  1. வயசுப் பொண்ணுங்களும் இப்படி அழுதுக்கொண்டே இருந்தால் ,திருமணமும் தள்ளிப் போகக் கூடும் :)

   Delete
 6. ஆயிரம் பேருக்கு போஜனம் என்றாலும் மொய் எழுதணும் இல்லே?!!

  அரிப்பாசனம்!!!!!!

  துக்கக் கவிதை நல்லாயிருக்கே..

  ReplyDelete
  Replies
  1. இவங்க மொய் எழுதிவிட்டாலும் .......நாலு பேர் வயிறு முட்ட சாப்பிட்டு நூறு ரூபாய் எழுதப் போறான் ,நட்டம் யாருக்கு :)

   அரசரின் அவஸ்தை யாருக்குத் தெரியுது :)

   எல்லாம் அந்த கனவுக் கன்னி தந்தது :)

   Delete
 7. Replies
  1. தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கை இப்படி அழ வைப்பது சரியா ஜி :)

   Delete
 8. சோலந்தூர் சோசியர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
  ஹாஹாஹா அரிப்பாசனம்
  நல்ல கவிஞர்தான்
  அங்கும் அழுகைதான்
  அரசிக்கு தெரியுமா ?
  பாடாவதி கோன்தான்

  ReplyDelete
  Replies
  1. அதுவும் இரண்டாம் கல்யாணம் பொய்க்கவே பொய்க்காது :)
   இவர் ஆசனமே இப்படி என்றால் மக்கள் வாழ்க்கை :)
   உருகி உருகி எழுதிஇருக்காரே :)
   ஒரு அழுகைக்கு அர்த்தம் இருக்கு :)
   அவருக்கு சூர்யா ஞாபகமென்று கேள்விபட்டேன் :)
   ஆனா இரண்டு கோனும் பந்தாடுதே :)

   Delete
 9. டி வி மெகா சீரியலைப் பார்த்து அழுதுகிட்டு
  இருப்பதே பெண்களின் வேலையாகப் போச்சு!

  ReplyDelete
  Replies
  1. ஆச்சரியம் ,வற்றாமல் இவ்வளவு வருதே ,எப்படி :)

   Delete
 10. தீபிகா படுக்கோன் நடிகை மட்டுமல்ல. ராணுவ வீரர்கள் செய்யும் சாகசங்களையும் செய்யக் கூடியவர்.
  எல்லா ஜோக்குகளையும் படித்து ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. அப்படியென்ன சாகசம் செய்தார் என்பதை சொல்ல்லுங்களேன் அய்யா :)

   Delete
 11. ஆமா...தமன்னா ..ன்னா யாரு???????????????????

  ReplyDelete
  Replies
  1. ஓ,நீங்க ராதிகா ஆப்தேவுக்கு அப்டேட் ஆயீட்டிங்க போலிருக்கே:)

   Delete
 12. நகைப் பணி தொடரட்டும்
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்கம் விலை குறையும் போது நகைப் பணி தொடரத்தானே செய்யும் :)

   Delete
 13. Replies
  1. புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டைப் போல ,இரண்டாயிரம் பொய்யையுமா:)

   Delete
 14. ரசித்து வாசித்தேன் சகோதரா.
  மிக்க நன்றி.
  தமிழ் மணம் 13.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. தாயும் சேயும் செய்யும் ஒரே காரியத்தையும் ரசிக்க முடியுதா :)

   Delete
 15. அரசருக்கு ஏன் தமன்னா ஞாபகம் ?

  ReplyDelete
  Replies
  1. தமன்னாவில் மன்னா இருப்பதால்தான் :)

   Delete
 16. சோகக்கவிதையும் நல்லாத்தான் இருக்கு அனைத்தையும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. இருக்கத் தானே செய்யும் ,கவர்ச்சி நடிகைக்காக எழுதியதாச்சே:)

   Delete