13 November 2016

அடி ஆத்தீ,அஞ்சு பெண்டாட்டியா :)

பிடில் போய் வயலின் வந்தது டும் டும் டும் :)
                 ''நம்ம  பிரதமர் மன்னர் நீரோவை நினைவுபடுத்துறாரா ,எப்படி ?''
              ''இதோ ,இப்படித்தான் !''

உண்மைத் தியாகிகளுக்கு சிலை இல்லாத காரணம் :)              
                   ''என் தாத்தா ,தன் சொத்தையெல்லாம்  நாட்டுக்காக தியாகம் செய்தவர் ,ஆனா ,அவர் ஞாபகமா ஒரு சிலைகூட  இல்லை !''
                  ''வாழும்போதே நடுத்தெருவுக்கு வந்துவிட்ட  அவருக்கு ,நடுத் தெருவில் எதுக்கு சிலைன்னு நினைக்கிறாங்க போலிருக்கு !''

வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ :)
              ''உள்ளங்கை அரிக்குதுன்னு காட்டினா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
              ''யார் என்ன சொல்றாங்க ?''
             ''ஜோதிடர் வரவு வரும்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்களே !.''

அழகை ரசித்தால்......:)
            ''அழகை ரசித்தால் மெய் மறந்து போகுது டாக்டர்!''
            ''எப்படி?
           ''ஊசியை  நீங்க போட்டா வலிக்குது ,உங்க நர்ஸ் போட்டா வலிக்க மாட்டேங்குதே!''

அடி ஆத்தீ ,அஞ்சு பெண்டாட்டியா :)
(இந்த கூத்து நடந்தது சில வருடங்களுக்கு முன் )
நான் அவனில்லை பட பாணியில்...
ஐந்து பெண்களைஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதாக கைதாகி யுள்ளார்...
சினிமாப் பட டைரக்டர் ரவி தம்பி என்பவர் !
அவர் பத்தாவது படிக்கும் போதே ஒன்பதாவது படிக்கிறப் பெண்ணை காதலித்தாராம் ...
அந்தப் பெண்ணை கட்டிக்கிட்டு கை விட்டாரா ,இல்லை...
சும்மாவே கை விட்டாராவென்று தெரியவில்லை ...
படித்தது பத்தாவதுதான் என்றாலும் ...அரசியல்வாதிகளுக்கு 'டபுள் MA'வேலையும் பார்த்தவராம் ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு உள்நாட்டில் கூட வேலை வாங்கி தராமல் ஏமாற்றியும் உள்ளாராம் ...
நெய்யூர் என்ற ஊர்க்காரர் ஆகையால் பெண்களிடம் நெய்யாகப் பேசி ஏமாற்றியுள்ளார் ...
லட்சக்கணக்கில் வரதட்சணைப் பணத்தையும் ,சீர்வரிசை நகைகளையும் எடுத்துக் கொண்டு 'எஸ்கேப் 'ஆகி விடுவாராம் ...
இவர் இயக்கிய 'வாச்சாத்தி 'படத்தைப் பார்த்து சொல்லமுடிய விட்டாலும் ...
இவர் லீலைகளைப் பார்த்து சொல்ல முடிகிறது ..'அடி ஆத்தீ '...'
கடலும் கடல்சார்ந்த குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ...
ஆனால் உடலும் உடல் சார்ந்த விசயங்களை உள்ளடக்கியே படங்களை எடுத்தவர் ...
டெல்லி மாணவி பாலியல் பிரச்சினையை மையப் படுத்தி தற்போது இவர் எடுக்கும் படத்திற்க்கு பெயர் ...
தடை செய்யப்பட்ட இடமாம் ...
இப்போது இவரே தடை செய்யப்பட்ட இடத்திற்கு  சென்றுவிட்டார் ...
சினிமா மோகத்தால் இவரிடம் ஏமாந்தவர்களின் பட்டியல் இனியும் தொடரும் ...
ஏன் இப்படி செய்தீர்கள் என்று இவரிடம் கேட்டால் ...
சினிமாவில் வெற்றி பெறும் வரை எனக்கு பெண் தரத் தயங்கிய இந்த சமூகத்தை பழிவாங்கவே இத்தனை திருமணங்களை செய்துக் கொண்டேனென்று 'பூசி மொழுகுவார் '...
ஆரம்பக் காலத்தில் கொத்தனார் வேலைப் பார்த்தவர் ஆச்சே !

22 comments:

 1. அதாவது கள்ளநோட்டை ஒழிப்பது என்பது காரணமானாலும் இந்த நேரத்தில் ஜப்பான் சுற்றிக்கொண்டு இருப்பது மக்கள் நலனைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
  உண்மைதான்
  சிரங்கு வந்தாலும் அரிக்கும்
  உளறுவாயனுக்கு இனிமேல் நர்ஸை கண்ணுல காட்ட மாட்டாரே...
  இவருடைய பழிவாங்கள் நன்று அடுத்த சந்ததியினருக்கு பாடம் ஆக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசித்ததைப் போல் ,பிரதமர் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறாரே :)
   தகுதி இல்லாதவர்களுக்கு சிலை வைப்பதை பார்த்தால் ஆப்படித்தானே இருக்கிறது :)
   அப்ப செலவுதானா :)
   அதானே ,யாரிடம் எதைச் சொல்வது ,விவஸ்தை வேண்டாமா :)
   தன்னை பெரிய மேதாவி என்று கற்பனை செய்து கொண்டால், இந்த நிலைதானே வரும் :)

   Delete
 2. அடி ஆத்தீ, அஞ்சு பெண்டாட்டியா?

  நானே
  ஒருத்தியைக் கட்டிப்போட்டு
  படுகிறபாட்டை யாரறிவார்...
  அஞ்சு பெண்டாட்டியை கட்டி
  சிறைக்குள் போனவர்
  பட்டபாட்டை எவரறிவார்?

  ReplyDelete
  Replies
  1. நான் படும் பாடு அல்ல ,நாம படும் பாடு :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. வயலின் இசையை ரசிக்க முடியுதா :)

   Delete
 4. இசைகேட்டால் புவி அசைந்தாடும்... அது மோடியின் அருளாகும்...! காசேதான் கடவுளப்பா அந்த மோடிக்கும் இது தெரியுமப்பா கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே...! எல்லாம் வரிசையில் நில்லுங்க...! போனா வராது பெழுது சாய்ந்தால் கிடைக்காது...!

  ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..... மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்...’ தியாகம் திரைப்படத்தைப் பேரன் பார்க்க வேண்டியதுதான்...!

  ஜோதிடர் வைத்தியர் இருவருக்கும் வரவுதான்...!

  நர்ஸ்க்கு சம்பளம் கொடுக்க முடியலை... நானே நர்ஸ் டெர்ஸ மாத்திட்டு ஊசி போடுறேன்...! ஏம்ப்பா நெஞ்சப் பிடிக்கிறாய்... நெஞ்சு வலியா...?!

  அஞ்சாத சிங்கம் ரவிக்காளை... இது பஞ்சாப் பறக்கவிடும் ஆளை... இந்த ஆபத்தை நாடிவரும் பெண்கள்... பாரிலே யாரடி...? கூறடி...?!

  த.ம. 4


  ReplyDelete
  Replies
  1. வாழக்கையில் இப்படியும் வரிசையில் நிற்க வேண்டியதா போச்சே :)

   நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை :)

   நமக்கு எப்படியும் செலவுதானா :)

   ரெமோவுக்கு முன்னோடியா :)

   வலையிலே சிக்கும் பறவைகளுக்கா பஞ்சம் :)

   Delete
 5. Replies
  1. சிலை இருப்பதிலும் இல்லாமை நன்றா :)

   Delete
 6. அடியாத்தி...
  தம +

  ReplyDelete
  Replies
  1. நம்மால் வாயைப் பிளக்கத்தான் முடிகிறது :)

   Delete
 7. ஐ காமெடி சூப்பர்

  ReplyDelete
 8. பிரதமர் ஃபிடில் வாசிக்கட்டும் நம்மை மத்தளம் ஆக்கி விட்டாரே
  சிலை இருந்தால் அவர் அளித்த சொத்தை எல்லாம் திரும்புமா
  உள்ளங்கை அரித்தால் சொறிவதைவிட்டு ஏன் ஆராய்ச்சிகள்
  டாக்டர் எப்பவும் ஆண்தானா.பெண்டாகடரானால்
  சினிமா மோகத்தால் சீர் கெட்டவர்.?

  ReplyDelete
  Replies
  1. ஒரு பக்க இடி தெரியுது ,இன்னொரு பக்க இடி :)
   இருக்கும் போதே நடுதெருவுக்கு வந்தவருக்கு மரியாதை வேண்டாமா :)
   நம்பிக்கைகள் இங்கே அப்ப்டியிருக்கே :)
   பெண் டாக்டரிடம் ஊசி குத்தி பார்த்த்துகிட்டாதான் தெரியும் :)
   அவர் மட்டுமா கெட்டார்:)

   Delete
 9. Replies
  1. ஒழுங்கா வாழ்ந்தால் ஒரு மனைவியே போதும்தானே :)

   Delete
 10. Replies
  1. நெய்யூர்காரர் செய்தது அநியாயம் தானே :)

   Delete
 11. அப்பவேஆயிரத்து சில்லரை பொண்டாட்டி வச்சிருந்த கின்னஸ் சாதனையை மிஞ்சமுடியாது..

  ReplyDelete
  Replies
  1. 6௦௦௦௦ மனைவிகள் தசரத 'மகா' ராஜாவுக்கு என்பார்கள் ,அவரைத் தானே சொல்கிறீர்கள் :)

   Delete