15 November 2016

கற்பழிப்பும் மகிழ்ச்சி தருமா :)

காலத்துக்கு ஏற்றத் தொழில் செய்தாலும் தப்பா :)

              ''அவரை,ஏன் கைது  செய்திருக்காங்க ?''

              ''இங்கே ,ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கு நாலு நூறு ரூபாய் உடனே தரப்படும்னு போர்டு வச்சிருந்தாராம் !''


சொல்வது எளிது ,செய்வது அரிது :)

          ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்னு எழுதியவனை ஏன்  தேடிக்கிட்டு  இருக்கீங்க ?''

         ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காண்பின்னு சொல்லத்தான் !''


கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்:)

             ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாமா ,ஏன் ? ''

             ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''


திருப்பதி மட்டுமா திருப்பம் தரும் :)

             ''திருப்பத்தூர்தான்  , உண்மையில் அவருக்கு திருப்பம் தந்த ஊர்ன்னு ஏன் சொல்றீங்க ?''

             ''அந்த ஊர்லேதானே லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமா மாட்டிக் கிட்டாரு !''


கற்பழிப்பும்  மகிழ்ச்சி தருமா :)

கற்பழிக்கப் படும் போது ...

அண்ணே ,என்னை விட்டுடுங்கன்னு என்று ...ஒரே  ஒரு வார்த்தை பெண் சொன்னால் கற்பழிப்பு நடக்காதுன்னு உளறிக் கொட்டிய சாமியார் இப்போது , கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் உள்ளார் ...

இப்போது CBIஇயக்குனர் கூறிய கருத்தும் சர்ச்சைக்குள்ளாகி  இருக்கிறது ...

'கிரிக்கெட் சூதாட்டத்திற்கு விதிக்கப் பட்ட தடையை உங்களால் அமல் படுத்த முடியாது என்றால் ,அது கற்பழிப்புகளை தடுக்க முடியா விட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்பது போல உள்ளதாக ' என்று  அவர் சொன்னதால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி யுள்ளார் ...

உதாரணம் சொல்ல வேறு எதுவுமா தோன்றவில்லை ?

இப்போது 'யார் மனதும் புண் பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் ...

பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படிசொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று மகளிர் அமைப்புகள் கொடிப் பிடிக்கின்றன ...

பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல நாவடக்கமும் வர வேண்டும் போலிருக்கிறதே !

22 comments:

 1. இது உதவிதான்
  கிடைக்க மாட்டானே...
  சொல்லலாம்தான்
  ஹாஹாஹா
  அந்த மர்மச்சாமி சொன்னது மற்றவனுக்காத்தான்

  ReplyDelete
  Replies
  1. பிறகேன் கைது செய்ஞ்சாங்க :)
   சிங்கத்துகிட்டே மாட்டியிருப்பானோ :)
   பெயர்தான் வித்தியாசமா :)
   நல்ல திருப்பம்தானே :)
   இவரிடம் 'குருவே விட்டுடுங்க 'ன்னு கெஞ்சியிருக்கணுமோ:)

   Delete
 2. ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கு எத்தனை ஐந்நூறு ரூபாய் நோட்டு வேணுமுனாலும் தரப்படும்... ஜெராக்ஸ் எடுத்து...! நீங்க பாத்துப் போட்டுக் கொடுங்க... ஆனா காட்டிக் கொடுத்திடாதிங்க...!

  சிங்கம் மூனைத் திரைவலையில் அடைப்போம்... கொசு... கொசுருன்னு சொல்ல முடியாமல் விழித்திரையில் விழிப்போம்...!

  இதயக் கதவைத்தானே சொல்றீங்க...! கள்வன் என் காதலன்...!

  மச்சான் மாட்டிக்கிட்டாரு... திருப்பத்தூரான்... ஊழலை எதிர்க்கும் விருப்பத்தூரான்தான்...!

  சொன்னதத் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... நா அந்த அர்த்தத்தில சொல்லல... யார் மனதையும் புண்படுத்தனுங்கிறது எனது எண்ணமல்ல...! நோக்கமுமல்ல... மல்லையா... என்னோட மல்லுக்கட்டாதிங்க...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இரண்டாயிரம் கைக்கு வந்து சேரலே ,புது நோட்டு என்று ஜெராக்ஸ் காப்பி கொடுத்து ஏமாற்றிய சம்பவமும் நடந்து விட்டதாமே :)

   மாட்டுவால் மனுசனுக்கும் இருந்தா ,கொசு அடிக்க வசதியாய் இருந்திருக்குமோ :)

   இதயக் கதவைத் திறக்கத்தான் விழிச்சாவி இருக்கே :)

   இனி ,திருப்பத்தூர் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டார் மச்சான் :)

   புரியிற மாதிரி உங்களுக்குத்தான் சொல்லத் தெரியலே :)

   Delete
 3. முதல் ஜோக்.. காலத்துக்கேற்ற பிஸினஸ்! அதற்கேற்ற ஜோக்!

  ReplyDelete
  Replies
  1. வங்கி வரிசையில் இவரோட ஆட்கள்தான் நிறைய பேர் நிற்கிறாங்க போலிருக்கே :)

   Delete
 4. Replies
  1. யார் மனதும் புண் பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்என்று சொல்வதை ரசிக்க முடியுதா :)

   Delete
 5. Replies
  1. காலத்துக்கு ஏற்றத் தொழிலையும் தானே :)

   Delete
 6. கைது செய்யப்படாமல் இருக்கிறார்களே
  சிங்கத்தைகொசு வலையில் அடைப்பதாகவா சொன்னான் இவனைத்தான் கொசுவலையில் அடைக்க வேண்டும்
  அர்த்தம் அனர்த்தமாகப் புரிந்து கொள்ளக் கூடாது
  நுணலும் தன் வாயால் கெடும்

  ReplyDelete
  Replies
  1. இப்படி மாற்றுவதை தடுக்க விரலில் மை வைக்கப் போறாங்களாமே:)
   கொசு வலையில் கொசுவை அடைக்க முடியவில்லை,சிங்கத்தையா :)
   அவருக்கு அப்படியாகிப் போச்சே :)
   நுணலுக்கு, பாம்பு வரும்னு தெரிந்தால் ஏன் சத்தம்செய்யப் போகிறது :)

   Delete
 7. //உளறிக் கொட்டிய சாமியார்//

  சாமி யார்? பிரபலமானவர்? எப்படியும் வெளியே வந்துடுவார்தானே?!

  ReplyDelete
  Replies
  1. வெளியேதான் இருப்பார் ,ஏனென்றால் அவரைப் பற்றிய செய்திகள் வரவில்லையே :)

   Delete
 8. பதவிவந்தவுடன் திமிரும் அகங்காரமும் கொடூரமும் வருகிறது என்பதை தற்போது நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வே மண்டையில அடிச்சு சொல்லுகிறதே

  ReplyDelete
  Replies
  1. பதவி இப்போதான் வந்தது ,மற்றதெல்லாம் ஏற்கனவே உள்ளதுதான் :)

   Delete
 9. எல்லாம் இனிமை
  key hole oparation நன்றாக இருந்தது.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. key hole operation செய்தது,ஸ்பெசலிஸ்ட் ஆச்சே :)

   Delete
 10. Replies
  1. பத்து எழுத்துக்களை டைப்பித்து பத்தாவது வாக்கு அளித்தமைக்கு நன்றி :)

   Delete
 11. Replies
  1. நீங்க சொன்ன ஒற்றை வார்த்தைக்கு பெருமை படுகிறேன், நன்றி அய்யா :)

   Delete