17 November 2016

முதல் இரவிலும் தூக்கமாஆஆ:)

சாயம் போற கள்ள நோட்டை தயாரிப்பதா கஷ்டம் :)            
              ''நம்ம அரசாங்க அதிகாரிகளும் மாத்தி யோசிக்க ஆரம்பித்து விட்டாங்களா ,எப்படி ?''
             ''புதிய ரூபாய் நோட்டுலே  சாயம் போனால்தான் நல்ல  நோட்டாம் ,இல்லேன்னா கள்ள நோட்டாமே?''
மனு கொடுக்கும் போதே இதையும் சொல்லணுமோ :)                 
              ''உங்க ஊருக்கு பஸ் இல்லேன்னீங்க ,பஸ் விட்டாச்சே ,மறுபடியும் என்ன மனு ?''
              ''மழை பெய்தால் ஒழுகாத பஸ் வேணும்னுதான் !''
மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் :)
              ''செத்துப் போன உங்க நண்பர் ,ஆப்பாயில்னா விரும்பிச்  சாப்பி  டுவாரா ?'' 
              ''ஆமா, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
              ''அவரோட பாடி அரைகுறையா  எரியும்போதே  கரெண்ட் போயிடுச்சே !''

ஜாக்கெட்டுக்கு லேடிஸ் டைய்லர்தான் OK :)
           ''என்னங்க ,உங்க சட்டையை சரியா தைக்கிற டைய்லர்கிட்டே ... என் ஜாக்கெட்டையும் கொடுக்கிறேன்னு சொன்னா ,ஏன் எரிஞ்சு விழுறீங்க ?'' 
          '' எழவிலே போற அந்த டைய்லர் ,பார்வையிலேயே அளவை எடுப்பானே !''

வீடு பிடிக்கலைன்னா இப்படியா சொல்றது:)
             ''குறைந்த  வாடகையிலே  இந்த  வீடுதான்  இருக்கு ,உங்களுக்கு  பிடிக்குதா?''
               ''வீடா இது? பேசாம to let க்கு   பதிலா  toilet ன்னு  போர்டுலே எழுதுங்க!''

இனி ,நீங்க படிக்கப் போறது முன்பு நான் எழுதிய 'சிரி'கதை ...எழுத்துரு சிறியதாக இருப்பதால் ஜூம் செய்துக் கொண்டு படிக்கவும் ,சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !14 comments:

 1. இது ஈசியாக அடிக்கலாமே...
  அப்படி பஸ்ஸும் விடணுமோ...
  ஜெனரேட்டர் இல்லையோ....
  திறமைசாலிதான்.
  அதுலயும் இது இருக்குமே....
  ஹாஹாஹா ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. அடிக்கட்டும் என்றே இப்படி செய்தி இருக்கிறார்களோ :)
   குடை பிடித்தா பயணம் செய்வது :)
   இருக்கு ,ஆனால்தேவையான அளவுக்கு வோல்டேஜ் இல்லையே :)
   அவர் திறமையை ஆண்களோடு நிறுத்திக்கணும் :)
   இதில் அது இருக்கலாம் ,அதுவே இது ஆகாதில்லே:)
   நீங்க முன்னாடியே இதை படிச்சிருப்பீங்க :)

   Delete
 2. சமீபத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை சில்லறை மாற்ற சரவணபவனில் கொடுத்தபோது இதை நான் ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கவில்லை என்று எப்படித் தெரியும் உங்களுக்கு? என்று கேட்டதும் ஒரு நொடி திகைத்து விட்டு நோட்டை இப்படி அப்படி மேலும் கீழும் ஆட்டி விட்டு இந்த மினுமினுப்பு ஜெராக்சில் அது வராது என்று சொன்னார்!

  அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. ஜெராக்சில் வராது என்பது உண்மைதான் !
   சாயம் ஏன் போகிறது என்று கேட்டதற்கு ,சம்பந்தப் பட்ட அதிகாரி 'அப்படிப்பட்ட மையில் அச்சடிக்கப்பட்டிருப்பது தான் 'என்கிறார் !இதென்ன பதிலோ :)

   Delete
 3. இந்திய நோட்டில் ஒரு இந்திச் சொல் தவறாமே... தவறுதல் மற்றும் விடுதல் நீங்களாக...! கள்ள நோட்டு அடிப்பவர்கள் இந்தத் தவறையும் சரியாக செய்யமாட்டார்கள் என்ற முன் எச்சரிக்கையோ...?! ரோஸு சாயம் வெளுத்துப் போச்சு... ராசா வேசம் கலஞ்சு போச்சு...டும்...டும்...டும்...!

  மழை வருது... மழை வருது... குடை கொண்டுவா... பஸ்க்குள்ளே...!

  நல்ல கட்ட நாட்டுக் கட்ட... நம்ம கிட்ட மாட்டிக்கிட்டே...!

  பார்வை ஒன்றே போதுமே...!

  to let-ல ஐ... toilet இருக்கா...! ஐயா...!

  அப்ப தூக்க(ம்) வேண்டியதுதான்...!

  த.ம. 2  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை, 2௦௦௦ என்பதையாவது சரியாக போட்டார்களே :)

   மழைக்குக்கூட பஸ்ஸில் ஒதுங்க முடியாதோ :)

   இப்படி, காத்திருக்கும் நாய் வேணும்னா சொல்லும் :)

   எதுக்கு ,கர்ப்பம் உண்டாக்கவா :)

   அதுகூட இல்லேன்னா வாடகை எதுக்கு தரணும்:)

   எதை, கட்டிலையா :)

   Delete
 4. கதை எழுதியும் சிரிக்க வைக்கிறீங்க. இனியும் எழுதுங்க பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. காலையில் நீங்க போட்ட கருத்துக்கு ,இப்போதான் மறுமொழி சொல்ல முடியுது ,சில நாட்களில் இன்னும் கூட தாமதமாகிறது ,சிந்திக்க நேரமில்லை ஜி :)

   Delete
 5. ஜோக்களி நண்பர் போலி டாக்டருன்னு கண்டுபிடுச்“சிட்டேன்....‘‘ஹா...ஹா..ஹா....

  ReplyDelete
  Replies
  1. ஊர்லே எத்தனையோ போலி டாக்டர்கள் ,ஐவரும் அதிலே ஒண்ணு :)

   Delete
 6. என்ன மாதிரியெல்லாம் செய்திகள் கர்நாடகாவில் ஒருவன் இரண்டாயிரம் ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து யாரையோ ஏமாற்றினானாம்
  மனு கொடுத்தால் பஸ் வருமா
  நல்ல எச்சரிக்கையான கணவன்
  பாடியே ஆஃப் பாயிலா
  டாய்லெட் என்று எழுதினால் யார் வாடகைக்கு வருவார்கள்
  தூக்கம் வர சொல்ல நிறையவே துதிகளும் தோத்திரங்களும் இருக்கிறதே தூக்கத்துக்குத் தூக்கம் புண்ணியத்துக்குப் புண்ணியம்

  ReplyDelete
  Replies
  1. அவன் தண்ணீ காட்டியது நம்மாளுகிட்டே தானா:)
   அப்படி ஒரு நம்பிக்கை மக்களிடம் இன்னமும் இருக்கே :)
   இதுவும் இல்லேன்னா புருசந்தானா :)
   இந்த ஆப் பாயிலை நாய் வேண்டுமானால் ருசித்து சாப்பிடும் :)
   டேபிளை போட்டுகிட்டு உட்கார்ந்து வேண்டியதுதானா :)
   புண்ணியம் பாவத்தில் நம்பிக்கை இல்லையே :)

   Delete
 7. Replies
  1. பூவோட சேர்ந்த நாரை ரசிக்க முடியுதா :)

   Delete