2 November 2016

அழகுதான் என் சொத்துன்னு நினைக்கிறது தப்பா :)

இந்த சொத்துக்கு அந்த வரி சரிதானே :)           
              ''பெண்களுக்கு பிரசவம் முடிந்ததும் அடி வயிற்றில்  'வரி வரி'யா  தழும்பு  விழுதே ,ஏன் ?''
               ''அதுவரைக்கும் , அவங்க  அழகுதான் என்  'சொத்து 'ன்னு  நினைச்சதாலோ  என்னவோ !''

அவளும் ,அலாவுதீனின் அற்புத விளக்கும்:)
           '' உன் பெண்டாட்டியை  குடும்ப பாங்கான குத்து விளக்கு மாதிரி நினைச்சது ,தப்பா போச்சா ஏண்டா ?''
           ''அலாவுதீனின்  அற்புத விளக்கு கிடைச்சாலும் அவளை திருப்தி படுத்த முடியாது போலிருக்கே !''
சர்வருக்கு வந்த குழப்பம் :) 
           ''என்ன கேட்குறீங்க , 'பொங் 'கொண்டு வரச் சொல்றீங்களே ?''
           ''உங்க ஓட்டல்லே எப்போ  பொங்கல் சாப்பிட்டாலும் கல்லு வருதே !''
               
இதுவுமா கிரிமினல் குற்றம் :)
              ''நீங்க வெள்ளையை  கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
               '' யாரோ தப்பா தகவல் கொடுத்திருக்காங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் சார் !''

கொன்ற பாவம் போகுமா :)
             ''வீட்டுலே  அட்டகாசம்  பண்ணிக்கிட்டு  இருந்த   எலியை அடிச்சாச்சு !இப்போ  அதை தின்னுதான் ஆகணும்னு சொல்றீயே ,ஏன்?
              ''கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு  சொல்றாங்களே!!"

28 comments:

 1. பெண் ‘வரிப்புலி’யை முறத்தால்... விறட்டியதால் அடி வரியோ...! அடி வருடிங்கிறது இதுதானோ...?!

  அவளைத் திருப்திப் படுத்த முடியலைன்னா... திருப்பதிக்குக் கூட்டிட்டுப் போயி... ஏழுமலையான்ட்ட இருக்கிறத எல்லாம் எடுத்துக்கச் சொல்லுங்க...! அவருட்ட கேட்டா என்ன மாட்டேன்னா சொல்லப் போறாரு...!

  வெள்ளைக் கல் வருதா... கருங்கல் வருதா...? சொல்லுங்க கல்லை மாத்திடுவோம்... வெண்பொங் ‘கல்’ எடுத்திட்டு வரட்டா...?!

  “சாரி... சரி... நீ சொல்றது உண்மைதான்னு என்னிட்ட நிருபிச்சுக்காட்டு... எங்கே உட்காரட்டும்...!”

  ‘ஆதி வீடு... அந்தம் காடு... இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே...’ வீட்டுல எலி... வெளியில புலியா...?

  த.ம. 1


  ReplyDelete
  Replies
  1. இந்த வரிக்கும் , ஒரு பாரம்பரியம் இருக்கோ :)

   ஏன் மாட்டேன்னு சொல்லப் போறார் ,உழைத்து சம்பாதித்து இருந்தால்தானே வலி தெரியும் :)

   இதிலும் ராசி கல்லா :)

   டை அடிக்கணும்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே,இவ்வளவு மிரட்டலா :)

   எங்கேயும் எலிதான் ,எதை பார்த்தாலும் கிலிதான்:)

   Delete
 2. ர்சித்தேன் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. பதிவு போட ரொம்பத்தான் இறங்கிப் போயிட்டேனோ :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. gmb அய்யாவுக்கு ஆனது போல் உங்களுக்கும் ஆகிப் போச்சா ?சுருக்கமா முடிச்சுகிட்டீங்களே :)

   Delete
 4. ரசித்தேன்
  எலி....செம....
  தம 4

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு எலியை அடிக்காமலே இருந்து இருக்கலாமோ :)

   Delete
 5. 01. இப்படியுமா ?
  02. அப்படினா விலக்கிதான் வைக்கணும்.
  03. அதாவது வருதே....
  04. பார்பருக்கு வந்த சோதனை.
  05. பழமொழி இதுக்குத்தான்.

  ReplyDelete
  Replies
  1. சொத்து வரி நியாயம் தானே :)
   விளக்கை விலக்கி வைத்தால் இருண்டு விடுமே :)
   பருப்புக்கு பதிலா போட்டு இருப்பாங்களோ :)
   பார்க்க அழகாயிருக்கணும்னு செய்தது தப்பா :)
   வேற எதுக்குன்னு நினைக்கிறீங்க :)

   Delete
 6. யோசித்து எழுதின பின்னூட்டமெல்லாம் காணாமல் போச்

  ReplyDelete
  Replies
  1. வெறுப்பா இருக்குமே ,ஒவ்வொரு முறையும் காப்பி பேஸ்ட் எடுக்கணும் போலிருக்கே :)

   Delete
 7. Replies
  1. வனவாசம் முடிந்து வந்தமைக்கு நன்றி ஜி :)

   Delete
 8. அனைத்தும் ரசித்தேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. இயற்கை போட்ட சொத்து வரி சரிதானே :)

   Delete
 9. அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றது சரியா ,அசோகன் ஜி :)

   Delete
 10. எல்லாம் ரசனையாக இருந்தது சகோதரா
  ரசித்தேன்
  த.ம. 11

  ReplyDelete
  Replies
  1. சர்வருக்கு வந்த குழப்பம் சரிதானே:)

   Delete
 11. அது வரியில்லீங்க.... வீரத் தழும்புங்க.....

  ReplyDelete
  Replies
  1. பிரசவப் போரில் வெற்றி பெற்றதால் வந்த வீரத் தழும்புதான் :)

   Delete
 12. அது வரி தழும்பு இல்லீங்க...வீரத்தழும்புங்க... எந்த அம்பளைங்க அந்த வீர தழும்ப பெற்று இருக்காங்க....

  ReplyDelete
  Replies
  1. வீரத்தழும்பு என்பதே சரி , பிள்ளைப் பெற்றவங்களுக்கு மட்டுமே கிடைக்கும் நினைவுப் பரிசும் கூட :)

   Delete
 13. அது வரி தழும்பு இல்லீங்க...வீரத்தழும்புங்க... எந்த அம்பளைங்க அந்த வீர தழும்ப பெற்று இருக்காங்க....

  ReplyDelete
  Replies
  1. மறுபடியுமா ...உங்க அலும்பு தாங்கலைங்கோ :)

   Delete
 14. அது வரியில்லீங்க.... வீரத் தழும்புங்க.....

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்தை ரசித்தேன் :)

   Delete