20 November 2016

ஏகப் (பட்ட) பத்தினி விரதனா :)

 இவர்  ,மன்னன்  பட விஜயசாந்தியின்  நிஜ  வடிவமோ :)       
             ''அந்த  கோடீஸ்வரி பெண் தொழில் அதிபர்  பிரசவத்தை  ,ஏன் வீட்டிலேயே  செய்துக்க நினைக்கிறார்  ?''
           ''அவர் தகுதிக்கு 'லேபர் 'வார்டில்  பிள்ளை பெத்துக்க மாட்டாராம் !''
திருடர்கள் ஜாக்கிரதை  என்பதை இப்படியும் சொல்லலாமோ :)             
         ''அந்த நகைக் கடை அதிபர் நாத்திகவாதி போலிருக்கா ,ஏன் ?''
          ''கடவுள் உங்களைப்  பார்க்கிறாரோ இல்லையோ ,நாங்கள்  சி சி டி வி  மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்னு எழுதிப் போட்டிருக்காரே !''

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் :)
                ''விதவை  என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லி கேவலப்படுத்தும் ஆணாதிக்க சமூகமே ,விதவைக்கு  எதிர்ப்பதமாக  ஆண்பாற் சொல்கூட இல்லையே என்று வருத்தப் படுகிறேன் 'என்று பேசிவிட்டு  அமர்ந்திருக்கும் எதிர் அணிதலைவியைப்   பார்த்து கேட்கிறேன் ...பத்தினி என்பதற்கு எதிர்ப்பதமாக எந்த ஒற்றைச்  சொல்லும் இல்லை என்பதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோமா ?''

 தந்தைக்கு மரியாதை !
     உயிரோடு 
     இருந்தவரை 
     'ஏசி 'ய பிள்ளைகள் ...
     இறந்தவரை வைத்தார்கள் 
     AC பெட்டியில் !

நேற்றைய 'சிரி'கதையின் தொடர்ச்சி மட்டுமல்ல ,முடிவும்கூட ......
கேட்காத காதும் கேட்கும்:)

24 comments:

 1. முதல் ஜோக்கும் பொருத்தமாய் விசா படமும் சூப்பர்.

  'ஏசிய' உபயோகப்படுத்திய விதமும் சூப்பர்.

  காது கேட்ட கதை எக்கெனவே படித்திருந்தாலும் மறந்து விட்டதால் ஆவலோடு மறுபடி படித்து முடித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. விசா ? படம் அடடே இப்படியும் ஜொள்ள''லாமோ....

   Delete
  2. அவரோட அந்த கேரெக்டர் மட்டுமா மனதில் நிற்கின்றது :)

   எல்லா காலத்துக்கும் பொருத்தமான ஏசியா இது :)

   அதை போல மறுபடியும் நிறைய எழுதணும்,பணி ஓய்வுக்கு பின்தான் முடியும் போலிருக்கு :)

   Delete
  3. கில்லர்ஜி,இப்படி ஜோள்ளுறதும் நல்லாதானே இருக்கு?ஹும்ம்,அது ஒரு கனாக் காலம் :)

   Delete
 2. Replies
  1. உங்க ரசிப்பின் மகத்துவம் இன்றே இன்றைய பதிவு , மணி மகுடம் சூட்டிக் கொண்டது ,நன்றி நண்பரே :)

   Delete
 3. ‘பிள்ளைய பெத்தா கண்ணீரு... தென்னைய பெத்தா இளநீரு’ன்னு தெரியுமுல்ல...!

  மொதல்ல சி சி டி வியத் தூக்கிட்டுத்தான்... மத்த வேலை... ரொம்ப நன்றிங்க...!

  “நாங்க இதுக்கெல்லாம் வருத்தப்படுறதே இல்லை...!” இதுக்குத்தான் திருநங்கையை நடுவராகப் போட்டதோ?!... சபாஷ் சரியான போட்டி...!

  போகும் போதாவது உள்ள(து)ம் குளிரப் போகட்டுமேன்னுதான்...!

  ‘பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கான்ல் நீரே இது மேடு பள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத்தேரே...... நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு...!’

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக பிள்ளையை வேண்டாம்னு சொல்லமுடியுமா :)

   பார்ப்போமே ,கண்ணுக்குத் தெரியாத இடத்தில் cctv இருக்கே :)

   திருநங்கை நடுவரான உலகத்தின் முதல் பட்டிமன்றம் இதுதானா :)

   பிணத்துக்கு கிடைத்த மரியாதை, அப்பன் பணத்தை வைத்து சென்று இருந்தால் அவருக்கும் கிடைத்திருக்குமோ :)

   மேடு பள்ளம் தேடும் உள்ளம் என்றால் ,ஞானத் தேரில் போகுமான்னு சந்தேகமா இறக்கே :)

   Delete
 4. Replies
  1. இப்படி தந்தைக்கு மரியாதை செலுத்தினால் நல்லாவாயிருக்கு:)

   Delete
 5. நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. நகைக்கடை அதிபர் நாத்திகவாதியைப் போலவா :)

   Delete
 6. உண்மைதான் பிரஸ்டீஜ் பிரஷர் குக்கர் வேணும்
  முன்னெச்சரிக்கைவாதி
  விதவைக்கு எதிர்ப்பதம் விதவன் சொல்லலைமே...
  இப்ப அதுதானே ஃபேஷன்
  காது கேட்டது ஜி

  ReplyDelete
  Replies
  1. வேற குக்கரில் இவர் பருப்பு வேகாதா :)
   கடவுளை ஏமாற்றுவது போல் இவரை ஏமாற்ற முடியாது :)
   அதுக்கு நம்ம வலிப்போக்கன் என்ன சொல்றார்னு கேட்டுக்குவோமே :)
   இதுவும் போலி வேஷம்தானே:)
   சாட்டை அடியால், ஜோக்காளிக்கு கேட்காம போச்சே :)

   Delete
 7. "கடவுள் உங்களைப் பார்க்கிறாரோ இல்லையோ ,நாங்கள் சி சி டி வி மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்னு எழுதிப் போட்டிருக்காரே!" என்ற அழகான எச்சரிக்கைக்கு 100 புள்ளி (Marks) வழங்கலாம். அப்படியிருந்தும் களவு இடம் பெறுகிறதே!

  ReplyDelete
  Replies
  1. களவும் கற்று மறன்னு சொன்னா ,எவன் கேக்குறான் :)

   Delete
 8. ரசித்தேன். தம1

  ReplyDelete
  Replies
  1. கேட்காத காது கேட்டதையும்தானே :)

   Delete
 9. லேபர் இல்லாமல் தொழில் நடத்த முடியுமா ?

  ReplyDelete
  Replies
  1. லேபர் வலி இல்லாமல் பிள்ளைப் பிறந்தால் ,அதுவும் முடியும் :)

   Delete
 10. அந்தச் சொல்லை கண்டுபிடிக்கவில்லையென்று பட்டி...மன்ற பேச்சாளர் பொய் சொல்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. அந்த சொல், நம்ம கில்லர்ஜி சொன்னதுதானே :)

   Delete
 11. Replies
  1. லேபர் பெயின் என்றாலும் தாங்கித்தானே ஆகணும்:)

   Delete