24 November 2016

மொய்க்கும் வந்தாச்சு பணம் செலுத்தும் கருவி :)

             ''மொய்யை  நோட்டுலேதானே எழுதிக்குவாங்க , புதுசா ஒரு மெசினை வைச்சிருக்கீங்களே,எதுக்கு ?''
            ''கையிலே பணம் இல்லேன்னு சொல்றவங்ககிட்டே இருந்து   'ஸ்வைப்பிங் மெசின் ' மூலமா  மொய்யை வாங்கிக்கத் தான் !''
எல்லோருக்கும் வருமா ஞானம் :)  
        ''ஐம்புலனை  அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
        ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான்  வந்தது !''

தரகர் சொல்வதைக் கவனமா கேட்கணும் :)
         ''யோவ் தரகரே ,பொண்ணு குண்டா இருக்கும்னு முன்னாடியே ஏன் சொல்லலே ?''
         ''சேலையை  கட்டிவந்தாலே தாவணியில் வர்ற மாதிரி இருக்கும்னு  சொன்னேனே !''
        
   ஆசை ,அவதியாய் ஆனதேன் :)    
         ''வர வர உன் வீட்டுக்காரருக்கு  கிண்டல் அதிகமா போச்சா  ,ஏண்டீ?''
          ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''

புதிரான கவிதையா அவள்:)
    பாரசீக கவிதை போல் ...
    விழிகளில் தெரிகிறாய் நீ !
    உன் விழிகள் மொழிப் பெயர்த்தால்  அல்லவா 
    கவிதை எனக்கு  புரியும் ?

22 comments:

 1. விழிகள் மொழிப் பெயர்த்தால்
  கவிதை வெளிப்படுகிறதா?

  ReplyDelete
  Replies
  1. இளமைக் கவிதைகள் அப்படித்தான்:)

   Delete
 2. மொய் வைக்காமல் வர முடியுமா? புலன்களை ஓவரா அடக்கிட்டார் போல! தரகரோட ஜால வார்த்தைகளை பாவம், இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை போல! ரூபாயே அவதியா இருக்கற காலத்துல ரூப அவதி பொருத்தமான பெயர்தான்! விழிகள் முழிதான் பெயர்க்கும்!!

  ReplyDelete
  Replies
  1. மொய் வச்ச ஸ்லிப்பைக் காட்டினால் தான் சாப்பாடே :)
   அதான் மேட்டர் ஓவரா :)
   அவரால் மட்டுமல்ல ,பலராலும் :)
   ஆகா ,இதை நினைச்சு நான் எழுதவே இல்லையே :)
   குழி பறிக்காமல் போனால் சரிதான் :)

   Delete
 3. ஸ்... அப்பாடா... நானும் வைப்பு வச்சுக்கலாமான்னு மாப்பிள்ளை கேக்கிறார்...!

  ‘இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்... போகும் ஞானத்தேரே...அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா...!’

  ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ... ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ...சேலை சோலையில் பருவ சுகம் தேடும் மாலையில்?!’ தாவணிக்கனவுகள் தப்பாயிடுச்சே...!

  ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்...!’ நல்ல வேளை ஆயிரம்ரூபாயின்னு சொல்லலை... செல்லாக்காசாயிடுச்சே...! ரூபாவதி காலாவதியாயிடுச்சே...! ரூபாய்க்காக பெரும் அவதிப்பட வேண்டி இருக்கே...!

  ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...!’

  த.ம. 2  ReplyDelete
  Replies
  1. முதல்லே தாலியை திருப்தி படுத்த முடியுமான்னு பார்க்கச் சொல்லுங்க :)

   ஞானம் இருந்தா எதுக்கு தேடப் போறார் :)

   சும்மாவா சொன்னாங்க ,கழுதைக்கு தாவணி கட்டினாலும் அழகுன்னு :)

   உங்க அவதிக்கு ரூபாவதி என்ன பண்ணமுடியும் :)

   இரவும் பகலும் உரசிக் கொள்ளும் கொசுக்கடி நேரத்தில் வந்து விடு :)

   Delete
 4. நல்ல ஐடியா..! மொய் வசூலையும் குண்டுப் பொண்ணு ஒல்லியாக தெரிவதையும் சொன்னேன்.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. இந்த குண்டு பெண்ணைத் தேடி பிடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது ஜி :)

   Delete
 5. Replies
  1. எது சூப்பர் ஜி ,பதிவா ,படமா :)

   Delete
 6. கண்டிப்பாக இனி வரும்
  அதாவது வந்ததே,,
  கேட்டவன் புரியா மட்டை
  பொருத்தம்தான்
  ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு வரிவிலக்கு உண்டுன்னு மட்டும் சொல்லட்டும் ,தாலிக்குரிய முக்கியத்துவம் கிடைத்துவிடும்:)
   அதுவுமா வராதுன்னு நினைச்சீங்க :)
   அதானே ,இதுக்கு மேலே எப்படி விளக்கமா சொல்றது :)
   டைம்லி விட்டா:)
   மொழி பெயருமா:)

   Delete
 7. Replies
  1. தங்களின் 'ஆறு மனமே ஆறு 'க்கு நன்றி :)

   Delete
 8. எல்லா ஜோக்குகளுமே அசத்தல்.

  சிரித்து மகிழ்ந்தேன் பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. ஆம்புலன்ஸ் வந்தது சரிதானே :)

   Delete
 9. Replies
  1. மொய்க்கும் வந்தது மோடி வழி :)

   Delete
 10. மொய்யை புத்தகமாவுல..கொடுப்போம்.........

  ReplyDelete
  Replies
  1. இப்போ E புக்கா கூட கொடுக்கலாம் :)

   Delete
 11. ஸ்வைப்பில் மொய் வைத்த காசை வங்கியில் கணக்கு காட்ட வேண்டுமாமே
  ஐம்புலனை அடக்கினால் ஆசை அடங்கலாம் ஞானம் வரும் என்று யார்சொன்னது
  தரகர் கெட்டிக்காரர்
  ரூப அவதி நவம்பர் எட்டுக்கு முன்னா பின்னா மோடி அல்லவா காரணம் ரூபா(ய்) அவதிக்கு
  விழியாலெ மொழி பேசி முழி பெயர்க்கிறாய்

  ReplyDelete
  Replies
  1. act 88ன் கீழ் வரி விலக்கு தர மாட்டார்களா :)
   ஆசை அடங்கினாலே ஞானம் வந்ததுன்னு தானே அர்த்தம் :)
   இல்லைன்னா தொழிலில் நீடிக்க முடியுமா :)
   அதுக்கு மோடி ,இதுக்கு உருவம்தான் காரணம் :)
   அர்த்தம் புரியாமல் விழிக்கிறேன் நான் :)

   Delete