26 November 2016

பேஷன்ட் ஜொள்ளு பார்ட்டி போலிருக்கு:)

 கைமாத்து கேட்கிறவன்கிட்டே இனி தப்பிக்க முடியாதோ :)
     ''கையிலே காசில்லேன்னு சொல்றேன், ஏன் நம்ப மாட்டேங்கிறே ?''
     ''வங்கி  விரல்லே இப்ப வச்ச மை ,நீ பொய்  சொல்றேன்னு சொல்லுதே !''

அந்த வேகத்தை விட இந்த வேகம் அதிகமாயிருக்கே :)
          ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வந்திருதே !''
          ''மருந்து சாப்பிட நோயைக் கொடுத்த ஃபாஸ்ட் புட் ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !
அகலக்              கால் வைக்கிறது  ஆபத்துதானே :)
           ''கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
           ''அகலக்கால் வைச்சு டிக்கெட்  கொடுத்து இருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி  வாங்கிப் போட்டுகிட்டாரே ? ''

பேஷன்ட் ஜொள்ளு பார்ட்டி போலிருக்கு:)
        ''சுகரை கண்ணாலே கூட பார்க்கக்கூடாதுன்னு சொன்னா, சந்தோசமா சரின்னு சொல்றீங்களே,எப்படி?''
         ''நல்லவேளை , ஃபிகரை பார்க்கக்கூடாதுன்னு சொல்லலேயே ,டாக்டர் !''

தம்பதிகளை பணம் படுத்தும் பாடு :)
    ஜோடிப் பொருத்தப் போட்டி ...
    வென்ற பணத்தை பங்கு போடுவதில் வந்தது ...
    தம்பதிகளுக்குள் டைவர்ஸ் ! 

18 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. உயிரைக் கொண்டு போவதிலும் பாஸ்ட் புட் ரொம்ப வேகம்தானே:)

      Delete
  2. // ''நல்லவேளை , ஃபிகரை பார்க்கக்கூடாதுன்னு சொல்லலேயே ,டாக்டர் !''//


    நர்ஸை சைட் அடிக்கிறதைப் பார்த்திருந்தா சொல்லியிருப்பாரு!

    ReplyDelete
    Replies
    1. அதை கவனிக்காமல் டாக்டருக்கு வேறென்ன வேலை இருக்க முடியும் :)

      Delete
  3. அந்த வேகத்தை விட
    இந்த வேகம் அதிகமாயிருக்கே
    சொந்த மூளை உள்ளவர்
    சிந்தித்தால் நல்ல பயனுண்டாம்!

    ReplyDelete
    Replies
    1. துரித உணவால் உடம்பு பெருக்குது ,நோய்களும் பெருகுதே :)

      Delete
  4. ‘மை’ நேம் இஸ் பில்லா... டாடா... பிர்லா... கருப்பு வச்சிருக்கேன்... இறக்கி வச்சிருக்கேன்... வெள்ளையா மாத்த இறக்கி வச்சிருக்கேன்...!

    பாஸ்ட்டான உலகத்தில பஸ்ட்டா போயிச் சேர வேண்டியதுதான்...! ஆக வேண்டியதப் பாருங்க...!

    மொதல்ல காச வாங்கிப் போட்டுக்கிட்டு... பிறகு டிக்கெட் கொடுக்கலாமுன்னு நெனச்சு இருப்பாரு...! இதுக்காக அவரு டிக்கெட்ட கிழிச்சிட்டீங்களே... அகாலம் ஆடிப்போறாரு...!

    கண் கெட்ட பிறகு சூர்யோதயமா...?! பார்வை தெரியறப்பவே பார்த்துக்கிறேன் டாக்டர்...!

    ஆஹா... என்ன பொருத்தம்... இந்தப் பொருத்தம்...?!

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. மை நேம் எதுவாக இருந்துட்டு போகட்டும் ,கைமாத்து கிடைக்குமா கிடைக்காதா :)

      கோமாவிலே இருக்கிறவன்/ள் கூட பாஸ்ட்டா போக நினைக்க மாட்டேங்கிறானே/ளே:)

      டிக்கெட்டே மிச்சம் பண்ணி கொடுக்க நினைச்சது தப்பாய்யா :)

      சுகர் கட்டுப் பாட்டில் இல்லேன்னா ஃபிகரைக் கூட பார்க்க முடியாத நிலை வருமே :)

      பணப் பொருத்தம் இல்லையோ :)

      Delete
  5. ஃபிகரை ரசிக்காத பார்ட்டிகளும் இருக்கா

    ReplyDelete
    Replies
    1. இந்த ரசனை இருந்தாலே போதுமே ,நோய் கூட நெருங்காதே :)

      Delete
  6. Replies
    1. பாஸ்ட் புட் டேஸ்ட் என்றாலும் ,சாப்பிடுவது வேஸ்ட்தானே :)

      Delete
  7. Replies
    1. குண்டானியையுமா:)

      Delete
  8. ருசியாக இருக்கன்னு பாஸ்ட் புட் “ தின்னுபிட்டு எக்கு தப்பா ஆஸ்பத்திரி செலவ வைக்குதுக....ஃஃஃ

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே லாபகரமான தொழில்னா ஆஸ்பத்திரிதான் :)

      Delete
  9. Replies
    1. அகலக் கால் பொருத்தம்தானே ?நடுவிலே கேப் சரிதானே :)

      Delete