27 November 2016

பேய், துணிகளை வெள்ளாவி வைச்சு துவைக்குமா :)

      ''பேயைப் பார்த்து ஒரு ரகசியத்தைத்  தெரிஞ்சிக்கணுமா,அதென்ன ரகசியம் ?''
      ''உன்  உடை எப்போதும் வெண்மையாக பளிச்சிடும் ரகசியம் என்னான்னுதான்  !''
 உயிரோடு இருக்கும் வரை செலவுதானே :)            
        ''அரிசி மூட்டை இப்போதான் வாங்கின மாதிரியிருக்கு ,அதுக்குள்ளே தீர்ந்து போயிருச்சா ?''
         ''என்னங்க செய்றது ,வாய்க்கரிசி  விழுகிற வரைக்கும் வயிற்றிலே  விழுந்து கிட்டேதானே  இருக்கே !''
                                                 
இதென்ன  36'' 24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு :)
            ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
            ''டியூப் லைட்டைக் கூட இன்ச் டேப்பிலே அளந்து வாங்குவானே!''

பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா :)
           '' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா  ?''
            ''சம்பாதிக்கவேண்டிய வயசுலே பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''

பார் இல்லா பாருலகம் உண்டா:)
    ''நீரின்றி அமையாது உலகுன்னு பாடிய வள்ளுவர் இன்னைக்கு வந்தா என்ன பாடுவார்?''
  '  'பார் 'இன்றி அமையாது  உலகுன்னுதான்  !''

கால் வைத்தாலே கலவரம் !
      நீதி கேட்டு நீண்ட பயணம் ...
      பயண  வழியில் விழுந்தது நூறு பிணம் ...
      தலைவர்  முடித்துக் கொண்டார் ...
      பயண  இலக்கை அடைந்துவிட்டோம் என்று !

26 comments:

 1. ஆமாம் இல்லே? ஏன் பேயின் உடைகள் எப்போதுமே வெண்மையாகவே இருக்கின்றன? கலர் டிரஸ் போடாதா? ஆனாலஹிந்தியில் அமிதாப் பூத்நாத் ஆக நடித்த படத்தில் அவர் கலர் ட்ரெஸ் போட்டார்!

  ReplyDelete
  Replies
  1. இதிலும் ஆணாதிக்கம் போலிருக்கே :)

   Delete
 2. Replies
  1. வெள்ளையாய் இருந்தால் பேயும் அழகுதானா :)

   Delete
 3. Replies
  1. பெண் பேயும் அழகுதானே :)

   Delete
 4. Replies
  1. லெக்கின்ஸ் டிரஸ் பேய்க்கு பேய்க்கு பொருத்தம்தானே :)

   Delete
 5. ''உன் உடை எப்போதும் வெண்மையாக பளிச்சிடும் ரகசியம் என்னான்னுதான் !''//

  முதன் முதலில் பேய்க்கதை சொன்னவன் போட்டுவிட்ட உடை. பின்னால் வந்த மடையர்களுக்கு அதை மாற்றும் தைரியம் இல்லை!!!

  ReplyDelete
  Replies
  1. பேய்க்கு வெள்ளை உடையைக் கொடுத்தவன், கருப்பு வெள்ளைப் பட கேமராமேனா இருக்கலாம் ,ஏன்னா இருட்டில்தான் பேய் வர வேண்டுமென்றால் வெள்ளை உடையில் இருந்தால் தானே நல்லது :)

   Delete
 6. இப்போது பேய்கதை ட்ரென்ட். ஹாவ்ப் நான் ஆவி பேசுகிறான்னு ஒரு படமாம். பேயை வச்சு பொழைப்பு நடக்குது

  ReplyDelete
  Replies
  1. பேய் இன்னும் திரைப் படங்களில்தான் உயிர் வாழ்ந்திட்டிருக்கு :)

   Delete
 7. பேய்
  வெண்மையாகத் தான்
  தோன்றுமோ - அது
  வெண்மைக்குப் பெறுமதி
  வழங்குமோ!

  ReplyDelete
  Replies
  1. யார் பார்த்தா ,கருப்பா சிகப்பா என்று கூடத் தெரியாது :)

   Delete
 8. கருப்பு ஆவிக்கு வெள்ளாவி வச்ச வெள்ளைதான் பிடிக்கும் கலரு...!

  வாய்க்கு ருசியா இருக்குன்னு எல்லாமே டபுளா திண்டுட்டு... கேக்க மாட்டீங்க...?!

  சரியான டியூப் லைட்டா இருக்கா(ன்)னு யாரும் கேட்டிடக் கூடாதில்ல...!

  ஆஸ்கார் கொடுத்தாப் பாக்கலாமுன்னு சொல்லு...!

  ‘பார்’ அப்பா... நவீன ‘பார்’ அப்பா... பட்டணமாம் பட்டணமான்னு பாடியிருப்பார்...!

  சதம் அடித்து ‘சா’திப்போமுன்னு சொன்னது இதுதானா...?!

  த.ம. 8

  ReplyDelete
  Replies
  1. கறுப்பாயிருந்தா அது பேய் இல்லையாம் ,பிசாசாம் !அதிலும் கொள்ளிவாய் பிசாசு தனி ரகமாம் :)

   யானை அசைஞ்சு தின்னும் ,வீடு அசையாம தின்னும்னு சும்மாவா சொன்னாங்க :)

   அதானே ,அது கிடைச்சாக் கூட ஹாலிவுட்டுக்கு போகலாம் :)

   பட்டினத்தில் மட்டுமா பார் ,பட்டி தொட்டியெல்லாம் பறந்து கிடக்கே :)

   சாதியைக் கிளப்பிவிட்டா சீக்கிரம் சதம் அடிச்சிடலாம் :)


   Delete
 9. தெரியாமல்தான் கேட்கிறேன் பேய்கள் ஆடை அணியுமா அவை வெண்மை நிறம்தானா
  இருப்பவனுக்கும் போனவனுக்கும் அரிசி போட்டால் தீராதா என்ன.
  36” 24” 38” யார் அளந்து பார்க்கிறார்கள் சும்மா தோராயம்தானே
  பணம்தானே முக்கியம் விருதா
  பாரின்றி உலகு இன்னும் இன்னும்
  நூறு பிணங்கள்தான் பயண இலக்கா

  ReplyDelete
  Replies
  1. பேய்கள் இருந்தால் தானே அணிவதும் ,துவைத்துப் போடுவதும் :)
   பார்த்துட்டே இருந்தால் பசி தீருமா :)
   அழகிப் போட்டியில் வேண்டுமானால் அளப்பார்கள் ,காட்டிக் கொண்டே நடப்பார்கள் :)
   அதானே ,முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு :)
   இனிமேல் நினைக்கவே முடியாது போலிருக்கே :)
   இதுக்கு பேர் வேற ,நீதி கேட்டு நெடிய பயணம்னு ;)

   Delete
 10. ரசித்தேன் நண்பரே!
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. இஞ்சு டேப் கொஞ்சம் ஓவர்தானா :)

   Delete
 11. ஏற்கனவே மக்கள் பேயடிச்சா மாதிரிதான் இருக்காங்க... நீங்களும் பயமுறுத்தாதீங்க

  ReplyDelete
  Replies
  1. அளவா வச்சிருக்கிறவனுக்கு என்றுமே கவலையில்லே :)

   Delete
 12. அது எந்தக் கம்பெனி வாசிங் மெஷின்ல துவைக்குதுன்னு தெரிஞ்சா.... எமக்கு நல்லா இருக்கும்..நாலு நாளைக்கு ஒரு தடவைதான் கார்ப்பரேசன்காரன் தண்ணி தாரான்....

  ReplyDelete
  Replies
  1. வாசிங் மெஷின் கம்பெனிக்காரன் இதையும் 'கரு'வா வச்சு விளம்பரம் பண்ணுவான் ,அப்பத் தெரிஞ்சிக்கலாம் :)

   Delete
 13. பேய்சிரிப்பு சிரித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. நம்புகிறேன் ,நீங்கள்தான் வெள்ளையுள்ளம் படைத்தவராச்சே:)

   Delete