29 November 2016

டைவர்ஸ்,அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா :)

கணவரின் தப்பைக் கண்டுக்காம விட முடியுமா :)
          ''டாக்டர் ,என் வீட்டுக்காரர்  கடந்த ஒரு மாசமா ,அரிசியில் கிடக்கிற கல்லை மட்டும் பொறுக்கி தின்கிறார் !''
         '' முன்னாடியே  ஏன் கூட்டிட்டு  வரலே ?''
          ''ஐம்பது கிலோ மூடையாச்சே ,தின்னு முடியட்டும்னு இருந்தேன்  டாக்டர்  !''    

சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆனது ,ஏன் :)
          ''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  டாக்டர்கள் சொன்னப்போ கூட  நம்பமுடியலே ,விருந்து பரிமாறுகிறவர் சொல்லும் போது நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
           ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''

டைவர்ஸ், அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா :)
         ''அதிர்சசியான  செய்தியைச் சொன்னால் விக்கல்  நின்னுடும்னு மனைவியிடம் ,உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
          ''விக்கல் நின்றதா ?''
          ''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''

                                           
தணிக்கையா ? தனியா  கையிலேயா :)
              "வர வர சினிமாவிலே ஆபாசம் அதிகம் ஆகுது ,தணிக்கை பண்றாங்களா இல்லையா ?"
              " அதுக்கு  தனியா கையை நீட்டி வாங்கிக்கிட்டு பண்றாங்களோ என்னவோ ?"
             
அதை இப்ப நினைத்தாலும் உடம்பு கூசும் :)
  மாறும் உலகில் மாறாதிருப்பது .......
  கரப்பான் பூச்சியும் ,
  அது உடலில் ஊர்ந்தால் ஏற்படும் கூச்சமும் !

24 comments:

 1. Replies
  1. சீக்கிரம் நெட் கனெக்சன் வாங்குங்க ஜி :)

   Delete
 2. அனைத்துமே நன்றாக இருந்தது

  ReplyDelete
  Replies
  1. கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமாவென்ற தலைப்பும்தானே:)

   Delete
 3. ‘கல்லானாலும் கணவன்’னு இதுக்குத்தான் சொல்லி இருப்பாங்களோ...?!’

  இதுல ஒழிவு மறைவு எதுக்கு...? நா ஒன்னும் கூச்சப்பட மாட்டேன்... நீங்க நம்ப இலைக்கே பாயசம் ஊத்துங்க... பக்கத்து இலைக்காரர் பாயாசத்துக்கு ஆயாசப்படட்டும்...!

  விக்கல் நின்னுடுச்சு... இந்த நக்கல்தானே வேணாங்கிறதுங்கிறா... என்ன விட்டா ஒன்ன கட்டிக்க யாரு வருவான்னு சிரிக்கிறா... சிரிக்கிறா... சிரிக்கிறா...!

  இதுக்கு ‘கையூட்டு’ன்னு சொல்லக்கூடாது... ‘கைநீட்டு...!’ பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதைப் பிடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு...'

  நிரந்தரம்..... நீயே நிரந்தரம்... மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...! பூலோகத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது உனக்குத்தானே தெரிகிறது...!

  த.ம. 2


  ReplyDelete
  Replies
  1. இருக்கும் ,ரொம்ப பொறுத்தமா இருக்கே :)

   அடுத்தவன் வயிறுஎரியும்படி வாங்கிச் சாப்பிட்டா ,வயிறு வலிக்கப் போவுது :)

   விக்கல்லே தவிக்க விட்டிருக்கலாமோ :)

   இப்படிப் பட்ட அனுமார்கள் நாட்டிலே பெருகி விட்டார்களே :)

   நிலநடுக்கம் வருவது தெரிந்தும் 'தில்லா' இருக்கிறதும் நீதானே :)

   Delete
 4. முதல் ஜோக் ரசித்துச் சிரித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. பொறுக்கித் தின்னியை ரசிக்க முடியுதா :)

   Delete
 5. Replies
  1. அய்யா தந்த அதிர்ச்சி வைத்தியம் அவருக்கு ஆப்பு வச்சதை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 6. Replies
  1. கல்லைத் தின்னு முடிக்கட்டும் என்று காத்திருந்த மனைவியையுமா :)

   Delete
 7. அத்தனையும் ரசித்தேன்.
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. துண்டான இதயத்தையுமா :)

   Delete
 8. கரப்பான் பூச்சியும் ,
  அது உடலில் ஊர்ந்தால் ஏற்படும் கூச்சமும் !//

  அதைப் பார்த்தாலே உடம்பு கூசுதே!
  ReplyDelete
  Replies
  1. இந்த கூச்சம் ,கரப்பான் ஊறும் இடத்தைப் பார்த்ததால் வந்ததோ :)

   Delete
 9. சில பின்னூட்டங்களை எழுதி இருந்தேன் பப்லிஷ் ஆகும் போது சர்வர் கிடைக்க வில்லை என்று வந்தது மீண்டும் பதிவாக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. சில நேரங்களில் இப்படி ஆவதுண்டு ,அப்போது back சென்று எழுதியது தெரிந்தால் பப்ளிஷ் செய்வதுண்டு :)

   Delete
 10. Replies
  1. இப்படி டைவர்ஸ் அதிர்ச்சியை மனைவி கணவனுக்குத் தரலாமா :)

   Delete
 11. ஒரு கெட்டதிலும் நல்லது இருப்பது மாதிரி அதிர்ச்சி வைத்தியம் போல் இருக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. இதுவா நல்லது :)

   Delete
 12. கல் தின்றாலும் கணவன்தான்

  ReplyDelete
  Replies
  1. இது புதுமொழியா :)

   Delete