3 November 2016

லிவிங் டுகெதர் இப்படியாச்சே :)

          ''தாலி கட்டிக்காம ஒண்ணா வாழ்ந்தவங்க  வாழ்க்கை ,ஒரெழுத்தில் மாறிப் போச்சா ,எப்படி ?''
      '' லிவிங் டுகெதர், லீவிங் டுகெதர் ஆகிப் போச்சே !'' 
நடிகையை கட்டிக்கப் போறவரின் எதிர்ப்பார்ப்பு :)
              ''கல்யாணத்துக்கு பிறகு , நடிப்பது என்பது கணவரின் கையில்தான் இருக்குன்னு  உங்களைக்  கை காட்டியிருக்காங்க  ,நீங்க என்ன சொல்றீங்க !''
              ''நடிச்சா கிடைக்கும் வருமானம்  யார் கையிலே இருக்கும் என்பதை பொறுத்தது ,அது !''

வரப்பு தகராறுக்கு வயலை விற்றது போல :)
               ''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
                ''அதையேன்  கேட்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுகிட்டே இருக்கார் !''

அழகு நிலையம் செய்த 'அழகு 'காரியம் :)
               ''ஏண்டி ,' நாலே  நாளில் முகத்தில் உள்ள   கரும்புள்ளிகள்  மாயமா மறைஞ்சுடும்,இல்லேன்னா பணம் வாபஸ் 'னு போட்டு இருந்ததை நம்பி பத்தாயிரம் ரூபாய் கட்டினியே ,என்னாச்சு ?''
                ''மாயமாப் போச்சு , விளம்பரம் செய்த அந்த பியூட்டி பார்லர் !''

பசி வந்தா,பிடி அரிசி  இப்பிடியும்  ஆகுமா :)
               ''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?
               ''அட்சதை  அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்னு தின்னுட்டாங்களே !''

22 comments:

 1. Replies
  1. லீவிங் டுகெதர் எல்லாம் சகஜம்தானே :)

   Delete
 2. நீதிமன்றக் கட்டிடத்தையும் ஒத்திக்கு எடுத்திருப்பார்களோ!

  ReplyDelete
  Replies
  1. உரிமையாளர் காலி பண்ணச் சொல்லி ,அதே கோர்ட்டில் வழக்கும் தொடுத்து இருப்பதாக கேள்வி :)

   Delete
 3. ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்... இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்...’ எத்தனை பேரோடன்னு... அதச் சொல்லலையே...!

  கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது ...!

  அண்ணாத்த ஆடுறார்... ஒத்தி கோ ஒத்தி கோ... தென்னாட்டு வேங்கதான்... ஒத்து கோ ஒத்து கோ...கோ...!

  ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு... டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்னுன்னு...’ அந்த பியூட்டி பார்லருக்கு வந்தவளக் கூட்டிட்டு ஓடிப்போயிட்டானாம்...!

  ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகுமுல்ல... அதில அரிசியும் ஒன்னச் சேர்க்கலையா...?’அம்மி மிதித்து அருந்ததி பாத்தில்ல... நீ சீக்கிரம் மம்மி ஆகலைன்னா... திதிதான்...!

  த.ம. 3


  ReplyDelete
  Replies
  1. பல்லு இருக்கறவரைக்கும் பக்கோடா சாப்பிட வேண்டியதுதான் :)

   அவர் நடிகையை கட்டிக்க நினைக்கிறாரா ,பணத்தைக் கட்டிக்க நினைக்கிறாரா :)

   தென்னாட்டு வேங்கை மட்டுமில்லே ,கணக்கிலேயும் புலி ,அவரோட பெயரும் குமாரசாமி :)

   அவ்வ்வ்,அது வேறவா :)

   திதியிலும் அரிசியின் பங்குண்டுதானே :)

   Delete
 4. சின்னஞ்சிறுசுக இப்படித்தான் அப்புறம் கூடிக்குவாங்க...
  பொய் கலக்காத பதில்
  இவருக்கு இதே வேலையாப்போச்சு
  பொய் கலக்காத விளம்பரம்
  வறுமைதானா...

  ReplyDelete
  Replies
  1. சின்னஞ்சிறுசுக செய்தா பரவாயில்லை ......:)
   அய்யாவுக்கு நோகாம நொங்கு திங்க ஆசை :)
   தாமத நீதி அநீதின்னு அவருக்கு தெரியாதா :)
   விளம்பரமும் உண்மை ,ஓடிப் போனதும் உண்மை :)
   பசி பொறுமையை சோதிக்குதே:)

   Delete
 5. ரசித்தேன் நண்பரே !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. நடிகையை கட்டிக்கப் போறவரின் எதிர்பார்ப்பு நியாயம்தானா :)

   Delete
 6. லிவிங் டுகெதர் மற்றும் லீவிங் டுகெதர் இப்போதெல்லாம் முன்னேற்றத்தின் அறி குறி
  வருமானத்துக்காக கட்டிக்கிறார் அது கிடைத்தால் மனைவி நடிப்பதில் ஆட்சேபணை ஏது
  தீர்ப்பைத்தானே ஒத்துஇ வைத்திருக்கிறார் கேசை இல்லையே
  முகம் முழுதும் கரும்புள்ளிகள் ஆச்சே
  இதற்குத்தான் அட்சதைக்குப் பதில் பூ வைக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. முன்னேற்றத்தின் அறிகுறியா ,?அதனால்தானே பல கொலைகளும் நடக்குது :)
   நடிப்பது ஒருவர் ,அனுபவிப்பது ஒருவரா :)
   கேஸ் முடிந்தும் தீர்ப்பை ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தால் நியாயமா :)
   கேட்காமலே பூசி விட்டு ஓடி விட்டாரே :)
   ரோஜாப் பூவை வைத்தால், அதன் இதழ்களையும் ருசிக்கக் கூடும் :)

   Delete
 7. பியூட்டி பார்லர் மட்டுமா ஜி... எல்லாமே மாயம் தான் ஜி...

  ReplyDelete
  Replies
  1. மாயம்தான் ,வாழ்றதுக்கு பணமே மையமா இருக்கே :)

   Delete
 8. ''லிவிங் டுகெதர், லீவிங் டுகெதர் ஆகிப் போச்சே!'' என்று கவலைப்படாதீங்க... திரை உலகில் இதெல்லாம் இயல்பு

  ReplyDelete
  Replies
  1. எனக்கென்ன கவலை ?என்னைக் கேட்டா சேர்ந்தார்கள் :)

   Delete
 9. ட்ரெண்டியா ஜோக் எழுதி அசத்திட்டீங்க ஜி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. காலத்துக்கேற்ற கோலம் போட வேண்டியிருக்கே :)

   Delete
 10. என்னமோ நடந்திருக்கு..வயசாகி போனதால் இரக்குமோ...?????ஃ

  ReplyDelete
  Replies
  1. ஹீரோவுக்கும் வயதாகுமா :)

   Delete
 11. லிவிங் லீவிங் ஆனதுல எத்தனை பேருக்கு வருத்தமோ

  ReplyDelete
  Replies
  1. அவங்க சந்தோசம்தானே எல்லாருக்கும் முக்கியம் :)

   Delete