4 November 2016

நடிகை ஸ்வேதா மேனனுக்கு அன்று வந்த சோதனை :)

 இந்த பேரன் யாரென்று தெரியுமா :)            
             ''தாத்தாவுக்கு பேரன் எழுதிய கடிதத்தை சரியா எழுதி முடிச்சிருக்கானா ,எப்படி  ?''
              ''இப்படிக்கு 'பேரன் 'புடன்  என்று  !''

 இப்படி செய்ய முடிந்தால் நல்லதுதானே  :)
           ''தலையிலே ஏண்டா ரப்பரை வைத்து தேய்ச்சிகிட்டு  இருக்கே ?""
           ''தேவை இல்லாதவைகளை அழிச்சிக்கிட்டுருக்கேண்டா !''

படிச்சிட்டு ,தண்டவாளத்தில் தலையைக் கொடுக்காதீங்க :)           
             ''எவ்வளவு பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
             ''ரயிலைப்  பிடிக்கணும்னா வேற  வழியில்லையே !''

 ஜாக்கிங் நல்லது வாக்கிங்கை விட :)
             '' வாக்கிங் பதிலா ஜாக்கிங் போகணுமா, ஏன்  டாக்டர் ?''
             ''நீங்க தானே  'பொடி'நடை நடந்தாலே தும்மலா வருதுன்னு சொன்னீங்க !''

நடிகை ஸ்வேதா மேனனுக்கு அன்று வந்த சோதனை !
(இந்த கூத்து நடந்தது இரண்டாண்டுக்கு முன் )
களிமண்ணு என்ற மலையாளப் படத்தில் ...
தன் உண்மையான பிரசவக்காட்சியை காட்டிய ஸ்வேதா மேனனை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள் ...
எந்த நடிகையுமே செய்யத் தயங்கும் கேரக்டரை தயங்காமல் செய்த அவரிடமே ...
பொது இடத்தில் செய்யக்கூடாத காரியத்தை 
தயங்காமல் செய்திருக்கிறார் ஒரு   M P...
கொல்லத்தில் நடந்த படகுப் போட்டி விழாவில் VIPயாக கலந்து கொண்டார் காங்கிரஸ் MP...
அவர் அருகில் அமர்ந்து இருந்தார்  ஸ்வேதா மேனன்...
படகுப் போட்டியாளர்களின் துடுப்பு போடும் கைகளின் அசைவை எல்லாரும் ரசித்துக் கொண்டிருக்க ...
இவரோ ,நடிகையின் இடுப்பில்  கைகளால் விளையாடி இருக்கிறார் ...
எடுக்கப்பட்ட வீடியோவில் ஸ்வேதா மேனன் தேவை இல்லாமல் நெளிவதும் ,MPயின் 'அன்பான 'தொடுதலும் பதிவாகி உள்ளதாம் ...
எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற கதையாக ...
அத்து மீறல் எதையும் செய்யவில்லை ,எனக்கெதிரான சதித் திட்டம் இது என்று MP உளறியுள்ளார் ...
மலையாள நடிகர் சங்கத் தலைவரான இன்னோசென்டிடம் நடந்ததை விவரித்து உள்ளார் அந்த நடிகை ...
நான் ஒரு 'இன்னொசென்ட் 'என்று  MP வியாக்கியானம்  செய்வார் என எதிர்ப்பார்க்கலாம் !
நமது மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையிலேயே BF பார்ப்பதும் ...
படுக்கையின்  பணத்தை அடுக்கி புரள்வதும் ...
பொது இடத்திலேயே இப்படி 'கடமை'யாற்றுவதைப் பார்க்கும் போது  நிச்சயமாய் தெரிகிறது ...
நம்ம நாடு நல்லா வரும்னு  !

18 comments:

 1. ஆஹா பொருத்தம்
  மூளையை சேர்த்து அழிச்சிடாம...
  ஆமாமா...
  அதானே...
  நம்ம நாடு நல்லா வருமா ?

  ReplyDelete
  Replies
  1. பேரன் நல்லா வருவான் :)
   இவனுக்கு இருந்தால்தானே :)
   இதுக்கு பயந்து விமானத்தில்போவாரோ:)
   தும்மிகிட்டே நின்னார் ,எங்கே நடந்தார் :)
   இப்படிப்பட்டவர்கள் இருக்கும் போதா :)

   Delete
 2. பேரன்புடன் பெயரன்... பெயரைச் சொல்லக்கூடாதென்று அம்மா ஆணை... அப்பாவைக் காட்டிக்கொடுக்கக்கூடாதாம்...!

  அழிச்சாட்டம் ஆடுற அழிசாதிப் பயலே...! எலும்பிச்சம்பழம் இருந்தா தேய்டா... சரியாடும்...!

  இப்ப பிளாட் எல்லாம் பாம்முல்ல இல்ல... மவுலிவாக்கம் போயி பிளாட்பார்ம்ல்ல நின்னு பாக்க வேண்டியதுதான்...!

  பொடி புத்தியக் காட்டிட்டீங்களே...!

  களிமண்னைத்தான் நினைச்சபடி வளைச்சு... நாம நினைச்சத செய்ய முடியுமுன்னு நினைச்சது ஒரு தப்பா...?! வீடியோக்காரர்தான் சின்ன விசயத்தப் பெரிசாக்கி காட்டுறாங்க...!

  த.ம. + 1

  ReplyDelete
  Replies
  1. பையனுக்கு எங்கே தெரியும் ,அப்பன் யாரென்று :)

   குற்றாலத்துக்கு போய்தானே :)

   மவுலிவாக்கம் பிளாட்டுக்கு மௌன அஞ்சலி செலுத்தவா :)

   பொடியை மறக்க முடியாதே :)

   களிமண் பிசைந்ததை ஜூம் போட்டுக் காட்டுறான் :)

   Delete
 3. Replies
  1. தும்மலை ரசிக்க முடியுதா :)

   Delete
 4. ஸ் எழுத்தைக் கொண்டுவர தனியாக டைப் செய்ததில் ஸ்பேஸ் சரி செய்ய மறந்து விட்டீர்களே....!!!

  ரப்பர் ஜோக்கை அதிகம் ரசித்தேன். ஸ்வேதா மேனன் தமிழக விழாக்களில் கலந்து கொள்வதில்லையா?

  ReplyDelete
  Replies
  1. அது வேண்டுமென்றே செய்தது ,அப்படி செய்யாவிட்டால் பதிவு ,திரை மணத்துக்கு போய்விடும் ,இப்போ சரியாகியிருக்குமே :)

   சொந்த கட்சிக் கூட்டத்தில் குஷ்புவுக்கு ஏற்பட்ட துன்பியல் நிகழ்வால் ,ஸ்வேதா மேனன் தமிழக விழாக்களில் கலந்து கொள்ள யோசிப்பதாக கேள்வி :)

   Delete
 5. Replies
  1. அந்த களிமண்ணில் எதைப் பிடிக்க நினைத்தாரோ :)

   Delete
 6. பேரனின் பேரன்பு ரசிக்க வைக்கிறது
  ரப்பரால் அழித்து தலை எழுத்தை மாற்ற யுக்தியோ
  தண்டவாள ப்லாட்ஃபார்ம் ஜோக் பழையது
  ஜாகிங் என்றால் விரை நடைதானே
  படத்தில் இருப்பது ஸ்வேதா மேனோனா

  ReplyDelete
  Replies
  1. பெருகட்டும் பேரன்பு :)
   கண்ணுக்குத் தெரியாததை இப்படியும் அழிக்கலாமோ :)
   நீலநிறத்தில் வருவது ஒன்றே புதியது :)
   நீங்க ஒண்ணும் ஜோக்கிங் செய்யலையே :)
   இல்லாவிட்டால் அவருக்கென்ன வேலை இங்கே :)

   Delete
 7. நம்மநாடு அயிரத்தி தொள்ளாயிரத்திலே நல்லா வந்திருச்சே...

  ReplyDelete
  Replies
  1. ஒரு சாமியார் தங்கப் புதையல் கனவில் வந்ததென்று ,பல டன் தங்கம் எடுத்துக் கொடுத்தாரே ,அந்த வருடத்திலா :)

   Delete
 8. Replies
  1. பொடி நடையினால் தும்மலும் வருமா :)

   Delete
 9. நாடு விளங்கிடும்)))

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட jp(ஜொள்ளு பார்ட்டி mp ஆனால் விளங்கத்தானே செய்யும் :)

   Delete