7 November 2016

ஒண்ணரை லட்ச மனைவி :)

இது கையில் இருந்தாலே சிக்கல் :)
             ''டைம் பாஸ் இதழைப் படிச்சதுக்கா ,அவரைக் கைது பண்ணிட்டாங்க ?''
               ''அட நீங்க வேற ,அவரிடம் இருந்தது தீவிரவாதிகள்  ரகசியமாய்  நடத்தும்  டைம் பாம் இதழாம்!''
இதுக்கு மிஸ்டு காலே தேவலே :)
              ''பரவாயில்லையே ,எப்பவும் மிஸ்டு கால் கொடுப்பவர் ,இப்போ  பேச விரும்புறாரே  ,பேசுறதுக்கு நீங்க ஏன் தயங்கிறீங்க ?''
               ''கடன் கேட்க மட்டும்தான் பேச விரும்புவார் ,அதான் !'' 

 பிள்ளைக்குத் தெரிஞ்சது அப்பனுக்கு தெரியலையே :)          
            ''என் செல்லக்கண்ணு ,உன்கூட விளையாட தங்கச்சி வேணுமா ,தம்பி வேணுமா ?''
           ''அடப் போங்கப்பா , வயிற்றில் வளர்றதைக் கூட பார்க்கக் கூடாதுன்னு சட்டம்  இருக்கே ,பார்க்கவே  முடியாது ,எப்படி தர முடியும் ? ''

ஒரே  கிட்னியால்  இப்படியும்  நன்மை  இருக்கு :)
             ''என்ன நர்ஸ் சொல்றீங்க ,நான் சொன்ன உண்மைதான்  என்னைக் காப்பாற்றி இருக்கா ?''
             ''ஒரு கிட்னி தான் உங்களுக்கு  இருக்குன்னு முன் கூட்டியே சொன்னதால் ,டாக்டர்  பண்ண இருந்த ஆபரேசனை கேன்சல் பண்ணிட்டாரே !''

தப்பா அர்த்தம் எடுக்காதீங்க:)
     '   'முத்து குளிப்பதை பார்க்க ஆசையா இருக்குடி!''
      ' உனக்கு ஏண்டி இந்த விபரீத ஆசை?''
       ''அட நீ வேற!கடல்லே முத்து எடுப்பதை பார்க்கணும்னு சொல்ல வந்தேன் !

தலைஇல்லா முண்டம் ,இதுதானா:)
    '' உங்க மாப்பிள்ளையை இந்த தலை  தீபாவளிக்கு ஏன் அழைக்கலே ?
     ''என் பொண்ணை கொடுமை பண்ற அந்த 'முண்டத்திற்கு 'தலை தீபாவளி ஒரு கேடா ?

ஒண்ணரை லட்ச மனைவி :)
எல்லா ஊர்களிலும் விளைநிலங்களை கூறு போட்டு மனைகளாக்கி  விற்கிறார்கள் ...
ஆனால் ,கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மதுரையில்  சில வருடகளுக்கு முன் நடந்த கூத்து ....
கொத்தனார் ஒருவர்,மனைவியையே விற்று இருக்கிறார் ...
பெண் பாவம் பொல்லாததாச்சே ...அந்த பாவத்திற்கு அவரே பலியாகி விட்டார் ...
அவருடன் சேர்ந்து இரண்டு பிள்ளைகள் பெற்ற புண்ணியவதிக்கு...
 எதிர் வீட்டு கொள்ளைக்காரனுடன் தொடர்பாம் ...
தாலிக் கட்டியவன் நான் இருக்க ,உங்கள் இருவருக்குள் என்ன ஜோலி என்று ...
நீதியை நிலைநாட்ட நவீன பாண்டிய நெடுஞ்செழியனாய்  பொங்கி எழுந்துள்ளார் கொத்தனார் ...
எல்லார் வீட்டையும் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரன் ...
தன் மனதை கொள்ளை அடித்தவளுக்காக பேரம் பேசியுள்ளான் ...
ஒண்ண்ரை லட்சம்  விலை நிர்ணயம் செய்யப்பட்டு மனைவி கை மாறி விட்டாள்  ...
பின் தொடர்ச்சி அனுபவ பாத்தியதை ஏதுமில்லை என்று அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டார்களா என்று தெரியவில்லை ...
ஒண்ணரை லட்சம் ஒண்ணரை ஆண்டுகளுக்குள் காலியாகிவிட்டது போலிருக்கு ...
மனைவியை மீண்டும் சொந்தம் கொண்டாட கொத்தனார் வந்த செய்தி ...
வெளியூரில் இருந்த கொள்ளையனுக்குப் போக ...
அடியாட்களின் புண்ணியத்தால் கழுத்தறுபட்டு மேலோகம் சென்று விட்டார் கொத்தனார் ...
கொள்ளையனை மாமியார் வீட்டில் அடைக்க வலை வீசி தேடுகிறார்கள் போலீஸார் ...
மாமியார் வீட்டை மாற்றிக் கொண்ட ஒரே தப்புக்கு...
குழந்தைகளுடன் தெருவில் நிற்கிறாள் தாய் !

28 comments:

 1. டாக்டர் - கிட்னி ஜோக், மற்றும் முத்து குளிக்கும் ஜோக் இரண்டையும் அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நோயாளிக்கு வந்த சத்திய சோதனையில் வென்று விட்டாரே :)
   இதைப் பார்ப்பது சாத்தியமா :)

   Delete
 2. Replies
  1. ஹனி 'மூணு'க்கு நன்றி :)

   Delete
 3. என்ன பாஸ் குண்டத்தூக்கிப் போடுறீங்க... சரி... விடுங்க பாஸ்... இதெல்லாம் சகஜம்தானே...!

  வாராக் கடன் வரிசையில வச்சு... கொடுக்க வேண்டியதுதானே...!

  ‘என்னோட பிள்ளைக்கு நல்ல தாயா இருக்கப் போறேன்னு... வக்கிலப் பாக்கப் போயிட்டாங்க... போங்கப்பா... போயி அம்மாவ கூட்டிட்டு வர்றதுக்கு வழியப்பாருங்க...! விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்...!

  எதுக்கும் ஒரு நியாய தர்மம் வச்சுத்தான் திருடுவார்... நல்ல டாக்டர்...!

  முத்து குளிக்க வாரிகளா... முத்து மாமா... வாங்க மாமோ... கடலுக்குள்ள போயி குளிப்போம்...!

  நகராசுரனை அழித்து... வெடிவச்சுக் கொண்டாட வேண்டியதுதானே...!

  ஒன்னு கிடைக்க... ஒன்னு நினைத்தால் இப்படித்தான்...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. குண்டு போடுறதும் சகஜமாப் போச்சா :)

   இவரென்னா மல்லையாவா ,வராக் கடனில் கொடுக்க :)

   அதென்ன இனிமேல் நல்ல தாய் :
   இவரை மாதிரியே தர்ம நியாயமுள்ள டாக்டர் ஏற்கனவே கை வச்சிட்டார் போலிருக்கே :)

   அடி ஆத்தீ ,ஆழத்தைக் கண்டாலே எனக்கு பயம் :)

   அதுதான் தல தீபாவளியா இறக்கும் :)

   இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதைப் பிடிக்கலாமா :)

   Delete
 4. Replies
  1. முத்து குளிப்பதையுமா:)

   Delete
 5. Replies
  1. டாக்டர் ஆபரேசனை கேன்சல் செய்தது ,சரிதானே:)

   Delete
 6. Replies
  1. பெற்ற பிள்ளைகளைகூட நினைத்து பார்க்காதவள் தாய் அல்லதான் :)

   Delete
 7. குழந்தைகளுடன் தெருவில் நிற்கிறாள் தாய் !//

  பாவம் குழந்தைகள்.

  ReplyDelete
  Replies
  1. இப்படிப் பட்ட தாயின் வயிறில் பிறந்து விட்டோமே என்று பிள்ளைகளை நினைக்க விடலாமா ,தாய் என்பவள் (:

   Delete
 8. முத்து குளிக்கும் ஜோக் குட்

  ReplyDelete
  Replies
  1. இந்த ஜோக்கெல்லாம் ஒரு மார்க்கமாவே இல்லையா :)

   Delete
 9. ஓரெழுத்தால் பிரச்சினை
  அதானே... காரியவாதி
  வெவரமான பயபள்ள
  நல்ல நர்ஸ்தான்
  நானும் ஏமாந்துட்டேன்
  டாஸ்மாக்கான்
  இதில் குழந்தைகளை நினைத்தால் பாவமாக இருக்கின்றது மற்ற மூவருக்கும் தண்டனை கிடைத்து விட்டது

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக டைம் பாஸ்க்கு டைம் பாம் வைக்க முடியுமா :)
   அவருக்கு காரியம் செய்யும் நாள் சீக்கிரம் வந்தா தேவலே :)
   இவருக்கு எப்படி பொறந்தான்னு தெரியலே :)
   கருணையுள்ள நர்ஸ்சோ:)
   நிறைய நட்டமா :)
   அப்படித்தான் இருக்கும் :)
   குழந்தைகளுக்கும் அல்லவா தண்டனை :)

   Delete
 10. வணக்கம்
  ஜி

  மதுரை தகவலும்...சொல்லிய கருத்து சிறப்புஇரசித்தேன் ஜீ,த.ம 10

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரூபன் ஜி ,நலமா ?

   தங்களின் இலக்கியப் பணி எப்படி போய்க் கொண்டிருக்கிறது :)

   Delete
 11. உப்பை தின்றால் தண்ணி குடிக்க வேண்டும் என்ற கதையோ....

  ReplyDelete
  Replies
  1. இது டாஸ்மாக் தண்ணியால் வந்த கதை போலிருக்கே :)

   Delete

 12. ஒண்ணரை லட்ச மனைவி
  அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. படிப்பினை தரும் பதிவு ,காமப் பித்து பிடித்து அலைபவர்களுக்கு:)

   Delete
 13. ரயிலில் டைம் பாஸ் என்று மல்லாக் கொட்டை விற்பார்களே இது வேறயா
  அனுபவப்பட்டவர் பேச்சு
  பிள்ளைகளைக் குறைத்து எடை போடக்கூடாது குழந்தையை ஸ்டார்க் கொண்டு வருகிறாஅச்து என்று சொன்ன அப்பாவிடம் உனக்கு ஏதும் தெரியலை என்று சொல்லிய மகனை நினைவு படுத்துகிறது
  உண்மை வெல்லும்
  முத்து குளிப்பதைப் பார்க்கலாம் முத்துக்குளிப்பதை பார்க்க முடியுமா
  ஒரு வருஷத்துக்குள் முண்டம் தெரிய வந்ததே
  மதுரை எல்லாவற்றிலும் முன்னோடியா

  ReplyDelete
  Replies
  1. நொறுக்குத் தீனி எல்லாமே டைம்பாஸ் தானா :)
   அதுவும் கசப்பான அனுபவமாச்சே :)
   இது சம்பந்தமாக நிறைய சுவாரசியக் கதைகளை நானும் படித்ததுண்டு :)
   உண்மை உயிரையும் காப்பாற்றும் :)
   அந்த கண்றாவியை யார் பார்க்கிறது :)
   விளையும் பயிர் மாதிரி புது மாப்பிள்ளை :)
   இந்த அசிங்கத்திலுமா :)

   Delete
 14. டைம்பாம் சஞ்சிகை படித்த சிரிப்பு திக்திக்வெடி)))

  ReplyDelete
  Replies
  1. இதுதான் வெடிச் சிரிப்போ :)

   Delete