8 November 2016

வாலிப வயது பேசுது:)

 காது   'கட்' ஆகக்  கூடாதுன்னுதான்   :)       
            '' தலை முடியைத் தானே வெட்டச் சொன்னேன் ,எதுக்கு முகத்திலே அடிக்கடி  தண்ணீயை ஸ்ப்ரே பண்றே ?''
             ''ஆபீஸ் நேரத்திலே முடி வெட்டிக்க வந்து தூங்கி வழியிறீங்களே!'' 

இரண்டாம் கல்யாணம் பண்ணிக்க காரணமா இது :)
           ''சொல்றேன்னு தப்பா நினைக்காதே ,உன் கணவர் மேல் ஒரு கண்ணாவே இரு !''
          ''உங்க நெருங்கிய நண்பரைப் பற்றி ,நீங்களே ஏன் இப்படிச் சொல்றீங்க ?''
           ''நம்ம ஊர்லே   புதுசா திறக்கப்பட்ட கல்யாண மகால் எப்படின்னு கேட்டா , அதிலே எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் போலிருக்குன்னு சொல்றானே !''

பழசை மறக்காத உழைப்பாளி :)
          ''அந்த டீ மாஸ்டர் ,முன்பு  கிளினிக்லே வேலைப் பார்த்தவரான்னு  ஏன் கேட்கிறீங்க ?''
          ''இங்கே சரியாக 105 டிகிரி  சூடான டீ ,காப்பி கிடைக்கும்னு சொல்றாரே !''

டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா :)
            ''என்ன சொல்றீங்க ,அந்த பெட்லே படுத்து இருக்கிறவர் போலி நோயாளியா ?''
          ''ஆமாம் ,அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !'

வாலிப வயது பேசுது:)
          ''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னு பட்டது ,அதனாலே விட்டுட்டேன்!''
           ''எதை?''
          ''கோவிலுக்குப்  போவதைதான் !''
தம்பதிகள் சண்டை தெருவையும் தாண்டியது :)
தம்பதிகள் சண்டை தெருவுக்கு  வரக் கூடாது என்பார்கள் ...
நாகர்கோவில் அருகே ஒரு தம்பதியினரின் சண்டை ரயில் தண்டவாளத்திற்கே வந்த அதிசயம் நடந்துள்ளது ...
பிறந்த ஊர் பிராந்தநேரி என்பதாலோ என்னவோ 
பிராந்தியே கதியாய் இருந்த  சர்வருக்கு மூன்று குழந்தைகளாம் ...
சம்பாதித்தது  மூக்கு முட்ட குடிப்பதற்கே அவருக்கு போதாதாம் ...
திருந்தாத ஜென்மத்தோடு வாழப் பிடிக்காமல் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டாராம் மனைவி ...
வெளிநாட்டில் சம்பாதித்ததை  பிள்ளைகளுக்கே கொடுத்தாளாம் ...
தண்ணி அடிக்க காசு கேட்டால் தராமல் திட்ட வேறு செய்தாளாம் ...
மதிக்காத மனைவிக்கு பாடம் புகட்ட நினைத்து ...
ரயில் தண்டவாளத்தில் இரண்டு பாறாங்கல்லை வைத்துள்ளார் ...
நல்லவேளையாக இஞ்சின் டிரைவர் பாறாங்கல்லை பார்த்து ரயிலை நிறுத்தியுள்ளார் ...
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது  !
போலீசிடம் மாட்டிக் கொண்ட சர்வர் கூறியது பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியது ...
ரயிலை கவிழ்த்தது நான்தான் என்று தெரிந்தாலாவது பயந்து மனைவி பணம் தருவாள் என்பதற்காகத்தானாம் !
வண்டவாளம் தண்டவாளம் ஏறியது என்பது இவனுக்குத் தான்  மிகவும் பொருந்தும் !

16 comments:

 1. ஆபீஸ் நேரத்த வேஸ்ட் பண்ணமாட்டேன்னு ஒனக்குத் தெரியாதா...?!

  நீ... என் கணவர் மேல் ஒரு கண்ணாவே இருக்கிறத நினச்சாத்தான் பயமா இருக்கு...!

  ஒரிஜினல் டிகிரி காப்பி கிடைக்குமுன்னு போர்டு போட்டு இருக்கிறதப் பார்க்கலயா...?!

  போலி விற்கிறவர்... போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்...!

  ‘கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக...!’

  இவளைக் கட்டிக்கிட்டதுக்குப் பாறாங்கல்லைக் கட்டிக்கிட்டாலாவது... நேரா நேரத்துக்கு ‘மாமியார் வீட்ல’... கேட்டது கிடைக்குமுன்னு நெனச்சுட்டாரோ...?!

  த.ம. + 1

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக என்னைக் கழுத்தறுக்கிறதா:)

   ஆத்தா தாயே ,எங்களுக்குள் இருப்பது மன உறவு மட்டுமே :)

   இதானா ஒரிஜினல் காபி :)

   ஆனாலும் கிட்னி ஒரிஜினல்தானே :)

   சைட் அடிப்பதுமா கொடியவர்களின் செயல் :)

   மாமியார் வீட்டுக்குப் போற சனியன் எதுக்கு ,மற்றவங்களை மேலோகம் அனுப்பணும்:)

   Delete
 2. தம சப்மிட் ஆகவில்லையே..

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சிரமப் பட்டு சப்மிட் பண்ணி ,ஒரு வழியா வோட்டு போட்டு.. என் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன் :)

   Delete
 3. Replies
  1. தம்பதிகள் சண்டை தெருவையும் தாண்டியதையுமா:)

   Delete
 4. // ''ஆபீஸ் நேரத்திலே முடி வெட்டிக்க வந்து தூங்கி வழியிறீங்களே!''//

  பெண்டாட்டிகிட்ட ‘வாங்கிக் கட்டிகிட்டு’ சலூன் போயிருக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. அந்த அர்ச்சனை, தினசரி மூன்று வேளையும் நடந்துகிட்டுதானே இருக்கு :)

   Delete
 5. காது பத்திரம்
  வத்தியா ?
  பழக்கதோஷம்
  கிட்னியும் போலியா ?
  நல்ல பழக்கம்
  ஹாஹாஹா சரியான பழமொழி

  ReplyDelete
  Replies
  1. காது இன்சுரன்ஸ் வசதி இருக்காமே:)
   இவரை நம்பி பேசக் கூடாதோ :)
   விடவே விடாதோ :)
   முடிந்தால் செய்வார்கள் :)
   பெரிய பக்திமான்தான் :)
   உண்மையான தண்டவாளம் :)

   Delete
 6. தூங்கும் போது முடி வெட்டுவது சுலபம்தானே. முடிவெட்டும்போது தூக்கம் அற்புதமாய் வரும் நீர் தெளித்து டிஸ்டர்ப் செய்யலாமா.
  ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ ஆசையை நண்பனுடன் கூடப்பகிரக்கூடாது
  அந்த டிகிரி வேற இந்த டிகிரி வேறன்னு தெரியாதவராய் இருக்காரே
  போர்ட் போட்டு வைத்தா கிட்னி விற்கிறார்
  படத்தில் இருப்போரை விட வெளியே நல்ல சைட்டுகள் வெளியே இருக்கிறதே
  குடிக்கப் பணத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் பிராந்தர்கள்

  ReplyDelete
  Replies
  1. சுற்றிலும் கனவுக்கன்னிகள் படம் இருப்பது ,தூங்கட்டும் என்பதற்குத் தானா :)
   இதுவே துரோகம் தானே :)
   ஹீட்டைக் அளப்பது டிகிரி தானே :)
   வயிறு மேல் ,உள்ளேயுள்ள கிட்னி விற்பனைக்கு என்று எழுதி இருந்தாரே :)
   அதான் ,உள்ளே போறதை விட்டு விட்டார் :)
   போதைப் பழக்கம் எதை வேண்டுமானாலும் செய்யும் :)

   Delete
 7. தண்டவாளத்தில எவரெவர் வண்டவாளம் எல்லாம் ஏறுகிறது

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ,இதுதான் உண்மையான தண்டவாள வண்டவாளம் :)

   Delete
 8. வாலிப வயது பேசியது பொய்யாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் இல்லை என்பதாலா :)

   Delete