28 November 2016

INBOX திறந்து பார்க்காதவன்,வேறெதைப் பார்க்கப் போறான் :)

         ''Congratulations! You've read all the important messages in your inbox..இந்த வாசகத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோணுது ?''
        ''ஜி மெயில் கணக்கு வச்சுருக்கிறவங்க பெரும்பாலோர் சோம்பேறின்னுதான் !''

இவர் வாய்ஜாலம் மனைவியிடம் பலிக்குமா :)
               ''பிரபலமான tv தொகுப்பாளருக்கு ,யாருமே பொண்ணு தர மாட்டேங்கிறார்களாமே,ஏன்  !''
                ''பெண்டாட்டியிடமும்   கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுத்து விடுவார்ங்கிற பயம்தான் !''
    (குறிப்பு...படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை )
சொல்றதுக்கு  நல்லாவா இருக்கும் :)
             ''பத்து வீடு பார்த்ததில் நடுத்  தெருவிலே இருக்கிற வீடு நல்லாயிருக்கே ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''
             ''நடுத்  தெருவிலே இருக்கேன்னு சொன்னா ,எல்லோரும்  சிரிப்பாங்களே !''

வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி :)
               ''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
               ''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்கதானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

இதுவும் பழிக்கு பழியா :)
     ''usa முன்னாள் அதிபர் புஷ் 'தன் நாய்க்கு இந்தியான்னு பேர் வைச்சு இருந்தாராமே?''
             ''நம்ம ஊர்லே பாதி நாய்களை ,ஜிம்மி ஜிம்மின்னு சொல்றது அவருக்கு தெரிஞ்சு இருக்கும்!ஜிம்மி கார்ட்டரும் usa 
முன்னாள் அதிபரோட பேர் ஆச்சே!'' 

திருமண அகழி !
மதில்மேல் பூனையைவிட 
அகழியில் விழுந்த பூனையே male !

அன்று ஆனுக்கு 17,ஜானுக்கு 21... இன்றுவரை ஜாலிதான் :)
 ஓடிப்  போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று நம்ம ஊர் இளசுகள் இப்போதுதான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ...
1932லேயே ஓடிப்போய் மோதிரம் மாற்றிக்   கொண்டுள்ளார்கள்  ...
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ,ஆன் தம்பதியர்  !
பாரம்பரியம் மிக்க  நம்ம பாரதத்தில் ...
கள்ளக்காதல் ,கணவன் கொலை ,மனைவி கொலை ,காதலன் கொலை ,காதலி கொலை என்று தினசரி கொலை கொலையா பார்த்துக் கொண்டிருக்கிறோம் ...
உன் குழந்தைகள் ,என் குழந்தைகள் ,நம் குழந்தைகளுடன்  விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று தாம்பத்திய வாழ்க்கைக்கு அற்புத விளக்கம் சொன்ன 
அமெரிக்காவில்தான் ...
ஜான் ,ஆன் தம்பதியர் தங்களின் 81வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர் ...
ஜானுக்கு வயது 102 ஆனுக்கு வயது 98...
மூத்த மகளுக்கு வயது 80...
பேரப் பிள்ளைகள் 14,கொள்ளுப் பேரப் பிள்ளைகள் 16ம் அவர்களுக்கு உள்ளதாம் ...
நல்ல வேளை ,இவர்கள் இந்தியாவில் இல்லாமல் போனார்கள் ...
இருந்திருந்தால்  தனியாக பள்ளிக்கூடம் வைக்கும் அளவிற்கு வாரிசுகள் எண்ணிக்கை கூடியிருக்கும் ...
காதலர் தினத்தன்று இவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும்இளைஞர்கள்எண்ணிக்கை 
கூடிக்கொண்டே வருகிறதாம் ...
ஆனால் ,டைவர்ஸ் செய்யாமல் வாழ்வோர் எண்ணிக்கைதான்  தெரியவில்லை !       

24 comments:

 1. ஜி மெயிலில் எனக்கு இது வரை அப்படி ஒரு மெசேஜ் வந்ததில்லையே!

  தொகுப்பாளர் மனைவியிடமிருந்து இன்னும் அதிக டிரெயினிங் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக ஏன் நினைக்க மாட்டேன் என்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா ,ஏதோ ஒரு மெயில் இன்னும் திறக்கப் படாமலே இருக்கின்றது என்று அர்த்தம் !சீக்கிரம் திறந்து பாருங்க ..உங்களுக்கு பத்து கோடி பரிசு விழுந்த முக்கியமான தகவல் வந்திருக்கலாம் :)

   ஒரு வேளை, அதுதான் இவருக்கும் அடிப்படையாய் இருக்குமோ :)

   Delete
 2. உள் அதைச் சொல்வேன்..சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது...!

  பாண்டை ஆன கேள்வி கேட்டாமல் இருக்க வேண்டாமா...?!

  தெய்வம் தந்த வீடு நடுவீதி இருக்கு...!

  ‘காயமே இது பொய்யடா- வெறும் காற்றடைத்த பையடா மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா!' வெங்காயமே இது பொய்யடா...!

  நாய்தானே நன்றியுடையது...அதனால்தானோ?!

  விரித்தவரே மாட்டிக் கொள்ளும் விசித்திர வலைதானே... அந்த அகழிவலை...!

  வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்... வையகம் இதுதானாடா...! உன் காசு... என் காசு... இப்ப நம்ம காசு... எல்லாம் சேத்துச் செலவழிப்போம்... எப்போதும் மகிழ்ச்சி...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. இந்த நல்ல குணத்துக்குத்தான் கூகுள் Congratulations சொல்கிறதோ :)

   ஆண்டைகளுக்கு மட்டும்தான் கேள்வி கேட்கத் தெரியுமா :)

   மோடி தரப் போற வீடு வேணாமா :)

   வெங்காய வெடி தரும் காயம் மட்டும்தான் உண்மையோ :)

   இந்தியா அவருக்கு மட்டுமா நன்றியாயிருக்கு :)

   பருவக் 'கோளாறு'வேலை அப்படித்தானே இருக்கும்:)

   பணம் இருந்தாலும் செலவழிக்கும் மனம் இருந்தால் சந்தோசம்தானே :)


   Delete
 3. Replies
  1. ஆன் ஜான் தம்பதிகளையும்தானே:)

   Delete
 4. Replies
  1. மூத்த மகளுக்கு வயது 80! கொடுத்து வைத்த தம்பதிகள் தானே அவர்கள் :)

   Delete
 5. Replies
  1. திருமண அகழி ரொம்ப ஆழம்தானே:)

   Delete
 6. வர்ற மெயிலை அவ்வப்போது படிச்சிடுறீங்கன்னு தெரியுது[படிச்சி முடிச்சாத்தான் அல்லது நீக்கினாத்தான் அப்படிச் செய்து வருது. சரியா?]. ஆக, நீங்க ரொம்பவே சுறுசுறுப்பு பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. லேப்டாப்பை திறந்தால் அதுதானே முதல் வேலை ?
   சுறு சுறுப்பு என்றாலும் உடனே மறுமொழி கூற நேரமில்லையே :)

   Delete
 7. ரசித்தேன்.
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. காதலர் தினத்தன்று ஆன் ஜானிடம் ஆசீர்வாதம் வாங்கும்இளைஞர்கள்எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது ,நியாயம்தானே:)

   Delete
 8. Replies
  1. பழிக்கு பழியையுமா :)

   Delete
 9. ஹாஹாஹா ரசித்து சிரித்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. இவர் வாய்ஜாலம் மனைவியிடம் பலிக்குமா என்பதையும்தானே :)

   Delete
 10. நானெல்லாம்.. அத பாத்துட்டு மற்ற வேலையே அதுக்காக என்னய வெட்டி பயலுன்னு செல்லக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. ஒன்றுமே வரவில்லை என்றால்தான் வருத்தப் படணும்:)

   Delete
 11. பாக்கலேன்னா சோம்பேறி அர்த்தம் ..என்றால் அடிக்கடி பார்த்தா என்ன அர்த்தம்

  ReplyDelete
  Replies
  1. ஒரு தரம் பார்த்தால் ஓகே அடிக்கடி என்றால்....? :)

   Delete
 12. என் மெயிலைத் திறந்தால் எப்போதும் உலக வலைப்பதிவர்களின் பதிவுகளே நிறைகின்றன. இத்தனைக்கும் நான் அவர்களை பின் தொடர்பவன்
  தமிழ் தொலைக்காட்சியில் பெரும்பாலான தொகுப்பாளர்கள் திருமண மானவர்களே
  தெய்வம் தந்த வீடுதானே எங்கிருந்தால் என்ன
  மதிலிலிருந்து குதித்தால் அகழிதானா
  திருமணபந்தம் எல்லா இடத்திலும் இருக்கிறது
  வெங்காய வெடி எறிந்து வெடிக்க வைப்பதுதானே
  எந்தநாய்(க்கு) என்ன பெயர் வைத்தால் என்ன


  ReplyDelete
  Replies
  1. உலக வலைப் பதிவர்கள் வரிசையில் நான் இருக்க மாட்டேனே :)
   அப்படின்னா இந்த திறமை மனைவியிடம் கற்றுக் கொண்டதா :)
   ஆகாயத்தில் இருந்தால் வம்பாச்சே :)
   அகழியைத் தாண்டி குதிக்க முடியலியே:)
   கடித்தாலும் வெடிக்கும் :)
   நாடுக்கு வைத்தால் தப்புதானே :)

   Delete