31 December 2016

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது கள்ளச் சாவிகள்தான் :)

 பிள்ளையார் சிலையை திருடித்தான், புது கோவிலில் வைப்பார்களாமே ,  திருட்டு என்றால் எல்லாமே திருட்டுதானே :)    

              ''பிள்ளையார்  கோவில் உண்டியலை நீ ஏன் திருடினே ?''

             ''பிள்ளையார் சிலையை யாரோ எடுத்துக் கொண்டு போயிருந்தார்கள் , உண்டியல் மட்டும் வெட்டியா இருக்கேன்னு எடுத்துகிட்டேன்,இது ஒரு தப்பா ?''


எத்தனை நாள்தான் நான் எழுதியதை மட்டுமே படித்துக்  கொண்டிருப்பீர்கள் ? என்னைப் பற்றி இன்னொருவர் எழுதி இருப்பதையும் படிச்சுத்தான் பாருங்களேன் :) 
இதோ ,சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் 'ஜோக்காளி'யை அலசி ஆராய்ந்து  காயப்போட்ட பதிவு >மூளைக்கு வேலை தரும் வலைப்பூ

பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா? சின்னப்பொடியன் யாழ்பாவாணனின் கண்ணோட்டத்தில் எப்படியிருக்குமெனப் படித்துப் பாருங்களேன்.

“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியதை வைத்துக் கிறுக்குவதே யாழ்பாவாணனின் தகுதி. ஆயினும் "சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை (comedy) எனலாம்." என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்தும் படித்திருக்கிறார். மேலும், கீழ்வரும் பதிவுகள் அவரது முயற்சி.

நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்
http://wp.me/pTOfc-66
அறிஞர்களின் நகைச்சுவையை அறிவோமா?
http://wp.me/pTOfc-68

சரி! கலைஞரைப் பற்றி எழுதுவதைவிட கலைப்படைப்பைப் பற்றி எழுதுவதையே யாழ்பாவாணன் வெளியீட்டகம் விரும்புகிறது. படைப்பைப் படித்தால் படைப்பாளியை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஜோக்காளி தளம் பற்றிப் படித்தால் அறிஞர் பகவான்ஜி அவர்களை அறிந்து கொள்ளலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல ஜோக்காளி தளத்தில் இருந்து நான் பொறுக்கிக் காட்டும் எடுத்துக்காட்டுகள் அத்தளத்தை அடையாளப்படுத்தும் என நம்புகிறேன்.

ஒரு பெண் பிள்ளை ஒரு பிள்ளையைப் பெறுகின்ற நோவு இருக்கே; அதுபோலத் தான் ஒரு நகைச்சுவை எழுதி முடிக்கும் போது ஒரு படைப்பாளி நோவடைகின்றார். பிள்ளையைப் பெற்றதும் தாய் அடையும் மகிழ்ச்சியைப் போல நகைச்சுவை எழுதியதும் படைப்பாளி மகிழ்ச்சியடைகின்றார். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.

இனி அறிஞர் பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளப் பதிவுகளைக் கண்காணிப்போம்.
முதலில் "காதலில் உண்மை உண்டா?" என்ற பதிவைப் படியுங்க:

''உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும் என்று பாடுற காதலிக்கு அட்வைஸ் பண்ணனும்!''
''என்னான்னு?''
''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும் ஏன் காதலிக்கிறேன்னு தான் !''
http://www.jokkaali.in/2012/11/blog-post_14.html

பொய் சொல்லுற காதலன்; எப்படி உண்மை சொல்வானென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

அடுத்து "வீடு பிடிக்கலைன்னா இப்பிடியா சொல்றது?" என்ற பதிவைப் படியுங்க:

''குறைந்த வாடகையிலே இந்த வீடுதான் இருக்கு ,உங்களுக்குப்  பிடிக்குதா?''
''வீடா இது? பேசாம to let க்குப் பதிலா toilet னு போர்டுலே எழுதுங்க!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_17.html

அறிஞர் வீட்டின் கொள்ளளவை இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். நாங்க படிக்கிற காலத்தில் தெரு வழியே "To Let" க்குப் பதிலாக "Toilet" னு எழுதிப் போட்டு மறைஞ்சது இப்பதிவைப் படித்ததும் நினைவிற்கு வருகிறது.

அடுத்து "நகை உனக்கு! நங்கை நீ எனக்கு!" என்ற பதிவைப் படியுங்க:
''நகைக்கடை அதிபரோட டீலிங், விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ரொம்பப் பிடிச்சு போச்சாம்!''
''எப்படி?''
"அந்த நகைகளை நீயே வைச்சுக்கோ, உன்னே நான் வச்சுக்கிறேன்னுட்டாராம்!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_21.html

அறிஞர் எதைக் கொடுத்து எதை வேண்டலாமென இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். உளவியல் நோக்கில் மனித உள்ளம் எப்படி எண்ணுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

அடுத்து "ரோஜாக்கள் ஜாக்கிரதை!" என்ற பதிவைப் படியுங்க:

"ஜாக்கிரதை!" என்ற தலைப்பில்
"ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம்!" என்ற கவிதையைப் புனைந்திருக்கிறார்.
http://www.jokkaali.in/2012/11/blog-post_462.html

அறிஞர் கவிதை புனைந்து நகைச்சுவை ஆக்கியுள்ளார். தாடி முள், ரோஜா முள் இரண்டும் குத்துமென எச்சரிக்கை செய்கிறார். புரட்டிப் புரட்டிப் படித்தால் சிரிப்பு வரும்.

அடுத்து "ASH TRAY கேள்விக்கு பதில் ஏது?" என்ற பதிவைப் படியுங்க:

சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க
என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
'தன் நுரையீரலைச் சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை...' எனக் கேட்டது ASH TRAY!
http://www.jokkaali.in/2012/12/ash-tray.html

இதனைப் படித்தால் அறிவியல் கேள்வி போலத் தெரிகிறது. புகைத்தவர் பணத்தைச் சாம்பலாக்கி நுரையீரலை எரிக்கிறாரே எனச் சாம்பல் பெட்டி (ASH TRAY!) கேட்கையில் சிரிப்பு வருகிறதே! அறிஞரின் அறிவியல் ஆய்வு இப்பதிவில் தெரிகிறதே!

அடுத்து "அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன்?" என்ற பதிவைப் படியுங்க:

''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா, உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது?''
''இவங்களும் முட்டைதானே போடுறாங்க!''
http://www.jokkaali.in/2013/12/blog-post_24.html

படித்தால் ஆசிரியை (டீச்சர்) மீதான ஆய்வாகத் தெரிந்தாலும் மாணவர் மீதான ஆய்வெனச் சற்றுச் சிந்தித்தால் புரியும். அறிஞரின் ஆய்வு பெற்றோருக்கு நல்வழிகாட்டல்.

அடுத்து "தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம்?" என்ற பதிவைப் படியுங்க:

''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா?''
''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு இருக்காங்கப்பா!''
http://www.jokkaali.in/2013/11/blog-post_11.html

இன்றைய நாட்டு நடப்பை அதாவது நம்மாளுகளின் வீட்டு நிலைமையை அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

அடுத்து " 'பிடித்தமான' புருஷனை எப்படி பிடிக்கும்?" என்ற பதிவைப் படியுங்க:

''ஒண்ணாந் தேதி வரவும் உனக்குப் பிடித்தமானவரே, பிடிக்காதவர் ஆயிட்டாரா, ஏண்டி?''
''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே!''
http://www.jokkaali.in/2013/11/blog-post.html

இன்றைய நாட்டு நிலைமையை அதாவது நம்மாளுகளின் வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் தெரியுமென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். என் வீட்டிலும் இப்படித்தான் போகிறது.

இறுதியாக "காதலன், காதலி என்றால் ஓகே!" என்ற பதிவைப் படியுங்க:

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது
கள்ளச் சாவிகள் தான்!
http://www.jokkaali.in/2013/05/blog-post_28.html

திரைப்படங்களில மட்டுமல்ல நம்ம வீடுகளிலும் இதே நிலை தான். நடிகை, நடிகர் மட்டுமல்ல நம்மாளுகளும் அப்படித்தான். காதலன், காதலி என்றால் மணமானவருக்கும் மணமாகாதவருக்கும் இடையில காதலாகலாமோ? கள்ளச் சாவிகள் இவர்களென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

மேலோட்டமாக ஜோக்காளி தளத்தை ஊடுருவிப் பார்த்ததில் பொறுக்கிய எடுத்துக்காட்டுகளை வைத்து அறிஞர் பகவான்ஜி அவர்களைப் பற்றி என்ன தான் நான் கூறுவேனா? இத்தனை பதிவுகளும் அவரது திறமைக்குச் சான்று! எந்தவொரு குறுகிய வட்டத்திற்குள்ளும் ஒளிந்திருக்கவில்லை. அதாவது, இவரது தேடல் எல்லாச் சூழ்நிலையையும் தொட்டிருக்கிறது. எனக்கொரு கவலை, பிறமொழிச் சொல்களைக் குறைத்து தமிழ்வளம் பெருக்கியிருக்கலாம்.

நகைச்சுவை என்பது மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். சிந்திக்கும் போது மூளையுடன் தொடர்புடைய நாடி, நரம்பு சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலெங்கும் செந்நீர்/குருதி ஓட்டம் பிடிக்க உடலுறுப்புகள் சீராக இயங்க வேண்டும். அப்போது தான் "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" எனலாம். அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவைகள் அதனைச் சரியாகச் செய்கிறது. நான் அவரது தளத்திற்குச் செல்வதே, அவரது புதுப்புது நுட்பங்களை அறியலாம் என்று தான். மொத்தத்தில் அவர் ஒரு சிறந்த படைப்பாளி.

என்னங்க... அறிஞர் பகவான்ஜி அவர்கள் நகைச்சுவைப் படைப்பாளி என்று குறுகிய நோக்கத்தில் எண்ண வேண்டாம். அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பலதுறைப் படைப்பாளி என்பதற்கு சான்று கூறுகின்றன. எனக்கொரு விருப்பம், அறிஞர் பகவான்ஜி அவர்கள் பலதுறைப் படைப்பாளியாக மின்ன வேண்டுமென்பதே!

முடிவாக ஜோக்காளி தளம் வாசகருக்கு நிறைவத் தரும் நல்ல தளம் என்று கூறி முடிக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல நான் சுட்டிக்காட்டிய பதிவுகளே அதற்குச் சான்றாகும்.

(படித்து விட்டீர்களா ?எப்படி நம்ம விளம்பரம் ....ஹிஹிஹி :)
சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி !

30 December 2016

பயபிள்ளே ரொம்பத்தான் காய்ந்து கிடக்கான் :

                ''நம்ம ரூமிலே இருக்கிற  நண்பர்களில், நீதான் நல்லா சமைக்கிறே ,ஆனால் உங்க சொந்தக்காரங்க வந்தா மட்டும் சொதப்பிவிடுறியே ,ஏன் ?''
               '' என் அப்பா அம்மாவிடம்  'பாவம் பையன் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுறான் ,கல்யாணத்தைப் பண்ணி வைங்க 'ன்னு ஞாபகப் படுத்தணும்னுதான் !''

பியூட்டி பார்லரிலா இப்படிச் செய்வது :).
           ''உன்  மருமகள் நடத்துற பியூட்டி பார்லர்  கடைக்குப் போய் ,எதுக்கு சண்டை போட்டே ?''
          ''என் போட்டோ கீழே 'என்னைப் பார் யோகம் வரும்'னு  எழுதி போட்டிருக்காளே!''
நல்ல பொருத்தம் தான் :)
          ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
         ''தூக்கத்திலே  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா:)
              ''சிறைக்குப் போன தலைவர்  கஞ்சாவுக்கு  அடிமை ஆயிட்டாராமே ?''
             '' சிறைக்'கஞ்சா ' சிங்கம்கிற  பட்டம் இப்பத்தான் அவருக்கு ரொம்பப் பொருத்தமாயிருக்கு !'

பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் :)
கொசுத் தொல்லையை  ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் 
இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் 
மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ....
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை 
விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் 
போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு 
என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில்  இருந்து மனித இனத்திற்கு 
எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !

நின்று கொல்லும் சிலந்தி :)
        படையெடுத்துச்  செல்லாமல் எதிரியைக் கொல்கிறது ...
        நூலாம் படை !

29 December 2016

இப்படி பயந்தால் மனைவியோட காலம் தள்ள முடியுமா :)

இந்தியாவிலே முதல் முறையாக என்று சொல்லி ஏமாற்றலாமா :)
         ''தலைவர் ஏன் அந்த மாவட்டச் செயலாளரை கட்சியை விட்டு நீக்கிட்டார் ?''
         ''புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு மாலைன்னு சொல்லி, ஜெராக்ஸ் நோட்டு மாலைப் போட்டு ஏமாற்றி விட்டாராமே !''

இது ஜோக்கில்லே ,உண்மை :)            
          ''இனி மேல்  அதிர்ச்சியான விஷயங்களை  உங்க கணவரிடம் சொல்லவே கூடாது ,சரியா ?''
          ''நீங்க அவருக்கு போட்ட ஒரு ஊசியின் விலையே ஐம்பதாயிரம் ரூபாய் என்பதைக் கூடவா ,டாக்டர் ?''

மனைவிக்கு வரக் கூடாத சந்தேகம் :)           
         ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
           ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

இப்படி பயந்தால் மனைவியோட காலம் தள்ள முடியுமா :)
              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               ''மதயானைக் கூட்டம் படத்திற்குக் கூட கூட்டிட்டுப் போக  மாட்டேங்கிறாரே !''
இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் :)
             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''

இரண்டு  கொள்ளைக்கும்  வித்தியாசம் அதிகமில்லை :)
     திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
     திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன்  அரசியல்வாதி !

28 December 2016

மனைவியைத் தூங்கவே விடாத புருஷன் :)

            ''என்னடி சொல்றே ,உன் புருஷன் தூங்கியும் கூட உன்னைத் தொந்தரவு பண்றாரா ?''
           ''அவரோட குறட்டைச் சத்தத்தால் என் தூக்கம் கெடுதே !''
நன்றி மறக்காத டாக்டர் :)
              ''டாக்டர்,அறையிலே  நிறைய பேர் போட்டோவை  மாட்டிவச்சிருக்காரே ,ஏன்  ?''
              ''டாக்டர்கிட்டே காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம்  செய்தவங்களாச்சே அவங்க ! ''

மந்திரி செருப்படி வாங்கியதில் தவறே இல்லை :)
            '' மந்திரி என்ன சொன்னார்னு ...இப்படி அவர் மேலே செருப்பை எறியுறாங்க ?''
            ''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் போடப்படும்னு சொன்னாராம் !''

வருத்தப் படாத வாலிபர்கள்னா இப்படித்தானே இருக்கணும் :)
            ''வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தலைவர் ஏன் கலைச்சுட்டார் ?''
            ''அவர் ஆக்சிடென்ட்ஆகி  ஆறுமாசமா ஆஸ்பத்திரியில் கிடந்தப்போ ,எவனுமே அவரை வந்து பார்க்கலையாம் !''
                                           
குண்டம்மா தடைச் சட்டம் வருமா :)
             ''மை  லார்ட் !என் கட்சிக்காரர்  பெண்மணி என்பதால் குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டுகிறேன் ! ''

தேர்தல் .தொடக்கமும் ,முடிவும் :)
    மனுத் தாக்கலில் தொடங்கி 
    மனுசத் தாக்குதலில்  முடிவது !

27 December 2016

இளம்பெண் , நடு இரவில் தனியாக நடக்க முடிகிறதா :)

அதுக்கு இதுவே தேவலே :)          
              '' கிழிஞ்சு இருக்கிற  சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம்  புரிந்திருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை  எப்படி காட்ட முடியும் ?'' 
ரயில் லேட் நேரத்திலே யோசித்து இருப்பாரோ :)
            ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
            ''ரயிலைப்  பிடிக்கணும்ன்னா வேற  வழியில்லையே !''

கருவில் வளர்வது மகனா ,மகளா ,காண்பதும் தவறா :)
             ''கர்ப்பமா இருக்கிற உங்க மனைவியை  ஸ்கேன் பண்ணும்போது  ,டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
             '' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது,அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''

கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்:)
         ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாமா ,ஏன் ?''
          ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''

நடு இரவில் தனியாக நடக்க முடிகிறதா :)
           உண்மை சுதந்திரம் இன்னும் வரவில்லை ...
          தேசப் பிதாவின் தீர்க்கத் தரிசன வார்த்தைகள் ...
          நடு இரவில் சாலையில்  இளம்பெண்  தனியாக நடக்க முடியும்
          நாளே உண்மையான சுதந்திர நாள் ! 

26 December 2016

கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புதானே :)

இந்த ' கிளி 'னிக்கில் கூட்டத்துக்கு பஞ்சமில்லே :)
        '' அந்த டாக்டர்  'கிளி 'னிக்னு  போர்டுலே  எழுதியிருக்காரே ,ஏன் ?''
        '' கிளி மாதிரி  அழகான நர்சுங்க நாலு பேரை ,புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காராம் !''

இப்படியும் சில பெண்கள் :)
         ''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போகக் கூடாதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுருந்தே ,இப்ப நீயே அவளை ஏன்  வேண்டாங்கிறே ?''
        ''நாலு வீட்டிலே நடக்கிறது  என்னான்னு தெரியாமே , எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''

 முற்றும் துறந்த நிலை சாத்தியமா :)
           ''அந்த நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனமா ,ஏன் ?''
           '' அவரை முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது என் கடமைன்னு  சொன்னாராமே  !''

கசப்பை மறந்தால் டெங்கு காய்ச்சல் வரும் :)
           ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ,ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
           ''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''

கோளாறு எங்கேன்னு கண்டுபிடிங்க :)
         ''ரோஜாச் செடி இருந்த  பூந்தொட்டியை ஏன்  உடைக்கிறீங்க ?''
          ''ஒரு லிட்டர்  தண்ணி  ஊத்தினா  நாலு லிட்டர் தண்ணி வழிஞ்சு  தரையெல்லாம் ஈரமாகுதே !'

கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புதானே :)
         ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு என 
         மேடை தோறும்  முழங்கும்  தலைவருக்கு  இருப்பதோ ... 
         ஊருக்கு  ஒருத்தி !

25 December 2016

மறைக் கழன்றதை மனைவியிடம் மறைக்க முடியுமா :)

கொழுப்பு அதிகமாகாமல்  என்ன செய்யும் :)                      
             ''பொறித்த அப்பளம் எங்கே கிடைக்கும்னு ஏன் கேட்கிறீங்க ?''
             ''வீட்டிலே எண்ணெய் வாங்குவதை விட்டுடுங்க என்று டாக்டர் சொல்லி விட்டாரே !''

தொழில் செய்வதிலும் தலைக்கீழ் தானா :)        
           ''உங்கப்பா  ஐம்பது வருடம் முன்னாலே செய்த வியாபாரத்தை ,நீ இப்போ தலைக்கீழா செய்றீயா ,அப்படின்னா  ?''
           ''ரவை வியாபாரம் அவரோடது ,வைர வியாபாரம் என்னோடது !''

மறைக் கழன்றதை மனைவியிடம் மறைக்க முடியுமா :)
           ''உங்க வீட்டுக்காரர்  மெண்டாலிட்டி  சரியா  இருக்கான்னு ஏன் செக் பண்ணச் சொல்றீங்க ?''
          '' ATM ல் பணம் எடுத்து , பணத்தை  குப்பைக்கூடையில் கிழிச்சுப்போட்டுட்டு ,பாலன்ஸ்  சிலிப்பைக் கொண்டு வந்திருக்கிறாரே,டாக்டர்  !''

நாட்டுப் பற்றிலே இது ஒருவகை :)
            ''நாட்டுப் பற்று அதிகமா இருப்பதால்தான் குடிக்கிறேன்னு சொல்றீயே ,ஏன்?''
            ''டாஸ்மாக் வியாபாரம் நொடிச்சுப் போச்சுன்னா....அரசாங்கம்  பணத்துக்கு எங்கே போகும் ?''

இதுக்கு காவிரித் தண்ணீர் தேவையில்லை :)
   திருமணம் ஆயிரம் காலத்து பயிர் ...
   வரதட்சனைக் கண்ணீரால் 
   வாடாத அபூர்வப் பயிர் !

24 December 2016

கணவன் ,மனைவிகளும் கற்பூர வாசனை அறியாதவர்களா:)

அழையா விருந்தாளின்னா அவமதிப்புதானா :)
        ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
        ''வெறும் கையோட வந்து ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''

டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன் :)
         '' டீச்சரைப் பார்த்தா ,உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது ?''
         ''இவங்களும்  முட்டைதானே போடுறாங்க !''

சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா :)
உயிருடன் உள்ள அமைச்சருக்கும் ,MLAக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கி சாதனைப் படைத்த மதுரை மாநகராட்சி ...
தற்போது பிறப்புச் சான்றிதழ் வழங்கியதிலும் சாதனை படைத்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது ...
டெல்லி முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தது ...
மதுரையில் தான் என்று வழங்கப் பட்டிருக்கும்  பிறப்புச் சான்றிதழ் வக்கீல்களின் கையில் கிடைத்துள்ளது ...
அதனை ஆட்சியரிடம் ஒப்படைத்து புகார் அளித்து உள்ளார்கள் ...
நம் மதுரையில் பிறந்தவர் டெல்லிக்கே முதல்வர் ஆகப் போகிறார் என்ற நமது மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாய் ...
அந்த  பிறப்புச் சான்றிதழ் பொய்யானது ,விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம் என்கிறார்கள் உயர் அதிகாரிகள் ...
ஒபாமா ,பான் கீ மூன் ,ஏஞ்சலினா ஜோலி ,சன்னி லியோன் ,ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் அநேகமாய் மதுரையில் பிறந்து இருக்கும் விபரம் விசாரணையில் வெளியாகும் என்று நம்பலாம் ...
சோனியா காந்தி பெயரில் பிறப்புச்  சான்றிதழ் வழங்கப் பட்டிருப்பின் ...
அவரும் இந்தியப் பிரஜை என்ற அடிப்படையில் ...
அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் ஆக அறிவிக்கப் படக்கூடும் ...
நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்து இருக்கும் தகவல் இது !
கணவன் ,மனைவிகள் கற்பூர வாசனை அறியாதவர்களா:)
      கழுதைகள் உதைக்கும் காரணம் புரிந்தது ...
      கணவனோ,மனைவியோ 
      'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டாச்சு 'என்றபோது !

அன்புள்ள வலையுலக உறவுகளே !
      வெளியூர் பயணத்தின் காரணமாக ,இன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு மீள்பதிவு மட்டுமே :)

23 December 2016

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவதெப்போ :)

இதை சொல்லியிருந்தால் அதை நம்பலாம் :)               
                ''நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்றதுதான் பஞ்சாங்கம் ,நீங்க ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?''
              '' மக்கள் கையில் காசிருக்காது ,atm ,atm யுமாய் அலைய வேண்டி வரும்னு எதிலாவது சொல்லப் பட்டிருக்கா ?''

தரகர் சொன்னதும்  ,சொல்லாததும் :)
             ''இந்த வீட்டடி மனையை வாங்கும் போதே ,பத்து அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்னு சொன்னதை நம்பியது  ,தப்பா போச்சா,ஏன் ?''
            '' வீட்டிலேயும் பத்தடி தண்ணீர் வரும்னு சொல்லாமல் விட்டுட்டாரே!''
காலையில் வடித்த சாதம்,மதியமும் அதே சூட்டில் :)             
          ''அதெப்படி ,உன் சாப்பாடு மட்டும் சூடாவே இருக்கு ?''
          ''ஹாட் பாஸ்க்சை , இன்னொரு ஹாட் பாக்ஸில் வைத்துக் கொண்டு வருகிறேனே! ''

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவதெப்போ :)
             ''உன் புதுப்பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
             ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''
நடிகைன்னா உடம்புக்கு எதுவும் வரக்கூடாதா:)
              ''அந்த நடிகைக்கு  டான்சில் ஆப்ரேசன்னு சொன்னா டான்ஸ் டைரக்டர் கமெண்ட் அடிக்கிறாரா ,எப்படி ?''
               ''டான்சில் தான் வீக் ,ஃடான்சிலுமா வீக்னு கேட்கிறார் ! ''

பொன் நகைகளின் இருப்பிடம் :)
     கோடீஸ்வரர்களின் நகைகளும் 
     நடுத்தர வர்க்கத்தின்  நகைகளும் 
     வங்கிகளில்தான் அடைக்கலம் ...
     ஒன்று  ஃசேப்டி லாக்கரில் ,
     இன்னொன்று நகைக் கடன் கணக்கில்!

22 December 2016

மனைவி ,கணவனைத் துளைத்து எடுப்பதாலும் இந்த பெயரோ :)

             ''பழத்தின் தோலை உரிக்காமல் உள்ளேயுள்ள அதன் முத்துக்களை எப்படி  கண்டுபிடிக்க முடியாதோ ,பெண்ணின் மனதில் உள்ளதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் தான் (மாது +உளம் )மாதுளம்கனி என்கிறார்களாமே?''
            ''அந்த மாது மனைவியான பின் கணவனைத் துளைத்து எடுப்பதால் , மாதுளைப் பழம் என்றும் சொல்கிறார்களோ ?''

இதையுமா ஓசி கேட்பது :)
           ''முந்தி 'பேனா டைப் இன்சுலின் சிரிஞ்ச் 'சை  பையிலே  வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''
            ''அதையேன் கேட்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேட்கிறாங்களே !''

இப்படியும் ஏமா(ற்)றலாமா :)
            ''நான்  புதுசா வாங்கின செல்போனில் இருந்து கால் போக மாட்டேங்குது ,என்ன பிரச்னைன்னு பாரேன் !''
           ''அடப்பாவி ,பாக்கெட் கால்குலேட்டருக்கும் ,செல் போனுக்கும் உனக்கு வித்தியாசம்  தெரியாதா ?''

வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை :)
              ''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
             ''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
             ''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
             ''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

21 December 2016

நிம்மதி வேணும்னா,சின்ன வீடா :)

ஓவியமா வரையும் அளவுக்கு ,தலைவர் ஓவியமா :)            
              ''தலைவரே ,உங்களை கஷ்டப்பட்டு ஓவியமா வரைஞ்சிருக்கேன் ,அதிலே கோழி கிறுக்கின மாதிரி கையெழுத்து போடுறீங்களே ,வருத்தமாயிருக்கு !''
              ''கொரில்லா மாதிரி என்னை வரைஞ்சிருக்கீங்க ,நான் வருத்தப் பட்டேனா ?''

அதெல்லாம் மனுஷனுக்கு மட்டும்தானே :)              
            ''அவர் போலி கால்நடை டாக்டர்ன்னு  எப்படி தெரிஞ்சுது ?''
             ''இங்கு, மாட்டுக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப் படும்னு  எழுதி போட்டு இருந்தாராம் !''

FM ரேடியோவை மனைவியும் கேட்டதால் வந்த வினை !
             '' உண்மையைச் சொன்னதாலே குடும்பத்திலே குழப்பமா ,என்னடா சொல்றே  ?''
              ''FM ரேடியோவிலே 'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் !''

பொண்ணு மாப்பிள்ளை மட்டும் பொருத்தமில்லை ...:)
            ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
            ''என்ன அப்படி கேட்டுட்டீங்க , மாசமானா பையனோட அப்பா  நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

20 December 2016

முதல் இரவிலே இந்த யோசனையா :)

நாட்டிலே இரண்டு சிபிஐ இருக்கு :)      
             ''அதிசய செய்தியா இருக்கே ,சிபிஐ ஊழியர்களை சிபிஐ யே கைது பண்ணியிருக்கா ,ஏன் ?''
           ''central bank of india (CBI) ஊழியர்கள் இரண்டு பேர் செல்லாத ரூபாய் நோட்டுக்களை வாங்கிட்டு dd கொடுத்து இருப்பதை ,
Central Bureau of Investigation (CBI)அதிகாரிகள் கண்டுபிடித்து கைது பண்ணிட்டாங்களாம் !''

முதல் இரவிலே இந்த யோசனையா :)
              ''முதல் இரவும் அதுவுமா ,முதல் காரியமா நம்ம ரெண்டு பேர்லே யாராவது ஒருத்தர் பெயரை  அவசியம் மாற்றிக்கணும்னு சொல்றீயே  ,ஏன் ?'' 
             ''ஆமாங்க, Mohanங்கிறது உங்க பெயர் , என் பெயர் Nalini,இரண்டின்  முதல் எழுத்தையும் சொல்லும் போது 'எமன் 'மாதிரி இருக்கே !''
மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிக்கும் :)
            ''ஒண்ணா சாப்பிடுறதை காக்காகிட்டே  இருந்து  மனுசங்க கத்துக்கணும்னு  சொல்வீங்களே ,இப்ப அதுங்களும் தனித்தனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
           ''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''

கரெண்ட் கட் நேரத்திலே யோசிச்சது  :)
            ''ஆந்தைக் கண்களை எடுத்து மனுசனுக்கு வைக்க முடிஞ்சா நல்லதுன்னு சொல்றீங்களே ,ஏன்?''
            '' இருட்டிலே  பார்க்க முடியுமே !''

ஏட்டையா ஓடினார் என்பதேயே நம்ப முடியலே :)                      
          ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
           ''நல்ல வேளை.தொப்பை இருந்ததால் மூக்குக்கு ஒண்ணும் ஆகலே !''
பேங்க் பாலன்சை சொல்லலீங்க:)
    கயிற்றின் மேல்  அடி மேல் அடி வைத்து 
    கழைக் கூத்தாடி  கற்று தந்தான் ...
    'பாலன்ஸ் 'வந்தால் பயம் போய்விடுமென்று !

19 December 2016

தொல்லையில்லா 'தொழில்' இதுதானா :)

       ''ஆளில்லாக் கடையிலே டீ ஆற்றிக் கொண்டிருந்தீயே,இப்போ என்ன பண்றே ?''
       ''பணமில்லா ATM க்கு காவலாளியா இருக்கேன் !''

இப்படியுமா சோதனை வரும் :)
           ''ஓயாம டயத்தைக்  கேட்கிறீங்களே ,கடியாரம் நின்னு பத்து நிமிஷமாச்சு,போதுமா  !''
          ''கோவிச்சுக்காதீங்க தம்பி  ,கடியாரம் எப்ப நின்னுருக்குன்னு  பார்த்துச் சொல்லுங்க நான் கணக்கு பண்ணிக்கிறேன் !''

அன்று 'தேவதை 'மனைவி ,இன்று :)
           ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டால் மட்டும்  குரைக்குது,ஏன் ?'' 
           ''நாய்ங்க கண்ணுக்கு  பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''

 கதவை திறக்க கண்டக்டரின் ஐடியாவோ :)
          ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு ,ஏதோ எழுதிப் போட்டிருக்கீங்களே ,என்னது ?''
           ''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேன் !''

லாட்டிரி யோகம் எல்லோருக்கும் உண்டா :)
    விட்டதை விட்ட இடத்தில் பிடிக்க வேண்டுமென 
    விட்டத்தை பிடித்த அப்பாவின் நிழல் ..
    அவர் விட்டுசென்ற பெட்டியில் 
    கட்டு கட்டாய் லாட்டிரி சீட்டுகளில் !

18 December 2016

'தேவதாஸ்'களின் புலம்பல் :)

 இரண்டிலுமே பொய்தானே அதிகம் இருக்கும் :)           
           ''மேனேஜர் ஸார்,உங்க மகளுக்கு நான்தான் லவ் லெட்டர் கொடுத்தேன்னு எப்படி கண்டுபிடீச்சீங்க ?''
             ''வழக்கமா ,லீவ் லெட்டர்லே சொல்ற பொய்களை  லவ் லெட்டரிலும் சொல்லி இருக்கீங்களே!''

முதலீடே இன்றி என்றும் வருமானம் :)
           ''மனுஷனுக்கு பிரச்சினை  இருக்கும் வரை கடவுளுக்கு அர்ச்சனை இருக்கும் ...இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க ?''
           ''கடவுளுக்கு அர்ச்சனை இருக்கும் வரை  அர்ச்சகருக்கு  தட்சணை இருக்கும் !''

நோயாளிக்கு பேச்சு வராது ,டாக்டருக்குமா :)
           ''நாலு மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
          ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''

பயத்துக்கும் ஒரு அளவில்லையா:)
         ''ஊரெல்லாம் மர்ம காய்ச்சல் ...கடையிலே விற்கிற பாக்கெட்டை வாங்கக்கூட பயமா இருக்கா ,என்ன பாக்கெட் ?''
        ''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''

தேவதாஸ்களின் புலம்பல் :)
    பெண்ணின் மனதை அறியவே முடியாதாம் ...
    ஆணின் மனதில் உள்ளது மட்டும் ...
    நெற்றியில் 'டைட்டில் 'போல தெரிகிறதா  என்ன ?

17 December 2016

'கை கழுவுறது' நடிகைகள் மட்டும்தானா :)

யார் சொன்னது வாலிருந்தால்தான் எலி என்று :)         
             ''என்னடா கேட்கிறே ,விளையாட 'வாலில்லா எலி ' வேணுமா ?''
             ''வீடியோ  கேம் விளையாட 'cordless mouse'வேணும்னு சொன்னாதான் உங்களுக்கு புரியுமாப்பா ?''
அரிசி வகைக்குதானே பெயர் உண்டு  :)                       
          ''கடையிலே இருக்கிற அரிசிகளை எல்லாம் எதுக்கு ரெண்டு மணி நேரமா , ஜூம் லென்சினால்  பார்த்து கிட்டே இருக்கீங்க ?''
          ''எனக்குரிய  அரிசியில் என் பெயர் எழுதியிருக்கும்னு சொன்னாங்க ,அதான் !''

'கை கழுவுறது ' நடிகைகள் மட்டும்தானா :)                             
          ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான்  பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
          ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''
மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களைச் சொன்னதால் ...:)
          ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
           ''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''

திட்டம் இட்டு செய்யும் போதே இப்படின்னா ....:)
         ''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
         ''ரவுடியை  தப்பவிட்டு சுடச்  சொன்னாக்கூட ,ஆடு மாடுதான் சாகிறதாம் !''

 காலத்திற்கு ஏற்ற கோலம்:)
     இளைஞர்களின்  இதய ஸ்வரம் 
     'லப் டப் ''லப் டப் ' என்பது மாறி 
      'லேப்டாப் ''லேப்டாப் 'என்றே துடிக்கிறது !

16 December 2016

தாவணிக் கனவு ,மதிப்பெண்களைக் குறைக்குமா :)

எங்களால் முடிந்தது அவ்வளவுதான்  என்றுதானே அர்த்தம் :)          
            '' அந்த ஆஸ்பத்திரியில்தான் சேர்க்கணும்னு ஏன் பிடிவாதமா இருக்கீங்க ?''
            ''வேறெந்த ஆஸ்பத்திரி  டாக்டராவது 'நோயாளி  ,அவங்க இஷ்டப்படி  எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்குப் போகலாம்'னு சொல்லி இருக்காங்களா ?''

நல்ல வேளை,படிச்சு கிழிச்சது போதும்னு சொல்லலே :)                    
           ''உங்க சின்னப் பெண் ,உங்க ஜாதிக்கார காலேஜில் மட்டுமே சேர்க்கணும்னு  பிடிவாதமா இருக்கீங்களே ,ஏன் ?''
          ''வேற காலேஜில் படித்த மூத்த பொண்ணு ,வேற ஜாதிக்கார பயலோடு ஓடிப் போயிட்டாளே !''

இந்த சட்டத்தால் போலீசுக்கு நிம்மதி :)           
           ''இப்போதெல்லாம் யாரும் செல்போன் டவரில் ஏறி  கீழே குதிக்கப் போறேன்னு  மிரட்டுற மாதிரி தெரியலையே ,ஏன் ?''
            ''தற்கொலைப் பண்ணிக்கிறது  சட்டப்படி தவறில்லை  என்று சட்டம்  வந்திருச்சே !''

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் HRO :)
             ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவரை,எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
              ''அவனுக்கு போன மாசம்தான் கல்யாணமாச்சு !''

தாவணிக் கனவு ,மதிப்பெண்களைக்   குறைக்குமா :)
             ''நம்ம பையன்  பொண்ணுங்க பின்னாலே திரியும்போதே உங்களுக்குத்  தெரியும்னா, என்ன தெரியும் ?''
             ''அவன் மதி முழுதும் பெண்கள்னா, தேர்விலே  மதிப்பெண்கள் வரப்போறதில்லைன்னு தான் !''


15 December 2016

காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் :)

காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் :)
          ''என்னங்க ,நம்ம பையன்கிட்டே ,நான் பார்க்கிறப் பொண்ணைத்தான் நீ கட்டிக்கணும்னு  சொன்னீங்களா ,இல்லையா ?''
          ''உங்கப்பா  பார்த்த பொண்ணைக் கட்டிக்கிட்டு, நீங்க படுற பாடு போதாதா அப்பான்னு கேட்கிறானே !''
                                   பட உதவி... 'தினகரன்.காம்'முக்கு  நன்றி !
இதுக்கு எப்படி மனசு வரும் :)            
            ''நம்ம  காதல் விஷயம் ,என்  அப்பாவுக்கும் தெரிஞ்சுப் போச்சுன்னு எப்படிச் சொல்றீங்க ?''
            '' என் செல்லுக்கும் ரீசார்ஜ் பண்ணுங்கன்னு சொல்றாரே !''

மனைவி குத்துக் கல்லா இருந்தா ....:)
            ''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
             ''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''

டாக்டருமா மருமகளுக்கு பயப்படணும் :)
            ''அவங்க மருமகளை மட்டும் வெளியே நில்லுங்கன்னு டாக்டர் ஏன் சொல்றார் ?''
            '' மாமியாருக்கு நடந்த ஆப்ரேசன் சக்சஸ்ன்னு சொல்லத்தான் !''

'வாய்' உள்ள நடிகை :)
   வாய்ப்பில்லா நடிகையின் 
   வாய் 'மை '  மாறா  பேட்டி ....
   'கேரக்டர் பிடித்தால்தான் நடிப்பேன் !'

14 December 2016

கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாமல் போகுமா :)

ஒரு முன்னறிவிப்பு ... 
          'டைம் பாஸ்னாலே கில்மா மேட்டர் நினைப்புதானா ' என்ற     தலைப்பைப் பார்த்ததும் ,நேற்றும் இதே தலைப்புதானே என்று நினைப்பவர்கள் ஒன்றும் செய்யாமல் தொடர்ந்து படிக்கலாம்  ...இன்று தமிழ் மணத் திரட்டியில் 'டைம் பாஸ்னாலே கில்மா மேட்டர் நினைப்புதானா ' என்ற தலைப்பை மட்டுமே படித்து  வந்தவர்கள்  , தலைப்பின் பொருத்தமான பதிவை  இங்கே 'கிளிக்கிப்' படிக்கலாம்  :)          

இவரால்  வாந்தி எடுக்காமல் இருக்க முடியாதே :)
             ''வாழை இலை விலை எவ்வளவு உயர்ந்தாலும் சாப்பாட்டை இலையில் பரிமாறும் அந்த ஹோட்டலில் சாப்பிட எனக்கு ரொம்பப் பிடிக்கும் !''
              ''ஒரே இலையை கழுவி கழுவி பத்து தரம் பயன்படுத்துறது உங்களுக்கு தெரியாது போலிருக்கே !''      

பெயரைப் புலிக்கு வைத்திருந்தால் மகிழ்ச்சி :)                       
            ''உயிரினப் பூங்கா முன்னாலே எதிர்க் கட்சி தலைவர் ஏன் கண்டனப் போராட்டம் நடத்துறார் ?''
            ''அங்கே புதுசாப்  பிறந்த காட்டு எருமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பெயரை முதல்வர் சூட்டிட்டாராமே !''

எந்தக் காரியத்தையும் முழுமையா செய்யணும் :)                    
            ''விலங்கு தோல் ஆடைகளை  தடை செய்யணும்னு ,விலங்குகளுக்கு ஆதரவாய் ஒரு நடிகை 'அரை' நிர்வாண போஸ் கொடுத்தாராமே  ,அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே ?''
            ''விலங்குகளுக்கு அவர் 'முழு' ஆதரவு கொடுத்தா  நல்லதுன்னு நினைக்கிறேன் !''

மனைவி காதில் எதிரொலியா ,கணவனின் முணுமுணுப்பும் :)
            ''பையன்கிட்டே என்னைப் பற்றி என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க ?''
            ''பாம்புக் காதுன்னா என்னான்னு விளக்கம் கேட்டான் ...அதான் !''

கணவனின் புத்தி மனைவிக்கு தெரியாமல் போகுமா :)
           ''என் கிளாஸ்  டீச்சரை  பார்த்துவிட்டு வந்ததில் இருந்து ,அப்பா ,என்னை அடித்து கொண்டே  இருக்கிறார் ,ஏன்னு  கேளு அம்மா !''
          ''நீ மிஸ்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டு  ஏமாந்து விட்டார் போலிருக்கு !'' 

13 December 2016

டைம் பாஸ்னாலே , கில்மா மேட்டர் நினைப்புதானா :)

பதவிஆசை உள்ளவங்க யோசிப்பாங்களா :)            
          ''அந்த மின் மயானத்தில் இருக்கிற மின்சார நாற்காலியில் என்ன எழுதியிருக்காங்க ?''
           ''இந்த நாற்காலியில் உட்காரத்தான் அவனவன் உயிரையே கொடுக்கிறான்னு தான் !''

அவங்களுக்கு மட்டும் சூடு சொரணை அதிகமோ :)
    '' தூத்துக்குடியில் அரசியல் பண்றது  கஷ்டமா இருக்குன்னு ஏன் சொல்றீங்க ,தலைவரே ?''
     ''கட்சி மாறினா ....உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலமா பேசுறாங்களே!''

டைம் பாஸ்னாலே , கில்மா மேட்டர் நினைப்பு தானா :)
       ''டைம் பாஸ் ரைடர்ன்னா  என்னான்னு தெரிஞ்சுக்காம  அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''
      ''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''

லிரில் மாடல் லிசாரேவை உங்களுக்கு தெரியும்தானே :)    
       ''என் பையனுக்கு நாட்டு நடப்பையும் தெரிஞ்சுக்க சொல்றீங்களே ,ஏன்?' 
       ''லிசா ரேயை தெரியும் ,ஹசாரேன்னா  யாருன்னு  கேட்கிறானே !''  
            (ஹசாரே  படத்தை ஏன் போடலைன்னு யாரும் கேட்கக் கூடாது ,அவரைத்தான் உங்களுக்குத் தெரியுமே ஹிஹி :)

' பேஸ்ட்டு' கூட வேஸ்ட் ஆகாது ...ஆனால் ?
    வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் 
    ஒரு விதத்தில்  ஒன்றுதான் ...
    மறுபடியும் உள்ளே போகாது !

12 December 2016

நடிகை போகக் கூடாத இடம் :)

             '' எந்த  நடிகையும் காய்கறி வாங்க , மார்க்கெட் பக்கம்  போக மாட்டாங்களாமே ,ஏன் ?''
           ''மார்க்கெட் போன நடிகைன்னு  செய்தி வந்தா ,சினிமா சான்ஸ் கிடைக்காதே !''

உண்மையை சொன்ன உண்மை நண்பன் :)
        '' எனக்கு நல்லா பால் கறக்கத் தெரியும்னு சொல்லி  ,பாங்கிலே மாட்டு லோன் கேட்டா ,தர மாட்டேங்கிறாங்க ,ஏன்னு தெரியலே ? ''
        ''பணத்தை உன்னிடமிருந்து கறக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கும் !''

 ரசனைக் கெட்ட ஜென்மங்களோ :)
        '' என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிட  நீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?'
        ''வீட்டைக் காலி பண்ணமுடியாதுன்னு  சொன்ன ,  பக்கத்து போர்ஷன்காரங்க  சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !'' 
பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவன் தலையிடலாமா :)
          ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன்னு விளையாடினா ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
          ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''

இது திருமண வாழ்த்தா ,சாபமா :)
இரயில்வே தண்டவாளம் போல்  
இணை பிரியாமல் தம்பதியர் வாழ்கவென 
வாழ்த்தியவர்  சிந்திக்கவில்லை ...
தண்டவாளங்கள்  ஒன்று சேருவதே இல்லையென்று !

11 December 2016

புருஷனுக்கும் 'நெக்லஸ்' வாங்கி வந்த மனைவி :)

கடமை தவறாத பையன் :)    
      ''  சூ போட்டுக்காம ,சாக்ஸ்சை மட்டும் போட்டுகிட்டு வந்திருக்கீயே ,ஏன் ?''
       '' ஆளுக்கொரு சூவை கையிலே பிடிச்சுகிட்டு அப்பா அம்மா  வீட்டிலே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்களே ,சார் !''

இப்படியும் விளம்பரம் வருமோ :)
         ''என்னங்க ,கொடுமையா இருக்கே !கண்மாய் நடுவிலே அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டியிருக்கீங்களே ?''
        ''அவசரத்துக்கு ஆகும்னு தரைத் தளத்திலே போட் பார்க்கிங்  வசதியை பண்ணியிருக்கிறோமே !''

கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமல்ல:)
       '' என் பெண்டாட்டி இப்படி ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அவ கழுத்திலே மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
       ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
       ''மாஞ்சாக் கயிறு தான்! ''

புருஷனுக்கும் நெக்லஸ் வாங்கி வந்த மனைவி :)
            ''ஷாப்பிங் போன உங்க மனைவி நெக்லஸ் வாங்கிகிட்டாங்க சரி ,உங்களுக்கு ?''
           '' பனியன்தான்,அதுலேயும் நெக்லஸ் !''
கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???
            ''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை  வளர்த்தும்  கொசு  குறையலையே ,ஏன்?''
           ''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  

தொடையில் மச்சம் என்று  பதிந்தால் எப்படி காட்டுறது :)
அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேட்கும் போதுதான் ....
தொடையில் மச்சமாய் சிரிக்கும் அப்பாவை 
கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !

10 December 2016

பெண்களை திருப்திபடுத்த எப்படி முடிகிறதோ :)

பறக்கும்னா  தண்டவாளம் எதுக்கு :)         
           ''நாலு இடத்தை  சுற்றிப் பார்க்காமல் , நாள் முழுதும் ரயில்லேயே சுற்றிக்கிட்டே இருக்கீங்களே ,ஏன் ?''
           ''இது பறக்கும் ரயில்னு சொன்னாங்க ,எப்போ பறக்கும்னு தெரியலியே !''

இதுக்குத் தான் கால நேரம் முக்கியம்னு சொல்றது :)                            
            ''என்னங்க ,பெண் பார்க்க வர்றவங்களை சனி  அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்  வரச் சொல்றீங்களே ,ஏன் ?''
           '' டிவி சீரியல்களைப் பார்க்காம ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு   !''

 'நளன் 'னா மனைவிகளுக்கு பிடிக்கத்தானே செய்யும் :)
             ''ரொம்ப கொடுத்து வைத்த பெண் தமயந்தி தானா ,ஏன் ?''
             ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''

ஓட்டு போடும் ஆர்வம் உண்மையில் கூடியிருக்கா :)
            ''நடந்த இடைத் தேர்தலில்  90சதம் ஓட்டு பதிவாகி இருந்தும் 'நோட்டா 'ஓட்டு மூவாயிரம் கூட விழலையே ,இதிலேர்ந்து என்ன  தெரியுது  ?''
           ''  ரூபா நோட்டை வாங்கும் ஆர்வம் கூடியிருக்குன்னு  தெரியுது !''

பெண்களை  திருப்திபடுத்த எப்படி முடிகிறதோ :)
''என்னங்க ,உங்க சலூன் முன் புறம் நாய்களாத் திரியுது ?''
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?

9 December 2016

காதலி புளிப்பு மாங்காய் கேட்டால்தானே தப்பு :)

         ''நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்!''
         ''நல்ல வேளை,மாங்காய் கேட்கவில்லையே !''

 உண்மை  ஒருநாள் வெளியே வந்தே தீரும் :)                      
             ''ஏம்மா அஞ்சலை ,உன்னைப் பார்த்தா ,எழுபது கிலோ வெயிட் இருக்கிற மாதிரி தெரியலையே !''
            ''அய்யாவும் இப்படித்தான் சந்தேகப்பட்டு என்னைத்  தூக்கிப் பார்த்தாரே ,அம்மா !''

காசு மட்டும்தான் காசா :)
             ''திருடு போன பர்சிலே பணமே இல்லைன்னு சொல்றீங்க ,அப்புறமும் ஏன் இவ்வளவு வருத்தப் படுறீங்க ?''                
             ''அந்த பர்ஸ் விலையே ஐந்நூறு ரூபாயாச்சே !''  

மருமகள் துடிப்பது ....நடிப்பா:)
           ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன் ?''
           ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''

இதுவா உண்மை காதல் :) 
பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...
திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?