15 December 2016

காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் :)

காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் :)
          ''என்னங்க ,நம்ம பையன்கிட்டே ,நான் பார்க்கிறப் பொண்ணைத்தான் நீ கட்டிக்கணும்னு  சொன்னீங்களா ,இல்லையா ?''
          ''உங்கப்பா  பார்த்த பொண்ணைக் கட்டிக்கிட்டு, நீங்க படுற பாடு போதாதா அப்பான்னு கேட்கிறானே !''
                                   பட உதவி... 'தினகரன்.காம்'முக்கு  நன்றி !
இதுக்கு எப்படி மனசு வரும் :)            
            ''நம்ம  காதல் விஷயம் ,என்  அப்பாவுக்கும் தெரிஞ்சுப் போச்சுன்னு எப்படிச் சொல்றீங்க ?''
            '' என் செல்லுக்கும் ரீசார்ஜ் பண்ணுங்கன்னு சொல்றாரே !''

மனைவி குத்துக் கல்லா இருந்தா ....:)
            ''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
             ''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''

டாக்டருமா மருமகளுக்கு பயப்படணும் :)
            ''அவங்க மருமகளை மட்டும் வெளியே நில்லுங்கன்னு டாக்டர் ஏன் சொல்றார் ?''
            '' மாமியாருக்கு நடந்த ஆப்ரேசன் சக்சஸ்ன்னு சொல்லத்தான் !''

'வாய்' உள்ள நடிகை :)
   வாய்ப்பில்லா நடிகையின் 
   வாய் 'மை '  மாறா  பேட்டி ....
   'கேரக்டர் பிடித்தால்தான் நடிப்பேன் !'

24 comments:

 1. அம்மி மிதிச்சு... அருந்ததி பாத்தது... இதுக்குத்தானோ...? மகனே...! ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...!’

  லத்தி சார்ஜ் வாங்கக்கூடாதின்னா... ரீசார்ஜ் பண்ணுங்க...!

  இப்படியுமா அசிங்கமா இருப்பான்னு பாத்தேன்... நீ குத்துக்கல் மட்டும் இல்ல... குத்தும் கல்... அதான் குத்திக்குத்திக் காட்டுறாய்...!

  ஆப்ரேசன் சக்சஸ்... மாமியார் நல்லா இருக்காங்க... நல்லா உக்கார்றாங்க... நல்லா சாப்பிடுறாங்க... அவுங்க எப்ப விரும்புறாங்களோ... அப்ப வீ(ட்)டு பேறுக்குச் செல்லலாம்... ஆப்ரேசன் சக்சஸ்... பட் பேசண்ட்...! ‘மருமகளே வா வா... உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா...!’

  ஓ கேரட்டரையே டைரக்டரால புரிஞ்சுக்க முடியலையே...! ஒனக்கு இப்ப மார்கட்டு இல்லம்மா... அதை தூக்கி நிறுத்துறேன்... ஒனக்கு மறுபடியும் மறுவாழ்வு கொடுக்கிறேன்... என்ன சம்மதமா...?!

  த.ம. 1  ReplyDelete
  Replies
  1. அப்பா தேங்காய் சட்னி அம்மியில் அரைச்சா தனி டேஸ்ட்தான்:)

   ஓ..அந்த சார்ஜுக்கு பதிலா இந்த சார்ஜா :)

   அசிங்கத்தையா கண்ணு மூடாம பார்த்துக்கிட்டு இருந்தீங்க:)

   அவுங்க எப்ப விரும்புறாங்களோ..என்று சொல்லும்போதே டாக்டர் கைவிரிச்சிட்டார் தெரிஞ்சிபோச்சே:)

   கேரெக்டர் புரியுதோ இல்லையோ ,டைரெக்டர் சொல்றது புரியுது :)

   Delete
 2. Replies
  1. அய்யா சமையல் எப்படி ,பிரமாதம்தானே :)

   Delete
 3. Replies
  1. மலையாளத்தில் கில்லர்ஜி எந்தா பறைஞ்சது?!

   Delete
  2. உங்க ரசனைக்கு என் நன்றி dd ஜி :)

   Delete
  3. உங்க சூப்பருக்கு நன்றி கில்லர்ஜி:)

   Delete
  4. சூப்பர்னு கில்லர்ஜி பறைஞ்சது :)

   Delete
 4. //'' என் செல்லுக்கும் ரீசார்ஜ் பண்ணுங்கன்னு சொல்றாரே !''//

  கல்யாணச் செலவுக்குப் பணமும் கேட்பாராக்கும்!!!

  ReplyDelete
  Replies
  1. 'கட்டிங்'க்கு பணம் கேட்கிறவர் கல்யாணத்துக்கு கேட்காமல் போவாரா :)

   Delete
 5. அனைத்தையும் ரசித்தேன்.
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. மலையாளத்தில் கில்லர்ஜி பறைஞ்சதையும்தானே :)

   Delete
 6. Replies
  1. குத்துக் கல்லையுமா :)

   Delete
 7. அக்கரைக்கு இக்கரை பச்சை என்று சொல்லலாமா....

  ReplyDelete
  Replies
  1. அரைச்சாத் தான் சாப்பாடு என்றானபின் வருத்தப் பட்டால் முடியுமா :)

   Delete
 8. பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்தே விஷயங்கள் புரிந்து கொள்கின்றனர்.
  செல்லுக்கு ரீசார்ஜ் செய்தால் பச்சைக் கொடியா
  அதானே குத்துக்கல்லை என்ன செய்யறது பேசாமல் கும்பிடலாம்
  அப்போ மாமியார் பிழைத்ட்க்ஹுக் கொண்டாரா
  ஏன் நடிகைகள் சொல்வதை நம்பமாட்டேன் என்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. புரிந்து கொண்டு அதே பாதையை தவிர்க்கவும் விரும்புகின்றனரே :)
   பச்சைக் கொடியா ,எரியப் போறது சிகப்பு விளக்கா என்று சில நாளில் தெரிந்து விடும் :)
   பேசினாலும் அதன் காதில் விழாதோ :)
   அதுதான் இதற்கு உள்ளர்த்தம் :)
   முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு போட்டுக் கொள்கிறேன் என்றால் நம்ப முடியுமா :)

   Delete
 9. Replies
  1. குத்துக் கல்லை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 10. Replies
  1. தண்டத்துக்கும் சேர்த்து ரீ சார்ஜ் செய்வதை ரசிக்க முடியுதா :)

   Delete