17 December 2016

'கை கழுவுறது' நடிகைகள் மட்டும்தானா :)

யார் சொன்னது வாலிருந்தால்தான் எலி என்று :)         
             ''என்னடா கேட்கிறே ,விளையாட 'வாலில்லா எலி ' வேணுமா ?''
             ''வீடியோ  கேம் விளையாட 'cordless mouse'வேணும்னு சொன்னாதான் உங்களுக்கு புரியுமாப்பா ?''
அரிசி வகைக்குதானே பெயர் உண்டு  :)                       
          ''கடையிலே இருக்கிற அரிசிகளை எல்லாம் எதுக்கு ரெண்டு மணி நேரமா , ஜூம் லென்சினால்  பார்த்து கிட்டே இருக்கீங்க ?''
          ''எனக்குரிய  அரிசியில் என் பெயர் எழுதியிருக்கும்னு சொன்னாங்க ,அதான் !''

'கை கழுவுறது ' நடிகைகள் மட்டும்தானா :)                             
          ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான்  பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
          ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''
மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களைச் சொன்னதால் ...:)
          ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
           ''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''

திட்டம் இட்டு செய்யும் போதே இப்படின்னா ....:)
         ''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
         ''ரவுடியை  தப்பவிட்டு சுடச்  சொன்னாக்கூட ,ஆடு மாடுதான் சாகிறதாம் !''

 காலத்திற்கு ஏற்ற கோலம்:)
     இளைஞர்களின்  இதய ஸ்வரம் 
     'லப் டப் ''லப் டப் ' என்பது மாறி 
      'லேப்டாப் ''லேப்டாப் 'என்றே துடிக்கிறது !

26 comments:

 1. Replies
  1. ஊக்கம் தரும் உங்களின் த ம ஒன்றுக்கு நன்றி :)

   Delete
 2. Replies
  1. லேப் டாப் சரிதானே ஜி :)

   Delete
 3. வர வர ஒனக்கு மவுசு கூடிக்கிட்டே போவுது...!

  எவனோ மடப்பய மடத்தில ஒக்காந்து உளறிகிட்டு இருக்கிறதெல்லாம் நம்புறியேடா... எல்லாம் எ தலையெழுத்து...!

  எவனோடவும் சேர்ந்து மேக்கப் பண்ண முடியல... எனக்கு பொருத்தமானவன் இனிமேலா பொறந்து வரப்போறான்... அதான் கைகழுவி கைகழுவி என்னோட ஆயுள் ரேகையைப் பார்க்கிறேன்...!

  பக்கத்து வீட்டுக்காரன் ‘அதெப்படி அச்சு அசலா அவளோட அங்க அடையாளத்தை கரைட்டா சொல்றியேன்’னு அசந்து போயிட்டான்.... இதுக்கே அசந்தா எப்படி ‘உன்னோட பொண்டாட்டி அங்க அடையாளத்தைச் சொல்லட்டா’ன்னு சொன்னவுடனே ஆடிப்போயிட்டான்... எனக்கு ஞானக்கண்ணுன்னு சொன்னா யார் நம்புறாங்க...?!

  அவரு ரொம்ப இரக்க குணம் உள்ளவரு... ஆளைக் கொல்லமாட்டாரு...! அவருக்குக் கவுண்டர்னாலே பிடிக்காதாம்...!

  'லேப்டாப் ' தானே எதையும் ஒளிவு மறைவில்லாம எல்லாத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுது...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. அவனே ஒரு வாலில்லா எலிதானே :)

   எதையும் ஆராய்ந்து பார்க்கிறது தப்பா அப்பா :)

   ஆயுள் ரேகையும் அழிந்து போயிருக்குமே :)

   இதுக்கு ஞானக் கண் காரணமா ,நம்பவே முடியலியே :)

   கவுண்டமணி கவுண்டரையுமா:)

   இவன் பொழப்பு இருட்டுக்கு போயிடாம பார்த்துக்கச் சொல்லுங்க :)

   Delete
 4. Replies
  1. இந்த ஹேண்ட் வாஷ் லிக்விட் தரமானது தானே ஜி :)

   Delete
 5. அனைத்தும் அருமை ஜி
  எனது செல்லில் தமிழ் ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. செல் தமிழ் டைப்பிக்க சுலபமா இருக்கா ஜி :)

   Delete
  2. கஷ்டமாக இருக்கின்றது ஜி

   Delete
  3. என் அனுபவமும் அதே :)

   Delete
 6. Replies
  1. முதன் முதலா வந்து ,உங்க தளத்தைப் போலவே ரம்யமா சிரித்தமைக்கு நன்றி :)

   Delete
 7. அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. காலத்திற்கு ஏற்ற கோலம் சரிதானே :)

   Delete
 8. நல்ல தமிழில் சொன்னாத்தானே தெரியும்
  எத்தனை அரிசியை ஜூ ம் பண்ணிப் பார்க்க முடியும்
  கைகழுவுவதற்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன் நடிகைகள் மட்டும் தானா கை கழுவுகிறார்கள்
  வேலைக்காரியின் அங்கமெல்லாம் தங்கம் என்றாரோ
  அவர் என் கௌண்டர் அல்லவா
  இதுவும் நல்லாயிருக்கே

  ReplyDelete
  Replies
  1. தமிழில் சொல்லவும் முடியலே ,சொன்னால் புரியவும் மாட்டேங்குதே :)
   அரிசியை சுற்றி சுற்றி வேறு பார்க்கணும் :)
   இப்படியும் சான்ஸ் கிடைக்கும்னு கைகழுவின நடிகை கூட நினைத்தே இருக்கமாட்டார் :)
   தங்கத்தில் வைத்த கல்லையும் அடையாளம் காட்டினாராமே:)
   உங்க கௌண்டரா :)
   லேப்டாப் இல்லாத மாணவனே இல்லைன்னு ஆகிப் போச்சே :)

   Delete
 9. நடிகர்களும் கை கழுவுறார்களே.......

  ReplyDelete
  Replies
  1. விவரமானவர்கள் ,தாலி கட்டாமலே கை கழுவிவிடுகிறார்கள் :)

   Delete
 10. Replies
  1. வாலில்லா எலி எல்லோருக்குமே பிடிக்கிறதே :)

   Delete
 11. கார்ட்லெஸ் மௌஸ், அரிசியில் பெயர், லப்டப் லேப்டாப் அனைத்தும் ஹஹஹ ரகங்கள் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஓவ்வொன்றும் ஒரு விதம் ,ஒரே ஹஹஹா ரகம்தானா :)

   Delete
 12. 'கை கழுவுறது' என்ற உண்மையை
  உறைக்கச் சொன்னீர்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மை உணர்ந்து,நீங்க உறைந்து போய் விடவில்லையே :)

   Delete