2 December 2016

புது மணத்தம்பதிகளிடம் புதுவிதமா கொள்ளையா :)

பெயர்ப் பொருத்தம் இல்லா புயல் :)
      ''புயல் வலுவிழந்து காற்றழுந்த தாழ்வு மண்டலமாக மாறியதுக்கு ,அதனோட பெயர்தான் காரணமா எப்படி ?''
      ''பெரும்பாலான புயல்கள் காக்கிநாடாவில் கரை கடக்கும்,இது வெறும் 'நாடா ' புயல்தானே ?'' 

வக்கனையா பேசத் தெரியுது ,ஆனா ......?        
              ''தேசீய கீதம் பாடச் சொன்னா ஜப்பான்லே சின்னக் குழந்தைக் கூட சரியாப் பாடுமாம் ,நீயும் இருக்கீயே !''
              ''அட போங்க ஸார்,அவங்க தேசீய கீதம் மொத்தமே நாலே வரிதானே ?''

புது மணத் தம்பதிகளிடம்  புதுவிதமா கொள்ளையா  :)
முன்பெல்லாம் கொள்ளையர்கள் ஆளில்லா வீடுகளைப் பார்த்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் ...
சமீப காலமாக அதிலும் நல்ல முன்னேற்றம் ...தைரியமாக கதவை உடைத்து உள்ளே நுழைந்து ...
உள்ளே இருப்பவர்களின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ...
பீரோவைக் கூட அவர்களை வைத்தே திறந்து கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல்  ...
சில நாட்களுக்கு முன் ...
திருமணமாகி பதினைந்தே நாளான  பெண்ணின் தாலிக் கயிறைக்கூட விட்டு வைக்காமல்  பறித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள்   ...
உறவினர்கள்  கூட பார்த்திராத திருமண ஆல்பத்தைக் கேட்டிருக்கிறார்கள் ...
திருமணக் கோலத்தில் மணப்பெண்அணிந்துள்ள நகைகளை ஒவ்வொன்றாய் காட்டி... 
அதையெல்லாம் மிரட்டி வாங்கி ....
ஹோட்டலில் ரிலாக்சாக நாம் சாப்பிடும் நேரத்தை விட அதிகமாக ...
முக்கால் மணி நேரம் ஒருவீட்டில் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள் ...
இந்தக் கொள்ளைக் கூத்து நடந்திருப்பது... மதுரை அருகே உள்ள 'கூத்த'ரசன் பட்டியில்  !
                                                                                    
ASH TRAY கேள்விக்கு பதில் ஏது :)
   சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க 
   என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
  தன் நுரையீரலை சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை ..
   எனக் கேட்டது  ' ASH TRAY '!

22 comments:

 1. நடாங்க... அது நாடா இல்லை! டைம்லி ஜோக்...

  ஜப்பான் தேசிய கீதம் நாலே வரிகள்தானா! அட..

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,அடுத்த புயலுக்கு தடா போடாமல் போனால் சரிதான்:)

   அவர்களின் உயரத்தைப் போலவே :)

   Delete
 2. ‘நாடு அதை நாடு... அதை நாடாவிட்டால் ஏது வீடுநாடு...’ நாடு என்றால் நாடியிருக்கும்... நடா என்று ஒரு(க்)கால் இல்லாததால் நடந்து வர வலுவில்லாமல் போய்விட்டது...!

  மரியாதையா எழுந்து நில்லுங்கள்...!

  அட... இந்தக் 'கூத்த'ரசன் பட்டியில் நடந்த கூத்தக் கேளுடி... இதுக்குத்தான் இனிமேல ஐநூறு ரூபாயில திருமணத்த நடத்தி... இனி போட்டாவ போடனுங்கிறது...!

  உன் நுரையீரல் சுத்தமாகுதோ இல்லையோ... பக்கத்தில இருக்கறவங்களையும் காலி பண்றியே... இப்படி பண்றியேடா... ஏண்டா ஒனக்கு அறிவே இல்லையா...?!

  த.ம. 2
  ReplyDelete
  Replies
  1. அடுத்த புயலாவது வலுவாக வரட்டும் :)

   மரியாதையை இப்படி வலுக்கட்டாயமா வரவழைக்க முடியுமா :)

   கோவில்லே தாலி கட்டி ஹோட்டல்லே சாப்பாடு என்றாலும் ஐந்நூறு போதாதே :)

   அரு அறிஞர் சொல்லியிருக்காரே ,சிகரெட்டின் ஒரு நுனியில் நெருப்பும் ,மறு நுனியில் முட்டாளின் வாயும் உள்ளதென்று :)

   Delete
 3. Replies
  1. படத்தைப் பார்த்தால் 'இந்த நகை போதுமா ,இன்னும் கொஞ்சம் வேணுமான்னு 'கேக்கிறமாதிரி தோணலையா :)

   Delete
 4. Replies
  1. மனிதன் திருந்துவானா :)

   Delete
 5. Replies
  1. இந்த ஆகா , ஆகா முதல் இரண்டுக்குமா :)

   Delete
 6. Replies
  1. இந்த ஆகா , ஆகா அடுத்த இரண்டுக்குமா..நன்றி :)

   Delete
 7. 4 வரி தேசியகீதத்தில் இந்த வசதி உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது நல்லதுதானே அய்யா :)

   Delete
 8. நாடா புயல் நன்றாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. சேதம் தராத புயலாச்சே :)

   Delete
 9. சிகரெட் - ஆஷ் ட்ரே - நல்ல கேள்வி!

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நாலு பேர் யோசித்தால் இதை விட அருமை :)

   Delete
 10. Replies
  1. உங்களின் நயமான ..தப்பு தப்பு ...நவமான வாக்குக்கு நன்றி :)

   Delete
 11. நடா நடந்து போயிருச்சு புஸ்னு ஆகிப் போச்சு...ஜி

  அனைத்தும் ரசித்தோம் ஜி!!

  ReplyDelete
  Replies
  1. போனால் போகட்டும் போடான்னு விட வேண்டியதுதான் :)

   Delete