27 December 2016

இளம்பெண் , நடு இரவில் தனியாக நடக்க முடிகிறதா :)

அதுக்கு இதுவே தேவலே :)          
              '' கிழிஞ்சு இருக்கிற  சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம்  புரிந்திருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை  எப்படி காட்ட முடியும் ?'' 
ரயில் லேட் நேரத்திலே யோசித்து இருப்பாரோ :)
            ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
            ''ரயிலைப்  பிடிக்கணும்ன்னா வேற  வழியில்லையே !''

கருவில் வளர்வது மகனா ,மகளா ,காண்பதும் தவறா :)
             ''கர்ப்பமா இருக்கிற உங்க மனைவியை  ஸ்கேன் பண்ணும்போது  ,டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
             '' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது,அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''

கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்:)
         ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாமா ,ஏன் ?''
          ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''

நடு இரவில் தனியாக நடக்க முடிகிறதா :)
           உண்மை சுதந்திரம் இன்னும் வரவில்லை ...
          தேசப் பிதாவின் தீர்க்கத் தரிசன வார்த்தைகள் ...
          நடு இரவில் சாலையில்  இளம்பெண்  தனியாக நடக்க முடியும்
          நாளே உண்மையான சுதந்திர நாள் ! 

22 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு இது தேவலேதானே :)

   Delete
 2. Replies
  1. கீ ஹோல் ஆபரேஷன் எக்ஸ்பெர்ட் என்ற சொல்லையும் தானே :)

   Delete
 3. Replies
  1. ஊமை அடி வாங்குபவர் நிலைமை பாவம்தானே :)

   Delete
 4. அத்தானைக் குத்தும் அக்கா மகளே நீ கை புடிச்சி கை வெளக்கி... கைய மாத்தி குத்தும்போது. வலிக்கிறதே... உள்குத்து இதுதானோ...?!

  எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும் அய்நூறு பிளாட் வீடு வாங்கினாலும் வீதிக்கு வந்துதான் ஆகனும்...! காடு வரை பிள்ளை வரமுடியாது போல இருக்கே... கடைசிவரையாரோ...?!

  ஸ்கேன் மெஷின் விலை எவ்வளவு...? எங்க வாங்கலாம்...? விளம்பரம் ஒன்னும் வரலையே...!

  பலே... கொள்ளையக்காரா...!

  நடு இரவில் சாலையில் இளம்பெண் தனியாக நடக்க முடியா விட்டாலும்... பேருந்தில் தனியாக பயணமாவது செய்ய முடிகிறதா...?!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. அரிசி குத்தின கையால் அடித்தால் அத்தானுக்கு வலிக்காமல் என்ன செய்யும் :)

   எத்தனைப் பெரிய பதவியில் இருந்தாலும் என்பதையும் சேர்த்துக்கலாம் :)

   என்னத்துக்கு வாங்கணும் ,பத்து மாசத்துக்குள்ளே வெளியே வரத்தானே போவுது :)

   சிறந்த வித்தைகாரர் விருது வேண்டுமானாலும் கொடுத்து விடலாமா :)

   அதானே ,யாருக்கு வந்த சுதந்திரம் இது :)

   Delete
 5. Replies
  1. ரசிக்கிற மாதிரியா இருக்கு அவர் வாங்கிற ஊமை அடி :)

   Delete
 6. நல்ல கருத்து

  ReplyDelete
  Replies
  1. காந்திஜி கருத்து இன்னும் பொய்க்க மாட்டேங்குதே :)

   Delete
 7. சிலருக்கு ஊமைக்காயங்கள் மட்டுமல்ல நாவினால் சுட்ட வடுக்களும் தெரியாது
  அதுதான் பணக்காரர்கள் ரயில் பிடிக்க பிலாட் ஃபார்முக்கு வருவதில்லை விமானம் ஏறு கிறார்கள்
  ஸ்கேன் பண்ணும்போது யாரையும் அனுமதிப்பதில்லையே
  அண்டகா கசம் அபு கா ஹுக்கூம் திறந்திடு சிசேம்
  நடு இரவில் ஏன் தனியாக நடக்க வேண்டும் ஆண்களுக்கே சவால்தானே

  ReplyDelete
  Replies
  1. ஊமைக் காயம் ,நாவினால் சுட்ட வடு இல்லைன்னா தாம்பத்தியம் போரடிக்குமே :)
   ரோஷக் காரர்கள் ஆச்சே :)
   சட்டப் பிரச்சினைத்தான் காரணம் :)
   படத்தில் வேண்டுமானால் இந்த மந்திரம் பலிக்கும் :)
   காந்திஜி ,நகையை அணிந்து கொண்டு நடு இரவில் பெண் நடக்க வேண்டுமென்று விரும்பினார் :)

   Delete
 8. அனைத்தையும் ரசித்தேன், நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. அண்ணலின் கனவு என்று நனவாகும் ,சொல்லுங்க ஜி :)

   Delete
 9. //நடு இரவில் சாலையில் இளம்பெண் தனியாக நடக்க முடியும்
  நாளே உண்மையான சுதந்திர நாள் ! //

  இதே காந்திதான் பெண்கள் பாதுகாப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதெல்லாம் எப்போது சாத்தியப்படும்?!

  ReplyDelete
  Replies
  1. கத்தி வைத்துக்கொள்வதெல்லாம் சாத்தியப் படாது ,அது ,எதிரிக்கும் உதவக்கூடும் :)

   Delete
 10. நடுஇரவில் பொம்பள போலீசுக்கும்மா..

  ReplyDelete
  Replies
  1. இதிலென்ன ்சந்தேகம், அவங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதானே இருக்கு :)

   Delete
 11. அனைத்தையும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. ரயில் லேட் நேரத்திலே யோசித்ததை ரசிக்க முடியுதா :)

   Delete