3 December 2016

அந்தரங்கப் படத்தால் வந்த வினை !

இவங்களுக்கு  தங்க நிர்ணயம் ?யாராவது சொல்லுங்களேன்  :)
           ''திருநங்கைகள் எதுக்கு மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பண்றாங்க ?''
           ''ஆண்கள் 100 கிராம்,பெண்கள் 250 கிராம் ,திருமணமான பெண்கள்  500 கிராம் தங்கம் வைச்சுக்கலாம் என்று சொன்ன அரசு ,நாங்க எவ்வளவு வச்சுக்கலாம்ன்னு ஏன் சொல்லலேன்னுதான் !''

கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் :)
             ''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
            ''சுயமரியாதை இல்லாம உங்களால் இருக்கும் நாள் வரைக்கும் !''

மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்!
            ''உன் மனைவி உன்னை சந்தேகப்படுறான்னு சொல்றீயே ஏன்?''
            ''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு சொன்னா ,'நான் இங்கே இருக்கும் போதுஎந்த சிறுக்கி உங்களை நினைக்கிறான்'னு கேட்கிறாளே ! ''             

 மரம் சாயலாம்...மனம் ...:)
மனதைக் கொத்தும்  துயரங்களால் மனிதன்  சாய்ந்து விடலாமா ...
மரம் கொத்தும் பறவையா மரத்தை சாய்த்து விடும் ? 

அந்தரங்கப் படத்தால் வந்த வினை !
அந்தரங்கம் புனிதமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ...
ஆனால் ,கேரள பல் டாக்டர் ஒருவருக்கு இதில் உடன் பாடில்லைப் போலிருக்கிறது ...
ஜெயகிருஷ்ணன் என பெயர்கொண்ட அவர் இப்போது 'ஜெயில் 'கிருஷ்ணன் எனப் பெயர் எடுப்பார் போலிருக்கிறது  ...
வலி எடுத்த பல்லைப் பிடுங்க வேண்டியவர் ...
பல் பிடுங்கிய பாம்பாய் அடங்கிய காரணம் அறிந்தால் ...
நீங்களும் பாம்பாய் மாறி  அவரை     கொத்திவிடுவீர்கள் ...
கடந்த செப்டம்பர் மாதம்தான்  அவருக்கு திருமணம் நடந்துள்ளது ...
தான் பெற்ற இன்பம் தன் இல்லாளும் பெற வேண்டுமென்று தண்ணி அடிக்கவும் ,ஆபாசப் படம் பார்க்கவும் வற்புறுத்தியுள்ளார் ...
நற்குடியில் பிறந்த அந்த நங்கையோ மறுத்துள்ளார் ...
மனைவியைக் கொடுமை பண்ண துவங்கிவிட்டார் ...
இதில் உச்சகட்டக் கொடுமையாக நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டாராம் ...
மாமனார் வீட்டுடன் தொடர்பு கொண்டு சொன்னாராம் ...
'எனக்கு பத்து லட்ச ரூபாய் தேவைப் படுகிறது ,தராவிட்டால் உங்கள் மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறைக் காட்சிகளை 'யூ ட்யுப் 'பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார் ...
காவல் துறையில் புகார் தரப் பட்டு தற்போது கைது செய்யப் பட்டுள்ளார் ...
படிச்ச டாக்டரே இப்படி 'யூ ட்யுப் 'பை  துப்பாக்கி போல் பாவித்து பிளாக் மெயில் செய்கிறார் ...
சோசியல் நெட் தளங்கள் இன்னும் வேறு எதற்கெல்லாம்  உதவப் போகிறதோ ?22 comments:

 1. ஆமால்ல... அதைச் சொல்லலையே...! எல்லாத்தையும் சேத்து தங்க(ம்) வச்சுக்க வேண்டியதுதான்...!

  ஒங்க காலுக்குச் செருப்பா இருப்பேன் தலைவரே...! எங்கே ஒங்க செருப்பக் கழட்டுங்க...! எங்க பார்க்கிறிங்க... ஒங்க காலுக்குக் கீழே விழுந்து கிடக்கிறேன்... எழுந்திருக்க முடியல...!

  ‘சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்... சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்...!’ எவ அவ...?

  மரம் கொத்திப் பறவைப் போலே மனம் கொத்திப் போனது யாரோ...? ‘சின்ன நூல் கண்டா நம்ம சிறை படுத்துவது...?!’

  அரங்கேற்ற வேளைதானோ...?! ஜெய் கிருஷ்ணா...! படிச்ச டாக்டரா... படிச்சேன்னு சொன்ன டாக்டரா... சர்ட்டிபிக்கட் வெரிபை பண்ணுங்க...?!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. எண்ணிக்கையில் குறைந்தவங்க தங்கத்தை அதிகமா வச்சுக்கலாமோ :)

   போதாது போதாது ,காலை நக்கினால்தான் பதவி கிடைக்கும் :)

   புரை தானா வர்ற கஷ்டம் ,துணை தேடிக்கொண்ட கஷ்டமா போச்சே :)

   சிறையில் இருப்பதுன்னு முடிவெடுத்தா எதிலே இருந்தாலென்ன :)

   அதானே ,படிப்பின் கீழ் , அண்டர் லைன் இருக்கும் போலிருக்கே :)

   Delete
 2. Replies
  1. புரை ஏறுவதையுமா:)

   Delete
 3. படுபாவி அவன்... மருத்துவனே இல்லை...

  ReplyDelete
  Replies
  1. மெத்தப் படித்த சுத்த பைத்தியக் காரனாய் இருப்பானோ :)

   Delete
 4. முதல் ஜோக்கை மனம் ஒப்பவில்லை.

  கடைசிச் செய்தி கொதிக்க வைக்கிறது. பழைய செய்திதானே? அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தார்களாம்?

  ReplyDelete
  Replies
  1. அதானே இதென்ன கிராம் கணக்கில் :)

   ஜெயில் கிருஷ்ணன் என்ன ஆனாரோ தெரியவில்லை :)

   Delete
 5. Replies
  1. கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தொண்டரையுமா :)

   Delete
 6. Replies
  1. தங்களின் ஆறால்,பார்வையாளர்களின் எண்ணிக்கையும் ஆறாக பெருகிவிட்டது ,நன்றி ஜி :)

   Delete
 7. அனைத்தும் ரசித்தேன் சகோதரா
  Tamil.M - 7
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. 2:57 pm ல் நீங்கள் அளித்த த ம 7 க்கு நன்றி :)

   Delete
 8. Replies
  1. மனம் சாயக்கூடாதுதானே :)

   Delete
 9. அட..பல் டாக்டரு இப்படியும் சம்பாரிக்கலாம் என்று தெரிந்து கொண்டாரோ???????

  ReplyDelete
  Replies
  1. இவர் பல் பிடுங்கிற டாகடராத் தெரியலே ,பல் பிடுங்கப்பட டாக்டரா இருக்காரே :)

   Delete
 10. இவர்களை எந்த ரகத்தில் சேர்க்க. திருமணம் ஆன திருமங்கைகளும் இருக்கிறார்களே
  தலைவர் கழகத்துக்கு ஆள் சேர்த்த மாதிரிதான்
  மனைவி ஜோக் முன்னே படித்தது ரசிப்பும் குறைகிறது
  மனம் கொத்தினால் மனிதன் சாய்ந்துவிடுவான்
  அந்தரங்கம் இவருக்குப் புனிதமல்ல

  ReplyDelete
  Replies
  1. ivvalavuஇவ்வளவு பெரிய பூதாகரமான பிரச்சினையை எப்படி தீர்ப்பார்களோ :)
   அதானே ,உண்மையை உளறிக் கொட்டினால் யார் சேருவார்கள் :)
   புரை ஏறியதை அவ்வளவு சீக்கிரம் உங்களால் மறக்க முடியலை போலிருக்கே :)
   சாயாமல் இருக்க என்ன முட்டு கொடுக்கலாம் :)
   போதையின் அடிமைக்கு எதுவுமே புனிதமாய் தோன்றாதே :)

   Delete
 11. முதலாவதைத்தவிர மற்ற எல்லாவற்றையும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. அதை மட்டும் ஏனோ ரசிக முடியவில்லை :)

   Delete