4 December 2016

காரம் ,கணவனுக்கு பிடித்ததும்,மனைவிக்கும் பிடித்ததும் :)

விஷயம் பொடியில் இல்லை :)
    ''காப்பி சூப்பர்டீ. புரு காப்பியா ?''
    ''இல்லை ,இது என் புருஷன் போட்ட காப்பி !''  
காரம் ,கணவனுக்கு பிடித்ததும் மனைவிக்கு பிடித்ததும் :)
            ''உங்களுக்கு பிடித்த காரத்தை மனைவியிடம்  செய்யச் சொல்ல வேண்டியதுதானே ?''
           '' என்னை 'அதி'காரம்' பண்ணத்தானே  அவளுக்குப் பிடிக்குது ?''

வடிவேலுவின் 'ஔவ்வ்வ்' வள்ளுவருக்குப் பிடிக்குமா :)
            ''திருவள்ளுவர் இப்போ வந்தா ,வடிவேலு அடிக்கடி சொல்ற பஞ்ச் வார்த்தையை ரசிக்கமாட்டார்னு எப்படி சொல்றே ?''
            ''1330 குறள்லே எங்கேயும் 'ஔ 'என்ற  எழுத்து வரவே இல்லையே !''

வாக்கு [போட்டவனை ] சாவடி :)
           ''வாக்கு சாவடின்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசியா ,ஏன்?''
           ''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே சாவடிக்கிறாங்களே !''

பாம்பை அல்ல ,பயத்தைக் கொல்வோம் :)
    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்றால் 
    பாம்பாட்டிதான் அரசனாக இருந்து இருக்க வேண்டும் !

ஓஹோதானாம் ,இந்தியச் சரக்கு,சொல்வது பிரிட்டிஷ் பயணி :)
நம்ம ஊர் குடிமகன்கள் சாலையில் மட்டையாகி விழுந்துக் கிடப்பது ஒன்றும் காணக் கிடைக்காத அரிய காட்சியல்ல ...
நேற்றைய தினம் ...அதிகாலை 2 மணி ...
வெள்ளைக்காரன் ஒருவன் மதுரை 
கட்ட பொம்மன் சிலை அருகே இப்படி விழுந்து கிடந்ததால் மனசு தாங்கவில்லை  நமது மக்களுக்கு ...
காவல் துறையிடம் தெரிவித்து உள்ளார்கள் ...
வந்த போலீசார் தட்டி எழுப்பி விசாரித்தால் ...
அந்த வெள்ளைக்கார போதையனிடம் இருந்து ஒரு தகவலும் பெற முடியவில்லை ...
விடிய விடிய லாட்ஜ்களில் விசாரித்து கண்டுபிடித்து ..
அவனை அறையில் கொண்டுபோய் சேர்த்துள்ளார்கள்...
போதை தெளிந்ததும் bad boys என்றே புலம்பினானாம் ...
காரணம் ,ரூபாய் ஆயிரத்து ஐநூறுடன் அவன் பர்சைக் காணவில்லையாம்...
நல்ல வேளை , ஆண் என்பதால் பர்ஸ்சோடு முடிந்தது ...
இதுவே பெண் சுற்றுலாப் பயணி என்றால் எப்படிப்பட்ட விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும் ?
ஏற்கனவே நமது பெருமைமிகு பாரதத்தை பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று வெளிநாடுகளில் முத்திரை குத்தியுள்ளார்கள் ...
உங்களுக்கு என்னாச்சு என்று மட்டையனிடம் கேட்டதற்கு சொன்னானாம் ...
என் நாட்டு பீர் என்றால் 1 1 டின் சாப்பிடுவேன் ,ஆனால்இங்கே  5டின்னிலேயே போதை ஏறி விட்டது ,இந்திய பீர் சூப்பரோ சூப்பர் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் 
நமது குடிமகன்கள் மட்டுமே தெரிந்து இருந்த மதுவின் புகழ் இங்கிலாந்திலும் பரவி விட்டது ...
எல்லா நாட்டினரும் நம்ம சரக்கின் அருமையை உணர்ந்து சுற்றுலா வரப் போவது உறுதி ...
அந்நிய பண வரவால் நமது பொருளாதாரம் உச்சிக்கே போகப் போவதும் உறுதி ...
மதுக் கடைக்களை மூடச் சொல்லும் நமது கலாச்சாரக் காவலர்களை சில வருடங்கள் நாடு கடத்தி விடலாம் !

16 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன் ஜி. அந்த வெள்ளையருக்கு நம்மாளுங்க ஏதாவது மயக்கமருந்து கொடுத்து இருக்கறதை அடிச்சுக்கிட்டுப் போயிருப்பாங்க...

  ReplyDelete
  Replies
  1. உள்ளூரிலே தெம்பாகத் திரிந்தவர் ,இங்கே வந்து இப்படி மட்டையாகிப் போனாரே :)

   Delete
 2. பொண்டாட்டி டீ போடுறதும் இல்ல... பொண்ட்டிய டீ போடவும் முடியல...!

  அவள்தானே ‘அதிகாரி’யா இருக்கா...! நான் ஹவுஸ் ஹஸ்பெண்ட்தானே...!

  "ஒளடதம் கொடுக்கும் தாதி நீ:ஒளதகம் காக்கும் ஆதி நீ..." அய்யன் மருந்துக்கூடப் பயன்படுத்தவில்லையே...! அவ்...அவ்...!

  செய்... அல்லது செத்துமடி...! இல்ல செஞ்சிடுவேன்...! ‘செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா...!’

  பாம்பாட்டியின் மகுடி சத்தம் கேக்காது என்று ஆடி ஆடி... சத்தம் கேக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் தலையை ஆட்டினாலும் இவனுக்குக் கண் தெரியவில்லையோ...?!

  அவனைச் சொல்லி குற்றமில்லை... இறக்கின சரக்கு நல்ல சரக்கில்லை...! நல்ல சரக்கா குடுங்கப்பா...! முள்ளை முள்ளால்தானே எடுக்கணும்...!

  த.ம. 2  ReplyDelete
  Replies
  1. கிடைக்கிற போண்டா டீயைச் சாப்பிட்டு கம்முன்னு இருங்க :)

   சஸ்பென்ட் பண்ணாம இருக்காங்களே ,சந்தோஷப் படுங்க :)

   அய்யன் சமுதாய மருத்துவராச்சே ,குறளே மருந்துதானே :)

   வோட்டுக்கு கூலி போலத்தான் லஞ்சமாகி போச்சு :)

   பாம்புக்கு காது கேட்காது ,மகுடி வாசிக்கிறவனுக்கு கண் தெரியாது சரியாய் போச்சே :)

   ஊருக்கு பாடிதான் போய்சேரும் போலிருக்கே :)

   Delete
 3. Replies
  1. நீங்கதான் சொல்லணும் ,வள்ளுவர் காலத்தில் ஔ இல்லையா :)

   Delete
 4. காரமும் அதிகாரமும்.... ரசித்தேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. ரசித்தால்தான் வீட்டில் நிம்மதியாய் வாழ முடியும் :)

   Delete
 5. Replies
  1. நீங்கதான் வள்ளுவருக்கு ரொம்ப வேண்டியவராச்சே,குறள்ளே ஏன் ஔ இல்லைன்னு சொல்லுங்க ஜி :)

   Delete
 6. பலருக்கு அதி...காரத்தை குறைத்தால் அது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது என்று சொல்லக் கேள்வி...

  ReplyDelete
  Replies
  1. நல்லதுதான் ,அதிகாரம் உள்ளவன் எல்லாம் லஞ்சம் வாங்கி கொள்ளை அடிக்கிறானே :)

   Delete
 7. காரம், அதிகாரம், சாவடி ..அனைத்தும் ரசித்தோம் ஜி...வெள்ளையர் பாவம் அவருக்கு நம்மூர் சரக்கு பற்றித் தெரியவில்லை...சமீபத்திய தமிழ்ப்படம் ஏதேனும் ஒன்று பார்த்திருந்தால் கூட போதுமாக இருந்திருக்குமோ ஜி??!!!!

  ReplyDelete
  Replies
  1. அதென்னமோ தெரியவில்லை ,டாஸ்மாக்கை மறந்து சினிமா கதாயாசிரியர்களுக்கு கதை சொல்லத் தெரியவில்லை :)

   Delete
 8. பெண்டாட்டி போட்ட புரு காப்பியானால் புருடீன்னு சொல்லி இருப்பாளோ
  ஓ அப்படியா 1330 குறள்களையும் படித்ததில்லை.
  வாக்குச் சாவடியில் வாக்கு வசூல் சுங்கச் சாவடியில் சுங்கம் வசூல்
  பாம்பையும் பார்ப்பானையும் ஒரே நேரத்தில் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி என்று யாரோ சொன்னாராமே
  வெள்ளைக்காரர் அனுபவித்துப் புரிந்து கொள்ளும் ரகம் போல் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. BRUசன் சொல்லக்கூடும் :)
   நம்ப முடியவில்லை என்றால் ஆராய்ச்சி செய்யுங்கள் :)
   சாவடிப்பதென்னவோ உண்மை :)
   என்ன காரணத்தால் அப்படி சொல்லியிருக்கக் கூடும் :)
   பணத்தைப் பறி கொடுத்தா புரிந்து கொள்வது :)

   Delete