5 December 2016

தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும் :)

             ஒரு முக்கியச் செய்தி .....இன்றிலிருந்து  மூன்றாவது நாளில் ஒரு துன்ப  நிகழ்வு  அரங்கேறப் போகிறது !உங்களால் யூகிக்க முடிகிறதா ?

இதுக்கென்ன சொல்றீங்க ,கணவன்மார்களே :)          
            ''என்னங்க ,மனைவியை  நேசிக்கிற கணவன்மார்களுக்கு  மாரடைப்பு வரும் வாய்ப்புகள்  ஐம்பது சதம் குறைவுன்னு  கண்டு பிடித்து இருக்காங்களாமே?''
            ''நேசிச்சி என்ன பிரயோசனம் ,மாரடைப்பு வர  நூறு சதக் காரணமே மனைவிதானே !'' 

லூசுலே  விற்கக் கூடாதுன்னு  சொன்னவன் லூசா :)                       
      ''புகையிலை பயன்பாட்டைக் குறைக்க ,சிகரெட்டை  'லூசிலே 'விற்கக்கூடாதுன்னு  தடை பண்றது ,நல்ல விஷயம்தானே?''
     ''அடநீங்க வேற ,  ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட் அறிமுகமாகி  விட்டதே  !''

தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும் :)
           ''உங்கம்மா,  முழு பாட்டில் ஹார்லிக்சையும் பால்லே கலந்து ஏன் வடிகட்டி பார்த்துகிட்டு இருக்காங்க ?''
            ''தங்கத்தை தூளாக்கி  ஹார்லிக்ஸில் கலந்து கடத்துறதா , நியூஸ் வந்திருக்காமே !''

பொண்ணு பார்க்கையில் இதையா விசாரிக்க முடியும் ?
கல்யாணமான  சில நாட்களிலேயே ...
இளம் மனைவியை இங்கே விட்டு விட்டு பொருளாதார நிர்பந்தம்   காரணமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வோரின் மனக் கஷ்டத்தை வெறும் வார்த்தையில் வடித்து விட முடியாது ...
அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் ...
அப்படிப்பட்ட நிலையில் மலேசியாவில் வேலைப் பார்க்கும் பையனுக்கு வீட்டிலிருந்து ...
உடனே கிளம்பி வரவும் என்று தகவல் வந்துள்ளது ...
கல்யாணமாகி முன்றே மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் பதறி அடித்துக் கொண்டு வந்து...
காவல் நிலையத்தில் இளம் மனைவியின் மீது புகார் கொடுத்துள்ளார் ...
ஒரு சின்ன பிளாஷ்பேக் ...
அந்தப் பெண்ணிற்கு வாந்தி ,மயக்கம் வந்ததென்று மருத்துவமனைக்கு சென்று காட்டியுள்ளார்கள் ...
செக் அப் செய்து டாக்டர் சொன்ன தகவலால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் ...
அந்த புதுப்பொண்ணு (?) ஒன்பது மாதக் கர்ப்பமாம் !
திருமணமாகி பல வருடங்கள் ஆனபின்பும் பிள்ளைப் பெற முடிய வில்லையே என்று பல தம்பதிகள் வருந்திக் கொண்டிருக்கும் ...
நம் தங்கத்  தமிழ் நாட்டில்தான் ...
கல்யாணமான மூன்று மாதத்திலேயே பிள்ளைப் பிறக்கும் அதிசயமும் அரங்கேறியுள்ளது !
தாலி கட்டும் போதே ஆறுமாத சிசுவிற்கும் சேர்த்தே தாலி கட்டிய கொடுமை நடந்துள்ளது !

18 comments:

 1. ‘மாசத்தில மூணு நாளு பொறுக்கணும் பொதுவாக...’யூகிக்க முடிகிறது...! எப்படிச் சொல்வது என்றுதான் தெரியவில்லை...!

  ‘மார்கழி மாசம் பார்து மாருல குளிரச்சு...’ மாரடைப்பு வரத்தானே செய்யும்...!

  லூசாப்பா நீ...! பாக்கெட் பாக்கெட்டா அடிச்சு... சீக்கிரம் இந்த உலகத்தின் சுற்றுச் சூழலைக் கெடுக்காம போய்ச் சேர்ந்தா மகிழ்ச்சி...!

  முழு பாட்டில் ஹார்லிக்சும் போச்சா...!

  தமிழகம் எதிலும் முதல் இடம்தான்...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. அந்த மூன்று நாட்கள் விஷயம் ஜோக்காளிக்கு பொருந்தாதே :)

   மார்கழி மாசம் குளிக்கவே கூடாதா :)

   ஒண்ணுன்னா லூஸாம்,இரண்டுன்னா பாக்கெட்டாம்:)

   ஃப்ரிஜ்ஜிலே வச்சு அப்பப்போ கலக்கிக் குடிக்க வேண்டியதுதான் :)

   நல்ல முன்னேற்றம்தான் :)

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. துன்ப நிகழ்வு எதுவாக இருக்கும் என்று யோசிக்கவில்லையா ஜி :)

   Delete
 3. Replies
  1. தாலி கட்டும் போதே ஆறுமாத சிசுவிற்கும் சேர்த்தே தாலி கட்டிய கொடுமையை ரசிக்க முடியுதா ஜி :)

   Delete
 4. நேற்று திருமணத்த நிச்சயித்து இன்று பத்திரிக்கை அடித்து தரச்சொல்லி வாங்கி நாளைக்கு திருமணத்தை நடத்தும்போது நாளைக்கு மறுநாளைக்கு பிள்ளை வேண்டும் எனும்போது மூனு மாசம் என்பது டூ லேட் என்றே எனக்கு தோன்றுகிறது..

  ReplyDelete
  Replies
  1. அச்சாபீஸ் நடத்தும் நீங்கள் சொல்லும் கருத்து ..பகுத் அச்சா :)

   Delete
 5. Replies
  1. லூசையும்தானே :)

   Delete
 6. லூசு ஹஹஹ்ஹ்..

  அது சரி அந்தமாப்பிள்ளை அந்தோ பரிதாபம்....

  அது சரி அந்த மூன்று நாட்களுக்குப் பிறது என்ன ஆகப் போகிறது?!!!

  தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும் பகவான் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தடை செய்தவர்களை இப்படி லூஸ் ஆக்கிவிட்டார்களே :)

   இறைவன் கெடுத்த வரமா போச்சே :)

   கொஞ்சம் யோசியுங்க ,இரண்டு நாளில் தெரிந்து விடும் :)

   Delete
 7. இன்பம் துன்பம் எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது
  மனைவியை நேசிப்பவர்களின் பர்ஸின் கனம்குறையும் என்பது புரிகிறது. மாரடைப்பா ......?
  நான் சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்த காலத்தில் இருக்கவில்லையே
  தங்கமிருக்கும் ஹார்லிக்சை விற்பார்களா கடத்தத்தானே செய்வார்கள்
  ஒருவேளை நிலைமைக்குக் காரணமே அவராய் இருக்குமோ ஒன்பது மாதம் வரை கர்ப்பம் தெரியாமலேயே இருக்குமா வயிறு காட்டிக் கொடுத்திருக்குமே

  ReplyDelete
  Replies
  1. மனம் சார்ந்தது மட்டுமா ,உடலும் சார்ந்ததாச்சே :)
   அன்று இல்லையேன்னு சந்தோஷப் படுங்க ல்:)
   கடத்தலில் ஒன்றிரண்டு கடைக்கு வராதா என்ற ஆசைதான் :)
   இது காதல் கல்யாணம் இல்லையே ?அவர் பாவம், எங்கே பக்கத்தில் இருந்தார் :)

   Delete
 8. Replies
  1. மாரடைப்பு சதக் கணக்கு சரிதானா :)

   Delete
 9. கர்ப்பம் போன்ற செய்திகளைத் தவிர்க்கலாமே
  மூணு நாள் ?
  தம +

  ReplyDelete
  Replies
  1. சமூகத்தில் இப்படியும் நடக்கிறது என்று தெரிந்து கொண்டால்தானே மற்றவர்களாவது விழிப்புடன் இருக்க முடியும் :)
   இன்னும்இரண்டே நாள்தானே :)

   Delete