8 December 2016

இறந்த மனைவி உயிர்த்தெழுந்த அதிசயம் :)

 அன்பார்ந்த வலையுலக உறவுகளே !         
        கடந்த ஐந்தாந்தேதி, ஒரு துன்ப நிகழ்வு அரங்கேறப் போகிறது என்று நான் எழுதிய நேரமோ என்னவோ தெரியவில்லை ...உண்மையிலேயே கடந்த இரண்டு தினங்களில் இரண்டு துன்ப நிகழ்வுகள் !
          இதோ இன்று நான் சொன்ன  'துன்ப நிகழ்வு ' அரங்கேறிவிட்டது ,வேறொன்றுமில்லை ...தினசரி உங்களைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும்  ஜோக்காளியின் பதிவு எண்ணிக்கை இன்றுடன்  இரண்டாயிரத்தைத்  தொட்டுவிட்டது :) 
       மேலும்  33100 கருத்துரைக்கு வழி வகுத்த வலையுலக உறவுகளுக்கு நன்றி :)

நாட்டியமாடிய கை விரல்களா இது :(       
           ''பக்க வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்த அவரைப் பார்க்க பாவமாயிருக்கா ,ஏன் ?''
           ''பக்கவாதம்  வந்து படுத்த படுக்கையாய் இருக்காரே !''

ஆபீசில் 'நீளும் 'கை ,வீட்டில் :)
            ''நீ  லஞ்சம்  வாங்கிறதைப் பற்றி , உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
             ''கை நீட்டுற வேலையை ஆபீசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''

நகைக்கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா :)
             ''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''
            ''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''

ரீசார்ஜ் ஆகுமா காதல் :)
மூன்றாண்டு காதல் முறிந்தது ...
மூன்று நாளாய் முடங்கியது செல்போன் ...
அவளுக்காக ,அவன்  ரீசார்ஜ்  செய்யாததால்!

இறந்த மனைவி உயிர்த்தெழுந்த அதிசயம் :) 
Multi Level Marketing எம்பதை சுருக்கமாக M L M என்பார்கள் ...
அந்த M L M யை கணினியில் தமிழில் தட்டச்சுச் செய்தால் ...
மலம் என்று வரும் ...உண்மையும் அதுதான் ...
M L M பக்கம் போகாமல் இருப்பது நல்லது என்று ...
முன்பு ட்வீட்டரில் நான் ட்வீட்டியதை உண்மையென நிரூபித்துள்ளனர் ...
சில வருடங்களுக்கு முன் , கோவை போலீசாரால் கைது செய்யப் பட்டனர் வக்கீல் தம்பதியினர் ...
அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளைப் படித்தால் ...
இருவரும் வக்கீலுக்குப் படித்தவர்கள்தானா என சந்தேகம் எழுகிறது ...
ஓடிசாவில் தொடங்கிய MLM நிறுவனத்திற்கு அந்த பெண்மணிதான் ...
தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தி வந்தாராம் ...
வேண்டிய மட்டுக்கும் மக்களின் பணம் வந்தவுடன் கம்பி நீட்டிய வழக்கில் இருந்து தப்பிக்க ...
தன்னை நம்பி வழக்கை ஒப்படைத்த பெண்ணைக் கொன்று ...
அந்தச் சடலத்தை வைத்து தன் மனைவி இறந்து விட்டதாக ஆள் மாறாட்டம் செய்து ...
ஒடிசா பண மோசடி வழக்கில் இருந்து மனைவியை காப்பாற்றி இருக்கிறார் அவரது கணவர் ...
இறந்த மனைவி இறந்ததாகவே இருந்தாலும் பரவாயில்லை ...
இன்னொருவர் சொத்தை அபகரிக்க இறந்தவரை  உயிர்ப்பித்து இருக்கிறார் ...
இது மட்டுமல்ல ,இன்னொரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கிலும் ,மாயமான பெண் வழக்கிலும் சேர்க்கப் பட்டுள்ளனர் வக்கீல் தம்பதியர் ...
இவர்களின் புகழ்லண்டனில் இருந்து வெளியாகும்  'தி ஏசியன் ஏஜ் 'பத்திரிக்கை மூலம் உலகெங்கும் பரவி விட்டது !
வக்கீலிடம் உண்மையை மறைக்ககூடாது என்பார்கள் ...
இந்த வக்கீல் தம்பதியினர் உண்மையை மறைத்து சமூகத்தில் பெரிய மனிதர்களாய் வலம் வந்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தால் ...
யாரைத்தான் நம்புவது என்றே புரியவில்லை !

26 comments:

 1. ஈராயிரத்தைத் தொட்டு... ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் வேலையைச் செய்து... காலத்தை வென்றவன் நீ... காவியமானவன் நீ...! வாழ்க நீ எம்மான்...!

  பாவம்... இன்னும் படுத்துத்தான் கிடக்கிறாரா...?! கஷ்டகாலம்...!

  ஒன் வே தான்... கொடுக்கிறது மட்டும்தான்...! இங்க கைய நீட்டினா அடிதான்... என்ன அடிக்கிற கைதான் அணைக்குமா...?

  கால நேரம் பாத்து பேசுங்க... நேரம் சரியில்லைன்னு நெனக்கிறேன்... வித்தத cctv கேமராவில போட்டுப் பார்க்கிறாங்களாம்... அதுல நேரம் சரியாச் சொல்லுதாம்... ஜாக்கிரதை...!

  இவன் ஒருத்தன்தான் ஓவியமாம்...?!

  கொலையும் செய்வாள் பத்தினிங்கிறது ஊண்மைதானோ...? வழக்கு அறிஞர்தான்...!

  த.ம. 1  ReplyDelete
  Replies
  1. களிமண் பிள்ளையார் ஆகும்போது ,பேன் பெருமாள் ஆகத்தானே செய்யும் :)

   அடுத்த புயல்லே போயிடுவார்ன்னு தோணுது :)

   துட்டு வந்தால்தான் அணைப்புமே,இல்லைன்னா அடி மட்டும்தான் :)

   நல்ல நேரம் யாருக்கு ,வாங்கிறவருக்கா ,விற்கிறவருக்கா :)

   அதானே ,ஆண்டிராய் லேடஸ்ட் மாடல் வாங்கித் தர ஆள் வந்துட்டானே :)

   மாண்டும் எழுவாள் பத்தினி :)

   Delete
 2. இரண்டாயிரம் பதிவு எண்ணிக்கைகளைத் தோட்ட சாதனைக்கு வாழ்த்துகள். மென்மேலும் உயரவும் வாழ்த்துகள்.

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த சாதனைக்கு, நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் கருத்துரையும் ஒரு காரணம் ,அதற்கு என் மனம்நிறைந்த நன்றி ஜி :)

   Delete
 3. Replies
  1. முதலில் போட்ட மூணுக்கு நன்றி :)

   Delete
 4. வலைப்பதிவில் தொடர்ந்து சளைக்காமல் எழுதுவதும், அதிலும் படிப்பவர்களுக்கு சலிப்பூட்டாமல் எழுதுவது என்பதும், தமிழ்மணத்தில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பதும் அசுர சாதனைதான். தங்களின் பதிவுகளின் எண்ணிக்கை இரண்டாயிரம் தொட்டமைக்கு வாழ்த்துகள். - தொடர்ந்து எழுதுங்கள், தொடர்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. விளக்கமான தங்களின் கருத்து மேலும் ஊக்கத்தைத் தருகிறது:)

   Delete
 5. ஜோக்காளியின் பதிவு எண்ணிக்கை இன்றுடன் இரண்டாயிரத்தைத் தொட்டுவிட்டது :) //

  மலைத்தேன்! மகிழ்ந்தேன்!!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் தேன்,தேனை நானும் சுவைத்தேன் :)

   Delete
 6. வாழ்த்துக்கள் நண்பரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. என்ன தவம் செய்தேனோ ,தங்களின் வாழ்த்தைப் பெற !நன்றி :)

   Delete
 7. 2000 பதிவு தொட்டதற்கு வாழ்த்துகள்.
  பக்காவாக வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவருக்கு பக்க வாதமா ( பக்கா வாத்தியமா)
  கை நீண்டால் ஒட்ட நறுக்கப் படும்
  காலநேரம் பார்த்து நகை வாங்க வந்தவரோ
  ஒவ்வொரு பதிவிலுமொரு செய்தி

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்கு நன்றி :)
   வாதமும் பக்காவா வந்திடுச்சே :)
   அந்த பயம் அவருக்கு இருக்கட்டும் :)
   நகை வாங்கும் நேரம் எல்லாமே நல்ல நேரம்தான் மனைவிமார்களுக்கு :)
   இருப்பது நல்லதுதானே :)

   Delete
 8. நீங்கள் தீர்க்கதரிசிதான்

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை ,ஸ்ரீலஸ்ரீ பகவான்ஜி என்று சொல்லாமல் விட்டீர்களே :)

   Delete
 9. தொடரட்டும் தங்களின் சாதனை.....!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆதரவு இருக்கையில் எனக்கென்ன சோதனை :)

   Delete
 10. இரண்டாயிரம் பதிவுகள் - மனம் நிறைந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. என்னாலும் நம்ப முடியவில்லை ,நன்றி ஜி :)

   Delete
 11. வாழ்த்துக்கள் மேலும் பல ஆயிரங்கள் தொட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பதிவு போடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று வாழ்த்தியமைக்கு நன்றி ஜி :)

   Delete
 12. அனைத்தும் வாசித்து அறிந்தேன் .
  மிக்க நன்றி சகோதரா.
  தமிழ் மணம் 12
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. தாமத வாசிப்புக்கும் ,தமிழ்மண வாக்குக்கும் நன்றி :)

   Delete
 13. 2000 பதிவுகள
  33100 கருத்துகள
  என்றால் நம்பலாம்
  ஆனால்,
  "உங்களுக்குக் காதல் வராதா?
  எனக்கு வராது!
  ஏனங்க...
  வருவாய் (சீதனம்), சொத்து (ஆதனம்) வரவேணுமே!" என
  நகைச்சுவை எழுதப் பட்டபாடு
  எனக்குத் தான் தெரியும்
  நீங்களோ 2000 நகைச்சுவை
  எழுதி முடித்தாச்சு என்றதும்
  நிறைய மூளைக்கு வேலை கொடுத்து
  ஆக்கி வைச்ச படைப்புகள் ஆச்சே
  என்று உணருகிறேன்...
  தங்கள் கடும் முயற்சிக்குக் கிடைத்த
  பரிசாகவே 33100 கருத்துகளை
  நான் கணிக்கின்றேன்...
  முயலுங்கள்...
  தொடருங்கள்...
  வெல்லுங்கள...
  அத்தனைக்கும்
  பாராட்டுகள்...
  வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. என் பதிவுகளை மதிப்பீடு செய்து, நீங்கள் ஒரு பதிவை போட்டதை இன்னும் நான் மறக்கவில்லை !தொடர்ந்து உங்களைப் போன்றோரின் ஊக்கமிக்க கருத்துக்களால் தொடர்கிறேன் ,மிக்க நன்றி :)

   Delete