9 December 2016

காதலி புளிப்பு மாங்காய் கேட்டால்தானே தப்பு :)

         ''நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்!''
         ''நல்ல வேளை,மாங்காய் கேட்கவில்லையே !''

 உண்மை  ஒருநாள் வெளியே வந்தே தீரும் :)                      
             ''ஏம்மா அஞ்சலை ,உன்னைப் பார்த்தா ,எழுபது கிலோ வெயிட் இருக்கிற மாதிரி தெரியலையே !''
            ''அய்யாவும் இப்படித்தான் சந்தேகப்பட்டு என்னைத்  தூக்கிப் பார்த்தாரே ,அம்மா !''

காசு மட்டும்தான் காசா :)
             ''திருடு போன பர்சிலே பணமே இல்லைன்னு சொல்றீங்க ,அப்புறமும் ஏன் இவ்வளவு வருத்தப் படுறீங்க ?''                
             ''அந்த பர்ஸ் விலையே ஐந்நூறு ரூபாயாச்சே !''  

மருமகள் துடிப்பது ....நடிப்பா:)
           ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன் ?''
           ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''

இதுவா உண்மை காதல் :) 
பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...
திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?

18 comments:

 1. ஒன்று கேட்டால் என்ன... கொடுத்தால் என்ன... கொறஞ்சா போய்விடும் என்றாள்...!

  எழுபது கிலோ வெயிட்டா... மொத இருந்தவ... நூறு கிலோன்னா... எனக்குச் சந்தேகம் வந்து அவளையே தூக்கிப் பார்த்தேன்... கவலைப்படாதே... கீழே போட மாட்டேன்னு தைரியம் சொல்லித்தான் அசால்ட்டா அப்படியே அலேக்கா தூக்கினாரும்மா...!

  அந்த பர்ஸ்ஸ ஆசையா சுட்டது... சுட்டதச் சுட்டுட்டானே...!

  இரும்புக்கெல்லாம் காக்கா வலிப்பு நிக்காதுங்கிற விஞ்ஞானம் தெரிஞ்சவங்க...! ஒன்னோட நடிப்பெல்லாம் அவுங்கள்ட்ட எடுபடாதடி...!

  காதலுக்கு கண் இல்லைங்கிறது உண்மைதானோ...?!

  த.ம. 2


  ReplyDelete
  Replies
  1. கேட்டுக் கொள்வது காதலின் உரிமை ,கேட்டால் தருவது காதலி கடமையாச்சே ..காதலியே கேட்கலாமா :)

   அய்யா,இதே ஜோலியா இருப்பார் போலிருக்கே :)

   வில்லனுக்கு வில்லனா இருக்கானே :)

   மாமியார் அப் டேட்டா இருக்காங்க ,மருமகதான் :)

   கண் தானே காதலுக்கே காரணம் ,மூளை இல்லேன்னு வேணா சொல்லலாம் :)

   Delete
 2. மாங்காய் கேட்டால்தான் என்ன தப்புன்னேன்? ஒரே அர்த்தம்தானா என்ன! ஊறுகாய் போடக்கூட கேட்கலாம்!!!

  ஐயா எப்பவுமே எதையுமே ஆராய்ந்து பார்த்துடுவார் போல!

  சந்தர்ப்பவாத காக்காய்வலிப்பு!

  அதானே!

  ReplyDelete
  Replies
  1. பருவ வயசிலே காதலன் கிட்டே ஊறுகாய் போடவா காதலி கேட்பா :)

   அய்யாவை சரியா எடை போட்டுட்டீங்களே :)

   இந்த வலிப்பை மாமியாரே நம்புவதாய் இல்லையே :)

   பொறாமை ,காதல் ஆகாதுதானே :)

   Delete
 3. ரசித்தேன் நண்பரே
  தம சுற்றிக்கொண்டே இருக்கிறது மீண்டும் வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் சுற்றி வந்து வாக்களித்தமைக்கு நன்றி :)

   Delete
 4. Replies
  1. உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்,இது எல்லா காரியங்களுக்கும் பொருந்தும்தானே:)

   Delete
 5. சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. காசு மட்டும்தான் காசா என்பது உண்மைதானே :)

   Delete
 6. Replies
  1. புளிப்பு மாங்காய் பிடித்ததா :)

   Delete
 7. // ''அய்யாவும் இப்படித்தான் சந்தேகப்பட்டு என்னைத் தூக்கிப் பார்த்தாரே ,அம்மா !''//

  அம்மா நம்பிடுவாங்களா என்ன? முதலில் வேலைக்காரிக்கு வேட்டு! அப்புறம் அய்யாவுக்குத் திட்டு!!

  ReplyDelete
  Replies
  1. அய்யாவுக்கும் சேர்த்து வேட்டு வைக்கலாம் :)

   Delete
 8. ரசித்தேன் ஜி...
  நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் நட்புக்களின் தளங்களில் உலா வர முடிந்தது.
  எல்லா நகைச்சுவைகளையும் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. 2௦௦2 பதிவுக்காவது வந்தீங்களே ,நன்றி :)

   Delete
 9. சிரித்துமகிழ்ந்தேன்

  ReplyDelete
  Replies
  1. வேலைக்காரி என்றாலே அஞ்சலை என்று பெயர் வைப்பதையும்தானே :)

   Delete