31 May 2016

பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா ' தரகர் சொன்னாரே :)

 ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க துவட்டிக்கலாம் :)            
            '' மழையிலே நனைஞ்சு வந்திருக்கேன் ,அவசரம் அவசரமா என் கையிலே எதுக்கு தாயத்து கட்டுறே ?''
            ''நீங்க நனைஞ்சது 'பேய் 'மழையிலாச்சே !''
 பீப்பீ கோஷ்டி வரலேன்னு BPஏறுதா :)              
             ''முகூர்த்தநேரம் நெருங்கிடுச்சு ,பீப்பீ    கோஷ்டியினரைக் காணாமே ,போனைப் போட்டு கேளுங்க !''
             ''கேட்டேன் ,அவங்க ஏறிவந்த பீப்பீ   (பாயிண்ட் டு பாயிண்ட் ) பஸ் நடுவழியில் பஞ்சராகி நிற்குதாம் !''
பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா ' தரகர் சொன்னது :)
           ''பொண்ணுக்கு  காது மந்தம்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
            ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு  சொன்னேனே!''

சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு :)
         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
          ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்து பார்த்தாலும் நிலா தெரியுமே ?''
வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!
உயரம் அதிகமாக அதிகமாக  
விழுந்தால் அடியும் பலமாய்தான்  இருக்கும் ...
இதற்கு பயந்தால் ...
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !

30 May 2016

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் :)

இங்கே கிடைக்காதுன்னா வேறெங்கே கிடைக்கும் :)             
               ''விஜய் மல்லையா பெங்களூர்காரர்னு சொன்னா ,உன்னாலே ஏன் நம்ப முடியலே  ?''
            ''நீதிபதி குமாரசாமி அங்கே இருக்கிறதை மறந்துட்டு ,இந்தியாவில் எனக்கு நீதி கிடைக்காதுன்னு சொல்லியிருக்காரே !''
ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் :)
            ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவரை, எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
             ''அவனுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆவுது ?''
அப்படி  என்ன கேட்டிருப்பார் ,இப்படி கோபம் வர ?
       '' மூக்குக்கு மேலே கோபம்  வரும் சரி ,உங்க மனைவிக்கு  அதுக்கும் மேலே  கோபம் வருதா ,எப்படி ?''
        ''நெற்றி மஞ்சள் பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர்  !''
ஸ்ரீ தேவி ரசிகராய் இருப்பாரோ ?
            '' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக்  கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப்  போறீங்க ?''
             ''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் போறேன்  !''
பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMS நினைவுக்கு வருகிறாரா  ?
'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான 
 பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன 
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !

29 May 2016

மங்கை ,மாலுமிகளை கரை சேர்ப்பாளா :)

'மூஷிக வாகனன் ' கோவிச்சுக்குவாரே :)
             ''என் பைக்லே ' பிள்ளையார் துணை 'ன்னு  போட்டுக்கக் கூடாதா ,ஏன் ?''
              ''பிள்ளையாரே எலி வாகனத்தில் போகும் போது உனக்கு பைக்கா  ?''
அதெப்படி குடிகாரங்க வாயிலே மட்டும்   ழகரம்  சரியா வருகிறது :)
              ''வாழைப்பழம் அழுகி, கொழகொழத்து, கீழே விழுந்தது ' ன்னு சொன்னதுக்கா ,போலீஸ் உன்னைப் பிடிச்சிகிட்டாங்க ?''
            ''ழகரத்தை  சரியா உச்சரித்ததால்  குடிச்சு இருப்பேன்னு சந்தேகப் பட்டுட்டாங்க!''
இந்த 'கோச் 'சடையான் ' உலக கோப்பை வெல்வாரா :)
           ''உங்க கபடி 'கோச் 'சை ரஜி னி ரசிகர்னு எப்படி சொல்றே ?''
            ''சடையான் என்கிற தன் பெயருக்கு முன்னாலே 'கோச்' என்று போட்டுக்க ஆரம்பித்து விட்டாரே !''
பதிலைக் கேட்டு  ஆசிரியர் மயக்கமாகி இருப்பாரா :)
              ''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
              ''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
              ''அதிலேயே எழுதி இருக்கும் !''
மங்கை மாலுமிகளை கரை ஏற்றுவாளா :)
என்னவள் ...
கலங்கரை விளக்கின் அருகில் நின்று ...
கடலழகில் கண்களை இமைக்க மறந்து 
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும் 
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள் எப்படி வரும் என்று ?

28 May 2016

பெண்கள் ,சிறகுகள் இல்லா தேவதைகள்தானா :)

                 ''சிறகுகள் இல்லாமலே, பெண்களை தேவதைகளாக்கும்
வல்லமை புடவைகளுக்கு உண்டுன்னு  சொன்னவருக்கு...  கல்யாணம் ஆகியிருக்காதுன்னு  எப்படி சொல்றீங்க ?''
                   ''இப்படி சேலைக் கட்டிட்டு பெண்டாட்டி வெளியே வந்தா அப்படிச் சொல்லுவாரா ?''
நன்றி...படத்துடன் கவிதை சொன்ன முகமறியா 'வாட்ஸ் அப் ' நண்பருக்கு !
மறக்காம 'சிம்'மையும்  சேர்த்து புதைத்து இருப்பார்களா :)              
              ''செத்ததுக்கு பிறகு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த உன் புருஷன் ஆவி ,வராம இருக்க என்னடி செய்தே ?''
               ''அவரைப் புதைத்த இடத்திலேயே அவரோட செல்போனையும் புதைச்சுட்டேன்  !''
புடவை செலக்ட் செய்ய ஒரு இரவு  போதுமா  :)
         ''கடையை பூட்டப் போறோம் ,சீக்கிரம் புடவையை செலக்ட்  பண்ணுங்க !''
           ''பரவாயில்லே ,பூட்டிட்டுப் போங்க ...காலையில் , திறக்கிறதுக்குள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைக்கிறேன் !''
பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா :)
          ''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''
          ''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''
காதலன் ,காதலி என்றாலும் தப்புதான்  :)
இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது 
கள்ளச்சாவிகள்தான் !

27 May 2016

த ந முதல்வருக்கு 'த ம முதல்வனின்' வேண்டுகோள் !

 இது இங்கேயும் நடக்கும் :)        
       ''முதல்வருடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பாமே ?முதல்வரிடம்  நல்ல மாற்றம்  தெரியுதே !''
        ''அட நீங்க ஒண்ணு !அது இங்கில்லே ..அஸ்ஸாமில் !''
         (வால் போஸ்டரைப்  பார்த்து ,நான் 'பல்பு 'வாங்கியதால் உண்டான மொக்கை இது !+ நமது முதல்வரும் ,இந்த எளிமையை கடைப்பிடிப்பார்  என்று நம்பத் தோன்றுகிறது ...காரணம் ,இந்த முறை  ,பதவி  ஏற்றபோது யாரும்  அவர் காலில் விழவில்லை !முதல் கையெழுத்திலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கியிருக்கிறார் !இந்த  இரண்டு அம்சங்கள் சந்தோஷத்தைத்  தருகிறது !
என்னைப் போன்ற நடுநிலையாளர்களின் எதிர்ப்பார்ப்புகளை  அவர் நிறைவேற்ற வேண்டும் ....
உதாரணமாக ,தமிழக போக்குவரத்துக் கழகங்களின்  நிதி நிலைமை சீர்ப்படுத்தப் பட வேண்டும் ,அங்குள்ள காலி இடங்கள்  நிரப்பப் படவேண்டும்  ,மக்களுக்கு செம்மையாய் சேவை புரிந்திட ,மத்திய அரசின் துணையோடு பழைய பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்துகளாக மாற்றப் படவேண்டும் ! ஓய்வு பெற்ற ,மற்றும்  பணியில் இருக்கும் ஊழியர்களின் துயர்கள் அனைத்தும் தீர்க்கப் படவேண்டும் !
        அன்பார்ந்த வலையுலக உறவுகளே ...
          தமிழக முதல்வர் அவர்களுக்கு , உங்களின் எதிர்பார்ப்புகளையும்  பின்னூட்டத்தில்  தெரிவிக்கலாமே !
மனைவி ஒல்லிபிச்சான் ஆனதால் .... :)
           ''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
           ''அந்த பாத்திரத்திலும்  எதுவும் ஒட்டலே ,அதில் சமைக்கிற எதுவும் உன்  உடம்பிலேயும் ஒட்டலையே!''
புது புருஷன் ரெடியாக இருப்பார் போலிருக்கே  :)
         ''கடல்லே  பாலம் கட்ட பயன்படுத்துற  சிமெண்ட்டை வைத்துதான் ,  உங்க கணவரோட கல்லறையையும்  கட்டணும்னு சொல்றீங்களே ,ஏன் ?''
         ''கல்லறை காயிறதுக்கு முன்னாடியே  அடுத்த கல்யாணத்தைப் பண்ணிகிட்டான்னு,  என்னை யாரும் சொல்லக் கூடாதுன்னுதான் !''

பெண்டாட்டிமேலே இம்புட்டு பாசமா :)
         ''  மாப்பிள்ளை பைக்கில் எழுதி இருக்கிறதைப் பார்த்தா ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதா ,எப்படி ?''
          ''புது பைக் என்னோடது ,புது  மனைவி  மட்டுமே .. எனக்கு மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''
ஸ்டெப்னி :)
டிரைவர்கள் , வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல்  செட் செய்துக் கொள்வது !

26 May 2016

கண்ணுக்கு அழகாய் இருந்தால் மட்டும் போதுமா :)

 தமிழகத்தில் வேறெங்கும் இல்லா கொடுமை :)          
                    ''என்ன  சொல்றீங்க ,வேலூர்லே வெயிலும் ஜாஸ்தி ,பெயிலும் ஜாஸ்தியா ?'' 
                   ''ஆமா ,உச்சபட்ச வெயிலும் அங்கேதான் ,குறைந்த பட்ச தேர்ச்சி விகிதமும் அங்கேதானே !''
சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்காதுதான் :)
                ''கூலாய் இருக்கிறதை கைப்பிடி கிளாஸிலும்,சூடாய் இருப்பதை  சாதா கிளாஸிலும் குடிப்பது எனக்கு பிடிக்கலே ,உனக்கு  ?''
                 ''உடம்பை முழுக்க மூடுற சுடிதாரை  வெளிநாட்டு உடைன்னும்  ,இடுப்பை மறைக்காத சேலையே நமது பாரம்பரிய உடைன்னும்  சொல்றது  எனக்கு பிடிக்கலே,என்ன செய்றது  ?''
கண்ணுக்கு  அழகாய் இருந்தால் மட்டும் போதுமா :)         
           ''என்னங்க ,TVல் 'செய்து பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டிய சமையலை பண்ணியிருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
            ''விளங்கலே ,இனிமே 'செய்து சாப்பிடுவோம் 'னு நிகழ்ச்சி வந்தா பாரு !''
டெலிவரியில் மட்டும் பிரச்சினை வரவேகூடாது !
             ''மகளிர் பேங்க் ,மகளிர் காவல் நிலையம் மாதிரி அனைத்து மகளிர் போஸ்ட் ஆபீஸ் திறந்தா என்னாகும் ?''
              ''எல்லோரும் டெலிவரி லீவிலே போயிட்டா ,தபால் டெலிவரி ஆகாதே !''
உதடுகள் செய்யும் நல்ல காரியம் ?
ஜோக்காளிப் பய பாடினான் ...
'ஆரிய உதடுகள் உன்னது '
சேட்டுப் பொண்ணுவின்  எதிர்ப்பாட்டு ...
'திராவிட உதடுகள் உன்னதா ?'
'இல்லை ..நல்ல காரிய உதடுகள் என்னது !'

25 May 2016

காதலிக்கையில் சொன்னது காத்துலே போயாச்சு :)

           '' பிள்ளையை உடனே பெத்துக்க மாட்டேன்னு  காதலிக்கும் போது சொல்லிட்டு ,இப்போ ஏன் உடனே வேணும்னு சொல்றே ?''
        ''ஒரு பேரப் பிள்ளையைப் பார்த்துட்டேன்னா  நிம்மதியா  போய் சேர்ந்துடுவேன்னு  உங்கம்மா சொல்றாங்களே !''
படிக்கிற காலத்திலேயே அப்படின்னா ...!
        ''தலைவர் ஒன்பதாவது வரை படித்ததை நிரூபிக்க ,தலைமை 
ஆசிரியரை மேடைக்கு கூட்டிட்டு வந்து பேசச் சொன்னது தப்பாப் போச்சா ,ஏன் ?''
        ''அப்போதே கஞ்சா அடித்து அடி வாங்கியதும் ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்துவிட்டார் !''
உயிர் இருக்கிறதான்னு இப்படியும் செக் செய்யலாமா ?
           '' நோயாளிக்கு உயிர் இருக்கான்னு செக் பண்ற விதத்திலேயே அவர் போலி டாக்டர்ன்னு தெரிஞ்சுப் போச்சா ,எப்படி !''
            ''பொணத்து இடுப்புலே கிச்சுகிச்சு மூட்டிப் பார்க்கிறாரே !''
வேகாத பருப்புக்கு இந்த பெயர் சரிதானே :)
          ''ரேஷன்  கடையிலே போடுற பருப்பை  ,ஏன் துயரம் பருப்புன்னு சொல்றீங்க ?''
          ''லேசுலே வேக மாட்டேங்குதே !''
புரியுது ,ஆனா புரியலே !              
            ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும், புரியுதா ?''
             ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''

24 May 2016

கணவனின் முணுமுணுப்பும் மனைவி காதில் விழுமா :)

இப்படியும் டாஸ்மாக்கை மூடலாமே :)  
       ''அந்த டாஸ்மாக் கடை ஷட்டர் பாதி  மூடிய படியே இருக்குதே ,ஏன் ?''
       ''படிப் படியா  மூடுறதா இருக்காங்களாம் !''
கணவனின் முணுமுணுப்பும் மனைவி காதில் விழுமா  :)
        ''பையன்கிட்டே ,என்னைப் பற்றி என்ன சொல்லிக் கிட்டிருந்தீங்க  ?''
        ''பாம்புக் காதுன்னா என்னான்னு  கேட்டான் ...அதான் !''
வராக் கடன் என்பது 'மல்லையா 'க்களுக்கு மட்டும்தானா :)
                ''நான்தான் இந்த பாங்க் மேனேஜர் ,உங்களுக்கு என்ன வேணும் ?''
                ''வராக்கடன் கணக்கில் பத்து லட்சம் ரூபாய் கடன் வேணும் !''
மாமூல் படுத்தும் பாடு :)
             ''கொள்ளைக் காரங்களுக்கு  போலீஸ்னா  பயம் இல்லாமப் போயிடுச்சா,ஏன் ?''
            '' நம்ம ஏரியாவிலே எந்தெந்த  வீடு பூட்டிக் கிடக்குன்னு  போலீஸ் ஸ்டேசனுக்கே போன்போட்டுக் கேட்கிறாங்களாமே !''
அதிகாலையில்  எழுந்த  சந்தேகம் :)
விடியலுக்கு வரவேற்பா ...
இரவுக்கு வழியனுப்பா ...
அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?

23 May 2016

மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களையா சொல்வது ?

மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களையா  சொல்வது .?
         ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
          ''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ்கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''
பையன் சரியா படிக்கலைன்னா இப்படியுமா :)
            ''தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம்னு சொல்ல முடியலியா ,ஏன் ?''
           ''+1 வகுப்பிலே மூணு வருசமா  இருக்கிற உங்க  பையனை  முதல்லே எழுப்புங்கன்னு நக்கல் அடிக்கிறாங்களே !''
காட்டின் நடுவே 'வன'மூர்த்தி :)
          '' முதலாளி ,கார் ஸ்டேரிங் 'காடா 'இருக்குன்னு சொன்னா ,வன மூர்த்திங்கிற என் பெயரை மாத்திக்கச் சொல்றீங்களே ,ஏன் ?''
           ''வனமூர்த்தி இருக்கிற இடம் காடுதானே ?நீ 'ஹார்டா 'இருக்குன்னு இல்லே சொல்லி இருக்கணும் ?''
சுயநல வேண்டுதல் ?
என் உறவுகளுக்கும் வேண்டும் ...
என் பொருளாதார வலிமை !
வேண்டிக் கொண்ட அய்யாவுக்கு பரந்த மனமில்லை ..
கொடுக்கல் இருக்காதே என்பதுதான் காரணம !

22 May 2016

மல்லிகைப் பூ கண்ணில் விழலாமா :)

வேண்டாம் என்பதற்கும்  பெரிய மனசு வேணும் :)            
              ''அந்த சர்வருக்கு தன்மானம் ஜாஸ்தின்னு ஏன் சொல்றே ?''
              ''வாங்க மாட்டேன் டிப்ஸ் என்று பேட்ஜ்  குத்தியிருக்காரே !''
மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிக்கும் ?
          ''காக்காகிட்டே  இருந்து கத்துக்கணும்னு  சொல்வீங்களே ,ஆனால் ,இப்ப அதுங்களும் தனித்தனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
        ''மனுசங்களைப் பார்த்து அதுங்க கத்துக்கிச்சோ என்னவோ ?''
மல்லிகைப் பூ கண்ணில் விழலாமா :)
          ''அவர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
         ''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா ,பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''
வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை :)                        
         ''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
        ''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
        ''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
        ''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

21 May 2016

சப்பை மூக்கு என்றாலும் அழகிதானே :)

பையன் நல்லா வருவான் போலிருக்கா :)
                ''அளவுக்கு மீறினால்  நஞ்சுன்னு சொல்றது உண்மைதான் ,அதுக்கென்னடா இப்போ ?''
                 ''அதனால்தான்  எல்லா பாடத்திலும்  பார்டர் மார்க் வாங்கி பாஸ்  ஆகியிருக்கேன்பா  !''
மகுடிக்குப் பதிலா ராகமா :) 
              ''மகுடி உடைஞ்சு போனதுக்கு ,சங்கீத வித்வான் நான்...  உனக்கு எப்படி உதவ முடியும் ?''
            ''நீங்க புன்னாகவராளி ராகத்தை பாடினா பாம்பு வரும்னு சொல்றாங்களே !''
சப்பை மூக்கு என்றாலும் அழகிதானே :)
              ''சீனாவில் ...நம்ம நாட்டில்  விற்கப்படும் மூக்கு கண்ணாடிகளில் பாதியளவுகூட  விற்கிறதில்லையாமே....அவங்க கண் பார்வை நல்லா  இருக்கும் போலிருக்கே !''
             ''அட நீங்க வேற ...மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு அவங்களுக்கு மூக்கே இல்லையே !''
அனுமந்து OK ,1/2விந்து NO:)
          ''குறைப் பிரசவம் ஆனதுக்கு காரணம்,  ,நாங்க செலக்ட் செய்த 'அரவிந்து 'ங்கிற பெயர்தான்னு எப்படி சொல்றீங்க,டாக்டர் ?''
          ''அரவிந்த்ன்னு கூட சரியா சொல்லத் தெரியலையே !''
கண்ணாடி சொல்லும் உண்மை :)
வெளியே தெரிவதை என்னால் காட்டமுடியும் ...
உள்ளே உள்ளதை நீதான் பார்த்துக்கணும் !

20 May 2016

மாத்திரை மூலமா மனைவியிடம் கேட்பது :)

 தேர்தல் முடிவால்  வந்த நிம்மதி  :)    
              ''மூணு நாளா  தூக்கம் வராம தவிச்சுகிட்டிருந்த உனக்கு ,நேற்றுதான் நல்லாத் தூக்கம் வந்ததா ,எப்படி ?''
             ''டாஸ்மாக்கை  உடனே இழுத்து மூட மாட்டாங்க என்ற  நம்பிக்கை வந்திருச்சே !''
சேர்த்து வைச்சு என்ன புண்ணியம் :)           
           ''செத்தும் கொடுத்த சீதக்காதி மாதிரிதான் உங்க அப்பாவுமா ,எப்படி ?''
           ''அவரோட உயில் அமுலுக்கு வர ,அவரே விஷம் குடிச்சு உதவி இருக்காரே !''
மாத்திரை மூலமா மனைவியிடம் கேட்பது  :)
         '' மாத்திரையைச் சாப்பிடலாமான்னு  என்கிட்டே ஏன் கேட்கிறீங்க ?''
        ''அரை மணி நேரத்திலே சாப்பாடு  ரெடி ஆயிடுமான்னு கேட்டா கோவிச்சுக்கிறீயே!''
மனுஷன் இப்படி செய்யலாமா :)
     ''பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்களை  உங்க நாயே ஏன் கடிச்சது ?''
    ''அதோட பிஸ்கட்டை நான் டேஸ்ட் பண்ணிப் பார்த்தது ...அதுக்கு பிடிக்கலைப் போலிருக்கே !''
புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை !
ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை !

19 May 2016

வல்லவனுக்கு FULLலும் ஆயுதமா :)

வயதானவர்களுக்கு  வாழ்வாதாரம் அதுதானே :)             
                  ''வங்கி டெபாசிட்  interest யை  மூத்த குடிமக்களுக்கு  மட்டுமாவது  இன்னும் அதிகரித்தால் நல்லதா ,ஏன் ?''
                   ''வாழணுங்கிற  interest அவர்களுக்கு  கூடுமே !''
ரசித்து படித்தால் போதாது ,ருசித்துப் பாருங்கள் :)
               ''அந்த ஸ்வீட் கடைக் காரர் வித்தியாசமா  விளம்பரம் பண்ணி இருக்காரா ,எப்படி ?''
                ''பாலியல் பலாத்காரம் என்றால் யாருக்கும் பிடிக்காது ,எங்கள் கடை 'பாலின பலகாரம்' யாருக்குத் தான் பிடிக்காதுன்னுதான் !''
வல்லவனுக்கு FULLலும் ஆயுதமா :)
           ''அவர் மொடாக் குடிகாரராய் இருப்பார் போலிருக்கா, ஏன்  ?''            
           ''வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் என்றே உச்சரிக்கிறாரே !''

A .R .ரகுமானுக்கு பிடிக்காத வார்த்தை :)
       ''இவ்வளவு வருசமாகியும் நாடு முன்னேறலேங்கிற வருத்தம் உங்களுக்கு நிறைய இருக்கும் போலிருக்கே !''
        ''ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
        ''தாய் மண்ணே 'சுணக்கம் 'ன்னு அடிக்கடி பாடுறீங்களே !''
எங்குமுள்ள ஓட்டைகள் :)
          ஒட்டடை சொல்லும் உண்மை ...
          ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்று !
         ஓட்டை மனம்தான் கேட்க மறுக்கிறது !

18 May 2016

'சிம்'ரனை ரசித்தால் காது எப்படி கேட்கும் :)

 உண்மைக் காரணம் எதுவாய் இருக்கும் :)                 
                   ''வோட்டு போட்ட அடையாள மையை சுட்டு விரல்லே எதுக்கு வைக்கிறாங்க ?''
                    ''யார் ஜெயிக்கணும்னு நாம 'சுட்டிக்' காட்டுவதால் ஆகியிருக்குமோ ?'' 'சிம்'ரனை ரசித்தால் காது எப்படி கேட்கும் :)
                ''என்னங்க ,பால் பொங்கிறக் கூடாதுன்னு ,காஸ் அடுப்பை 'சிம் 'லே வைக்கச் சொன்னேனே.. என்ன  செய்துகிட்டு  இருந்தீங்க ?''
               ''டிவி யில் 'சிம்'ரன் படம் பார்த்து கிட்டிருந்தேன் !''

பயணத்தில் இப்படியுமா சோதனை வரும் :)
         ''ஏன்யா பெருசு ,பக்கத்தில் உட்கார்ந்துகிட்டு ஓயாம டயத்தைக்  கேட்கிறீயே ...வாட்சு நின்னு பத்து நிமிஷமாச்சு !''
           ''கோவிச்சுக்காதீங்க தம்பி  , எப்ப நின்னுருக்குன்னு  பார்த்துச் சொல்லுங்க !''
இது அந்த 'சமந்தா 'ஈ இல்லை !
              ''கடைக்கு யாரும் வரலேன்னா, அந்த ஸ்வீட் கடைக்காரர் என்ன பண்ணுவார் ?''
              ''ஈ ஓட்டிக்கிட்டு இருப்பார் !''
              ''யாராவது  வந்தா ?''
               ''அப்பவும் ஈயை  ஓட்டித்தான் ஆகணும் !''
கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா :)
பிளைன் பிரியாணி வாங்குவதற்கும் 
கையில் காசில்லாமல் இருக்கலாம் ...
நம்பிக்கை இருந்தால் ...
பிளேன்லேயே  பிரியாணி வாங்கிச் சாப்பிடலாம் !

17 May 2016

மகிழ்ச்சி தந்த காதலே , துக்கமாகுமோ :)

எனக்கொரு உண்மை தெரிந்தே ஆகணும் !             
                ''தலைவருக்கு பிரஷர் கூடிப் போச்சாமே ,தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பதாலா ?''
              ''பிடிபட்ட 570 கோடி பணம் திரும்பக் கிடைக்குமான்னு என்பதற்காகவும் இருக்கும் !''
பஸ் மெதுவா போகும்னு இப்படியும் சொல்லலாமா :)             
           ''டிரைவர் சார் ,மூணு மணி நேரத்திலே போகவேண்டிய ஊருக்கு ,ஐந்து மணி நேரம் ஆகுதே,ஏன்  ?''
           ''டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கிறதை நீங்க கவனிக்கலையா ?''
மனைவி தந்த கசப்பான அனுபவம் :)
         ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
         ''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே ,தேவையா எனக்கு ?''

இந்த கிளி ஜோதிடம் நம்பகமானது :)
        ''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
        ''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளியே படிச்சு சொல்லுதே !''
மகிழ்ச்சி தந்த காதலே ,துக்கமாகுமோ :)
காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று 
ஏங்கத்தொடங்கும் போது ...
காத்திருத்தலின் வலி புரிகிறது !
காதலின் நிஜ முகம் தெரிகிறது !

16 May 2016

வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா :)

  அரசு ஊழியர்கள் சொல்வார்களா ,வாங்க மாட்டோம் நோட்டு என்று :)               
                 '' தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வைக்கப் பட்டுள்ள இந்த பொம்மையை ,தேர்தல் முடிந்ததும் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தால் நல்லதா ,ஏன் ?''
''காசு வாங்காமல் அங்கே உள்ளவர்களும் மக்களுக்கு சேவை செய்யட்டுமே !''

இந்த  பொருத்தம் அமைவது கஷ்டம் !
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு  சொல்றீங்களே ஏன் ?''
              ''தூக்கத்திலே  கூட அந்த தம்பதிகள் ஜோடியா  வாக்கிங்  போறாங்களே !''
' டிபன் ' கேரியரில் மனைவி 'சோறு' அனுப்பினால் வேண்டாம் என்பாரோ ?
          ''டிபன் பாக்சை தமிழில் ,ஓரடுக்கு என்று தாராளமா சொல்லலாமே ...இதிலே  உனக்கென்ன சந்தேகம் ?''
         ''அப்படின்னா ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''
வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா :)
      ''தம்பிகளா ,எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
      ''உங்க பொண்ணு தலையில ரோஜாப்பூ  இன்னைக்கி  இருக்குமா, இருக்காதான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''
மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் :)
   சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
   சாதிமோதலை உண்டாக்கி மக்களை சாகடிக்கிறார்கள் !

15 May 2016

ஆறின கஞ்சி ஆகாதுன்னு ஆக்கியவளுக்குத் தெரியாதா :)

இனிமேல் முட்டை வாங்க வேண்டியதே இல்லை :)                 

            ''உன் புதுப் பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலையிலே ஏண்டா அடிச்சுக்கிறே?''

             ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''
இப்படி ஆள்கிட்டே நெருங்கி பழகலாமா :)
            ''தரித்திரம் கூட தொற்று நோய் மாதிரிதானா  ,ஏண்டா ?''
            ''என் தரித்திரம் எப்போ தீரும்னு கிளி ஜோசியம் பார்த்தேன் ,ஜோசியர் கூண்டைத் திறந்ததும் கிளி பறந்து போயிடுச்சே !''
ஆறின கஞ்சி ஆகாதுன்னு ஆக்கியவள் அறிவாளா ?
           ''வியர்வைக் காயுமுன் கூலியைக் கொடுத்து விடுன்னு  சொல்றதை ,
நம்ம தேர்தல் கமிஷனருக்கு ஞாபகப் படுத்தினால் நல்லதா.ஏன்  ?''
          '' விரல்லே வச்ச  மை காணாமப் போற  முன்னாடி  ,
ரிசல்ட்டை அறிவித்தால் நல்லது !''
பழசை மறக்க நினைத்தாலும் ....!
            ''டேய் மச்சி ,H B D ன்னு சுருக்கமா ,பேஸ் புக்கிலே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பாதேன்னு சொல்றீயே ,ஏன் ?''
             ''முந்தி நாம குடிச்ச 'எச்சி பீடி 'ஞாபகம் வருதே !''
மனைவியின் அர்ச்சனை ,கணவனின் கற்பனை ?
ஆயில் புல்லிங் செய்யும் போது ..
ஆயிலை  வாயிலே அடக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ...
அழகாய் தெரிகிறாள் மனைவி ...
வாயை மூடிக் கொண்டிருப்பதால் !

14 May 2016

காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா :)

 வானிலை அறிக்கை பொய்யாகலாம் :) 

         ''தேர்தல் அன்று  கன மழைப் பெய்யுமாமே !''
          ''பண மழையும் பெய்யும்னு  சொல்றாங்க !''
            

 

டாக்டரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லக்கூடாது :)
                  ''உங்களைப் பேச முடியாதபடி   டாக்டர் செய்துட்டாரா  ?அவர்கிட்டே நீங்க என்ன சொன்னீங்க ?''
                  ''நர்சை 'சிஸ்டர் 'ன்னு கூப்பிட சிரமமா இருக்குன்னு சொன்னேன் !''
 காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா :)
                ''டாக்டர் ,உங்ககிட்டே நர்ஸாய் வேலைப் பார்த்த என் மகள் 
பேஷண்ட்டை இழுத்துகிட்டு ஓடினது வாஸ்தவம்தான் ,அதுக்காக 
அவளுக்கு தர வேண்டிய சம்பளத்தைத் தர மாட்டேன்னு சொல்றது நியாயமா ?"
           ''ஓடிப் போன பேஷண்ட் கட்ட வேண்டிய பில்லுக்கு ,அது
 சரியா போச்சே !''
புருசனுக்குத்தான் தலையெழுத்து :)
           ''அந்த வீட்டு வேலையில் இருந்து ஏன் நின்னுட்டே ?''
           ''எஜமானி அம்மா புருசனுக்கு கொடுக்கிற பழையச் சோற்றையே 
எனக்கும் கொடுக்கிறாங்களே !''
சத்தமின்றி மூக்கு சிந்துவதும் ஒரு கலையே :)
அடுத்தவர் மூக்கு சிந்துவது மட்டுமே 
அபஸ்வரமாய் கேட்கிறது !

13 May 2016

ஞாபகம் வருதா ,அந்த குருவின் லீலைகள் :)

                ''குருவின் மகிமை  என்கிற  புத்தகம்  விற்பனையே ஆகாமல்  எல்லாம் ரிடர்ன்  ஆயிடுச்சே  ,என்ன செய்யலாம் ?''

              ''குருவின் லீலைகள் என்று  தலைப்பை மட்டும் மாற்றி வெளியிடுங்க ,செம சேல்ஸ் ஆகும் !''

 மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் :)         

                ''திருட்டுத் தொழிலை விடப்போறீயா ,ஏண்டா  ?''

               ''பொதுப் பணித் துறையிலே கமிசன் 45சதம் ஆகிப் போச்சு ,மாமூலையும் உயர்த்தியே ஆகணும்னு 'எஜமானர்கள் 'கேட்கிறாங்களே  !''

அப்பன் திருந்தாமல் பிள்ளை திருந்துமா :

           ''திருடிக் கொண்டா வந்தேனு கேட்டு ,உங்கப்பா தோலை உரிச்சிட்டாரா ,அப்புறம் ?''

           ''முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டு விட்டார் !''

அக்னி வெயிலினால் வந்த மறதி :)

           ''இப்படிகோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு  வந்திருக்கீங்களே ,கொண்டு போன குடை  என்னாச்சு ?''

           ''இதோ இருக்கே ...கோடை வெயிலை  மறைக்கத்தானே ,அதை கொண்டு போனேன் ?''


இழப்பதற்கு ஒன்றுமில்லையா ,இதை தவிர :)
வெட்டப் பட்டு மடியில் விழும் முடிகளைப் பார்க்கையில் ,,,
'முடி 'யாட்சி இழந்த மன்னனைப் போலாகிறேன் !
இதற்கே இப்படிஎன்றால் 
இன்றைய ஆளும் 'மன்னர்களுக்கு '...
பதவி சுகத்தை இழக்க எப்படி மனசு வரும் ?

12 May 2016

நகை உனக்கு ,நடிகை நீ எனக்கு :)

 தேர்தல் முடியும் வரை இப்படித் தானா :)             
                    ''சொந்த காசிலே  ஏசி  வாங்கக் கூட யோசனையா இருக்கா ,ஏன் ?''
                    ''தேர்தல் அதிகாரிகள் வந்து , பில்லைக் காட்டச் சொல்வாங்க போலிருக்கே !''
இதை முதல்லேயே செய்திருக்கலாம் :)
                   ''என் பெயரைச் சொல்லி விசாரித்தால் பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கும் கூடத் தெரியலையா ,அப்புறம் எப்படிக் கண்டுபிடிச்சே ?''
                     ''மூணாவது  தெருவிலே இருந்த பசங்க கிட்டே உன் பொண்ணோட பெயரைச்  சொன்னேன் ,கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க !''

நகை உனக்கு ,நடிகை நீ எனக்கு :)

           '' நகைக்கடை விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ,அதிபரோட டீலிங் ரொம்பப் பிடிச்சு போச்சாமா ,எப்படி?''

             "அந்த நகைகளை நீயே வைச்சுக்கோ ,உன்னை நான் வச்சுக்கிறேன்னுட்டாராம் !''
கொள்ளை அடித்தாலும் மாமூல் வந்திடணும் :)
                      ''இன்ஸ்பெக்டர்வீட்டுக்கு  வந்த  நான்கு  கொள்ளைக்காரர்களில் ஒருத்தரை மட்டும் சுட்டு இருக்காரே ,ஏன்  ?''
                      ''மத்த மூணு பேரும் மாமூலை ஒழுங்கா  கொடுக்கிறவங்களா  இருக்கும்  !''

ஐன்ஸ்டீனும் செய்யாத வடை ஆராய்ச்சி :)

வடைக்கு நடுவே ஓட்டைப் போட்டவன் 

ஆஞ்சனேய பக்தனாத்தான் இருக்கணும் ...
மாலையாய் கோர்க்க வசதியாயிருக்கே !

11 May 2016

பெண்ணிடம் ,இருட்டிலும் ஒளிர என்னதான் இருக்கு :)

தேர்தல் கமிசன் இதுக்கு என்ன செய்யப் போவுது :)
             ''வீட்டுக் கதவிலே 'அட்வான்ஸ் புக்கிங் செய்யப் படும்'னு  அவர் ஏன் எழுதியிருக்கார் ?''
             ''அவர் வீட்டிலே இருக்கிற ஆறு வோட்டையும் ,அதிகப் பணம் தர்ற கட்சிக்கு மட்டுமே போடுவாராம் !'' 
நல்லாத்தான்யா பயமுறுத்தி வைச்சிருக்காரு :)
          ''பொறந்த வீட்டை நீ மறக்கலைன்னா விபரீதம் ஆயிடும்னு  , உன் வீட்டுக்காரர் மிரட்டுறாரா .ஏண்டி  ?'' 
          ''உனக்கு பொறந்த வீடு ,புகுந்த வீடுன்னா  ,எனக்கும் இருக்கும் வீடு ,இருக்கப் போற வீடுன்னு  ஆயிடுங்கிறாரே !''
பெண்ணிடம் ,இருட்டிலும் ஒளிர என்னதான் இருக்கு  :)
          ''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு ஷேக்ஸ்பியர்  என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார் ?''
          ''அடிக்கடி ஃபியூஸ் பிடுங்கிற  EB ஆபீசர் ஒருத்தர் ,பக்கத்து வீட்டிலேதான் இருக்கார் ,அவரிடம் கேட்டுச் சொல்றேன் !''

மரமண்டைக்கு புரியவே புரியாது :)
           ''அரிசிக் கடைக்கு வந்து மர  வியாபாரமும் உண்டான்னு ஏன் கேட்கிறீங்க ?''
           ''உடனடி 'டோர் 'டெலிவரி செய்யப்படும்னு போட்டு இருக்கீங்களே !''

10 May 2016

சுனாமிஸ்ரீன்னு மனைவியை செல்லமா அழைப்பாரோ :)

நகை வாங்குறதும் ,அடகு வைக்கிறதும்  அவங்ககிட்டேதானே :)                
                     ''அதோ ,அந்த தம்பதிகள் தனித் தனியா போனாலும்   மலையாளிகள் கடைக்கே  போறாங்களா ,எதுக்கு  ?'' 
                     ''நகை வாங்க ...பெண்டாட்டி நகைக்கடைக்கும் ,நகையை அடகு வைக்க ....புருஷன் பைனான்ஸ் கடைக்கும்தான் !''
ஆறிலும் சாவில்லை ,நூறிலும் சாவில்லை :)
                  ''இந்த மருத்துவ மனையில் ரூம் நம்பர் ஆறும் ,நூறும் இல்லையே ,ஏன் ?''
                    ''ஆறிலும் சாவு ,நூறிலும் சாவுன்னு யாரும் சொல்லக் கூடாதுன்னு தான் !''
இதுக்கு டாக்டர்தானே காசு தரணும்:)
                ''இந்த மாத்திரை சாப்பிட்டு ரெண்டு நாள்லே காய்ச்சல் போயிடும்னா ,எதுக்கு டாக்டர் மறுபடியும் வரச் சொல்றீங்க ?''
                ''அடுத்தவங்களுக்கு அதை கொடுக்கலாமா வேண்டாமான்னு நான் தெரிஞ்சுக்கத்தான் !''
சுனாமி ஸ்ரீன்னு மனைவியை செல்லமா அழைப்பாரோ :)
              ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து உன்னாலே இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
              ''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''
தெய்வத்தை தொலைத்த கோவில்கள் :)
அரசு அலுவலகங்களில் ...
செய்யும் தொழிலே தெய்வம்னு எழுதலாம் ...
அங்குதான்  இருக்கின்றன  ...
அட்வான்ஸ் காணிக்கையில் 
அருள் பாலிக்கும் தெய்வங்களும் ...
நிறையவே நிறையாத உண்டியல்களும் !

9 May 2016

மனைவியின் தூக்கத்தை இப்படியா கெடுப்பது :)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க உதவுவது 'பால்மானி' :)        
                  ''பால் வியாபாரியான உங்களுக்கு ,அரசு என்ன உதவி செய்யணும் ?''
               ''பால் மானியம் தர வேண்டாம் ,நாங்க விற்கிறப் பாலை  சுகாதார அலுவலர் பால்மானியால் செக் செய்யாமல் இருந்தாலே  போதும் !''
வயதானால் இப்படியெல்லாம் ஆகுமோ :)
           ''என்னடா சொல்றே ,உங்க அப்பாவுக்கு கண்ணும் மூக்கும் அவுட்டா ?''
           ''ஆமா ,பற்பசைக்குப் பதிலா கொசு விரட்டிக் கிரீமினால் பல் தேய்ச்சிட்டு ,நுரையே வரலேங்கிறாரே !''
மனைவியின்  தூக்கத்தை இப்படியா  கெடுப்பது  :)
         ''என்னங்க ,இந்த ராத்திரி நேரத்திலே திடீர்னு பீரோ  கண்ணாடி நொறுங்கி விழுதே...அய்யய்யோ...அய்யய்யோ ....!''
        ''சும்மா கத்தாதே ,நாய் துரத்திகிட்டு வர்ற மாதிரி கனவு வந்தது ,நான்தான் கையிலே கிடைச்சதை தூக்கி எறிஞ்சேன் !''

உள்ளே போறது ஒரு மடங்கு  ,வெளியே வர்றது பத்து மடங்கா  ?
             ''தாகம் அடங்கலைன்னு சொன்னதுக்கா ,அவரை ICU ல் அட்மிட் பண்ணிட்டாங்க ?''
           ''அட நீங்க வேற !நூறு மில்லி தண்ணி குடிச்சா ,குடிச்ச  நொடியிலேயே ஒரு லிட்டர்  வெளியே போயிடுதாமே !''
இல்லாததை விளக்க ஆயிரம் பாடல் ?
நம்ம ஊர் கட்சிகளின் 
கொள்கை விளக்கப் பாடல்களைக் கேட்கையில் 
சந்தேகம் பிறக்கிறது ...
இவர்கள் கொள்கை என்ன நானூறு பக்கங்களில் ,
விளக்க முடியாத அளவிற்கு ....
கொடுங்தமிழிலா இருக்கிறது ?
Thulasidharan V Thillaiakathu>>>
நல்ல காலம் மனைவியை அடிக்காமல் இருந்தாரே !!
Bagawanjee KA
அந்த தைரியம் தூக்கத்தில் கூட அவருக்கு வராதே !
Ramani S
நல்லவேளை,திருடன் பக்கத்தில் படுத்திருப்பதைப்போல கனவு காணாமல் இருந்தார்
Bagawanjee KA
இதுவும் நடக்கக் கூடும்,எதுக்கும் அவர் மனைவி தள்ளிப் படுப்பதே நல்லது !
திண்டுக்கல் தனபாலன்
கனவிற்கே இப்படியா...?
Bagawanjee KA
நிஜத்தில் நாய் துரத்தினால் பீரோவில் நுழைந்து பூட்டிக்குவாரோ ?
Chokkan Subramanian
மனைவி துரத்திய மாதிரி கனவு கண்டிருந்தால், பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை, இது தான் சாக்கு என்று மொத்து மொத்துன்னு மொத்தியிருப்பார்.
Bagawanjee KA
இவர் மொத்தினால் மனைவி வாங்கிக் கொண்டாயிருப்பார் ?தலையணையால் முகத்தை பொத்தி விடுவாரே !
ஜெ பாண்டியன்
கண்ணாடியில மனைவியத்தான் பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்.
துரை செல்வராஜூ
அடேயப்பா!?..
Bagawanjee KA
மனைவியை நேரில் பார்க்க தைரியம் இல்லைதான் ..அதற்காக ,கனவிலே வர்ற கண்ணாடியில் பார்த்தார் என்பது 'டூ மச் ' !

8 May 2016

கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா :)

                ''வெளியே தெரியாம இருந்த தலைவர் 'கீப்'போட பெயர் , இப்போ எப்படி தெரிந்தது ?''
               ''வேட்பு மனுத் தாக்கலில் ,மாற்று வேட்பாளரா  கீப்பை  நிற்கச் செய்திருக்கிறாரே  !''
தூக்கத்தைக் கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான் :)
            ''நிறைய  பேருக்கு கடனைக் கொடுத்திட்டு ,தூக்கமே வரலேன்னு புலம்பிகிட்டே இருந்தீங்களே ,இப்போ எப்படி ?''
            ''நிம்மதியா இருக்கேன் ,கடன் கொடுக்கிறதை நிறுத்திட்டு ,வாங்க ஆரம்பித்து விட்டேனே !''
முதல் இரவிலேயே கணவனை புரிந்து கொண்ட மனைவி :)
          ''டார்லிங் ,மேனேஜருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ?''
       '' உங்க ஆபீஸ் நண்பர்கள்  கொடுத்த பரிசுப் பொருளிலே நாலைந்து ஜால்ரா இருக்கே  !''
கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா :)
          ''தலைவர் 'வைப்பு'க்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டாராமே ,எந்த ஆபீசிலே ?''
          ''வைப்பு நிதி ஆபீசிலேதான் !''
ஆணுக்கு வளைகாப்பு 'கை விலங்கு'தான் !
கள்ள உறவில்  உருவாகும் பிள்ளைப் பேறை 
தொல்லைப்பேறென நினைக்கும் பெண்கள் ...
வளைகாப்பு இன்றியே பெற்ற 
பச்சிளம் குழந்தைகளை வீசியெறியும் அவலம் !
தொட்டில் குழந்தை அப்பனுக்கும் ...
காவல் துறை 'வளைகாப்பு 'செய்தால் அல்லவா அவலம் தீரும் ?

7 May 2016

மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு இருக்கா :)


பூசிய சுவரில் கீறல் போட்டு ,பாக்கி வைப்பது கொத்தனார் புத்தி:)
         ''அந்த வலைப்பூவில்  எழுதுபவர்,  கொத்தனார் வேலை செய்பவராய் இருப்பார்ன்னு ஏன் சொல்றீங்க ?''
         '' வர்ற ரெண்டு கமெண்ட்டில்  ஒண்ணுக்கு  மட்டுமே மறுமொழி கூறி, நாளைக்குன்னு பாக்கி  வைக்கிறாரே !''  
தாலி பாக்கியம் மனைவிக்கு நிலைக்குமா :)
             ''உங்க வீட்டுக்காரர் ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்னு சொல்றாரா ,ஏன் ?''
            ''அவர் செய்த தர்மம் ,தலையைக் காக்கும்னு சொல்றாரே !!''
மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு இருக்கா :)
           ''மடிசார் மாமிங்கிற சினிமா தலைப்புக்கு எதிர்ப்பாமே ?''
           ''அதனாலென்ன ,மடி 'சாரி ' மாமின்னு மாத்திட்டாப் போச்சு !''

நான் டாஸ்மாக் தண்ணியைச் சொல்லலே :)
நாம் யார்க்கும் அடிமையல்லோம் ...
என்று சொன்ன பாரதி இன்றிருந்தால் ...
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் ...
அவரும் 'மினரல் வாட்டர் அடிமை 'ஆகியிருப்பார் !

6 May 2016

கணவன் சுடச் சுட சாப்பிட மனைவியோட ஐடியா :)

                 ''என் பெண்டாட்டி புத்திசாலின்னு மதியம் சாப்பிடும் போதுதான் தெரிந்ததா ,எப்படி ?''
                 ''உனக்கு அனுப்பியிருக்கிற  ஹாட் பாக்ஸ்சை இன்னொரு பெரிய ஹாட் பாக்ஸ்சில்  வைத்து அனுப்பியிருக்காரே !''
அவர் கடமையைத் தானே  செய்தார் :)
             ''நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனமா ,ஏன் ''
             '' நடிகையை ,விரைவில் முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவேன்னு சொன்னாராம்  !''
கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா ' பிட் &ஃபைட்' தெரியணும் :)
         ''நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா நம்ப முடியலையா ,ஏண்டா ?''
          ''படிக்கிற காலத்திலே, என்கிட்டே  'பிட் 'கேட்டு ,என்னோட 'ஃபைட் 'பண்ணி பரீட்சை எழுதிவனாச்சே நீ !''
'சாரி வித் பிளவுஸ் பிட்'னு போட்டா சந்தேகம் வராது !
              ''புதுசா வாங்கின சேலையை  கணவர்கிட்டே ஏன் காட்டினோம்னு இருக்கா  ,ஏன் ?''
               ''சாரி வித் பிளவுஸ்னு போட்டிருக்கே ...உன்  பிளவுஸ் சைஸ்  கடைக்காரருக்கு  எப்படி தெரிஞ்சதுன்னு கேட்கிறாரே !''

மூணு முடிச்சுப் போடலாம் ...!
மூணு 'போகம் ' விளையலாம் ..
கல்யாண  வை 'போகம்' ஒன்றுதான் ...
மிட்டாமிராசுதாராய் இருந்தாலும் !