30 September 2016

தலைஎழுத்து உண்மையா ,யோகம் உண்மையா :)

               ''இப்போ கிடைச்ச வேலை ,முந்தியே கிடைச்சிருந்தா ..உங்களைக் கட்டிகிட்டே  இருக்க மாட்டேன்,எல்லாம் என் தலைஎழுத்து  !''
                '' உனக்கு  வேலைக்கிடைச்சதே  ,என்னைக் கட்டிகிட்ட  யோகத்தால்  தானே !''

அருகம் புல் சாறு  குடிச்சா உடம்பு மெலியுமாமே :)        
           '' தலைவர் ஊளைச் சதையைக் குறைக்கணும்னு ,தொண்டர்கள் 'சிம்பாலிக்கா'  சொல்றாங்களா ,எப்படி ?''
            ''அருகம் பூ மாலையை அவருக்கு  போட்டுத்தான் !''

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைதானே ?                                           
             ''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா  இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?'' 
             ''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே !''

மகளுக்கு வைத்தது பொருத்தமான  பெயர்தான்  :)
             ''அவருக்கு செய்ற தொழில் மேல் அதிக  பக்தின்னு ஏன் சொல்றே ?''
             ''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''

ஆளைக் கொல்வது கூலிப் படைக்கு மட்டும்தான் சொந்தமா ?
வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து 
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும் 
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?
எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?

29 September 2016

பூவின் மணம் பூவையருக்கும் உண்டு என்பது உண்மையா :)

நேற்றைய  இரவில் நடந்த தமிழ்மண  அதிசயம் >>>
                 
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
 வாசகர் பரிந்துரை 


அதிசயம் காணச் செய்த வலையுலக உறவுகளுக்கு நன்றி !

பிரபுதேவா  பிறந்ததும் ,காவிரி  பிறந்த ஊரில் தானாம் :)           
           ''தமன்னாவை ஃபாரீனர் என்றே  நினைத்திருந்தாராமே , பிரபுதேவா ?''
          ''பிரபுதேவாவைக்  கூட  நம்ம தமிழன்தான்னு  நினைச்சிருந்தோம்  ,காவிரி பிரச்சினையால் அவர் வீட்டுக்கு போலீஸ் காவல் போட்ட பிறகுதானே உண்மை  தெரியுது !''
இது கபாலிக்கு புகுந்த வீடு :)
            ''போலீஸ்  ஸ்டேசன் பக்கம் வரவே பயம்மா இருக்கு ,உனக்கு எப்படி கபாலி ?''
           ''உங்களுக்குத்தான் அவங்க Pol'ice' ,எனக்கு அவங்க வெறும் ICE தான் !''

சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...?                    
            ''ஹலோ ,ஹலோ ,நல்லா சத்தமா பேசும்மா ,கிணற்றில் இருந்து பேசுற மாதிரி இருக்கு !''
           ''அங்கிருந்துதான்ப்பா பேசுறேன் ,,என்னை எப்படிப்பட்ட பாழும் கிணற்றில் தள்ளி இருக்கீங்கன்னு இப்பவாவது புரியுதாப்பா ?சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''

டாக்டர் கையெழுத்து புரியாதுதான் ,அதுக்காக இப்படியா ?
            ''ஹலோ டாக்டர் ,உங்க பிரிஸ்கிரிப்சன்படி மருந்தை நோயாளி  வாங்கிட்டு போய்விட்டார் ,ஏன் கேட்குறீங்க ?''
           ''அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே பார்த்திருந்தேன் ?''
            ''விடுங்க டாக்டர் ,எழுதி இருந்தாலும் என்ன மருந்தை எழுதுவீங்க எங்களுக்குத் தெரியாதா ?''

பூவின் மணம் பூவையருக்கும் உண்டு என்பது உண்மையா :) 
உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !

28 September 2016

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியக் கூடாதுதானே :)

வில்லனுக்கு வில்லனா இருக்காங்களே :)            
               ''டிரைவர்,  சிகரெட் பிடிக்கிறவரை இறக்கி விடணும்னு  விசில் அடித்தால்   வண்டியை  ஏன் நிறுத்த மாட்டேங்கிறீங்க ?''
               ''ஸ்டாப் இல்லாத  இடத்தில்  இறங்கணும்னு  , இப்படி  செய்வது  அந்த  பயணியின் வழக்கமாச்சே  !''

வேகாத பருப்புக்கு இந்த பெயர் சரிதானே :)
          ''ரேஷன்  கடையிலே போடுற பருப்பை  ,ஏன் துயரம் பருப்புன்னு சொல்றீங்க ?''
          ''லேசுலே வேக மாட்டேங்குதே !''

 புரியுது ,ஆனா புரியலே :)              
           ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும்,புரியுதா ?''
           ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''
இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா :)
           ''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
          ''அழகான  பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியக்  கூடாதுதானே :)
இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து !

27 September 2016

பொண்ணுங்க ' டூ வீலரில்' எழுதக்கூடாதது :)

இவரை  மேய்க்கிறது கஷ்டம்தான் :)          
            ''உங்க கணவருக்கு  படிப்பே ஏற மாட்டேங்குது  ,மாடு மேய்க்கத்தான் அவர் லாயக்கு !''
            ''அப்படி சொல்லாதீங்க ஸார்,மாடு  மேய்க்கக் கூட  தெரியலைன்னுதான் அவரை  முதியோர்  ஸ்கூலுக்கே அனுப்பியிருக்கேன்  !''

பொண்ணுங்க ' டூ வீலரில்' எழுதக்கூடாதது :)
          ''ஏண்டா ராஸ்கல் ,என்  பின்னாலேயே வர்றே ?''
           ''தொடர்ந்து வா ,தொட்டு விடாதேன்னு உங்க வண்டியிலே எழுதியிருக்கீங்களே !''
செவ்வாய் தோஷத்தால்  திருமணம் தள்ளிப் போகுமா :)               
          ''நாலு வருசமா என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
         ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா :)
           ''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
           ''இதெல்லாம் என்னங்க பிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பாரத்தா அசந்துடுவீங்க !''

குத்துப்பாட்டு நடிகையால் ரூபாயின் மதிப்பு கூடியதா :)
பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் 
ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
வளர்ச்சி விகிதத்தை  இரட்டை இலக்கத்திற்கு 
கொண்டுவர முடியவில்லை என்பதை  உணர்ந்து ...
தீர்வு தேடிய மக்கள்  ...
 'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு  அனுப்பி உள்ளார்கள் ...
இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து 
குத்துப் பாட்டுக்கு ஆடிய நடிகை  இப்போது   MP!

26 September 2016

அந்தப்புரத்தை மறந்த அரசருக்கு அரசியின் ஆணை:)

             '' அரசர்  இரவு நகர்வலம்  செல்வது அரசியாருக்குப்  பிடிக்கலே போலிருக்கா .ஏன் ?''
              ''சமச்சீர்  க'ல'விக் கொள்கையை அரசர் முதலில் கடைப்பிடிக்கட்டும் என்று  சொல்கிறாரே !''


பணத் தேவைக்கு இதையா செய்வது  :)
             ''வங்கிக்கு போய் ஒரு முழப் பூவுக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்டீங்களாமே ,ஏன் ?''
            ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவை  வைக்கலாம்னு சொல்றாங்களே !''
தலைவலிதான் போச்சே ,அப்புறமும் ஏன் :)
            ''நேற்றுபூரா ஒற்றைத்தலைவலி ,   வலி வலது பக்கமா ,இடது பக்கமான்னு  ஞாபகம் வர மாட்டேங்குது  ,டாக்டர்  !''
           ''ரொம்பவும் யோசிக்காதீங்க  , இரட்டைத்  தலைவலி வந்திடப்போவுது !'' 

காசியில் விருப்பப்பட்டு விடவில்லை :)
             ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டுவரணும்னு சொல்வாங்க ,உன் புருஷன் எதை விட்டார்டி?''
             ''அவர் எங்கே விட்டார் ? மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமேல்:)
காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ..இனி ..
பல்லு வழியா சொல்லு போகும்னு மாறிடுமோ ?

25 September 2016

ஜோதிடம்தான், வங்கி வேலைக்கு அடிப்படையா :)

இந்த லாஜிக் சரிதானே :)
               ''பரமேஸ்ங்கிற  உன் நல்ல  பெயரை  எதுக்கு 'பராங்குசம் 'னு மாற்றிக்கப்  போறே ?''
               ''நல்ல பெயர் ஞாபகம் வர மாட்டேங்குதுன்னு யாரும் சொல்லக் கூடாதில்லே !'' 

ஜோதிடம்தான் , வங்கி வேலைக்கு அடிப்படையா :)
             ''  வங்கி மேலாளர்களுக்கு ஜோதிடமும் பார்க்கத் தெரியணுமா, ஏன்  ?''
                ''யார் கடனை திருப்பி கட்டுவார்கள் என்று ஜாதகத்தைப்  பார்த்து , கடனைக் கொடுக்க உதவுமே !''
எழுத்தாளரை , மனைவி  இப்படியா அவமானப் படுத்துவது :)
               ''பாத்திரக் கடைக்கு மனைவியோட  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
             ''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு  பிரயோசனம் இல்லையேன்னு  குத்திக் காட்டுறாளே !''

கல்யாண மொய் ,மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே:)
            ''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னு  வருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
            ''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு ..மொய் செய்யாமல் முப்பது  வாழ்த்து தந்தி வந்தது ...நான் அவர்களுக்கு  இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''

டயாபெடிக்சுக்கு உணவு பழக்க வழக்கம் :)
'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி  ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'

24 September 2016

பிறக்கப் போறது என்னா, ஆணா,பெண்ணா :)

 இருந்தாலும் இவ்வளவு செல்லமா :)         
           ''சம்பந்தியம்மா ,என் மக ரொம்ப செல்லமா வளர்ந்தவ......''
           ''நீங்க சொல்லவே வேண்டாம் ,பால் பாக்கெட்டின்  எந்த மூலையை கட் பண்ணனும்னு , உங்க மக கேட்டப்பவே நான் புரிஞ்சுகிட்டேன் !''

மனைவிக்கு வந்த சந்தேகம் !           
       ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
       ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் ?
              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
               ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
                ''மதயானைக் கூட்டம், படத்திற்கும்  கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறாரே !''

பிறக்கப் போறது என்னா, ஆணா,பெண்ணா :)
கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று 
அறிந்து கொள்வதில் பெற்றோர்கள் மட்டுமல்ல 
,மற்றோர்களும் அறிந்து கொள்ள விரும்புவதில் 
ஆச்சரியம் ஒன்றுமில்லை ...ஆனால் ,இப்படி 
பாலினத்தை வெளியே சொல்வது குற்றமென்று 
ஸ்கேன் சென்டர்களுக்கு அரசு 
அறிவுறுத்தியுள்ளது ...கர்ப்பிணிப் பெண் முகம் 
பளபளப்பாக ஆனாலும் ...இனிப்பை சாப்பிட 
ஆர்வம் அதிகமானாலும் ...வாந்தி,மயக்கம் 
இல்லாமல் போனாலும் ...சிசுவின் இதயத் 
துடிப்பு 140ஆக இருந்தால் ...பெண் குழந்தை 
பிறக்குமென்றும் ...
வலது கையை ஊன்றி எழுந்தாலும் ...வலது புற நாசி 
வழியாக சுவாசம் இருந்தாலும் ...ஆண் குழந்தை பிறக்குமென்றும் 
நம்பப் படுகிறது ...

நமக்கு மிகவும் அறிமுகமான 
...அமெரிக்காவில் மருத்துவ சேவை 
செய்துவரும் டாக்டர் நம்பள்கி தனது 
அனுபவத்தின் மூலம் ...கருவில் வளர்வது 
ஆணா ,பெண்ணா என்பதை அறியத் தந்த  
விளக்கத்தையும் படிங்க...
Number one: 
Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
Number 2:
குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!
அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!
ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.
நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியதால் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கையின் ஆணி வேர்!
 நல்ல நேரம்" என்பது தமிழ்நாடு முழுவதும் அறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!

23 September 2016

சன்னி லியோன், குழந்தை மாதிரி என்பது உண்மைதானே :)

டேட்ஸ் தள்ளிப் போனவங்க 'டேட்ஸ்' சாப்பிட்டால் ....:)          
        ''அந்த லேடி டாக்டர் , போலி  மருத்துவர் போலிருக்கா,ஏன் ?''
         ''தினசரி இரண்டு பேரீச்சம் பழம்  சாப்பிட்டா, பையன்  பிறக்க அதிக வாய்ப்பிருக்குன்னு சொல்றாரே !'' 

புதிய மருத்துவக் காது காப்பீட்டு திட்டம் போலிருக்கு :)                             
        '' உங்க சலூன்ல வாடிக்கையாளர்களுக்கு  இன்சூரன்ஸ்  வசதியா ?''
         ''ஆமா , ஹேர்கட்டிங் செய்யும்போது காது அறுந்தா,  எங்க செலவிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி  செய்து ஒட்ட வச்சுருவோம் !''
ஜோடி தேடும் தலைவர் !
           ''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசிக்கிட்டே இருக்காரே ,ஏன் ?''
          ''இன்னொரு கால் செருப்பும் வரட்டும்னுதான் !''

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் :)            
         ''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''
         ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !
          "அப்பா ,நீங்க வாங்க வேண்டாம்னு சொன்ன வைரத் தோடு அம்மா காதுலே மின்னுதே ,எப்படி ?"
          "நான் சொல்ற எதைத்தான் உங்கஅம்மா காதுலபோட்டுகிட்டா ?"

எங்கே இன்னொரு புத்தன் ?
எந்த மரத்தடியில் புத்தன் ஞானம் அடைந்தாரோ 
அந்த போதி மரம் கூட பட்டுப் போயிருக்கும் ...
ஆனால் ,அடையாறு ஆலமரத்திற்கு வயது 
நானூற்று ஐம்பது ஆனபின்பும் ...
அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !

சன்னி லியோனும் ,உண்மையில் குழந்தை போல்தான் !
அமெரிக்காவை கதி கலக்கிக் கொண்டிருந்த 
ஒசாமா பின் லேடனையே...
கவர்ச்சியால் கதி கலக்கிய சன்னி லியோன்
'குழந்தை 'மாதிரி என்று பறைசாற்றி இருக்கிறார்  
உடன் நடித்த நம்மூர் நடிகர் ஒருவர் !
உண்மைதான் ...
பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லை !

22 September 2016

மனைவி இப்படியும் கட்டிப் பிடிக்கலாம் ,ஜாக்கிரதை :)

எழுத்தை மட்டும் ஆளத் தெரிந்தால் போதுமா :)
           ''அவர் எழுதின 'தம்பதிகளின் ரொமான்ஸ் ரகசியங்கள் ' புத்தகம் செம சேல்ஸ் ஆகுதே ,ஆனாலும்  ஏன்  சோகமா இருக்கார் ?''
           ''அவர் மனைவியிடம் இருந்து டைவர்ஸ் நோட்டீஸ்  வந்திருக்காமே !''
நுணல் மட்டுமா வாயால் கெடும் :)                
       ''அந்த டாக்டர் போர்டு எழுதி வைத்ததால் மாட்டிக்கிட்டாரா ,என்ன எழுதி இருந்தார் ?''
      ''இங்கு தேர்தல் ஜுரத்துக்கு ஊசி போடப்படும்னுதான் !'' 

50/50 தான் தேறும் போலிருக்கு !            
           ''நர்ஸ் ,நோயாளிங்களை படுக்கவைக்க CCU வார்டில் இடமிருக்கா ,இன்னிக்கு நாலு மேஜர் ஆப்பரேசன் இருக்கே !''
            ''தேவையான அளவுக்கு ரெண்டு பெட் இருக்கு டாக்டர் ''
            ''மீதி ரெண்டு பேருக்கு ?''
            ''மார்ச்சுவரியில் இடம் இருக்கே !''

'ஷக்க லக்க 'பேபியை லவ் பண்ணத் தோணலே :)
        ''ஷக்க லக்க பேபின்னு பாடி, ஒரு பிகரை லவ் பண்ணியே ,அதை ஏன் கை கழுவிட்டே ?''
        ''அது என் அம்மாவோட சக்களத்தி பேபின்னு ,என் அப்பா ரகசியமா சொல்லிட்டாரே !''

மனைவி இப்படியும் கட்டிப் பிடிக்கலாம் ,ஜாக்கிரதை :)
மனைவிமார்கள் ...
கணவனின் கொடுமை தாங்க முடியாமல் 
கெரசினை ஊற்றிக் கொண்டு தற்கொலை 
செய்துக் கொண்டதெல்லாம் அந்தக் காலம் !
இப்பொழுது எல்லாம் ...
எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !

21 September 2016

பைக் பில்லியன் காதலி, பில்லியனர் மனைவியாகப் போறாளோ :)

அப்பனும், மகனும் கணக்கிலே வீக் :)     
              ''உங்கப்பாகிட்டே உன் ஹோம் வொர்க் கணக்கைப் போட்டு தரச் சொல்லு ,எனக்கு வீட்டு வேலை  நிறையயிருக்கு !'' 
            ''போங்கம்மா... அவர் தப்பு தப்பா செய்வார் ,உன் ஹோம் வொர்க்கை அவர்கிட்டே கொடுத்துட்டு ,என் ஹோம் வொர்க்கை நீ செய்ஞ்சு கொடு !''                

கை நீட்டி ... வாங்கலாம் ,அடிக்கக் கூடாது :)           
                 ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
                 ''கை நீட்டுற வேலையை ஆபீசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''

பைக் பில்லியன் காதலி, பில்லியனர் மனைவியாகப் போறாளோ :)
                  ''  உன் கூட  பைக் பில்லியனில் ,  ஒட்டி  உட்கார்ந்துட்டு  திரிஞ்ச பொண்ணை  இப்போ காணலியே ?''
                    ''உண்மையிலேயே முதுகிலே குத்திவிட்டு ,இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டாளே !''
பாவம் ,தாய்ப் பாசம் என்ன செய்யுமோ :)
             ''என்னங்க, ஓடிப்போன நம்ம பொண்ணு புது  தாலிக்கயிறும் கழுத்துமா வாசல்லே  வந்து நிக்கிறா !''
             ''உள்ளே வந்தா  தூக்கு  கயிறும் கழுத்துமாதான் என்னை பார்க்க முடியும்னு சொல்லி அனுப்பிடு !''

ஓட்டுனர் வண்டியை மட்டும் ஓட்டவில்லை :)
பிரேக் போட்டால் வண்டி நிற்கிறதோ ,போய் நிற்கிறதோ  ...
எதிரே பேய் நிற்பதாகவே நினைக்கிறார்கள் ஓட்டுனர்கள் !
எனவேதான் கறுப்புக்கயிறு ,வேப்பிலைக் கொத்து ,எலுமிச்சம்பழம் வண்டிகளில் தொங்குகிறது !

20 September 2016

எப்பவுமே துணை வருவாளா துணைவி :)

பச்சோந்தி சின்னம் கொடுத்தாலும் பொருந்தும் :)        
            ''வரப் போற தேர்தல்லே சுயேட்சையா போட்டியிடப் போற அவருக்கு ,குரங்கு சின்னம் கொடுக்கலாம்னு ஏன் சொல்றே ?''
           ''எல்லாக் கட்சிகளுக்கும் தாவினவர் தானே அவர் !''

முன்னோர் சொன்னது அர்த்தமுள்ளது :)      
         ''இமய மலைக்கு போயிட்டு வந்தீங்களே ,என்ன தெரிஞ்சிகிட்டீங்க ?''
          ''அந்த  உயரத்திலும் தவளை இருக்கே ,நம்மாளுங்க 'கிணற்றுத் தவளையாய் இருக்காதே 'ன்னு  சொன்னது  சரிதான் !''

நொந்து நூடுல்ஸ் ஆனவர்,நூடுல்ஸ் ஸ்டால் போடலாமே:)      
                   ''புத்தகத் திருவிழாவில் ,அந்த பதிப்பாளர் போட்ட புத்தகம்விற்கலைன்னு எப்படி சொல்றே ?''
           ''அடுத்த வருடம் புத்தக ஸ்டாலுக்கு பதில் டெல்லி அப்பள ஸ்டால் போடப் போறேன்னு சொல்றாரே !''
எப்பவுமே  துணை வருவாளா துணைவி  :)
          ''உங்க வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
         ''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''

குற்றவாளியை விட மோசமானவன் தப்பிக்க விடுபவன் !
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது 
இது நீதியின் அடிப்படை அம்சம் !
காவல் துறையில் உள்ள கறுப்பாடுகள் இதை சுயநலத்திற்காக வேறுவிதமாக புரிந்து கொண்டு செயல் படுவார்களோ ?
ஆயிரம் குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
மாட்டிக் கொண்ட ஒரு குற்றவாளியை தப்பிக்க வைத்தால் என்ன குடிமுழுகியா போய்விடும் என நினைத்து  ...
கிரிமினல்களையும் ,பயங்கரவாதிகளையும்  தப்ப விடுகிறார்களோ !

19 September 2016

காதலிக்கவா நாயா அலைவது :)

உடம்பிலே  துணியில்லாமல் குளிக்கும்  துணிச்சல் யாருக்கு வரும் :)           
             ''அருவியிலே குளிக்காம , எதுக்கு அந்த போர்ட்டையே   பார்த்துட்டு நிற்கிறீங்க ?''
              ''ஜட்டியுடன்  யாரும்  குளிக்கக் கூடாதுன்னு போட்டுருக்கு ,அதுவுமில்லாம  எப்படின்னுதான்  யோசிக்கிறேன் !'' 

காதலிக்க நாயா அலையலாமா :)
           ''தினமும் நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் வர்ற பொண்ணைக்  காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீ யே ,காதல் வந்ததா ?''
          ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''

'சின்ன 'மாப்பிள்ளை(யும்) ஆகத் துடிக்கும் 'பெரிய 'மாப்பிள்ளை  :)
                ''என் புருஷன் மேலே ஒரு கண்ணாவே இருன்னு சொல்றீங்களே ,ஏன்ப்பா?''
               ''மூத்த மாப்பிள்ளையான  உங்களுக்கே செஞ்சுகிட்டே இருந்தா ,வரப் போற சின்ன மாப்பிள்ளைக்கு என்ன செய்வேன்னு கேட்டதுக்கு ..'அதுக்கு அவசியமே இருக்காது மாமா 'ன்னு சொல்றாரே !''

மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் :)
            "என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா   இருக்காங்களா ,எதிலே?"
            "புருசன்களை திட்டுவதில் தான் !" 

எல்லா நாக்கும் விரும்பும் ஒரே சுவை எதுவும் உண்டா ?
சிங்கம் சைவம் சாப்பிட்டதா  சரித்திரம் இல்லை ...
யானை அசைவம் சாப்பிட்டதா பூகோளமும் இல்லை ...
ஆனா ,மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை !

18 September 2016

கணவன் பல் வலின்னா ,லேடி டென்டிஸ்ட்டைப் பார்க்கணுமாம் :)

படத்தைப் பார் சிரின்னு சொல்லலாமோ :)            
            ''உங்க பையன் இன்னும் ஸ்கூலுக்கே போகலியே ,இப்பவே பிற்போக்குவாதி ஆயிட்டானா ?''
             ''அட நீங்க வேற ,நான் சொன்ன அர்த்தத்தை (படத்தை )நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க !''
படம் தந்து மொக்கை போட உதவிய சகோ .பரிதி முத்து ராஜன் ஜி அவர்களுக்கு நன்றி !
மனைவி குத்துக் கல்லா இருந்தா ....:)
         ''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
          ''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''

கணவன்  பல் வலின்னா  ,லேடி  டென்டிஸ்ட்டைப் பார்க்கணுமாம் :)
           ''பல் வலிக்குதுன்னு சொன்னா ,மல்லிகா டாக்டரைப் பாருங்கன்னு   ஏன் சொல்றே ?''
            '' பொண்ணுன்னா  பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''

தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் !
            ''டாக்டர் ,நாளைக்கு என்  அறுபதாவது பிறந்த நாள்னு சொன்னதும் , பண்ணவிருந்த ஆபரேசனை ஏன் தள்ளி வச்சிட்டீங்க ?''
           ''நல்லநாளும் அதுவுமா ...உங்க  சொந்த பந்தங்களோட  சந்தோசம் கெட்டு விடக் கூடாதுன்னுதான் !''

எங்காவது ஹோட்டல் திராவிடா இருக்கிறதா ?
பேரூந்து பயணத்தின் போது...
சாலையோரம் 'ஆர்யா' உணவகங்களுக்கு பஞ்சமில்லை ...
முன்பு ஆரிய பவன் ,இப்போ ஹோட்டல் ஆர்யா !
நடத்துவதும்,சமைப்பதும்,உண்பதும் நம் தமிழன்தான் ...
ஆனால் இன்னமும் ஏன் போகவில்லை இந்த 'ஆர்ய'மோகம்?

17 September 2016

அமலா பாலும் ,ஆவின் பாலும் ஒன்றுபோலத் தானா :)

            ''நடிகை அமலா பால் ,இயக்குனர் விஜய்  விவாக ரத்துன்னு  சொன்னா ,உன்னாலே ஏன் நம்ப முடியலே ?''
            ''பழகப் பழக  பாலும் புளிக்குங்கிறது  சரி ,அமலா பாலுமா !''
உப்பு போட்டு சாப்பிட்டால் ரோசம் வருமா :)                       
              ''நான் சமையலில் உப்பே போடுறதில்லைங்கிற  விஷயம்  என் வீட்டுக்காரருக்கு  தெரிஞ்சு போச்சுடி !''
             ''ரோசம் வந்து அடி பின்னிட்டாரா ?''
             ''ஊஹும் ,அவரே சமைக்க ஆரம்பித்து விட்டார் !''

மனைவி சேலை  பார்க்கும் நேரத்தில் .....:)
              ''இரண்டு சினிமா தியேட்டர் உள்ள மாலில்தான் எனக்கு  சேலை எடுக்கப் போகணும்னு பிடிவாதமா சொல்றீங்களே ,ஏன் ?''
              ''போன தடவை நான்  படம் பார்த்துட்டு வந்த பிறகும் கூட ,நீ ஒரு  சேலைக்கூட  செலக்ட் பண்ணலையே !''

USல் வேலை செய்தால் லீவு உடனே கிடைக்குமா :)
             ''கொள்ளி வைக்க வேண்டிய ஒரே பையன் ,லீவு கிடைச்சு வர 'மார்ச் 'மாதம் ஆகும்ன்னா ...அதுவரைக்கும் அப்பன் பாடியை எங்கே வைக்கிறது ?''
              ''மார்ச் 'சுவரியிலேதான் !''

டொனேசன் கொடுத்துப் படிப்பதும் மூலதனம்தான் :)
பல் சொத்தையை சிமெண்ட் பூசி அடைக்கலாமென
நமக்கு புரியும்படி சொல்லி ...
அதற்கு ஐநூறு ரூபாய் செலவாகும் 
எனக் கூறும் மருத்துவரிடம் ...
இதுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சிமெண்ட் கூட தேவைப் படாதேயென சொல்லமுடியாது ...
ஐநூறை அவர் கேட்கவில்லை ,அவர்மூலமாய் 
நன்கொடை வசூல் பண்ணும் 
மருத்துவக் கல்லூரி நிறுவனர் கேட்கிறார் !

16 September 2016

மேனேஜரின் பார்ட்டி ஐடியா பலிக்குமா :)

ரேஷன் கடை SMS  நல்லதுதான் ,ஆனால் ...:)
               ''வாங்கின பொருளை மட்டும் SMSல்  காட்டினா போதும்னு ஏன் சொல்றீங்க ?''
               ''ஏழு பொருள் வாங்கினதா SMS வந்திருக்கு ... சீனி மட்டும்தானே கொண்டு வந்து இருக்கீங்க ,மற்ற பொருட்களை எந்த சிறுக்கிகிட்டே  கொடுத்தீங்கன்னு என் மனைவி கேட்கிறாளே !''

 மேனேஜரின் பார்ட்டி ஐடியா பலிக்குமா :)
                ''எனக்கு சினிமா சான்ஸ் வர வர குறைஞ்சுகிட்டே வருதே , என்ன செய்யலாம் , மேனேஜர் ?''
               ''தொப்புள் அணி விழான்னு  எல்லோரையும்  விருந்துக்கு அழைக்கலாம்  !''
மனைவி குண்டாயிருந்தா இப்படியா கிண்டல் பண்றது :)
                 ''என்னங்க ,குக்கரைப் பார்த்தா என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
                 ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே   !''

பணம்... திருமணத்திற்கு முன்பும்,பின்பும் :)
             ''கல்யாணத்திற்கு முன்னாலே சட்டை ,பேண்ட்டுக்கு பாக்கெட் வைக்க சொல்வீங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறீங்க ?''
              ''பணம் பாக்கெட்டில் இருந்து  ஜாக்கெட்டுக்கு மாறிடுச்சே !''

நீச்சல் உடை நாயகியே ,இங்கே 'சீதாப் பிராட்டியா ' ?
   கொள்கை முடிவு எடுப்பதில் ...
  நம்மூர் நடிகைகள் அரசியல்வாதிகளை 
  விஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது ...
  கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கிளாமராய் நடிப்பார்களாம் !
  இங்கே சதையை வைத்துதானே கதையே எழுதுகிறார்கள் ...
  பிறகேன் இந்த கொள்கை விளக்கம் ?

15 September 2016

காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா :)

இதுக்காவது பயன்படுதே  பல்லாங்குழி  :)      
              ''பாட்டி  இப்போ எதுக்கு பல்லாங்குழி  பெட்டியைக் கேட்கிறே ,விளையாடப் போறீயா ?''
             ''அட நீ வேற ,காலை மாத்திரை ,இரவு  மாத்திரை எதுன்னு தெரிய மாட்டேங்குது ,பிரிச்சு முன்னாடியே  போட்டு வச்சுக்கலாம்னு தான்!''
கலருக்கு கேசரியே சாட்சி :)
          ''குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிகப்பா பிறக்க வாய்ப்பில்லைன்னு   எப்படி உறுதியாச் சொல்றே ?
        ''கேசரியிலே குங்குமப் பூவை போட்டும் கேசரி கலர்  சிகப்பா மாற  மாடேங்குதே!''

தானாடா விட்டாலும் தசை ஆடுமோ :)
          ''டார்லிங் ,முதலிரவிலே எனக்கே பதட்டமாயிருக்கே,உனக்கு எப்படி ?''
          ''எனக்கு அனுபவமாகிப் போச்சுங்க !'' 
         
காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா :)
          ''கண்ணு ,மூக்கு ,வாய் எல்லாம் முன்னாடி பார்க்கயிருக்கு...காது மட்டும் ஏன் இரண்டு  பக்கமும்  இருக்கு,டார்லிங் ?''
          ''சில லூசுங்க இந்த மாதிரி கேட்பதை இந்த காதுலே வாங்கி,அந்த காது வழியா விடத்தான் !''

மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல !
சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு 
வருகை தரும் பயணிகள்  கவனத்திற்கு ...
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 
மேற்கூரை  மூன்று மாதத்தில் நான்கு முறை 
இடிந்து விழுந்து இருப்பதால் ...
இரும்பு ஹெல்மெட்டுடன் வருகை தருமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !
விமான பயணத்தில் மட்டுமல்ல 
விமான நிலையத்திலும் கூட ...
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை 
பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !
    (குறிப்பு ....இந்த பதிவை எழுதி மூன்று  வருடம் முடிந்த பின்பும் கூட ,சென்ற வாரம் வரை 67 முறையாக கூரை பெயர்ந்து விழுவது தொடர்கிறது :)

14 September 2016

அன்று செய்தது அபார்ஷனுக்கு உதவி ...இன்று :)

இவனுக்கு எப்படி பதில் சொல்றது :)        
         ''வெள்ளம் வரும்போது அணை போடணும் ,தெரியுதா ?''
         ''அதெப்படி  ஸார்  ,அணையைத் திறந்தால் தான்  வெள்ளமே வருது ?''

எப்படா ஸ்கூல் விடும்னு  இருப்பாங்களோ ?       
         '' நம்ம பள்ளிக்கூட மணியை ,உடனே எலெக்ட்ரிக் மணியாய்  மாற்றணுமா ,ஏன் ?''
         ''தெருவிலே ,சோன்பப்டி வண்டிக்காரன் அடிச்ச மணி சத்தத்தைக் கேட்டு எல்லாரும் வெளியே ஓடிட்டானுங்களே !''

அன்று  செய்தது அபார்ஷனுக்கு உதவி ...இன்று :)
                ''குழந்தைப் பிறக்காததற்கு  காரணம் , நான் இல்லைன்னு லேப் ரிசல்ட் சொன்னாலும் என் புருசன் நம்ப மறுக்கிறார்டீ!''
               ''கல்யாணத்திற்கு முன்னாடியே ,அபார்ஷன் பண்ணிக்கிட்டதை  சொல்லிப் பாரேன் !''
அழகை ரசிக்க அழகு தேவையா ?
  விரலில் எட்டிப் பார்த்தது ஒரு துளி இரத்தம் ...
  குத்திய முள் கேட்டது ...
  நான் ரசிக்கும் ரோசாவை நீ ஏன் பறித்தாய் ?

13 September 2016

மனைவியை வாடி ,போடின்னு ஏன் சொல்லக்கூடாது :)

மிருகங்களால்  தொந்தரவு வரக் கூடாதுன்னு  இந்த ஆசனமா :)           
           ''புலித் தோல் மற்ற மிருகங்களுக்கு கிலியைக் கொடுக்கும்னு  ஏன்  சொல்றே ?''
           ''அதனால்தானே ,  முனிவர்கள்  அது மேலே உட்கார்ந்து  தவம்  இருக்காங்க !''

கடவுளுக்கே பொறுக்காது என்பது சரிதான் :)
         ''என்னடி சொல்றே ,' வரம் தா ' ன்னு நான் பாடுறதைக்  கேட்டு கடவுள் நிச்சயம் வருவாரா ?''
         '' இனி வாய் திறந்து பாடமாட்டேன்  என்று, உன்னிடம் சத்தியம்  வாங்கிட்டு போக வந்துதானே ஆகணும் !'' 
 கடைக்காரர் செய்தது சரிதானே :)                                                                            
        ''அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு  ஏன் சொன்னார் ?''
       ''  ஜெராக்ஸ்சில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் ,தப்பா ?''

மனைவியை வாடி ,போடின்னு  ஏன் சொல்லக்கூடாது  :)
            ''உன் பெண்டாட்டியை நீ வாடி ,போடின்னு சொல்றது எனக்கு சரியாப்படலே !''
            ''சரி ,சொல்லிட்டுப்  போடான்னு அவளே சொல்லும்போது உனக்கென்ன வந்தது ?''

வாழ்க்கைத்  தத்துவமே  இதிலிருக்கு  :)
        உரிக்கும்போது கண்ணீரை வரவழைக்கும்  வெங்காயம்தான் ...
        நாவிற்கு சுவை !
        வாழ்க்கையும் அப்படித்தான் ...
        கஷ்டத்தில் கண்ணீரும் 
       கடந்த பின்  மகிழ்ச்சியும்  வருதே !

12 September 2016

கல்யாணப் பொண்ணுக்கு இப்படியுமா சந்தேகம் வரும் :)


இவனெல்லாம் இங்கே இருக்க வேண்டிய ஆளில்லை :)
            ''லெக்சரருக்கும் ,புரொபசருக்கும்  என்ன வித்தியாசம் ?''
             ''பிரசங்கிக்கும் ,அதிக பிரசங்கிக்கும்  உள்ள வித்தியாசம்தான் !''

பொழைக்கத் தெரிந்த நண்பன் :)
          ''உன்னோட திருமண அழைப்பிதழில்  வங்கிக்கணக்கு எண்ணை எதுக்கு குறிப்பிட்டு இருக்கே ?''
          ''திருமணத்துக்கு வர முடியாட்டியும் பரவாயில்லை ,மறுமொய்யை வங்கிக் கணக்கில் போடவும்னு சொல்லி இருக்கேன் !''

பையனுக்கு இப்படியும் பாரதி நினைப்பு :)        
           '' பாரதி பிறந்த நாள் வந்தாலே எனக்கு என் தமிழ் வாத்தியார் ஞாபகம்தான் வரும் !''
            ''பாரதியாரோட கவிதைகளை அவர் அவ்வளவு அழகா சொல்லி தருவாரா ?''
            ''ஊஹும் ,அவரோட பொண்ணுங்களுக்கு  மகா,கவி ,பாரதின்னு  பெயர் வச்சிருக்காரே !''

கல்யாணப் பொண்ணுக்கு இப்படியுமா சந்தேகம் வரும் :)
              ''தீ அணைப்புத் துறையிலே வேலைப் பார்க்கிற வரனைப் பார்த்தா நல்லாத்தானே இருக்கு ,ஏண்டி வேணாங்கிறே ?''
            ''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே  !''

மனைவியால் நொந்தவரின் கேள்வி :)
          என் மாமனார் போனார் ...என் மாமியாருக்கு மகிழ்ச்சி !
          என் அம்மா போனார்  ..என் மனைவிக்கு மகிழ்ச்சி !
          எனக்கு மகிழ்ச்சி ...என் அம்மாவின் ஒரே மருமகள் போனால்தான்  வருமோ ?

11 September 2016

லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ :)

இதுகூட தெரியாம ஏன்  திருடணும் :)        
             ''திருட்டுப் பசங்க ,பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போச்சுன்னு வருத்தப் படுறாங்களா,ஏன் ?''
            ''ATM மெசின்னு நினைச்சு அவங்க பெயர்த்தெடுத்தது பாஸ் புக் பிரிண்ட் பண்ற மெசினாம்!''
இதைக் கேட்ட மனைவிக்கு எப்படியிருக்கும் :)               
           ''என்னங்க ,இந்த லேகியத்தை எப்படி சாப்பிடுறீங்க ,பயங்கரமா கசக்குதே  !''
           ''கல்யாணம் ஆனதில் இருந்து ,கசப்பும் எனக்கு பழகிப் போச்சே !''

பாரி முனையும் ,பாரிஸும் ஒன்றா ?            
               ''ஹலோ ,நான் இப்போ விமானத்திலே இருக்கேன் ,அதனாலே  நீ பேசுறது சரியா எனக்கு கேட்க மாட்டேங்குது !''
             ''அட  நாதாரிப் பயலே ,எதிர்த்த  பிளாட்பாரத்தை  பார்த்து பேசுடா   ,சிக்னலும் கிடைக்கும் ,நான் நிற்கிறதும் தெரியும் !''

பொண்ணு பார்க்கையில் முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது !
           ''புது பெண்டாட்டிகிட்டே , டெய்லி டைரி எழுதுவேன்னு சொன்னது தப்பா போச்சா , ஏண்டா ?''
           ''நான் கராத்தேயில்  ப்ளாக் பெல்ட் வாங்கினவ ...என்னை  அடிச்சா.. இன்று 'திருப்பு முனை ஆன நாள் 'ன்னு எழுத வேண்டியிருக்கும்னு  சொல்றாளே !''

லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ ?
        ஒரு சில கோவில்களில் ...
       'பிற மதத்தினர் உள்ளே செல்ல அனுமதிஇல்லை 'என எழுதப்பட்டுள்ள வாசகங்களைப் படிக்கையில் மனதில் வலிக்கின்றது !
        இதற்குப் பதிலாக ...
        வழிபாடு ஸ்தலங்களில் எல்லாம் ...
       'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
        எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே !

10 September 2016

சுடிதார் சொல்லுதே, செல்லும் இடத்தை :)

கண்டக்டர்  கேட்டதும் தப்புதானே :)
      ''பஸ்  புறப்படவே இல்லே  , அந்த  ஊருக்கு எப்போ போய் சேரும்னு அபசகுனமா கேட்கிறீங்களே ,நியாயமா ?''
      ''போகும் போதே , எங்கே போறீங்கன்னு கேட்டீங்களே ,அது நியாயமா ?''

இங்கே எல்லோரும் ஓரினம்தான் :)    
              ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
               ''ரயிலைப்  பிடிக்கணும்னா வேற  வழியில்லையே !''

சுடிதார் சொல்லுதே, செல்லும் இடத்தை :)
          ''கண்டக்டர் ,நான்  போற இடத்தை  சொல்லவே இல்லை, சரியா எட்டு ரூபாய் டிக்கெட் கொடுக்கிறீங்களே ,எப்படி ?''
          ''முன்னாடி நிற்கிற சுடிதார்  பெண்ணை நீ பார்க்கும் போதே  தெரிஞ்சு போச்சே !''
அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாமா :)
         ''ஏன் டாக்டர் ,ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட்ன்னு சொல்றீங்க ?''
         ''ஆபரேஷனில பொழச்சுக்கிட்டவரு.பில்லைப் பார்த்ததும் போய் சேர்ந்து விட்டாரே !''

 தோடுன்னா சரி  'தோடு 'விடத்தான் கூடாது :) 
    சிறிய வயதில் காது குத்திய போது ...
    தோடு வாங்கித் தராமல் 
   'வெளக்கமாத்து 'குச்சி குத்தி 
    ஏமாற்றிய அப்பாதான் ...
    திருமணத்தின் போது...
    மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும் 
   மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
    பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !

9 September 2016

சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலமாமே :)

காது செவிடானாலும் பரவாயில்லை :)  
     ''ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலே இருக்கிற அந்த வீட்டுக்கு  யாருமே வரமாட்டாங்க ,நீங்க ஏன் அங்கே குடி போகணும்னு நினைக்கிறீங்க ?''
    ''அந்த ஸ்டேஷன்லே இருந்து  இலவச வை ஃபை  கிடைக்குதாமே !''

BJPயினால்  வந்த மொக்கை :)                             
        ''அந்த கஞ்சப் பிசினாரி ,அந்த கட்சியில்தான் சேருவார்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
       ''மிஸ்டு கால் கொடுத்தா சேர்த்துக்கிற கட்சி அதுதானே !''

இப்படியும் சின்னதா கடிக்கலாம் !
     ''தலைவரே ,அதுதாங்க பள்ளிவாசல் !''
     ''அப்படியா ,எந்த பள்ளிக்கு வாசல் ?''

தம்பதிக்குள் 'குளுர் 'விட்டுப் போகலாம் ,ஆனால் ...?
           ''இன்ஸ்பெக்டர் டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் ,அப்பவும்  எனக்கு குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
          ''எனக்கு எப்பவோ குளிர் விட்டுப் போச்சு சார் !''

சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலமாமே  :)
சமந்தா ரெட்டி தான் உடுத்திய உடைகளை 
ஏலம் போட்டு வருகிற பணத்தில் 
ஏழைக் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
உங்கள் உதவியை உங்கள் மாநிலக் குழந்தைகளுக்குக் கூட செய்துக் கொள்ளுங்கள் ... 
ஆனால் ...ஏலம் சென்னையில்தான் நடக்கணும் !
சிலுக்கு ஸ்மிதா கடித்த கொய்யாப்பழ எச் 'சிலுக்கு ' கொட்டிக் கொடுத்தவர்கள் இங்கேதான் ஏராளமாய் இருக்கிறார்கள் !
 உங்க பல் பதிந்த ரொட்டிக்கு கூட 
கோடிகளை கொட்ட ஜொள்ளர்கள் இங்கே 
காத்துக் கிடக்கிறார்கள் !

8 September 2016

ஒரு குடிகாரனின் தத்துவம் :)

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....                                         
           நேற்றைய தினம் கணணி தொடர்பு அறுந்து போனதால்  பதிவைப் போட முடியவில்லை ! அது அறுந்து போனது என்பதால் ,தினசரி பதிவின் தொடர்ச்சி அறுந்து போகட்டும் என்று விட்டு விட முடியுமா ?அதான் ,இந்த மீள்பதிவு !
 நன்றி !

நாட்டிலே சோம்பேறிகள் பெருகிவிட்டார்களோ :)
               '' புது வருசத்துக்கு வரப்போற புதுமைக் காலண்டர்  செம சேல்ஸ் ஆகப் போவுதா ,ஏன் ?''
               '' எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் ,வாரம் ஒரு முறை கிழிக்கிற வீக்லி காலண்டர் வரப் போவுதே !''

ஒரு குடிகாரனின் தத்துவம் !
       ''மச்சி ,நமக்கு பிராந்தி ,பீர் ,ரம் பிடிக்குது .ஒயின் பிடிக்க மாட்டேங்குதே ?''
     ''ஓயின்னு  சொல்லிப் பாரு ,உதடுகள் கூட ஒட்ட மாட்டேங்குதே !''

நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?
           '' உன்னை கதாநாயகியா நான்தான் அறிமுகப் படுத்தினேன் ...ஆனா, உன் கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தமா இருக்கு !''
           ''டோன்ட் ஒர்ரி ,அடுத்த தடவை கட்டாயம் வந்துடுங்க சார் !''

143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு !
       143ன்னு  சொன்னா ...
      வாலிப அகராதியில் வேண்டுமானால் 
   i love you என்றிருக்கலாம் !
      ஆன்மீக அகராதியில்,
      அது நேபாளில் உள்ள சிவன் சிலை 
       உயரத்தைக் குறிக்கும் !

7 September 2016

காதலி மூணாறு தேவதைதான் :)

          அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....                                          07.09.2016 
           நேற்றைய தினம் கணணி தொடர்பு அறுந்து போனதால்  பதிவைப் போட முடியவில்லை ! அது அறுந்து போனது என்பதால் ,தினசரி பதிவின் தொடர்ச்சி அறுந்து போகட்டும் என்று விட்டு விட முடியுமா ?அதான் ,இந்த மீள்பதிவு !ஏற்கனவே  படித்து நொந்து போனவர்கள் ,அடுத்த நாள் பதிவுக்கு சென்று விடலாம் !
நன்றி !

 முட்டைத்  தோசை போடவாவது தெரியுமா :)          
        ''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே ?''
       ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே    !''
மேயர் பெண் என்றால் நகரத் தாய் எனலாமோ  ?         
             ''துணை மேயர்  கோரிக்கை வைக்கிறாரே ,என்னது ?''
             ''மேயரை நகரத் தந்தைன்னு சொல்ற மாதிரி ,துணை மேயரை ஏன் நகர மகன்னு சொல்லக்கூடாதுன்னு  கேட்கிறாரே  !''

காதலி மூணாறு தேவதைதான் !
            ''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
            ''மூணாறுதான்!''

இவர்கள் ஓடிப் போக மாட்டாங்க ,காணாமல் போயிடுவாங்க !
     நிலக்கரி வெட்ட கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டுகோப்புக்களை காணவில்லையாம் ...
     பூமிக்கு அடியில் இருந்த  பல கோடி டன் நிலக்கரியே காணாமல் போகும் போது...
     கோப்புக்கள் காணாமல் போனது ஒன்றும் அதிசயம் இல்லையே !

6 September 2016

என்று தீருமோ இந்த செல்பி மோகம் :)

பேய் எந்த மொழியில் பேசும் :)
            ''நான் புளியமரத்துப் பேய் ,நீ  மட்டும்  எப்படி ஆங்கிலம்  பேசுறே   ?''
            ''நான் 'பட்ட 'மரத்துப் பேய் ஆச்சே !''

என்று தீருமோ  இந்த செல்பி மோகம் :)
        ''என்னங்க சொல்றீங்க ,என்னை மாதிரியே என் பொண்ணுமா?''
        ''ஆமா ,கண்ணாடியில்  நீ அடிக்கடி பார்த்துக்கிற மாதிரி ,உன் பொண்ணு செல்பியில் பார்த்துக்கிறாளே !''

தூங்கு மூஞ்சி மரம்னா  தப்பாவே ஏன் நினைக்கணும் ?  
              ''தூங்கு மூஞ்சி மரத்தை, உதாரணமாய்  எடுத்துகிட்டு வேலை செய்யணும்னு  வங்கி மேலாளர் சொல்றாரே ,ஏன் ?''
              ''அந்த மரத்தின் இலைகள் பகல்லே தூங்காதாமே ?''

வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் ...?
            ''அவங்களை ,ஏன் மனமொத்த  தம்பதி 'வர் 'கள்னு சொல்றீங்க ?''
            ''பதிவர்கள் அவங்க ரெண்டு பேரும் ,காதலிச்சு கல்யாணம்   பண்ணிகிட்டவங்களாச்சே  !'' 

 என்னமா யோசிக்கிறாங்கையா இந்த கிரிமினல்கள் !
         நடிகர்ஜெய்சங்கரை தென்னகத்துஜேம்ஸ்பாண்ட் என்று சொல்வார்கள் !
        ரிஸ்க் எடுப்பது  ரஸ்க் சாப்பிடுறமாதிரி ,கர்நாடக சிறையில் இருந்த கிரிமினல் கைதி ஜெய்சங்கரும் தப்பித்து விட்டார் ...
        24மணி நேர காவல் ,CCTVகாமெரா ,மின்சார வேலி, 30அடிஉயரச்சுற்றுச்சுவர் அனைத்தையும் தாண்டி தப்பித்து விட்ட இவனல்லவோ 
        உண்மையான ஜேம்ஸ்பாண்ட் ?

5 September 2016

மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையா :)

 எதுக்கு நேரம் அதிகமாகும் :)           
               ''நான்  டிரஸ் சேஞ்ச்  பண்ணிக்கிட்டு வெளியே  கிளம்புற  நேரத்திலே காப்பி கேட்கிறீங்களே  ..இப்போ பாலைக் கொதிக்க வைச்சா ,பால் 'ஆடை கட்டி' கொதிப்பதற்குள்  போதும் போதும் என்றாகி விடுமே  !''
                  ''நீ 'ஆடைகட்டி ' வருவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடுமே !''

 மன நோயாளிகளின் எண்ணிக்கை கூட இவரும்தானே காரணம்  :)
                  ''மன நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கான தொண்டு அமைப்பை தொடங்கி உள்ளாராமே ,அந்த நடிகை ?''
                  ''விசுவாசமுள்ள நடிகை ,தன் ரசிகர்களுக்காக  நல்ல காரியம் பண்ணியிருக்காரே !''

மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையா :)
           ''குலம் கோத்திரம்  தெரியக்கூடாதுன்னு ஜாதகம்  பார்க்காம கல்யாணம் பண்ணியும் புண்ணியமில்லாமப்  போச்சா ,ஏன் ?''
           ''வீட்டிலே எனக்கு தினசரி அர்ச்சனை நடந்துகிட்டுதானே இருக்கு ?''

சர்க்கரை நோய் இருந்தா இப்படியும் ஒரு வாய்ப்பு !
             ''உங்க ஸ்வீட் ஸ்டால் கடைக்கு எப்படிப்பட்ட ஆட்கள்  வேலைக்கு வேணும் ?''
            ''அவங்களுக்கு கண்டிப்பா சர்க்கரை நோய் இருக்கணும் !''


திருமணம் நிற்க வலுவான காரணம் வேணும் !
       அந்நிய செலாவணியை குறைப்பதற்கு ...
       பெட்ரோல் நிலையங்களை இரவு மூடிவிடலாம் என்று
       திருவாய் மலர்ந்து இருக்கிறார் பெட்ரோலிய மந்திரி !
       அவர் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார்           ...
       ஏனென்றால்  ...
       சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்குமா என்ற பழமொழி 
       செம்மொழித்  தமிழில் மட்டும்தானே இருக்கிறது ?

4 September 2016

நடிகையின் அன்றைய அழகு ,மீண்டும் வருமா :)

உங்களுக்கு அந்த 'ஞானி 'ஞாபகம் வர்றாரா :)           
              '' நீங்களுமா , கலிகாலம்  நடக்குதுன்னு  சொல்றீங்க ?''
               ''ஆமா , 'வார்த்தை ஜாலங்களால் மட்டுமே ஒருவன் அறிஞர் , ஞானி என்று கலிகாலத்தில் அழைக்கப் படுவார் 'னு பாகவதத்தில் சொல்லியிருப்பது சரியாத்தானே  இருக்கு !''

நடிகையின் அன்றைய அழகு ,மீண்டும் வருமா :)            
         ''அந்த  குண்டு நடிகை கஷ்டப் பட்டு 18 கிலோ எடையைக் குறைச்சிட்டாங்களாமே  ?''
       ''வயசுலேயும் 18 வருசம் குறைஞ்சா நல்லாயிருக்கும் !''
மனைவியான பின்பும் மறக்காத மசால் வடை !
            '' எதுக்குமே சிக்காத எலி ,அந்த ஹோட்டல் மசால் வடைக்கு மட்டும் மாட்டும்னு எப்படி உறுதியாய் சொல்றே ?''
              ''காதலிக்கையில்  அந்த ஹோட்டல் மசால் வடையைத் தின்னுட்டு ,இப்போ நானே  உங்ககிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே !''

'வீடியோ காலில் 'தெரிந்த அழகு முகத்தை ...!
              ''செல்லுலே பார்க்கும் போது அம்சமா இருக்கீங்கன்னு சொன்னேன் ,அதுக்கு  தலைவர் 'வைடா போனை 'ன்னு கோபமா கத்துறாரே,ஏன்  ?''
              ''அவர் ஜெயில் செல்லுலே இருந்ததை கிண்டல் பண்றதா நினைச்சுருப்பார் !''

கணவனிடம் இவ்வளவு முன் ஜாக்கிரதை தேவையா ?
    நான் கைக்குத்தல் அரிசியை தின்று வளர்ந்தவன் என்பதை ...
    ஒரு பேச்சுக்குக்கூட சொல்லமுடியவில்லை என்னவளிடம் ...
   'அதுக்காக உங்க கை நீட்டலையும் ,குத்தல்பேச்சையும் சகிச்சுக்க    மாட்டேன் 'என்கிறாள் !

3 September 2016

சாப்பிட்டால் போகுமா ,படித்தால் போகுமா சுகர் :)

              ''என்ன சொல்றீங்க ,முப்பது நாவல் படிச்சும் சுகர் குறையலையா ?''
              ''சுகருக்கு நாவல் நல்லதுன்னு  நீங்கதானே சொன்னீங்க டாக்டர் !''  

கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியிருக்குமா :)           
           ''என்னடி சொல்றே ,குண்டான உன்னை உன் வீட்டுக்காரர் கிண்டல் பண்றாரா ,எப்படி ?''
           ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னே சொல்றாரே !''
இவர்  நல்லபடியா டிஸ்சார்ஜ் ஆவாரா :)
      ''டாக்டர் ,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு !''
       ''எது ?''
       ''நர்ஸை நீங்க மட்டும் சிஸ்டர்னு சொல்ல மாட்டேங்கிறீங்களே !''

தலைவருக்கு தெரிஞ்சதெல்லாம் அதுதானே :) 
           ''கோவில் விழாக் கொடியேற்ற ,அரசியல்வாதியைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ,கேட்டீங்களா ? ''
          ''என்னாச்சு ?''
          ''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்கார் !''

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை :)
     காவல் இல்லையென்றால் ...
     காய்ச்ச மரம்கூட கல்லடி படும் 
     கன்னிப்பெண் கண்ணடி படுவாள் !

2 September 2016

நோய் வராதா ,பக்கத்திலே எந்த நாயும் வராதா :)

             ''சாப்பாட்டில் அதிகமாய் பூண்டைச் சேர்த்துகிட்டா எந்த நோயும்  பக்கத்திலே வராது ,இதிலே உங்களுக்கு என்ன கஷ்டம் ?''
           '' எனக்கொண்ணும் கஷ்டமில்லை டாக்டர்  ,என் பக்கத்திலேதான்  யாரும் வர முடியாம போகும் !''
பழக்க தோஷம் விடாது :)     
            '' தற்காலிக வேலை நீக்கம் பண்ணின பிறகும் ,  ஆபீசுக்கு  ஏன்  வர்றீங்க ?''
             ''வீட்டிலே தூக்கம் வர மாட்டேங்குதே !''
மாமியாருக்கு அடின்னா ,தாங்கிக்க முடியாத மருமகள் :)
            ''அங்கே  லாரியில் அடிபட்டு கிடக்குறது உன் மாமியார் போலிருக்குன்னு ,போய் பார்னு சொன்னா ...என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்றீயே ,அவங்க மேலே அவ்வளவு பாசமா ?''
             ''அட நீ வேற ,அவங்க என் மாமியாரா இல்லேன்னா ,வர்ற ஏமாற்றத்தை என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் !''

கணக்கு உதைக்குதுன்னா எதுக்குத்தான் லாயக்கு ? 
             ''என் பையனை கழுதை மேய்க்கக் கூட லாயக்கில்லைன்னு ,ஏன் சொல்றீங்க சார் ?''
             ''இப்ப கணக்கு உதைக்குதுன்னு சொல்றவன், அப்பவும் கழுதை உதைக்குதுன்னு சொல்வான் போலிருக்கே !''

கொசுக்களுக்கும் விசுவாசமில்லை !                                                                                
    கொசுக்கடியில் இருந்து மீள 
    காசிருந்தால் ஆயிரம் வழிகள்...
   அடிக்க மனமுமின்றி 
   ஒழிக்க பணமுமின்றி 
   வாழும் ஏழை ஜனங்களின்
   இரத்தத்தையும் விடுவதில்லையே ... 
  ஆதிக்க சக்திகளின் வாரிசுகளா கொசுக்கள் !

1 September 2016

புருசனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்காதோ :)

 இங்கிலீசில் பேசினால்தான் இன்ஸ்பெக்டரா  :)           
           ''தமிழ் பட வில்லன்கள் எல்லாருக்கும் படிப்பறிவு  அதிகமா ,ஏன் ?''
          ''போலீஸ் இன்ஸ்பெக்டர்  'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்'ன்னு ஆங்கிலத்தில்  சொன்னதும்  புரிஞ்சிக்கிறாங்களே !''

காதுக்கு கம்மல் ,சுவருக்கு இது சரிதானே :)
         ''நாட்காட்டின்னா  , செவ்வகமா இருக்கும் ,நீங்க ஏன் அதை கம்மல் மாதிரி டிஸைன் செய்து இருக்கீஙக ?''
         ''சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்னு சொல்றாங்க ,அந்த காதுக்கு  பொருத்தமா இருக்கட்டும்னுதான்  !''
புருசனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்காதோ :)
        ''ஞாபகமா, பக்கத்திலே வேஸ்ட் பேப்பரை வச்சுக்கிட்டு உருளைக் கிழங்கை உரிக்கச் சொல்றீயே ,ஏன் ?''
        ''போன  தடவை தோலை தட்டுலேயும் ,கிழங்கை குப்பையிலும் போட்டது மறந்துடுச்சா ?''