31 October 2016

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை :)

இதை விடவா பொருத்தமான காரணம் இருக்க முடியும் :)
      ''சேமிப்பு  உண்டியல்  என்றாலே பன்றி வடிவத்திலே இருக்கே ,ஏன் ?''
     '' தன் குட்டியைத் தானே தின்னும் பழக்கம் பன்றிக்கு இருக்காமே !''
மனைவி சொல் மிக்க மந்திரமில்லை :)
             ''பசி மயக்கத்தில் இருந்ததால் ,நீ  வெங்காயம் நறுக்கித் தரச் சொன்னது, என்  காதுலே விழலே !''
             ''டிபன் ரெடின்னா மட்டும், நல்லா விழுதே எப்படி ?''

திறமைக்கேற்ற பரிசு இது :)
          ''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச  கொள்ளைக்காரனை கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''
           ''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''

குண்டு மனைவியை  இப்படியா கிண்டல் பண்றது :)
            ''என்னங்க ,குக்கரைப் பார்க்கும் போதெல்லாம்  என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
           ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே  !''

என்றும் சிறைக் கஞ்சா சிங்கம்:)
         ''ஜெயிலுக்குப்போன  தலைவர் ,கஞ்சாவிற்கு அடிமை ஆயிட்டாராமே ,ஏன்?''          
         ''அவர் வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் ',உள்ளே போனா 'சிறை கஞ்சா சிங்கம் 'ஆச்சே!''

இது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை ...
           அய்யோ பாவம் எனத் தோன்றியது!
அவர் புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
            இவருக்கென்ன கஷ்டமோ ?
நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
            அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம் போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
             அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறிய ஆரம்பித்தார் ...
             இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
              உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
             கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
              எந்த தெய்வம் இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லதுதானே !

30 October 2016

பெண்களின் மெமரி பவருக்கு இதுதான் காரணமா :)

             ''கோலம் போடணும்னு ஏண்டா  ஆசைப் படுறே ?''
              ''அதனாலே மெமரி பவர் கூடும்னு சொல்றாங்களே !''

மாமூலை வீட்டிலேயும் வாங்குவாரோ :)           
            ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாட்டு விளையாடினா, ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
            ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''

இந்த தம்பதிக்குள் வாக்குவாதம் ஏன் வரப் போவுது :)
            ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
             ''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''

I T வேலை என்பதும் இப்படித்தானா ?:)
             ''முதலாளிகிட்டே கால்லே ஆணின்னு ஒருநாள் லீவு கேட்டது தப்பாப் போச்சா ,ஏண்டா ?''
             ''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி  வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''

அதுக்கு இப்படியும் அர்த்தமா:)
             ''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
             ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்னு சொன்னேனே!''

ரஜினி காந்த் ,பிரியங்கா சோப்ரா ...யார்  நினைப்பு சரி ?
நீங்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என ...
நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரைக் கேட்டபோது ...
அடிப்படையில் சில மாற்றங்கள் வந்தால் மட்டுமே ,நான் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கும் என்று கூறினார் !
இப்போது இருக்கின்ற சட்ட திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது என்று அவரும் நினைக்கிறார் !
இப்படியே இருந்தால் என்னால் மட்டுமல்ல ,ஆண்டவனாலும் நாட்டை திருத்த முடியாது என்பதுதான் அதன் பொருள் !
தமிழன் என்றொரு தமிழ் படத்தில் முதலும் ,கடைசியும் நடித்த பிரியங்கா சோப்ரா ...
நான் பிரதமரானால் ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் ...
பிரியங்கா காந்திக்கே வராத ஆசை இவருக்கு வந்து இருக்கிறது ...
ஆசைப்படுவதில் தவறில்லை ...
பிரதமர் பதவியை கால் ஷீட் கொடுத்து பெற்று விட முடியாது ...
பொருளாதார மேதைக்கு அடித்த  அதிர்ஷ்டம் ,அவருக்கும் அடிக்குமாவென தெரியவில்லை !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
ரசிகர்களின் மனம் மகிழ ,உடலை திறந்து காட்டியது போல் ...
நாட்டு மக்களின் மனம் மகிழ ,ஊழலை ஒழிக்கும் ரகசியத்தை மனம் திறந்து கூற வேண்டும் !

29 October 2016

லேடிஸ் லெக்கின்ஸ் உடைக்கு ,முன்னோடி ஏது தெரியுமா :)

குடிகார அப்பனின் யோசனையோ :)               
               ''காலி  பிராந்தி பாட்டில்லே வச்சு, ராக்கெட்டை விட்டால் ரெண்டு மடங்கு உயரம் போகுமாமே ,உண்மையா ?''
                ''இதுவும் ஒரு மனப் பிராந்திதான் !''  

லேடிஸ் லெக்கின்ஸ் உடைக்கு ,முன்னோடி ஏது தெரியுமா :)
              ''என்னங்க ,வெள்ளை நிற லெக்கின்ஸ் டிரஸ்ஸை நான் போட்டுக்கவே கூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
   ''ஜெகன் மோகினி படத்திலே வர்ற பேய் ஞாபகம் வருதே !'' 
ஃபேஷன் டீவியை இன்னுமா மறக்கலே :)
             ''குருவே ,அந்த சிஷ்யன்   என்ன கேட்டார் ,ஆசிரமத்தில் இருந்து உடனே 'கல்தா 'கொடுத்து விட்டீர்களே ?''
             ''ஞானக் கண்ணால் ஃபேஷன் டீவியைப் பார்க்க அருள் புரியுங்கள் என்று கேட்கிறானே !''

சர்வருக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் :)
            ''சர்வர் யாருமே ஒத்துழைக்காம நஷ்டமாகி ஓட்டலை மூடிட்டீங்க ...கம்ப்யூட்டர் சென்டர் வைங்கன்னு  சொன்னா ,ஏன் வேண்டாங்கிறீங்க?''
            ''அதுக்கும் 'சர்வர் 'ஒத்துழைப்பு  தேவைப்படுமே!''

பேஸ் புக் வடிவில் வந்த எமன் :)
எமன் எருமை வாகனத்தில் வருவான்னு சொல்வார்கள் ...
இந்த நவீன காலத்தில் ...
சென்னையில் பணிபுரிந்த சாப்ட்வேர்  என்ஜினியருக்கு பேஸ் புக் வடிவில் எமன் வந்துள்ளான் ...
ஜார்கண்ட் பையன் ,கேரளக் குட்டியை மூன்றாண்டு டாவடித்து  ...
இரு வீட்டார்  சம்மதமின்றி பதிவுத் திருமணம் முடித்து ...
ஹனி மூனை வெளிநாட்டில் கொண்டாடி மூன்று மாதமாகி விட்டது ...
இளம் மனைவி ஹனிமூன் படங்களை பேஸ் புக்கில் போட ...
படங்களைப் பார்த்த பையனின் பெற்றோர்க்கு கோபம் தலைக்கேற ...
படங்களை டெலிட் செய்ய பெற்றோரின் கட்டளை ஒருபுறம் ...
முடியவே முடியாதென்று மனைவியின் பிடிவாதம் மறுபுறம் ...
செய்வதறியாதவன் தொங்கிவிட்டான்  தூக்கில் !
பேஸ்புக்கில்  படங்கள் சிரிக்கின்றன ...
போட்டோவில் சிரிப்பவன்தான் உயிருடன் இல்லை !

28 October 2016

மனைவியின் சந்தேகம் தீரணுமா ,நிவர்த்தியாகணுமா :)

                 ''என்னோட சந்தேகம் உண்மையாகணும்னு வேண்டிகிட்டீங்களா,ஏன் ?''
                  ''எனக்கு பல பெண்களோட தொடர்பு  இருக்குங்கிறதுதானே உன்  சந்தேகம் !''
கூகுளில் தேடச் சொன்ன கூமுட்டை :)
               ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''
              '' வீட்டை விட்டு ஓடிப் போன அவரோட பொண்ணு ,எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''

பகல் கனவில் கனவுக் கன்னி  வருவாளா :)
               ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
               ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
              ''ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''

தீர்த்தம் குடிப்பதில் தீர்க்கமான முடிவு:)
               ''குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா சொல்றாங்க ,அதனாலே ....''
               ''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
               ''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''

மலை முழுங்கி அவர்தானா :)
             ''நீண்ட  நாளுக்கு  பிறகு இப்போதான் ஊருக்கு வர்றேன் ,யானை மலை ஸ்டாப்பிலே இறக்கி விடச் சொன்னா ,கண்மாய் கரையிலே  இறக்கி விடுறது ,நியாயமா கண்டக்டர் ?''
            ''உங்க நியாயத்தை அங்கிருந்த மலையை  உடைச்ச குவாரி காண்ட்ராக்டர்கிட்டே போய்க் கேளுங்க  !''

மனிதம் மறந்தவர்களுக்கு மகாத்மாவும் ,மலாலாவும் ஒன்றுதான் !
அன்று ...
'இந்து 'மகாத்மாவைக் கொன்றது இந்து மதத் தீவிரவாதம் ...
இன்று ...
'முஸ்லீம் 'மலாலாவைக் கொல்லத் துடிக்கிறது  முஸ்லீம் தீவிரவாதம் ..
மகாத்மா காந்தி நல்லவர்தான் ,நாட்டுக்காக பாடுபட்டவர்தான் ...
வெள்ளையருக்கு எதிராகவும் ,முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும்தான் பதினெட்டு முறை உண்ணாவிரதம் இருந்தார் ...
ஒருமுறைக் கூட இந்துக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததில்லை ...
நான் ஒரு இந்து ,ஆனால் காந்தி இந்துவாக ஒருபோதும் நடந்துக் கொள்ளவில்லை ...
முகமத் கரம்சந்த் காந்தி என்றே அவரை சொல்வேன் ...
இது ...மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் கருத்து !
அதே நேரத்தில் ...ஒரு உண்மை இந்து மறைந்தார் என கருத்தை சொன்னார் முகமது அலி ஜின்னா !
தாலிபான்களின் துப்பாக்கி சூட்டிலிருந்து உயிர் தப்பிய மலாலா 'நான் மலாலா 'என புத்தகம் எழுதியுள்ளார் ...
அதை பாகிஸ்தானில் விற்கவிடாமல் தடைசெய்த தாலிபான்கள் ...
மலாலா எங்களிடம் சிக்குவார் ,கொல்லுவோம் என்று கொக்கரித்து இருக்கிறார்கள் !
அன்றும் ,இன்றும் ...
எந்த ம[ட ]தத் தீவிரவாதிகள்  ஆனாலும் மனிதம் மறந்துதான்  செயல்படுகிறார்கள் !

27 October 2016

'குடி'மகனா ,கொக்கா :)

சமூக ஆர்வலர்  ஒருவர் ,ஒரு டம்ளரில் தண்ணீரும் இன்னொரு டம்ளரில் சாராயமும் ஊற்றி, தண்ணீர் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் சாராயம் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் போட்டார்.
தண்ணீரில் போட்ட பூச்சி உயிரோடிருந்தது. சாராயத்தில் போட்ட பூச்சி இறந்துவிட்டது.
சமூக ஆர்வலர்  கேட்டார் :
''இதிலிருந்து என்ன தெரிகிறது?''
குடிமகன்கள் ஒரே குரலில்  சொன்னார்கள் :
''சாராயத்தில்  போட்ட பூச்சிக்கு நீந்தத் தெரியவில்லை! ''

இலவசமா கொடுத்தாலும் வாங்க மாட்டாங்களோ :)                 
               ''டிவி வாங்கினா, கவிதைப் புத்தகம் இலவசம்னு போட்டீங்களே ,வியாபாரம் அமோகம்தானா ?''
             ''அட நீங்க ஒண்ணு,புத்தகத்தை நீங்களே வைச்சுகிட்டு  , டிவி  விலையில் தள்ளுபடி கொடுங்கன்னு கேட்கிறாங்களே !''

இனியும் தொண்டர்களை ஏமாற்ற முடியாதோ :)             
              ''ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறைன்னு தொண்டர்களிடம் கேட்டது தப்பாப் போச்சா ,ஏன் தலைவா ?''
             ''ஆளும் கட்சி முதல்வரின் காலை நக்கிட்டு இருந்தா ஆள முடியாது ,நீங்க வேணா வாழ முடியும்னு திருப்பித் தாக்குறாங்களே !''

கிளி மூக்கு பொண்ணுக்கு மூக்குடைந்த மாப்பிள்ளையா :)
               ''தரகரே ,நீங்க சொன்ன பையன் ...எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைச்சி 'மூக்குடை'படுவாராமே ,உண்மையா ?''
                ''அப்படின்னா மூக்கிலே தழும்பு இருக்குமே ,நீங்களே நேரிலே பார்த்து முடிவு பண்ணுங்க !''

143ன்னா I love you ஆச்சே :)
               ''எந்த  வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருட  காந்தி ஜெயந்தியை காதலர்கள் கொண்டாட காரணம் என்ன?''
              ''காதலர்களுக்கு பிடித்த '143'வது காந்தி ஜெயந்தி  ஆச்சே இது !''
(குறிப்பு ,இது வெளிவந்தது 2014ம் ஆண்டு )

ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல !
அடுத்தவர் பேசுவதை ஒட்டுகேட்பது பெண்கள் குணம் என்றுதான் நம் தமிழ் திரைப்படங்களில் காட்டி வந்து இருக்கிறார்கள்...
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் ,ராணுவ மையமான பென்டகனுக்கும் அந்த குணம் உண்டென்று தெரிய வந்துள்ளது ...
உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் முப்பத்தைந்து பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டுள்ளது ...
இதனால் கொதிப்படைந்த ஜெர்மன் தன் கண்டனத்தை தெரிவிக்க ...
இனிமேல் இப்படி நடக்காதென்று உறுதி  அளித்துள்ளார் ஒபாமா !
ஏற்கனவே பேஸ்புக் ,கூகுள்,யாகூ இணைய தளங்கள் மூலமாய் நம் அனைவரின் அந்தரங்கத்திலும் 'கழுகு'மூக்கை நுழைத்தது அம்பலமானது...
அமெரிக்கா தனி மனித சுதந்திரத்தை ...மிகவும் மதிக்கும் நாடல்ல ...
மிதிக்கும் நாடு என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது !
இந்த கேடு கேட்ட காரியத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய நம் இந்தியா ...
நம் பிரதமருக்கு செல்போனும் இல்லை ,இ மெயில் முகவரியும் இல்லை ...
ஒட்டு கேட்டிருப்பதற்கு வழியே இல்லை என இயலாமையை பறைசாற்றிக் கொண்டுள்ளது !
(குறிப்பு ,இது ஒரு காங்கிரஸ் காலத்து பதிவு )

26 October 2016

பொண்ணு வாந்தி எடுத்தாலே 'அது 'தானா ?

F  போய்  P  ஆனது :)
             ''முப்பது வருஷம்  filesகளோட மல்லுகட்டி ரிடையர் ஆனாரே ,இப்போ என்ன பண்றார் ?''
              ''pilesசோட மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார் !''

பின்னழகில் மோகினி ,முன்னழகில்... :)
        '' என்னை பின்னாலே பார்த்தவங்க எத்தனை பேர் முன்னாடியும் வந்து பார்க்கிறாங்கன்னு உனக்கு  தெரியுமாடீ ?''
          ''பார்த்துட்டு 'ப்பூ ,இம்புட்டுதானா ' ன்னு நினைக்கிறது உனக்குத் தெரியுமா ,ரொம்பவும் அலட்டிக்காதே !''
பொண்ணு வாந்தி எடுத்தாலே 'அது 'தானா ?
          ''என்னங்க,நம்ம பையன் வாந்தி எடுக்கிறான்னு  சொல்றேன் ...கொஞ்சமும் அலட்டிக்காம இருக்கீங்களே ,ஏன் ?''
          ''பொண்ணு வாந்தி எடுத்தாதான் ஏதோ சிக்கல்னு அர்த்தம் ,அதான் !''

மனைவியின்  சுகரால்  கணவனுக்கு வந்த கஷ்டம் :)
               ''என்ன முத்தம்மா ,சீனிவாசன்ங்கிற என் பெயரை  மாற்றிகிட்டாதான் ,  பக்கத்திலே வருவேன்னு  அடம் பிடிக்கிறீயே ,ஏன் ?''
                ''சர்க்கரை கூடுதலா இருக்கு ...சீனி 'வாசனை 'கூட பக்கத்திலே வராம பார்த்துக்குங்கன்னு , டாக்டரு கறாரா சொல்லி இருக்காருங்க !''

கெமிஸ்ட்ரி அப்டேட் ஆகலையே :)
              "கெமிஸ்ட்ரி பாடத்திலே பர்ஸ்ட் ரேங்க்  வாங்கி பிரயோஜனம்  இல்லையா ,ஏண்டி ?'' 
               "கல்யாணம் ஆனதில் இருந்து சண்டை தான் எனக்கும் அவருக்கும் ...கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதே   !"

'சின்ன வீடு'க்கு அங்கீகாரமா இந்த தீர்ப்பு :)
முதல் திருமணத்தை மறைத்து  2வது திருமணம் செய்திருந்தால் ,ஹிந்து திருமண சட்டப்படி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு 2வது மனைவிக்கும் உரிமை உண்டு ...
இப்படி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதி மன்றம் !
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது பண்பாடு என்று சொல்லிக்கொண்டே ...
ஊருக்கு ஒருத்தியை வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பால் நெருக்கடி அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது ...
இதுவரை தாலி இல்லாமல் இருந்த கள்ளக்காதலிகள்  சட்டப் பாதுகாப்புக்காக தாலி கட்டச் சொல்லி நெருக்கடி தந்தால் ...
கள்ளக் காதலன் தாலியும் தரலாம் ...
இதென்ன வம்பு என்று ஒரேயடியாய் ஜோலியும் முடிக்கலாம் ...
கள்ளக் காதல் கொலைகளுக்கு இனி பஞ்சம் இருக்காது ...
முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்று ஜீவனாம்ச வழக்குகளுக்கும்  இனி பஞ்சம் இருக்காது ...
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் உற்சாகத்தால்  சின்னவீடு பெருக்கத்திற்கும் இனி பஞ்சம் இருக்காது ...

25 October 2016

வீட்டுக்கு வரக்கூடாத அந்நியன்:)

தங்கப் பல்லு கட்டிகிட்டவன்  ஈன்னு சிரிச்சுகிட்டே இருப்பானாமே:)
               ''நம்ம அருண்,  தினசரி மாலை நேரத்தில்  'குட் மார்னிங் 'னு  முகநூலில்  சொல்லிகிட்டே இருக்கானே ,ஏன் ?''
                '' அமெரிக்காவில் இருப்பதை நாசூக்கா  சொல்றானாம் !''

தெரிந்ததைச் சொன்னால் தப்பா :)           
              ''என் பையன் சரியான சாப்பாட்டு ராமனா வருவான்னு  ஏன் சொல்றீங்க ?''
              '' ஆனாவுக்கு  அப்பம் ,ஆவன்னாவுக்கு  ஆப்பம் ,ஈனாவுக்கு  இடியாப்பம்னு சொல்றானே !''

வம்பு பிடிச்ச ஆட்டோ டிரைவர் :)               
              '' ஆஸ்பத்திரி  வாசலில் இறக்கி விட்டுட்டு காசு  கேட்கிறே,பிறகேன்  'பிரசவத்துக்கு இலவசம்'னு ஆட்டோவிலே எழுதியிருக்கே?''
               ''ஆட்டோவில் பிரசவமானால்தான் இலவசம் !''

சமர்த்துப் பேச்சால் கணவனை ஜெயிக்கலாம்...ஆனால் :)
             ''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
              ''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டை   ஒரு  ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிக்கிறீங்களா ?''

வீட்டுக்கு வரக்கூடாத அந்நியன்:)
          "புருஷனோட சொற்ப  வருமானத்திலே இவ்வளவு ஆடம்பரமா அவ இருக்க காரணம் ,அன்னியன் முதலீடா ?''
         " ஆமா ,ஒரு  அன்னியன் நடமாட்டம் அந்த வீட்டிலே அடிக்கடி தெரியுதே ! "

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே:) 
கோவிலபாக்கம்  சகோதரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் ...
சூலமங்கலம் சகோதரிகளைத் தெரியும் ...
யாரிந்த புது சகோதரிகள் ?
ஐந்து வருசமா நடிச்சுக்கிட்டு  இருந்திருக்காங்க ...
ஒரு படத்தில் கூடப் பார்த்ததில்லையேன்னு நீங்க கேட்கிறது எனக்கும் புரியுது !
அவங்க படத்தில் நடிக்கலே...
நிஜத்திலே 'வசூல் ராணி MBBS 'களாய் கிளினிக் வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள் ...
ஒரிஜினல் டாக்டர்களே செய்யத் தயங்கும்
கருக்கலைப்புக் கூட செய்து இருப்பதாக புகார் வந்து உள்ளதாம் ...
இந்த புண்ணிய காரியங்களை ஒரு வருஷம் ,இரண்டு வருசமல்ல ...
ஐந்து ஆண்டுகளாய் செய்துள்ளார்கள் ...
பத்தாவதுகூடப் படிக்காத சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் சென்னை மாநகரத்திலேயே ...
போலி டாக்டர்களாய்  கொடிகட்டிப் பறக்க முடியும் என்றால் ...
கிராமங்களில் நிலை என்ன என்பதை யாராவது 'சபீனா'வாய்  விளக்கி சொன்னால் நல்லது !
தமிழகத்தில் இன்னும் ஐந்தாயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக அபாயச் 'சங்கு ' ஊதுகிறார் ஒரிஜினல்  டாக்டர்கள் சங்கத் தலைவர் !

24 October 2016

கெட்ட கணவன் அருகில் படுத்தால் ....:)

           ''உன் அருகில் படுத்தவுடன்  ஒரு நொடியிலே தூக்கம் வரக் காரணம்,உன் நல்ல மனசுதான்னு தோணுது !''
           ''எனக்கு தூக்கம் வராத காரணம் இப்போ புரியுதுங்க !''
காவல் துறையில்  'என்கவுண்டர் டீம்' உண்டுதானே  :)
           ''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
         ''  இவர் சுடுவதற்குள் ரவுடிகள்  தப்பித்து  ஓடி விடுகிறார்களாம் !''

அவர் கோபத்திலும் நியாயம் இருக்கே :)
           ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலும் ,வட்டியும் 'கறந்து 'வாங்க முடியலேன்னு பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
           ''ஏன் இப்படி கேட்குறீங்க ?''
           ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேட்குறீங்களே !''

ஏன் படம் தயாரிக்கக் கூடாதா:)
       " மடாதிபதியை  சுற்றி ஏன் நடிகைகள் கூட்டம் ? "
       '" படாதிபதியாக போறாரோ  என்னவோ ? "

கற்பழிப்பைக் கூட  காவல் நிலையத்தில் சொல்லக் கூடாதா ?
(இந்த கூத்து நடந்தது சில வருடங்களுக்கு முன் )
தங்கள் வாகனம் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யப்படாமல்  தெருவில் நின்று கொண்டிருக்கிறது ...
இதனால் திருடு போக வாய்ப்புள்ளது ...
அவ்வாறு ஏதேனும் திருட்டு ஏற்பட்டால் தாங்களே முழுப் பொறுப்பாவீர்கள் !
இப்படியான  வாசகங்கள்  கொண்ட போஸ்டர்களை...
சேலத்தில் உள்ள ஒரு ஏரியா, வீடுகளில் ஒட்டியிருப்பவர்கள் யாரென்று தெரிந்தால் ...
மூக்கின் மேல் விரலை வைக்கத் தோன்றாது ...
நெற்றியில் அடித்துக் கொள்ளத் தோன்றும் ...
ஆமாம் ,அந்த ஏரியா காவல் நிலையத்தின் சார்பில்அந்த போஸ்டர் அடிக்கப் பட்டுள்ளது !
அடுத்ததாக ...
உங்கள் வீட்டை கொள்ளையில் இருந்து ...
உங்கள் கற்பை  கயவர்களிடம் இருந்து ...
உங்கள் உயிரை எதிரிகளிடம் இருந்து ...
பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு ,அதையும் மீறி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் ...
காவல் நிலையத்தை அணுக வேண்டாம் !
 இப்படி வாசகங்களைக் கொண்ட போஸ்டரை இனி எதிர்ப்பார்க்கலாம் !

23 October 2016

இந்தச் சீரழிவு ,சினிமாவால் வந்ததுதானே:)

 இதை மட்டும் சொல்லிட்டா ,உண்மையில்  அவர் 'மைண்ட் ரீடர்தான் ':)                                                 ''ஒருத்தரைப்  பார்த்தாலே அவர் மனசிலே  உள்ளதைச்  சொல்லும்  சக்தி, உங்களிடம்   இருக்கா ?''
            ''ஆமாம் ,உங்களுக்கு  என்ன தேவை ?'' 
              ''என் பக்கத்துக்கு வீட்டுக்காரரைக்  கூட்டிக்கிட்டு வர்றேன்...அவரோட வீட்டில் இருந்து  'வை ஃபை' கிடைக்குது ,அவர் மனசிலே இருக்கிற பாஸ்வேர்டைக்  கண்டுபிடிச்சு சொல்ல  முடியுமா ?''
       
பஸ்ஸிலே சேட்டை ,தர்ம அடி கிடைக்கும்தானே :)                 
       '' கை எலும்புதான் முறிவு , தலையிலே  ஏன்  ஸ்கேன் பண்றீங்க டாக்டர் ?''
      ''   கை சேட்டை பண்ணும்போது , மூளை எங்கே போச்சுன்னு பார்க்க வேண்டாமா ?''

கொடுமைகொடுமைன்னுகோவிலுக்குப் போனா :)               
       ''என் வீட்டிலே கொள்ளை போயிருக்கு ,FIR போட ஏன் சார்  தாமதம் பண்றீங்க ?''
        ''ஸ்டேசன்லே நாலு துப்பாக்கி களவு போயிருக்கு ,அதை விசாரிச்சுகிட்டு இருக்கோம் !''
நல்லது மட்டுமே நினைக்கும் நண்பேண்டா :)
             ''ஆம்புலன்ஸ் சக்கரத்தில் விழுந்து செத்த  நம்ம ஆறுமுகம் பாடியை, அதே வண்டியிலேயே  வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்களாமே ?''
             ''அட பரவாயில்லையே ,கெட்டதிலும் நல்லது நடந்துருக்கே !''

இந்தச் சீரழிவு ,சினிமாவால் வந்ததுதானே:)
( இரண்டாண்டுக்கு முந்தைய பதிவு இது )
சென்ற வாரம் நடந்த கொடூரம் ...
வங்கி மேலாளரைக் கொன்ற ஆறுபசங்க...  
மோப்ப நாய்க்கு டிமிக்கி தர ...
அறையெங்கும் மிளகாய்ப் பொடியை தூவி சென்று இருக்கிறார்கள் ...
முதல் கொலைக்காரர்களுக்கே இந்த டெக்னிக்கை கற்று தந்தது 'கில்லி 'படம்தான் !
இந்த வாரம் நடந்த கொள்ளை ...
வங்கி அலுவல் முடியும் நேரம் ...
ஒரே ஒரு முகமூடிக் கொள்ளையன் ...
ஒரே ஒரு கத்தியை 'காசாளி 'பெண்மணியின் கழுத்தில் வைத்து ...
மற்றவர்களை மேலாளரின் அறையில் பூட்டி ...
எட்டே நிமிடத்தில் பத்தரை லட்சத்தை அள்ளி சென்று இருக்கிறான் ...
அந்த பத்தரை மாற்று தங்கத்திற்கு ஞானம் தந்தது ...
நிச்சயமாய் 'ருத்ரா 'என்னும் திரைக்காவியமாய்த்தான் இருக்கும் !
நல்ல படிப்பினைகளை கற்று தரும் நம்சினிமாவை 
நூறாண்டு வாழ்கவென கூத்திடமுடியவில்லை !
ஏற்கனவே நூறாண்டு நிறைவடைந்து விட்டதால் !

22 October 2016

தொடுப்பு எல்லையைத் தாண்ட முடியாதுதானே :)

 நாற்றத்தைக் கூட  நாசூக்கா  சொல்லணும் :)
              ''என்னோட டூத் பிரஷ்  எப்பவுமே புதுசா இருக்கும்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
            ''நீ பக்கத்திலே வந்தாலே, அதை நீ பயன்படுத்துறது இல்லைன்னு தெரியுதே !''

கத்திக்கும்  உண்டுதானே ஆயுத பூஜை :)              
               ''நேற்று  ,போலீஸ் ஸ்டேஷன்லே ஆயுத பூஜை தடபுடலா இருந்ததே ,எப்படி ?''
               ''பூஜைக்கு கபாலிதான்  ஸ்பான்சராம் ,துப்பாக்கி ,லத்திக்கு நடுவிலே கத்தியை வைத்து பூஜை செய்தானாம் !''

பிறப்பு மட்டுமா அப்நார்மல் :)       
          '' செரியன் சார் ,சிசேரியன்லே  பிறந்த உங்க  பையனுக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க ?''
          '' சிசேரியன்னுதான் !''

'கணக்கு 'பண்ணும் வாத்தியார் :)
           ''படியிலே தாவி தாவி,மாடிக்கு ஏறி வந்த பையனை மொத்துமொத்துன்னு  மொத்துறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
            ''ஏனாம் ?''
           ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !

தொடுப்பு எல்லையைத் தாண்ட முடியாதுதானே :)
         ''தலைமறைவா  இருந்த தலைவரை ,அவரோட  'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!
         ''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''

நாம் எதில் மயங்குகிறோம் :)
நமக்கு தேவை இல்லாததைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்கிறோம் ...
நடிகை நடிகர்கள் ,அவர்கள் வம்சாவளி ...
அரசியல்வாதிகள் ,அவர்கள் அறிக்கைகள் ...
சமூக விரோதிகள் ,அவர்களின் தீய நடத்தைகள் ...
தேச விரோதிகள் ,அவர்களின் குண்டு வெடிப்புகள் ...
தீவிரவாதிகள் ,அவர்களின் கொடூர முகங்கள் ...
இப்படி எல்லாம் தெரியும் !
கொடூர வலியில் இருந்து விடுபட ...
வலி  இல்லாமல் ஆப்பரேஷன்  செய்த பின் ...
மீண்டும் நம்மை உயிர்த்தெழச்  செய்யும் ...
மாயா ஜால வித்தையை முதலில் செய்து காட்டிய ...
வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்கிற டாக்டர்  பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

21 October 2016

படுக்கைமேல்,இப்படியும் ஒரு காரியம் செய்யலாமா :)

 இம்புட்டு அறிவாளியா இருக்கானே ,நம்மாளு  :)      
           ''இங்கே பொறந்ததுக்கு நாம  பெருமை படணுமா,ஏன் ?''
           ''வேறு எந்த நாட்டிலாவது இம்புட்டு அறிவாளியைப் பார்க்க முடியுமா ?''
         
பருப்பு விலை இன்னும் கூடுமாமே :)              
         ''என்ன சொல்றீங்க ,உங்க மனைவி  சமையலில்  கெட்டிக்காரியா ?'' 
        ''ஆமா ,பருப்பில்லாமலே சாம்பார் வைக்கிறாளே!''

குடிகாரனுக்கு நியாயம் கேட்க உரிமையிருக்கா :)                      
            ''ரிஜிஸ்டர் ஆபீஸில் போய்,இலஞ்சம் வாங்குவது கேவலம்னு சொன்னீயே ,என்னாச்சு  ?''
             ''மது வீட்டிற்கும் ,நாட்டிற்கும் கேடுன்னு போட்டிருக்கு,நீங்க குடிக்காமலா இருக்கீங்கன்னு  கேட்டு கேவலப் படுத்திட்டாங்க  !''

IQ இல்லைனா கல்தாதான் :)
            ''உணவு மந்திரிக்கு கல்தாவாமே ...ரேசன் கடையிலே இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்தாங்களே ,அதுக்காக இந்த கல்தாவா ?''
           ''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் கியூவை  ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவித்தாராமே  !''

இந்த மொக்கைக்கு 'ஜல்பே 'பரவாயில்லைதானே :)
           ''உனக்கு ஜலதோஷம்  பிடிக்குமா?''
            ''எப்பவாவது  பிடிக்கும்!''
           ''அப்படின்னா, எப்பவும் என்ன பிடிக்கும்?'' 

படுக்கைமேல் ,இப்படியும்  ஒரு  காரியம் செய்யலாமா :)
(இது நடந்தது சில ஆணடுகளுக்கு முன் )
அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான் என்பதை நிரூபித்துள்ளார் ...
திரிபுரா மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சமர் ஆசார்ஜி என்பவர் !
அவர் செய்தது ,இருபது லட்ச ரூபாயை படுக்கையில் அடுக்கி ,அதன் மீது புரண்டு புரண்டு....
 அதனை  செல்போன் மூலம் வீடியோ வேறு எடுத்துக் கொண்டுள்ளார் ...
அவரது நண்பர் மூலமாகவே அந்த வீடியோ வலையுலகில் வெளியாகிவிட்டது ...
அவர் பேட்டியில் சொல்கிறார் ...
'இது எனது நீண்ட நாள் ஆசை,மற்ற தலைவர்கள் போல் நான் மறைக்க விரும்பவில்லை !'என்று !
கழிவறைக்குப் போகவே காசில்லாத பல கோடி ஏழைகள் வாழும் நாட்டில் ...
இவரைப் போன்றவர்கள் கழிவறைக் கட்டியே கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள்!

20 October 2016

இரண்டு மனைவிகளுக்கும் ஒரே பெயரா :)

அவரை  பெரிய படிப்பாளின்னு நினைச்சது ,நம்ம தப்பு.:)
              ''தலைவரே ,பார்வை மங்கிகிட்டு வருதுன்னு சொல்றீங்க ,கண்  டெஸ்ட்  பண்ணிக்க வேண்டியதுதானே ?''
             ''எதையாவது  படிச்சு காட்டச் சொன்னா என்ன பண்றதுன்னுதான்  யோசிக்கிறேன் !''
        
இரண்டு மனைவிகளுக்கும் ஒரே பெயரா :)    
             ''மனைவி ஞாபகார்த்தமா  ஷாஜஹான் ,தாஜ் மகாலைக் கட்டி இருக்கார் , நீங்க என்ன செய்வீங்க ?''
             ''உன் பெயருள்ள இன்னொருத்தியைக் கட்டிக்குவேன் !''

இந்த சிம்பிள் பதில் ,சரிதானே :)
       ''நீங்க எப்படிப்பட்ட வரனை எதிர்பார்க்கிறீங்க ?''
        ''அதிக சவரன் கேட்காத வரனைத்தான் !''

கடவுளும் எவ்வளவுதான்  தாங்குவார் :)
          ''சாமி சிலை நொறுங்கி கிடக்குன்னு என்னை ஏன் கைது பண்றீங்க ?''
          ''என் பாரத்தை எல்லாம்  உன் மேலே போட்டுட்டேன்னு  ,நீங்க சொன்ங்களா ,இல்லையா ?''

அதுவும் பாதி இதுவும் பாதியா:)
            "நீங்க சைவமா ,அசைவமான்னு கேட்டா,யானை பாதி ,சிங்கம் பாதின்னு சொல்றீங்களே ,ஏன் ?"
             "யானை சைவமும்,சிங்கம் அசைவமும் மட்டுமே சாப்பிடும்,அதனாலேதான் !''

ஐ போனுக்காக ஐ யையும் விற்பார்களோ:)
கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா என்ற  நமது பழமொழியை  பொய்ப்பித்து விட்டார்கள் சீனர்கள் ...
தம்பதிகள் இரண்டு வயது மகளை விற்று இருக்கிறார்கள் ...
இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று இருக்கிறார் ...  
வந்த காசில் இவர்கள் வாங்கியது ...
வாழ்க்கைக்கு தேவையான ...
அடிப்படைத்  தேவைகளில் ஒன்றான ...
ஐ போனை தான்  !

19 October 2016

பொட்டுக்கு சொந்தக்காரி சொன்னா கேட்டுக்கணும் :)

விவரமான தலைவர்தான் :)
             ''உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லைன்னு தலைவர் சொல்றாரே ,இவ்வளவு  தைரியம்  அவருக்கு எப்படி வந்தது ?''
              ''வானம் இடிந்து விழாதுங்கிற  தைரியம்தான் !''

 பொட்டுக்கு சொந்தக்காரி சொன்னா கேட்டுக்கணும் :)
             ''உன் நெற்றிப் பொட்டு  காணாமல் போனதுக்கு ,போலீஸில்  புகார்  சொல்லச் சொல்றீயே,நியாயமா  ?''
              ''என் பொட்டுக்கு சொந்தக்காரரான  நீங்களே இப்படி கேட்கிறீங்களே  ,நியாயமா ?''
போலீஸ்  சார்ஜ்னா  இவருக்கு  தெரியாது போலிருக்கு  !
              ''போலீஸ்காரன் என்கிட்டே வந்து ,எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க ?''
             ''நீங்க நல்லா சார்ஜ் பண்ணுவீங்க என்று எல்லோரும் சொன்னாங்களே !''

சாப்பாட்டு ராமனுக்கு படிப்பு ஏறணும்னா....!
                ''என்னங்க ,நம்ம பையனுக்கு வித வித வாசனையோடு நான் சமைச்சுக் கொடுக்கிறதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
                ''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு ,இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டும்னுதான்   !''

தோசைன்னா ரொம்ப ஆசைதான்!
           "இரண்டு தோசைக் கல்லை ஏன் வாங்குறே ?"
          "தோசை ரெடிஆகிற வேகத்தைவிட,நீங்க  அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே !"

18 October 2016

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ :)

மறுபடியும் நிரப்ப முடிந்தால் தானே ரீஃபில் :)             
              ''காலியான  ரீஃபிலை  பார்த்து  என்ன யோசிக்கிறே ?''
             ''மறுபடியும்   மையை  ரீ  ஃபில்  பண்ண முடியுமான்னுதான் !''
ஆகா ,என்ன பொருத்தம் :)
            'அந்த மர்மக் கதை எழுத்தாளர் திடீரென்று எப்படி இறந்தார் ?''
           ''மர்மக் காய்ச்சல்  வந்துதான்  !''

தாலி கட்டுற நேரத்தில் இப்படி ஒரு சோதனையா :)
            ''ஐயரைப் பார்த்ததும் , மேடையில் இருந்த மாப்பிள்ளை தலைதெறிக்க  ஒடுறாரே ,ஏன் ?''
            ''ஏற்கனவே ஐயரோட  பொண்ணைத்தான்  கல்யாணம் கட்டிகிட்டு  இருந்தாராமே  !''

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ :)
            ''உனக்கு லவ் லெட்டர் கொடுத்தவர் ப்ராய்லர் கோழிக்கறிக் கடை வச்சிருப்பார் போல இருக்குன்னு ஏன் சொல்றே ?''
             ''புரட்டாசி மாசம் எப்போ முடியும்னு காத்துக்கிடக்கிற ப்ராய்லர் கடைக்காரன் மாதிரி ,உன் பதிலுக்காக தவிச்சுக்கிட்டு இருக்கேன்னு எழுதியிருக்காரே !''

பழைய பாட்டைப் பாடும் மருமகள்  :)
          "உன் பொண்டாட்டிகிட்டே ஜாடை மாடையா பாடுறத நிறுத்த சொல்லுடா !"
          "என்னம்மா , பாடுனா ?"
          "கிழவிக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் சுடுகிறதுன்னு பாடுறா !"

17 October 2016

ஆள் பாதி ,மேக்கப் மீதி :)

போதை படுத்தும் பாடு :)            
               ''ரத்தம் கொடுக்க வந்திருக்கிறவர் ,குடிகாரரா ,ஏன் ?''
                ''நாலு குவார்ட்டருக்கு காசு கொடுத்தா ,ஒரு குவார்ட்டர்  ரத்தம் தர்றேன்னு சொல்றாரே !''

பெயரை  மாற்றினால் நல்லது :)
             ''ரேஷன்  கடைக்கு வந்து  ,எதுக்கு சாக்பீஸ் இருக்கான்னு  கேக்குறீங்க ?''
             ''நான் வாங்கிட்டு போன அரிசியில் புழுக்கள் நிறைய இருக்கே ...போர்டிலே , புழுங்கலரிசின்னு  எழுதி இருக்கிறதை 'புழுக்களரிசி 'ன்னு மாற்றலாம்னு தான் !''

எறும்புக்கு வருமோ மலைப்பு :)
            "வீட்டுல லேசா சீனி சிந்தினாலே எறும்பு கூட்டம் வந்திருது ! ஸ்வீட் கடையிலே எறும்பு வர்றதே இல்லை ,ஏன் ?"
            "இவ்வளவு ஸ்வீட்டையும் எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சு நின்னுடுதோ ,என்னவோ !"

ஆள் பாதி ,மேக்கப் மீதி :)
              ''என்னங்க ,சிறந்த மேக்கப்மேனுக்கான  பரிசு வாங்கி இருக்கீங்க ,உங்க  பெண்டாட்டி நான் ....எனக்கு மேக்கப் போட்டால் என்னவாம்  ?''
            '' சுமாரா இருந்த முதல் பெண்டாட்டிக்கு மேக்கப் போட்டேன் ...அவளையும் ஒருத்தன் தள்ளிக்கிட்டு போய்விட்டானே !''

ஆடம்பர உலகம் இது :)
ஆழ்கடலின் அமைதியை ...
அலைகளின் ஆர்ப்பாட்டத்தால் உணர முடிவதில்லை !

16 October 2016

இப்படியும் வழிக்குக் கொண்டு வரலாமா :)

இப்படியும் வழிக்குக் கொண்டு வரலாமா :)  
             ''திருட்டுக் கேசிலே உள்ளே இருக்கிற என்னை ,முன்பின் தெரியாத நீங்க ஜாமீன்லே எடுக்கிறீங்களே ...உங்களுக்கு எப்படி கைமாறு செய்வேன் ?''
             ''ஏரியா இன்ஸ்பெக்டரிடம் இனிமேல் ஒழுங்கா மாமூலைக் கொடுத்தாலே போதும் !''

இது என் சொந்த அனுபவம் இல்லை :)
          ''வலைப் பதிவரா இருந்துகிட்டு ,பையன்கிட்டே  ஒரு வார்த்தையை சொல்ல முடியலையா ,ஏன் ?''
          ''முதல் ரேங்க் வரணும்டா என்று சொன்னால் ,நீங்க முதல்லே தமிழ்மணத்தில் வந்து காட்டுங்க என்று சொல்றானே !''

ஆனாலும் இம்புட்டு வாய் ஆகாது :)
          '' காஸ் சிலிண்டர்  போடுகிறவரோட  பெண்டாட்டிக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்னு ஏன் சொல்றே ?''
         ''பலபேர் வீட்டிலே அடுப்பு எரிய என் வீட்டுக்காரர்தான் காரணம்னு சொல்றாளே ''!
மனைவிக்கு சயனைட்டே  பெட்டர் :)
             ''என்னங்க ,சயனைட்டை பற்றி கேட்டா 'அதுவும் உன்னே மாதிரிதான், ஆனால் குணத்திலே நேர் எதிர் 'னு சொல்றீங்களே ,எப்படி ?''
            ''அது உடனே ஆளைக் கொல்லும்,ஆனா நீ அப்படி இல்லையே !''

NRI க்கள் அந்நிய நாட்டில் சுதந்திர பிரஜைகள் :)
அமெரிக்க நரி நாட்டாண்மை செய்தே கிடைக்கு ரெண்டு ஆடுகளை தின்று கொழுத்துப் போய் திரிவது கருத்துக்கணிப்பில் நிரூபணம் ஆகியுள்ளது ...
இருபது நாட்டவர்களின் அறிவுத்திறனை ஆய்வு செய்ததில்  கடைசி  இடம் அமெரிக்கர்களுக்குத் தானாம் !
முதலிடம் வகிப்பவர்கள்  ஜப்பானியர்களாம்...
ஹிரோசிமா ,நாகசாகியில் அணுகுண்டு விழுந்தாலும் அவர்கள் எழுந்து நிற்கிறார்கள் !
குட்டையாய் இருந்தாலும் அவர்கள் வளர்ச்சியில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள் !
வெளிநாட்டுக்கு அறிவுத் திறனை விற்றுக் காசாக்கும் அடிமைகள் வரிசையில் நமக்கு முதல் இடம் இருக்கக் கூடும் !

15 October 2016

மனைவியின் அமைதி சந்தோஷம் ,மாணவனின் அமைதி ...:)

 டாக்டருக்குத்தான்  கற்பனை அதிகம் போலிருக்கு   :)   
        ''கற்பனை ஓடலேன்னு சொன்னா , இரும்புச் சத்து மாத்திரை எதுக்கு கொடுக்கிறீங்க ,டாக்டர் ?''
        ''மூளையிலே துரு பிடிச்சிருந்தா சரியா போகும், அதுக்குத்தான் !'' 

இப்படி பதில் சொன்னால் வாத்தியார் என்ன செய்வார் :)
              ''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
            ''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
             ''அதிலேயே எழுதி இருக்கும் !''

ஆப்ரேசன்  பண்ணிக் கொல்லாம விட்டாரே :)
            ''அந்த டாக்டர் ஏன் உன்னை அடித்தார் ?''
             ''நீங்க சிவில் சர்ஜனா ,கிரிமினல் சர்ஜனான்னு கேட்டு தொலைச்சிட்டேன்!''
மனைவியின்  அமைதி சந்தோஷம்  ,மாணவனின்  அமைதி ...:)
         ''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
         ''முட்டாளோட கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''

கொசுக் கடியில் இருந்து விடுதலையாக ....!
தக்காளிக்கு கொசுவை விரட்டும் சக்தி உண்டென்று ஆராய்ந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
தக்காளி சாறை பூசிக் கொள்வதா ?
தக்காளி சாஸை தடவிக் கொள்வதா ?
தக்காளி ரசத்தைக் குடித்தால் போதுமா ?
தக்காளியை கடித்தாலே போதுமா ?
தக்காளி செடியை படுக்கையை சுற்றி வைத்துக் கொள்ளலாமா ?
தக்காளியை  படுக்கை முழுவதும் பிழியலாமா ?
இதில் எதை செய்தால் கொசுக்கடியில் தப்பிக்கலாம் என்று ஆராய வேண்டியது உங்கள் பொறுப்பு ...
இதுக்கு கொசுக்கடியே தேவலை என்றால் ...விட்டு விடுங்கள் !

14 October 2016

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)

நாய்க்குக் கூட தெரிஞ்சுருக்கு :)
    ''நம்ம தலைவரோட நாய்க்கு விசுவாசம் அதிகமா ,எப்படி ?’’
     ''தலைவரோட 'சின்ன வீடு' வந்தா மட்டும் வாலாட்டுதே !''

இப்படியும் அலர்ஜி ஆகுமா ?
              ''அலர்ஜி என்கிற வார்த்தையைக் கேட்டாலே பத்திக்கிட்டு வருதா,ஏன் ?''
            ''அலர் 'ஜி'க்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு ?''

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)
            ''என்னங்க ,ஆயுத பூஜையில் வைக்க ஆயுதம் கொண்டு வரச் சொல்லிட்டு ,கையிலே சின்ன பாட்டிலை எதுக்கு கொடுக்கிறீங்க ?''
             ''கண்ணீரைப் பிடிக்கத்தான் ...அதைத்தானே நீ ஆயுதமா பயன்படுத்தி காரியம் சாதிச்சுக்கிறே!''
இந்திய பல்கலைக் கழகங்கள் TOP 10ல் வரும் ,எதில் ?
உலகத்திலே  தலைசிறந்த நூறு பல்கலைகழகங்களில்  ஒன்றுகூட இந்தியாவில் இல்லையாம் ...
இந்த ஆராய்ச்சி முடிவை அறிவித்தவர்கள் ...
நன்கொடை எனும் முக்கிய காரணியை முக்கிய விசயமாய் எடுத்துக் கொண்டு புள்ளி விவரத்தை திரட்டவில்லை போலிருக்கிறது !

13 October 2016

பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா :)

இப்படியும் சில பேர் :)
         ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
           ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புதுச் செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''
   நெருப்பென்றால் சுடும் ,ஆனால் ..?
           ''நெருப்புன்னா  வாய் வெந்துடாது என்பதை உங்க வாத்தியார் பொருத்தமாச் சொன்னாரா,எப்படி  ?''
        ''பட்டாசுக் கடையிலே நெருப்புக் கோழி புகுந்தாலும் ஒண்ணும் ஆகாதுன்னுதான் !''

பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ?
              ''பேப்பரில் வந்த ,ஏசி  வசதியுடன் கூடிய   டாஸ்மாக் எலைட்  பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ,எப்படி ?''
             ''போருக்கு போகாதவன் அரசனும் இல்லை .பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னுதான் !''

ஜெயிக்கப் போறது கொள்கையா ?காசு பணமா ?
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இருந்து வாக்காளர்களுக்கு ...
ஓட்டு போட்டதற்கான ஒப்புகைச் சீட்டை தேர்தல் கமிஷன் தரவிருக்கிறதாம்!
அதிலே எந்த கட்சிக்கு ஓட்டுபோட்டுள்ளார்கள் என்ற விபரமும் இருந்தால் பேமென்ட்டுக்கு வசதியாய் இருக்கும் என ஓட்டை விற்கும் இந்நாட்டு மன்னர்களும் ,கட்சிகளும் எதிர்ப்பார்க்கிறார்கள் !
இதுவரை குதிரை பேரம் MLA,MPகளுடன் தான் நடந்து கொண்டுள்ளது ...
இனிமேல்  வாக்காளர்களுடணும் நடக்கும் !வாழ்க 'பண'நாயகம் !

12 October 2016

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...:)

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....
மீண்டும்  மூன்று நாள் வெளியூர் வாசம் !
மன்னித்து அருள்க , மீள் பதிவுக்காகவும் ,தாமதமாகப் போகும் என் மறு மொழிக்காகவும் :)

புருஷன் நளன்னா  மனைவிக்கு ஏன் பிடிக்காது :)
          ''ரொம்ப கொடுத்து வைத்த பெண் 'தமயந்தி 'தான்னு சொல்றீயே ,ஏன் ?''
         ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''
ஓசியில் திங்க அலையுறாங்களே:)
         ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் ,காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
           ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் ,காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !

அந்த நர்ஸ், 2013 மிஸ் சென்னை ? 
           ''அழுது வடிஞ்சுகிட்டு இருந்த ஆஸ்பத்திரியிலே, புது போர்டு வைச்சதும் ஆண்கள் கூட்டம் அலை மோதுதே ,எப்படி ?''
             ''மிஸ் சென்னை பட்டம் வென்ற அழகி நர்ஸாய் பணிபுரியும் பெருமை படைத்தது இந்த மருத்துவமனைன்னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே !''

இப்படியும் ஒரு பிள்ளை !
               "மனைவிக்காக தாஜ் மஹால் கட்டிய  ஷாஜகானை , அவர் மகன் சிறையில்  அடைத்து வைத்து இருந்தாராம்  ..இதுலே  இருந்து என்ன தெரியுது ?"
               "நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது ,நல்ல அப்பனாவும் இருக்கணும்னு  தெரியுது!" 

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...?
நம்ம ஊர் லாரி,பஸ்களின் பின்னால் ...
பத்து மீட்டர் இடைவெளிவிட்டு வரவும் என்றெழுதி இருப்பதைப்  போல  ...
சீனாவில் வெண்சோ நகரிலுள்ள இரு பாலர் பள்ளி ,கடைபிடிக்க  வேண்டிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது ...
மாணவர் மாணவி இடையே எப்போதும் அரை மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது கூட பரவாயில்லை ...
ஹான்க்சோ நகரில் உள்ள பள்ளி அறிவிப்பை படித்தால் அழுவதா  சிரிப்பதாவென்று புரியவில்லை !
மாணவனுக்கும் மாணவனுக்கும் .மாணவிக்கும் மாணவிக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமாம் !
தலைக்கீழாய் பொறந்து இப்படி ஏன் தலைக்கீழாய் அலைகிறார்கள் என்று புரியவில்லை !

11 October 2016

ராசியில்லா தொடை மச்சம் :)

 முத்தலிப்  என்ற  பெயர் கொண்டவர்கள்  மன்னிக்கவும் :)           
                 ''ஏண்டா ,உன் பெயரை மாற்றிகிட்டே ?''
                 ''தமிழும் இல்லாமல் இங்கிலீசும் இல்லாமல் ,அதென்ன  'முத்த  லிப் ' னுதான் !''

கொடுமையிலும் கொடுமை , அதை விட இது அதிகம் !                   
             ''என்னடா சொல்றே , பக்கத்திலே  பள்ளிக்கூடம் இருந்தால் தான்  டாஸ்மாக் கடைகள்  திறக்கப் படணுமா ?''
             ''அப்படியாவது பள்ளிகள்  எண்ணிக்கை பெருகுமே !''
கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???
            ''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை விட்டும் கொசு குறையலையே ,ஏன்?''
             ''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  ''

திருமணமாகாத பெண்களுக்கு ஆயுள் குறைவு !
அமெரிக்க கலிபோர்னியா பல்கலைகழகம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது ...
திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் ...
திருமணம் முடித்த பெண்கள் ...
இருவரில் அதிக நாள் உயிரோடு இருப்பது திருமணமான பெண்கள்தானாம் !
காரணம் ,அவர்களின் கையில் பணப் புழக்கம்  கூடுவதால் ஏற்படும் மகிழ்ச்சிதானாம்  !
நம் ஊரிலும் பல்கலை கழகங்கள்இருக்கின்றன ...
இதுபோல் ஆண்களை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் ...
ஆண்கள் தங்கள் ஆயுளை கூட்டிக்கொள்வதா...
குறைத்துக் கொள்வதாவென்று ....
திருமணம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் !

ராசியில்லா தொடை மச்சம் :)
வளர்ந்த பிறகு 
அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேட்கும் போதுதான் ....
சிறிய வயதில்  பள்ளிச் சேர்க்கையில் ...
தொடையில் மச்சமென்று  பதிந்த  அப்பாவையும்  ... 
மச்சத்துடன் கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !

10 October 2016

காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு :)

 இப்படியும் ஒரு சங்கடம் :)          
           ''நீங்க கட்சி  தாவுனதுக்காக , தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்களா ,ஏன் தலைவரே ?''
         ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு சொல்றாங்களே !''

காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு :)
             ''பதுங்கு குழியை பார்வையிட்ட மன்னர் ...இதென்ன ஒதுங்கு குழியான்னு  கோபமா சத்தம் போடுறாரே ,ஏன் ?''
              ''உள்ளே நாலு காண்டம் கிடக்குறதை பார்த்துட்டாரே !''


மருமகள் துடிப்பது ....நடிப்பா ?
           ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன்?''
           ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''

காதலிக்கவும் இனி கற்றுக் கொள்ளலாம் !
இன்னும் சில வருடங்களில் ...
டாக்டர் வக்கீல் ஆடிட்டர் போல் 
காதல் ஸ்பெசலிஸ்ட்களும் கடை திறக்க இருக்கிறார்கள் ...
குறைந்து விடுமா ?ஒரு தலைக் காதல்...
மறைந்து விடுமா ?ஆசிட் வீச்சுக்கள்...
காதலர்கள் தற்கொலைகள் காணாமல் 
போய்விடுமா? 
விடை காண காத்திருப்போம் ...
2014ம் ஆண்டு முதல் கொல்கத்தா பிரெசிடென்சி 
பல்கலைகழகம் 'காதல் 'படிப்பை துவங்கி இருக்கிறது  !
காதல் ஏன் வருகிறது ?
காதலின் நன்மை தீமைகள் என்னவென்று 
சொல்லித் தருவார்களாம் !
இந்த படிப்பில் சேர காதலித்து  இருக்க வேண்டுமா ?
காதலில் தோற்றவர்களுக்கு கட்டண சலுகை உண்டாவென்று  தெரிவித்தால் நல்லது  !
புதுப் பாடப் பிரிவில் ...
கள்ளக் காதல்,காமசூத்ரா விளக்கங்களும் தந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது !

தேவதைகள் உலா வரும் நேரம் !
அந்தி மாலை ,விளக்கேற்றும் நேரம் ..
தேவதைகள்  உலா வரும் நேரம் என 
கதவு ஜன்னலை திறந்து வைத்ததெல்லாம் 
அந்தகாலம் !
தேவை இல்லாத பூச்சிகள் எல்லாம் நுழையுமென 
எல்லாவற்றையும் இழுத்து மூடுவது 
இந்த காலம் !

9 October 2016

இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....:)

கடன் வெட்கமறியாது :)
        ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 
        ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேங்கிறாங்களே !''

கடகம்னா நண்டு, தெரியும்தானே :)
             '' வாழ்க்கைக் 'கடலில் 'நீந்தி விளையாடுவீர்கள் என்று மணமக்களுக்கு ஜோதிடர் சொன்ன வாழ்த்து  பலிக்கும்னு எப்படி நம்புறே ?''
            ''பொண்ணு 'மீன'ராசி ,பையன் 'கடக'ராசியாச்சே !''

இந்த ஜோடி பெத்துகிட்டது ரெண்டுதான் !
                   ''வீட்டிலே அரை டஜன் பிள்ளைங்களை  வச்சுகிட்டு,குடும்பக்கட்டுபாட்டைக் கடைப்பிடிக்கிறோம்னு  சொல்றது ,நியாயமா ?''
                   'நாங்க பெத்துகிட்டது ரெண்டுதாங்க ,கல்யாணத்திற்கு முன்னாடி  அவளுக்கு ரெண்டு,எனக்கு ரெண்டு குழந்தைங்க இருந்ததே !''

அடுத்தவங்க  டைரியைப் படிப்பதில்  'கிக் ' உண்டா : )*
             'அடுத்து நீங்க  எடுக்க  போற  படத்தின்  பெயர் 'ஒரு பைத்தியத்தின் டைரி 'யாமே ? '
           '  'ஆமாம் ,அதுக்கு நீங்கதான் உங்க டைரியை கொடுத்து உதவணும் ,ப்ளீஸ்!'   
    *முன்னொரு காலத்தில் ,பிரசுரித்த ஜூனியர் விகடனுக்கு நன்றி !   
இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....:)
இந்திய ஜனத் தொகையோ 120கோடி ,அதில்  இணையத்தை பயன்படுத்துவோர் 15கோடி ,அதில் ஆண்களின் எண்ணிக்கை 9கோடி ,
6கோடி பெண்களில் ...
பதினெட்டில் இருந்து முப்பத்தைந்து வயதுள்ள ஆயிரம் பெண்களை சர்வே செய்ததில் அவர்கள் இணையத்தில் பார்ப்பது ...
உடை ,உணவு ,நகைகள் சம்பந்தமாகத் தானாம் !இது கூகுள் சர்வே ... ஆண்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதையும் சர்வே செய்தால் ......?அவ்வ்வ்வ் ...
கூகுள் ஆண்டவர் ஆண்களை காப்பாற்றி விட்டார் என்றே படுகிறது !

8 October 2016

Rampaa,Urvasi,Menaka இருப்பது இங்கே :)

கணவன் மேல் சந்தேகம்னா இப்படியா குத்திகாட்டுவது ?
             '' இன்னைக்கு வேலைக்காரி கேட்ட 'டிடர்ஜென்ட்  கேக்' சோப்பை  வாங்கி வந்தேன் ,இனிமேல் வாங்கி வரக் கூடாதுன்னு சொல்லிட்டா  என் மனைவி !''
              ''ஏண்டா ?''
               ''என் பையன் பத்து நாளா கேட்கிற 'பட்டர் ஜாம் கேக் 'வாங்கிட்டு வர மறந்து விட்டேனாம்!''

ரம்பா ,ஊர்வசி ,மேனகா இருப்பது  இங்கே :)
              ''அவர் ஏன் 'ரம்'மட்டுமே குடிக்கிறார் ?''
             ''Rampaa,Urvasi,Menaka மூவரோட டான்சையும் பார்த்த த்ரில் அதிலேதான் அவருக்கு கிடைக்குதாம் !''

விஜய்யின் துப்பாக்கியை சத்தியமா நான் பார்க்கலே!
          ''விஜய்யோட  துப்பாக்கியை  பார்த்தீயா ?''
         ''அவர் எப்போ தொலைச்சாரு ?துப்பாக்கி லைசென்ஸ் அவருக்கு இருக்கா ?''

டெங்குக்கு மருந்தில்லை !கொசுவுக்கும் ஒரு முடிவில்லையா ?
கின்னஸ் சாதனை செய்ததற்காக 
பாராட்ட முடியவில்லை ...
காரணம் ,இந்த சாதனையால் வருடம் தோறும் 
இறந்தோர் எண்ணிக்கை இருபது கோடியாம் !
உலகிலேயே மோசமான உயிரினம் என்று 
சாதனைக் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பவர் ...
திருவாளர் 'கொசு 'வார்  தான் !

ரீசார்ஜ் ஆகுமா காதல் ?
மூன்றாண்டு காதல் முறிந்தது 
மூன்று நாளாய் முடங்கியது செல்போன் ...
அவளுக்காக ,அவன்  ரீசார்ஜ்  செய்யாததால் !

  குறிப்பு ....இரண்டு நாள் பணி  நிமித்தமாய் நாகர் கோவில் செல்வதால் ,இந்த மீள் பதிவு !என்  மறுமொழியும்  தாமதமாகும்  பொறுத்தருள்க :)

7 October 2016

ஓடிப் போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா :)


ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !
      '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
      ''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''

ஓடிப் போய் கல்யாணம்தான்  கட்டிக்கலாமா ?
             ''நம்ம ரெண்டு பேரும்  143ன்னு சொல்லிக் கிட்டாலும்,அதுக்கு  ரெண்டு பேர் வீட்டுலேயும் 144போட்டுட்டாங்க ...அடுத்து  என்ன செய்றது ?''
             ''123 ஜூட்னு சொல்லிட்டு  ஓடிறவேண்டியது தான் ,வேற வழி  ?''
               (அதென்ன 144,143 என்று  தெரியாதவர்கள் நேற்று முந்தின நாள் பதிவைப் பார்க்கவும் :)

எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள் தான் !
நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை... 
புரதப் பொருட்களால் ஆனதாம் ...
அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை 
கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ...
அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !

மனைவி அமைவதெல்லாம் ..........?
            ''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
             ''ஆமா ,எப்படி  கண்டுப்பிடிச்சீங்க ?
             ''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு பாடிக்கிட்டு இருந்தீங்களே !''

வீட்டில் எப்பவும் கொண்டாட்டம்தான் !
நாம் ,வீட்டில் இருந்தால் 
கொசுவுக்கு  கொண்டாட்டம் !
இல்லாவிட்டால் 
கொள்ளைக்காரனுக்கு கொண்டாட்டம்!

6 October 2016

மனைவி கை குட்டுபடவுமா கொடுத்து வைச்சிருக்கணும்:)

நேற்று ஜோக்காளியின் ஐந்தாவது பிறந்த தினத்துக்கு , தமிழ் மணத்தில்  இரட்டை இனிப்பைக் கொடுத்த வலையுலக உறவுகளுக்கு நன்றி :)
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
வாசகர் பரிந்துரை
                கால்கட்டு போட்டால்தான் காலோட அருமை தெரியும் :)
                                                                8Who Voted?Bagawanjee KA

இவர் வீட்டுக்கு வரலேன்னு யார் அழுதா :)
           ''இது உங்க வீடு மாதிரி ....ஒவ்வொரு முறையும் ,வர்றேன்னு ஏன் முன்கூட்டியே  போன்லே சொல்றீங்க ?''
            ''சொன்னாதானே ,நீங்க டாய்லெட் எல்லாம் கிளீன் பண்ணி வைப்பீங்க !''

மனைவி கையால்  குட்டுபடவுமா கொடுத்து வைச்சிருக்கணும்:)
            ''என்னது ,என் நல்லதுக்குதான்  வைர மோதிரம் கேட்கிறீயா?''
             ''ஆமாங்க ,குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட்டேன்னு சொல்லிக்கலாம் இல்லையா ?''
இதுவல்லவோ நாணயம்:)
           ''அவர்  சொன்ன  வார்த்தையை   காப்பாத்துறதிலே  நாணயமானவரா , எப்படி?''
           ''ரெண்டே நாள்லே  திருப்பி தர்றேன் ...இல்லைன்னா  பேரை  மாத்திக்கிறேன்னு கடன்  கேட்டார் ..சொன்ன மாதிரி  நாணயமா பெயரை  மாத்திக்கிட்டாரே !''
(பிரசுரம்  செய்த தினமலர் வாரமலருக்கு நன்றி !)

இவர்கள் லஞ்சம் வாங்குவதும் 'நாட்டு நலன் 'கருதித்தான்!
            ''நாட்டு நலன் கருதி பல கோடி செலவில் வாங்கிய நீர் மூழ்கி கப்பல்களை ராணுவத்தில் ஒப்படைக்கும் விழா நடந்ததே ...மந்திரி ,எம்பிக்கள் நீர்மூழ்கி கப்பலில் இறங்கிப் பார்த்தார்களா ?''
             ''கடுமையான நிதி நெருக்கடி நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாதுங்கிற 'நாட்டு நலன் 'கருதி அந்த ரிஸ்க்கை யாரும் எடுக்கலே !'' 

பயணிகள் மட்டுமல்ல ,பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது :)
வெளிநாட்டிற்கு செல்லும் சீனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சீன அரசு ...
அது அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ...
எல்லா  நாட்டு மக்களுக்கும்  பொருந்தும் !
நம் பதிவர்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் ...
      பொது கழிப்பிடங்களில் நீண்டநேரம் இருக்க வேண்டாம் !
[பதிவைப் பற்றி வெளியே வந்து யோசிங்க ]
      கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள் !
[உங்களின் பதிவு படிப்பவர் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்கக் கூடாது ]
      பொது இடங்களில் மூக்கை நோண்டக்கூடாது !
[பதிவுக்கு மண்டையை குடைந்துக்கலாம் ,மூக்கை நோண்டிக்கக்கூடாது ]
      நூடுல்சோ ,சூப்போ உண்கையில் சத்தம் வரக்கூடாது !
[நம் பதிவு  படிப்பவரின் பொறுமையை 'உறிஞ்சி'டக் கூடாது ]
     விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள் !
[சிந்தித்து எழுதுபவன் பதிவர் ,காப்பிபேஸ்ட் செய்வதும் திருட்டுதான் ]
மிக மிக முக்கியம் ...
     நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !
[பதிவைப் போட முடியவில்லையென  பதட்டமோ ,பயமோ இருந்தால் மேற்கண்ட காரியம் தானாகவே நடந்து விடும் !] 

5 October 2016

கால்கட்டு போட்டால்தான் காலோட அருமை தெரியும் :)

முதலில் எல்லோரும் ஜோரா கையைத் தட்டுங்க ...
இன்று ,ஜோக்காளியின்  ஐந்தாவது பிறந்த நாள் !
ஜோக்காளியின்  ஒரு முக்கிய குறிப்பு.......
இது வரையில்  வந்த உங்கள் பின்னூட்டங்களும் , அதற்கு நான் தந்த  மறுமொழிகளின் எண்ணிக்கையும் =  31690  
வெளியான பதிவுகள் எண்ணிக்கை =      1935
(நேற்றைய இரவு சரியாக பன்னிரண்டு மணி நிலவரம் )

கால்கட்டு போட்டால்தான் காலோட  அருமை தெரியும் :)      
            ''ஏண்டா  ,பம்பின்  கால் பம்பறியும்னு  எழுதியிருக்கே ?''
            ''நீங்கதானே சொன்னீங்க ,பாம்பின் கால் பாம்பறியும்னு !''
டாக்டர்களுக்கு தன்னடக்கம் கூடாது :)
          ''என் பிள்ளை உயிரைக் காப்பாத்தின நீங்க, தெய்வம் டாக்டர் !''
         ''அதுக்காக ,ஃபீஸை கோவில் உண்டியலில் போட்டுறாதீங்க!''

திருடனுக்கும் இது தெரிஞ்சுப் போச்சா ?               
             ''என்னங்க ,நேற்று நம்ம வீட்டுக்கு வந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை'யான்னு கேட்டானே ...ஏன் ?''
           '' பீரோ சாவி  என் கிட்டே இருக்கு ,லாக்கர் சாவி உன்கிட்டே இருக்குங்கிறதைச் சொன்னேன் !''

ஜோக்காளியின் முதல் கன்னிப் பதிவு ,இதோ....
அன்னிய நேரடி முதலீடு நாட்டுக்கு ...வீட்டுக்கு ?  
         ''உங்க அண்ணன் கல்யாணம் ஆனவுடனே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சுட்டானே ,எப்படி ?
         ''எல்லாம் அண்ணியின் நேரடி முதலீடு தான் !''

143 ன்னா I LOVE YOU ,144 ன்னா...?
          ''நீ அந்த பொண்ணு கிட்டே 143 ன்னு சொன்னதுக்கு ,அவங்க வீ ட்டிலே அவளுக்கு 144  போட்டுட்டாங்களா, என்னடா சொல்ற ?''
           ''ஐ லவ் யு ன்னு சொன்னேன் , அவளை வீட்டை  விட்டு வெளியே போகக்கூடாதுன்னு  தடை உத்தரவு போட்டுட்டாங்களே !'' 

இசை கேட்டால் புவி அசைந்தாடுமா ?
மன்னர் அக்பர் அவையில் இசைக் கலைஞராக இருந்த தான்சேன்
தீபக் ராகத்தை  பாடியபோது ...
மெழுகுவர்த்திகள் தானாக எரிந்தனவாம் ...
மேக் மல்ஹார் ராகத்தைப் பாடி மழையை வரவழைத்தாராம்...
நம்ம சிவாஜியும் தான்சேன் வேடமணிந்து பாடி ...
கோமா நிலையில் இருந்த ராணியை உயிர்த்தெழ வைக்கிறார் ...
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற அந்த பாடல் அமைந்த  ராகத்தின் பெயர் ...
'எமன் 'கல்யாணியாம்,நம்ப முடிகிறதா ?  

4 October 2016

விதவை ,வெள்ளைச் சேலை கட்டியது அந்த காலம் :)

இப்படியும் சொல்லலாமா :)            
           ''நானே கால்நடை டாக்டர் ....யாருக்கும்  மேஜர் ஆப்பரேசனா  செய்யப் போறேன் ?உடனே  கிளம்புங்கன்னு  ஏன் பறக்கிறே ? ''
             ''தெருவிலே  பூனை ஒண்ணு  குறுக்கே போவுது ,உங்க தொழிலுக்கு அது நல்ல சகுனம்னு  சொன்னேங்க  !''

விதவை ,வெள்ளைச் சேலை கட்டினது எல்லாம் அந்த காலம் :)
          ''நர்ஸ்  யூனிபார்ம் போட்டுக்கிட்டுத்தான் டூட்டி பார்ப்பேன்னு  ஏன்  சொல்றீங்க ?''
         '' நான் வெள்ளைச் சேலை கட்டிட்டு போனா ....பேஷண்ட்  ஒருவர், 'மறுமணம் பண்ணிக்க நான் ரெடி ,நீங்க ரெடியா 'ன்னு  கேட்கிறாரே !''
இவரோட கொள் 'கை'ப் பிடிப்பு யாருக்கு வரும் :)
          ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
          ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்  !''

நடிகை சமந்தா ரெட்டி ஞாபகமாவே இருக்காங்க :)
             ''காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம் பண்றதாலே ,வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?''
              ''இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''

இந்தியா சுய காலில் நிற்பது எப்போது ?
யானைக்கும் அடி சறுக்கும் ...
அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ...
தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறி கட்டணுமே...
இங்கே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரச் சரிவு தான் காரணம் என்றார்கள் !
உலக தாதா அமெரிக்க யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளட்டும் ...
அந்த மண் நம் தலையிலும் விழும் என்றால்... 
நாம் கடைப் பிடிப்பது சுய சார்பு பொருளாதாரக் கொள்கைதானா ?