14 January 2017

'ரிஸ்க்' எடுத்து கொடுத்த பொங்கல் புடவையோ :)

வீட்டுக்கு போனதும் இவருக்கு இருக்கு 'பொங்கல் ':)
            '' கண் ஆபரேசன்  செய்த  டாக்டர்  நீங்களே ,என் கணவரோட கண்கட்டை ஏன் பிரிக்க மாட்டேன்னு சொல்றீங்க ?''
           ''முதல்லே யாரை  பார்க்க விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு 'நர்ஸ் நளினாவை 'ன்னு சொல்றாரே !''

பொங்கல்னா இதுதான் பொங் 'கல் ' :)
            ''இதுவரைக்கும் நீ  இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''
            ''அவ்வளவு டேஸ்ட்டா?''
            ''அட நீ வேற ...பொங்கல்லே  அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்ல வந்தேன் !''

 ரிஸ்க் எடுத்து கொடுத்த பொங்கல் புடவையோ :)
        ''நீ கட்டிக்கிட்டு இருக்கிற புதுப் புடவை சூப்பரா இருக்கே ,எங்கேடி  எடுத்தே ?''
         ''என் வீட்டுக்காரர் கிட்டேதான் கேட்கணும் ,ஜெயிலில் இருந்து வரட்டும் !''

பொண்ணோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே :)
             ''வாடிவாசல் வழியா வந்த ,தலைவரோட மாட்டை மட்டும்  யாரும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
             ''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருகிறாரே !''

சொல்வது ஒன்று ,செய்வது ஒன்றுமாய் நம் அரசியல்வாதிகள் :)
உயர்நீதி மன்றத்தில்  தமிழில் 
வாதாடக் கூடாது என்பதைக் கேட்டதும் 
இரத்தம்  கொதித்தது ...
காரணங்களை  கேட்டபோதுதான்  புரிந்தது .
தமிழ் தமிழ் என முழங்கும் தலைவர்கள் ...
செய்ய வேண்டிய அடிப்படையான சட்டத் திருத்தங்களைச் செய்யாமல் ...
நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று !

20 comments:


 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜி:)

   Delete
 2. சாரி டாக்டர்... நர்ஸ் நளினா ஒங்க வைப்புன்னு அவருக்குத் தெரியாது...! எக்ஸ்டீம்லி சாரி டாக்டர்...!

  கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா...?

  வீட்டுக்காரர் ஜெயிலில் இருந்து வந்தா மட்டும் அவர விட்டே கொடுக்க மாட்டியே...! அவ்வளவு பய பக்தி...!

  அப்ப காளை பிடிபடாத காளைன்னு... எப்பவும் பேரெடுக்குமுன்னு சொல்லுங்க...!

  திருத்(ந்)தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்...!

  த.ம. 1


  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா பார்வையே வராதே :)

   மனைவி கை கல்லும் மாணிக்கமாகும் :)

   ஜெயில்லே இருந்தாலும் என் புருஷன் :)

   மாடு பேரெடுக்கும் , கோழைகள் என்றல்லவா வீரர்கள் ஆகி விட்டார்கள் :)

   நாமதான் திருந்தணும்:)

   Delete
 3. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜி:)

   Delete
 4. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜி:)

   Delete
 5. பொங்கல்வாழ்த்து

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜி:)

   Delete
 6. மணவை ஜேம்ஸின் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது
  பொங்கல்லிலேயே கல் இருப்பது தெரியாதவரா நீங்கள்
  வீட்டுக்காரர் ஆசையாய் வாங்கிக் கொடுத்த புடவை. தானமாய் கிடைத்த மாட்டின் பல்லைப் பார்ப்பார்களா
  பலபேர் வெளியே வரும் மாட்டைத் தொத்திக் கொண்டுபோனால் எத்தனை பேருக்குக் கட்டிக் கொடுப்பார்
  நமக்குத் தெரியாத பல விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் பதிவுக்கு நான் யோசிப்பதை அவர் அதிகம் யோசிக்கிறாரே :)
   கடிச்சாதானே தெரியுது :)
   அது சரி ,பல் இல்லையென்றால் புது பல் செட்டா மாட்டப் போகிறார்கள் :)
   அவர் தயார் ,கட்டிக்கத்தான் யாரும் தயாராய் இல்லை :)
   பவுண்டேசன் போடாமல் கட்டிடத்தைக் கட்ட முடியுமா :)

   Delete
 7. எனக்கு ஒரு சந்தேகம்.புடவை எடுத்து கொடுத்தது வீட்டுக்காரரா...எப்படி..அவர்தான் மாமியார் வீட்டில் இருக்காரே... பின் எப்படி.....????

  ReplyDelete
  Replies
  1. இந்த புடவையைத் திருடியதால் தானே மாமியார் வீட்டுக்குப் போயிருக்கிறார் :)

   Delete
 8. ரசித்தேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜி:)

   Delete
 9. நளினா அப்படி என்ன மாயம் செய்தாரோ!

  ReplyDelete
  Replies
  1. அவர் ஒன்றும் மாயம் செய்யவில்லை ,இவர்தான் மயக்கத்தில் இருக்கார் ;)

   Delete
 10. தமிழ் தமிழ் என முழங்கும் தலைவர்கள் ...
  செய்ய வேண்டிய அடிப்படையான சட்டத் திருத்தங்களைச் செய்யாமல் ...
  நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று!

  உண்மை இருக்கே

  ReplyDelete
  Replies
  1. வாய்சொல்லில் வீரரடி என்பது இவர்களுக்கே பொருந்தும்:)

   Delete