16 January 2017

குறள் படிக்கும் போதும் நயன்தாரா நினைப்பா :)

கலைவாணர் அன்று சொன்னது ,இன்று உண்மையாச்சு :)
               ''அந்த சலூன்லே தீஞ்ச நாற்றம் வருதே ,ஏன் ?''
                ''அந்த கடைக்காரர்  முடி வெட்ட கத்திரிக்குப் பதிலா நெருப்பைப் பயன்படுத்துறாராமே !''
                (இதை உங்களாலும் நம்ப முடியவில்லையா ? 'நெருப்பை பயன்படுத்தி மூடி வெட்டும் 'வீடியோவை க்ளிக்கி பாருங்க :)

இப்படித் தானே படங்கள் வந்துகிட்டிருக்கு :)
          ''அந்த இயக்குனடரோட எல்லாப் படங்களிலும் ஒரே ஃ பார்முலா தானா ,எப்படி ?''
           ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும்  ,ஹீரோயினுக்கு  'துணி 'கம்மியாவும்  இருக்கும் !''

இப்படி 'போட்டு வாங்கிறவன் 'கிட்டே ஜாக்கிரதையா இருங்க :)
           ''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
          ''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
          ''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன் இல்லேங்கிறீங்க?''

சில ஆண்டுக்கு முன் நான் செய்த 'சிரிகுறள்' ஆராய்ச்சி  ........
குறள் படிக்கும் போதும் நயன்தாரா நினைப்பா :)
            ''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?'
            ''நயன்சாரான்னு  ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும்  மூட் அவுட் ஆயிடுச்சு !''
திருக்குறள்: 
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

வடு மாங்காய் ஊறுதுங்கோ !
       ''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
       ''வடுமாங்காய் சுவையை  நா மறக்காது என்பதுதான் அய்யா !''

திருக்குறள்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?
          ''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?'' 
         ''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !'
திருக்குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

காக்க காக்க நா காக்க !
         ''யாதவராயினும் நாகாக்க ........''
         ''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே  வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''

திருக்குறள் :
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

26 comments:

 1. இந்த நிமிடம் மகிழ்ச்சி தருகிறது !காரணம் ,தமிழ்மணம் திரட்டி இந்த பதிவை தானாக உடன் இணைத்துக் கொண்டிருக்கிறது .தமிழ்மண வாக்கும் உடனே விழுகிறது .தமிழ்மண முகப்பும் இரு வண்ணத்தில் மிளிர்கிறது !தமிழ்மணம் உண்மையில் மறுஜென்மம் எடுத்து விட்டதா ?உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்களேன் ,வலையுலக உறவுகளே !

  ReplyDelete
  Replies
  1. மணி மூணுக்கு மேலாகியும் தமிழ்மண அனுபவத் தகவல் ஏதும் வரவில்லையே ?தமிழ்மணம் மாறவே இல்லையா :)

   Delete
 2. கத்திரி வெயிலின் தாக்கமாக இருக்குமோ...?!

  துணி ‘வே’ துணை...!
  இரு... ப(த்)து ரூபாய் இருக்கனுமுல்ல... அது இருந்தா ஒன்னோட பேசுவேனா... நாமெல்லாம் ஒரே இனம்...!

  முன்பு சிலகாலம் நயன் சாராமல் இருந்தார்... சிம்பு வைத்துக் கட்டியும் ஒட்டவில்லை... தேவன் கோயில் மணியோசையும் கேட்கவில்லை... யாரோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லமுடியுமல் மீண்டும் மீண்டும்... ‘சோ...’ காப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. என்னதான் இருந்தாலும் கலைவாணர் வேடிக்கையாய் சொன்னதைப் போல் வினையாய் தலையில் தீ வைத்துக் கொள்வதா :)

   சென்சார் கத்தரிப் போடாமல் விடணுமே :)

   இப்படி மடக்கிற உனக்கு உதவ மனசு வரும் :

   எப்படியோ பிழைத்துக் கொண்டால் சரி :)

   Delete
 3. உங்களின் குறள் பார்வையே வேறே ஜி... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. யாரும் கோளாறு சொல்லிவிடக் கூடாதுன்னுதான் , மேதைகளின் உரையையும் கொடுத்து விட்டேன் :)

   Delete
 4. Replies
  1. சிரிகுறளுமா ஜி :)

   Delete
 5. நல்லவேளை நான் சொல்லும் முன்பே தனபாலன் உங்கள் குறளனுபவத்தைப் படித்து விட்டார் முடி வெட்டிக் கொள்கிறவருக்க்த் தலை சுடாதா

  ReplyDelete
  Replies
  1. சுடுகிறதா இல்லையான்னு வீடியோவை பார்த்து சொல்லுங்க :)

   Delete
 6. துணி, நயன் காக்க காக்க எல்லாமே ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. கலைவாணரை யாருமே கண்டுக்கலையே ,ஏன் ஜி :)

   Delete
 7. ஜோக்காளி குறளதிகாரம்
  பயனுள்ள கருத்துகளை
  சாலமன் பாப்பையா தர
  சிறப்பாக வெளிவந்திருக்கிறதே...
  பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. சாலமன் பாப்பையா காப்பாற்றினார் ,இல்லைன்னா அடி யார் வாங்கிறது :)

   Delete
 8. நீங்கள் சொல்லியிருக்கும் தலைமுடியில் நெருப்பு வைக்கும் விடியோ ஃபேஸ்புக்கில் பார்த்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. இப்படி நெருப்பை தலையில் வைத்துக் கொள்வது நல்லாவா இருக்கு :)

   Delete
 9. நயன்தாராவெல்லாம்வந்தா

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

   Delete
 10. Replies
  1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

   Delete
 11. பின்ன...'நயன்சாரான்னு சொன்னால் திருவள்ளுவர் நிணப்பா..வரும் தலைவரே....

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

   Delete
 12. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

   Delete
 13. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

   Delete