18 January 2017

சொல்லித் தெரிவதில்லை :)

அது முடியும் ,இது முடியுமா :) 
                 ''இன்னைக்கு ,கராத்தே கிளாஸ்லே  வெறும் கையினால் செங்கல்லை  ஒரே போடா போட்டு  , உடைக்கக் கத்துட்டேன் ,அப்பா !" 
              ''நல்லதா போச்சு ,இன்னைக்கு உங்கம்மா செய்திருக்கிற மைசூர் பாக்கை  உடைச்சுக் கொடு !''
                                                     
இன்னொரு பெண்டாட்டியை  தேடிக்குவாரோ  :)
                 ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
                 ''சரி நான் என்ன செய்யணும் ?''
                 ''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சு கொடுங்க போதும் !''

நடிகைன்னாலே டைவர்ஸ்தானா :)
            ''உங்க பொண்ணுக்குத்தான் சினிமா சான்ஸ் இல்லாம போச்சே ,கல்யாணமும் ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு ?''
            ''வர்ற வரன் எல்லாமே ஆறு மாசமாவது கியாரண்டி தர முடியுமான்னு கேட்கிறாங்களே !''

பிணவறை என்ன மணவறையா ,சந்தோசப்பட :)
            ''டாக்டர் ,ஆஸ்பத்திரி காம்பௌண்ட் உள்ளேயே வாக்கிங் போகச் சொன்னீங்க சரி ,பின் பக்கம் மார்ச்சுவரி  இருக்குன்னு சொல்ல வேண்டாமா ...பயந்தே போனேன் !''
            ''பயப்படாதீங்க ,உங்களுக்கு ஆப்பரேசன் முடிஞ்சதும் சரியாப் போகும் !''

சொல்லித் தெரிவதில்லை ...?
               ''குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்னு சொன்ன ,அந்த நடிகை .இப்போ 'கிளாமர் 'லே கலக்குறாங்களே .எப்படி ?''
               ''சான்ஸ்  கிடைக்காம  இருந்தப்போ  சினிமா 'கிராமர் 'படிச்சாங்களாமே !''

IPL கிரிக்கெட்டில் மட்டுமா சூதாட்டம் :)
சென்ற ஆண்டு ,ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ...
தடை செய்யப்பட்ட சேவல் பந்தயத்தில் ...
MLAக்கள் ,தொழில் அதிபர்கள் ,சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள் ...
அவர்களுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப் பட்டுள்ளது ...
15ஏக்கர் பரப்பளவு பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற சேவல் பந்தயங்களில் ...
5 ௦ ௦ கோடி வரை பந்தயம் கட்டி சூதாட்டம் நடைப் பெற்று உள்ளதாம் ...
அங்கே பணம் விளையாடுகிறது என்றால் ...
இங்கே ,கரூர் அருகே நடந்த சேவல் 
சண்டையால்...
வேடிக்கை பார்க்க வந்த ஒருவரும் ,சேவல் ஜாக்கியாக களம் இறங்கியவரும் பலியாகி உள்ளனர் ...
பலியாக காரணம் ,சண்டையிடும் சேவலின் காலில் கட்டப் படும் கத்தியில் தடவப்படும் விஷம் தானாம்...பாரம்பரிய விளையாட்டுக்கள் என்ற பெயரில் இப்போது வியாபாரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து உள்ளது வேதனைக்குரியதாகும் ! 

18 comments:

 1. இருங்க அப்பா... பான் பராக் பாக்கை துப்பிட்டு வாரேன்...!

  இதுக்குத்தான் வரதட்சணை வாங்கக் கூடாதுங்கிறது... நகையோட நகத்திட்டுப் போயிட்டான்...! ‘போனால் போகட்டும் போடா...!’

  இப்பவே மூனு மாசம்தான்... இன்னும் மூனு மாசம் பொறுத்துக்கச் சொல்ல வேண்டியதுதானே...!

  பயம் போகத்தான் ஒங்கள வாக்கிங் போகச் சொன்னேன்... பயப்படாதிங்க... அவுங்களும் ஒங்கள மாதிரி பயந்தவங்கதான்... இப்ப பாருங்க... எல்லாம் போகப் போக சரியாயிடும்...!

  நம்ம வாழ்க்கையில ஒளிவு மறைவே இருக்கக் கூடாதில்ல...!

  ‘சண்டே கோழி...’ கோழி ரூசியா இருந்தா கோழிய வெட்டு...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

   Delete
 2. Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

   Delete
 3. இன்னமும் மைசூர் பாக் அப்படித்தான் செய்யறாங்களா ஜி! பாவம்!

  ரசித்தேன் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

   Delete
 4. பணத்தால் பாரம்பரியமும் போய் விடும்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

   Delete
 5. பேசாமல் வீடு கட்ட கொடுத்து உதவலாம்
  / நகையை மட்டுமாவது கண்டு பிடித்துக் கொடுங்கள் அப்போ பெண்டாட்டி..?நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
  நடிகை என்றாலேயே டைவர்ஸ் தானா எத்தனையோ நடிகைகள் குடியும் குடித்தனமுமாக இல்லையா
  போகும் இடம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்துவரத்தானே
  அனுபவம் கற்றுக் கொடுத்ததோ
  நான் பல முறை கூறி இருக்கிறேன் அறிவுக்கும் உணர்வுக்கும் நடக்கும் போட்டியில் உணர்வே வெல்லும்

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

   Delete
 6. அப்படியாவது படிச்சு தெரிஞ்சுட்டகிங்களே......

  ReplyDelete
  Replies
  1. வயிறு எல்லாவற்றையும் தெரிய வைக்கும் :)

   Delete
 7. செங்கல்லு - மைசூர்பாகு சிரிப்புத் தான்.
  பாரம்பரிய விளையாட்டுக்கள் என்ற பெயரில் இப்போது வியாபாரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து உள்ளது வேதனைக்குரியதாகும் ! (சிந்தனைக்குரிய விடயம்)
  தமிழ் மணம் 8
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. ஆனால் அதை தடை செய்யாமல் ஜல்லிக்கட்டை தடை செய்வது அரசியல்தானே:)

   Delete
 8. Replies
  1. பதிவு வெளியான இரண்டு நாளான போதும் பொறுப்போடு வந்து ரசித்தமைக்கு நன்றி :)

   Delete