21 January 2017

சுமந்து பார்த்தால் தானே புருசன் கஷ்டம் புரியுது :)

வங்கி வரிசையில் பூத்த காதல் மாதிரி :) 
               ''ஜல்லிகட்டு  போராட்டத்தில்  ஈடுபட்டவங்க  ஒரே லட்சியத்தில் கண்ணும் கருத்துமா இருந்ததை பாராட்டித்தான் ஆகணுமா ,ஏன் ?''
                ''இத்தனை லட்சம் சின்னஞ்சிறுசுங்க சேர்ந்து , இத்தனை நாளா போராட்டம் பண்ணியும் கூட , 'போராட்டக் களத்தில் பூத்த காதல் 'னு ஒரு செய்தியும்  வரலையே !''

இதைப் படித்ததும் 'அவர் 'நினைவுக்கு வந்திருக்கணுமே:)            
               "திருட்டுப் பூஜாரின்னு  அவரை ஏன் அடிக்கிறாங்க ?''
               ''அம்மன் தரிசனத்துக்கு வந்த அம்மணிகளை தரிசனம் பண்ணிக் கொண்டு இருந்தாராமே !''
இது 'மதுரைத் தமிழன்'களின்  சிந்தனைக்கு :)
               ''மேஜிக் நிபுணரைக் கட்டிகிட்டது வம்பாப் போச்சா ,ஏண்டி ?''
              ''பூரிக் கட்டையை  அவர் மேல் எறிந்தால் ,அது பூமராங் மாதிரி திரும்ப வந்து என்னை அடிக்குதே !''

சுமந்து பார்த்தால் தானே புருசன் கஷ்டம் புரியுது :)
               ''எலியும் பூனையுமா இருந்தே ,இப்போ உண்டானபிறகு உன் போலீஸ் புருஷனை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
            '' வயித்திலே  இவ்வளவு  வெயிட்டை  சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''

2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....
'ஜோக்காளி 'யின் நிறத்திற்கு மனதை மாற்றும் சக்தி உண்டு !
         தினமலர்  படித்துக் கொண்டிருந்த ஜோக்காளி ,ஜல்லிக்கட்டு காளையை அடக்கி விட்டவரைப் போல் துள்ளிக் குதித்தார் .
       ''சௌதாமினி  ,சௌதாமினி  ,சீக்கிரம் இங்கே வாயேன் ''என்று தன் சகதர்ம பத்தினியை அழைத்தார் .
      ''என்னாச்சு உங்களுக்கு ?காவிரியில் தண்ணி வந்த மாதிரி உற்சாகம் கரை புரண்டு ஓடுது !''
      ''நீ சந்தோசமா இருக்கியா ,சொல்லு ?''
      ''நீங்க  தாலியைக் கட்டுன நாள்லே இருந்து அது எங்கே இருக்கு ?''
      ''இப்படி புலம்பிக் கிட்டே  திருமண வெள்ளி   விழாவையும்  கொண்டாடியாச்சு !அது கிடக்கட்டும் ,  உன்னை அறியாமலே நீ சந்தோசமா இருக்க ஒரு வழி இருக்கு  !''
      ''அது நான் எங்க அம்மா வீ ட்டுக்கு போற வழியாதான் இருக்கும் !''   
      ''அதுமட்டுமில்லை !ஈசியான இன்னொரு வழி   ,ஜோக்காளி ப்ளாக்கை நீ படிக்க கூட வேணாம் ,பார்த்துக் கிட்டு இருந்தாலே போதும் ,ஆட்டோமேடிக்ககா  உன் மனசிலே இனம் புரியாத சந்தோசம் உண்டாகும் !''
     ''நீங்க  ப்ளாக்கை ஆரம்பித்தப் பிறகு ,  கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறவங்க எண்ணிக்கை கூடியிருக்குதுன்னு 'லயோலா ' புள்ளி விபரம் சொல்லுதே !''
     ''சென்னையில் மட்டுமா ப்ளாக் தெரியுது ?ஆப்ரிக்கா பக்கம் சர்வதேச எல்லையில் ,சாட்டிலைட் ரீசிவர் மூலமா  கப்பலில் இருந்தும் பார்த்து ரசிக்கிறாங்கன்னு தெரியாதா உனக்கு?''
      ''அவங்க  கீழ்ப்பாக்கம் பக்கம் வரலேன்னு சொல்ல  வர்றிங்களா ?''
      ''ஆமா !''என்றார் ஜோக்காளி 'செவ்வாயில் 'தண்ணீர் கண்டுப் பிடித்த மாதிரி !
      ''எதுக்கும் ப்ளாக் வியூவர் மேப்பை  செக் பண்ணுங்க ,அப்பாவி மனுஷன் எவனாவது கடல்லே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கப் போறான் !''
       ''ப்ளாக் எழுதுற நானே ,பவர் ஸ்டார்  ரேஞ்சுக்கு பல்லைக் காட்டிக் கிட்டு சந்தோசமா இருக்கேன் ,என் வியூவர்சைப்  பற்றி நீ ஒண்ணும் கவலைப் படாதே ,நல்லா  இருப்பாங்க !அது சரி ,உன்னோட  தைராய்ட் பிரச்சினை ரெகுலேட்  ஆகணுமா ?என் ப்ளாக்கைப் பாரு !''
         ''ஆசையா வாங்கின வைர நெக்லசை போட்டுக்க முடியலே ,கழுத்துலே  கட்டிட்டு   இருக்கிற  ஃமப்லரை கழட்ட உதவும்னா ப்ளாக்கைப்  பார்க்கிறேன்  '!'
        ''நிச்சயம் உதவும்  ,உனக்கு அடிக்கடி வரும்  தசை பிடிப்பு  ,சரியாப் போயிடுச்சா?''
         ''அப்படியேதான் இருக்கு ,அதுக்கும் உங்க ப்ளாக்கைப் பார்த்தா சரியாயிடுமா ?''
          ''கரெக்ட் !இன்னொரு முக்கிய விஷயம் ,ஜோக்காளி ப்ளாக்கை  ஆண்களை விட பெண்கள் பார்த்தா பலன் அதிகம் !''
          ''உங்க ஜொள்ளுப் புத்தியை  காட்டிட்டீங்களே!''
           ''சௌதாமினி ,தப்பா எடைப்  போடாதே !பெண்களுக்கு பீரியட்ஸ் தொந்தரவு கூட வராதுன்னு சொல்ல வந்தேன் !''
           ''ஜோக்காளி ப்ளாக்கிலே  அப்படி என்ன  அதிசய சக்தி இருக்கு  ?''
''ப்ளாக்கிலே  இல்லே ,ப்ளாக்கில் அதிகமா இருக்கிற ஆரஞ்சு நிறத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கே  !இதை நான் சொல்லலே ,சென்னை அண்ணா இயன் முறை மருத்துவமனை விரியுரையாளர் திருமதி தீபா மேடம் தான் சொல்லி இருக்காங்க !''
         ''உங்களைத் தவிர யார் சொன்னாலும் சரியாத் தான் இருக்கும் !

   நன்றி ..தினமலர்  16.01.13

20 comments:

 1. வணக்கம்
  ஜி

  வரும் அதுவரை காத்திருப்போம்....படமும் சொல்லிய கருத்தும் சிறப்பு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வந்தால் அதையும் வரவேற்போம் :)

   Delete
 2. அடேங்கப்பா...! எத்தனை பயன்கள் ஜி....!

  ReplyDelete
  Replies
  1. படித்தால் வரும் தொல்லைகள் பற்றி பட்டியல் போடலாமோ ஜி :)

   Delete
 3. Replies
  1. தொடர்ந்து தரும் உங்களின் ஊக்கத்துக்கு நன்றி ஜி :)

   Delete
 4. காதல் ‘போர்...’ ஆட்டம் ஆனது...! பூக்கள் புயலாயின...!

  போதுமடா சாமி... மட சாமி...!

  துடைப்பக் கட்டயைத் தூக்கி அடிக்க வேண்டியதுதானே...!

  அப்பனே... அப்பனே... பிள்ளையார் அப்பனே...! போடவா... போடா... வா...!

  ‘மஞ்சள் நிறத்திற்கு என்ன சுகம்...?!’ஆறு மனமே ஆறு... ஆறு... அஞ்சு...?!

  த.ம. 3


  ReplyDelete
  Replies
  1. போராட்டம் முடிந்தால் காதல் இனிக்குமோ :)

   அடி வாங்கி உடம்பில் வைரம் பாய்ந்து விட்டதாம் ,இனி என்ன சேஷ்டை பண்ணப் போறாரோ :)

   அதானே ,இவரோட மேஜிக் அப்போ என்ன செய்யும் :)

   புருசன்காரனுக்கு அவர் வைத்த பட்டப் பெயர் 'நடமாடும் தொந்திப் பிள்ளையார்' :)

   ஏற்கனவே நீங்களே பாடியிருக்கீங்க ...மஞ்சள் நிலாவுக்கு ஒரே சுகம் :)

   Delete
 5. Replies
  1. நிறங்களுக்கு மருத்துவ குணம் இருக்கிறது என்பதையுமா :)

   Delete
 6. அதுபோல் ஏதும் இல்லை என்பதுதானே போராட்டத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது
  படம் வெறும் தரிசனம் என்று தெரிவிக்கவில்லையே
  மதுரைத் தமிழர்கள் மேஜிக் நிபுணர்கள் அல்லவே
  தொப்பையின் கனம் புரிந்து விட்டதா
  எதுவும் புரியமாட்டேங்குது

  ReplyDelete
  Replies
  1. அரைகுறை தீர்வு தேவையில்லை ,முழுமையான தீர்வே தேவையென்று தமிழ் நாடே கொந்தளிப்பில் உள்ளதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது :)
   அதையும் மீறி இது புனிதமானது !புனிதமானது :)
   ஆனால் ,நடப்பில் தமிழகமெங்கும் தமிழர்கள் இதுவரை செய்யாத மேஜிக் செய்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே :)
   வலி தனக்கு வந்தால் தானே தெரியுது :)
   நிறத்தின் வலிமைப் புரியவில்லையா :)

   Delete
 7. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
  தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

  ReplyDelete
  Replies
  1. தடைகள் நிரந்தரமாக அகற்றப் பட வேண்டுமென்று உறுதியுடன் போராடும் அவர்களை நானும் வணங்குகிறேன் :)

   Delete
 8. அனைத்து பதிவும்மிகவும்நன்கு

  ReplyDelete
  Replies
  1. போராட்டக் களத்தில் காதலுக்கு இடம் இல்லை என்பது கொள்கையின் மீதான பற்றை உலகுக்கு பறைசாற்றுகிறது தானே :)

   Delete
 9. Replies
  1. ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 10. பதிவை ரசித்தேன் சகோதரா.
  தமிழ் மணம் 7
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete