25 January 2017

ஜாக்கிரதை ஜன்னல் ஜாக்கெட் ஜாக்கிரதை :)

பன்னாட்டு கம்பெனிப்  பொருளை இப்படியும் தள்ளலாமோ:)
          ''பேபி சோப்பிலே இதான் நம்பர் ஒண்ணு ,ஏன் வேண்டாங்கிறீங்க ?''
          ''வெளிநாட்டு  john னோட son னே அதைப் போட்டுக்கட்டும் !''

பதிலும் SMSல் வராம  இருக்கணும் :)           
           ''என்னங்க , 'லட்சுமி மேனன் அடுத்து நடிக்கும் படம் 'னு பையனுக்கு SMS அனுப்புறீங்களே,ஏன் ?''
           ''அப்படியாவது  ,என் நினைப்பு வந்து பேசுறான்னா  பார்க்கத்தான் !'' 

நல்ல முன் எச்சரிக்கைதான்   :)           
             '' கூட்டிப்  பெருக்க மட்டும் தெரிந்த வேலைக்காரி தேவைன்னு உங்க மனைவி சொல்றாங்களே ,ஏன் ?''
             ''வர்ற வேலைக்காரி ,என் மனைவி கிட்டேயிருந்து என்னைக் கழித்து , புது வாழ்க்கை வகுத்து விடக் கூடாதுன்னுதான் !''

இவனை வரதட்சணைக் கேஸில் தூக்கிலே போடணும் :)
            ''என்னம்மா ,குண்டைத் தூக்கி போடுறே ... டைவர்ஸ்  நோட்டீஸ் கொடுக்கப் போறீயா ,ஏன் ?''
            ''உங்கப்பாதான்  பாங்கிலே பெரிய ஆபீசராச்சே , நம்ம வீட்டிலே ஒரு ATM மெஷினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கிறாரே,உங்க மாப்பிள்ளை  !'' 

ஜாக்கிரதை  ஜன்னல் ஜாக்கெட் ஜாக்கிரதை  :)
           ''என் மனைவிகிட்டே ,ஜன்னல் வழியே கையை விட்டு நகை திருடுறது பெருகிட்டு வருதுன்னு சொன்னது ,நல்லதாப் போச்சு !'' 
           ''ஜன்னல் கதவுக்கும் பூட்டு போட்டுட்டாங்களா?''
           ''இல்லே ,ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதைக்கூட  விட்டுட்டா !''
ஷேர் மார்க்கெட் எல்லோருக்கும் கை கொடுக்குமா :)
         '' உங்க வீட்டுக்காரர்  ஷேர் ஆட்டோவில் ஏற மாட்டாரா ,ஏன்?''
           ''ஷேர் மார்க்கெட்லே போட்ட பணம் போனதில் இருந்து இப்படி ஆயிட்டார் !''

வாயாடி, பெரியவள் ஆனதும் :)
FM ரேடியோவில் கலாய்க்கும் 
 ரேடியோ  ஜாக்கி ....
 சின்ன வயதிலேயே பெரிய வாயாடி !

25 comments:

 1. ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதைக்கூட விட்டுட்டா

  ReplyDelete
  Replies
  1. //ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதைக்கூட விட்டுட்டா //

   அப்ப முதல் மரியாதையில் நடித்த ராதா போலத்தான் இப்ப இருக்காங்களா அது ரொம்ப ஆபத்தாச்சே

   Delete
  2. ஆபத்துன்னு ்தெரிஞ்சுதான் ஜன்னலை மூடிட்டாங்க :)

   Delete

 2. ''கூட்டிப் பெருக்க மட்டும் தெரிந்த வேலைக்காரி தேவைன்னு மனைவி சற்று சத்தமாக சொல்லனும் இல்லை என்றால் என்னை போல உள்ள கணவர்கள் நீ சொன்னபடி நான் ' கூடி ' குடுமபத்தை பெருக்கிட்டேன் என்று வந்து நிற்க போகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. கழுவி ஊற்றத்தான் தயாரா இருக்காங்களே:)

   Delete
 3. /// ''என்னம்மா ,குண்டைத் தூக்கி போடுறே ... டைவர்ஸ் நோட்டீஸ் கொடுக்கப் போறீயா ,ஏன் ?''
  ''உங்கப்பாதான் பாங்கிலே பெரிய ஆபீசராச்சே , நம்ம வீட்டிலே ஒரு ATM மெஷினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கிறாரே,உங்க மாப்பிள்ளை !//

  ஏம்மா இதுக்கா டைவர்ஸ் பண்ணப் போறே நீ விவரம் தெரியாத ஆளாக இருக்கிறேயே இதை என் கிட்ட சொன்ன நாட்டில வொர்க் ஆகாத எத்தனை ATM மெஷின் இருக்குது அதுல ஒன்னை வீட்டில கொண்டு வந்து வைக்க சொல்லுறேன் அதுல அவரை உன் செலவீர்கு பணத்தை போடஸ் சொல்லுமா இது கூட உனக்கு நான் சொல்லியா தரணும் இன்னும் எவ்வளவு நாள்தான் அப்பாவியா இருக்கிறே

  ReplyDelete
  Replies
  1. இப்படியெல்லாம் இடக்கு மடக்கா செய்வீங்கன்னு தான் ,ஒன்லி இரண்டாயிரம் அடுக்கித் தரணும்னு சொல்றாரே மாப்பிள்ளை :)

   Delete
 4. வெளிநாட்டு சோப்பைத் தவிர்க்கும் விளம்பர ஜோக்கா ஜி?!

  லட்சுமி மேனன் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கறாரே...

  கணக்குத் தெரிந்த வேலைக்காரி வேணாம்.

  ReplyDelete
  Replies
  1. இது ஜானோட சன் சோப்புன்னு அவங்களே சொல்றாங்க ,இப்போதானே புரியுது :)

   ஏன் படத்திலே நடிக்காதேன்னு அவங்க வீட்டிலே தடையா :)

   கணக்கு பண்ணத் தெரிந்தன்னு சொல்லுங்க :)

   Delete
 5. ஜான் ஏற முழம் வழு(க்)கலை...!

  ஓ... இதுதான் ‘பேசும் படமோ...!’

  கூட்டிக் கழித்துப் பாருங்க கணக்கு சரியா வரும்... சமன் செய்து(=) சீர் தூக்கும் கோல்தான்...!

  விரைவில் வீட்டிலே ஒரு ATM மெஷினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுறேன்... இப்பத்தான் ATM இல் பணம் இருக்கிறதே இல்லையே... சேப்டி லாக்கரா இருக்கட்டும்... சிறுகச் சிறுக எடுத்துப் பெருக வாழனுமுன்னு நினைக்கிறாரு...! இதுக்குப் போயி டைவர்ஸ் நோட்டீஸ் கொடுக்காதே...!

  ஜன்னல்... ஜாக்கெட் போட்டுக்கிறது நல்லாவா இருக்கும்...?!

  இப்ப மார்கட்டு நிலவரம் சரிவை நோக்கி போய்கிட்டே இருக்கு... இதை எல்லோருக்கும் ஷேர் செய்யுங்க...!

  பெரிய வயதிலே இப்ப அவள் ‘ஆல் இண்டியா ரேடியோ...!’ யாரும் அவள் பேச்சைக் கேக்கிறதே இல்லை...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. சோப்பு வழுக்கிறதுக்கு சொல்லவா வேணும் :)

   பேசும் படத்தைப் பார்த்து மெய் மறந்து பேச மாட்டேங்கிறானே பயபுள்ள :)

   இந்த கணக்கு தலை சுற்ற வைக்குதே:)

   அடடா ,இவ்வளவு நல்ல மனசுன்னு தெரியாம போச்சே :)

   பாவாடை கட்டிகிட்டா பொருத்தமா இருக்குமோ :)

   லைக் பண்ண ஆளிருக்காதே :)

   சரோஜ் நாராயணசாமி குரலைக் கேட்ட காலம் எல்லாம் போயே போச்சு :)

   Delete
 6. Replies
  1. படத்தையுமா ஜி :)

   Delete
 7. ஜய்ஹிந்த்புரம் ஜன்னல் ஜாக்கெட் ஜானகி ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. நீங்க சரியாய் கவனிக்கலே ,gmb அய்யாதான் சரி :)

   Delete
 8. Replies
  1. வாயாடி பேச்சு எப்படி :)

   Delete
 9. Replies
  1. ஷேர் மார்க்கெட்டில் விட்டவர் நிலைமை மோசம்தானே :)

   Delete
 10. ஜான்சன் சோப்பா அல்லது ஜானின் சன்னுடைய சோப்பாஅப்போ க்லவ் உபயோகிக்கலாமா
  லட்சுமி மேனோனைப் பிடிக்குமா. நினைப்பு வந்தாலும் பேச்சு வராது எஸ் எம் எஸ் தான் வரும்
  இவ்வளவும் தெரிந்த கணவருக்குக் கூடி வாழத்தெரியலையா
  பேங்க் மானேஜருக்கு ஏடி எம் எதுக்கு
  போட்டிருக்கும் ஜாக்கெட்டில் ஜன்னல் இல்லையே
  ரசிக்கும் படி உள்ளது

  ReplyDelete
  Replies
  1. உள்நாட்டு நிறுவனத்தை ஆதரிக்கலாமே :)

   பிடிக்காமல் போகுமா :)

   ஏதோ பிளானோட இருக்கார் போலிருக்கே :)

   மாப்பிள்ளைக்குத் தேவையா இருக்கே :)

   இதுக்கு ஜன்னலே பரவாயில்லே போலிருக்கே :)

   வாயாடி பேச்சுதானே :)

   Delete
 11. Replies
  1. வீட்டுக்கு ஒரு atm மெஷின் இருந்தால் நல்லதுதானே :)

   Delete
 12. அப்படியாவது ஜன்னல் ஜாக்கெட் ஒழியட்டும் தலைவரே...

  ReplyDelete
  Replies
  1. எங்கே ஒழியப் போவுது ,ஜன்னல் பதிலா கதவையே வைப்பாங்க :)

   Delete