26 January 2017

காதலியின் ஆசையை நிறைவேற்ற இப்படியா துடிப்பது :)

குடியரசின் பலன் அனுபவிக்கிறவங்க யார் :)
              ''தலைவர்  அறிக்கை விடும் போது மப்புலே இருந்த மாதிரி தெரியுதுன்னு ஏன் சொல்றே ?''
             ''குடிஅரசு ஆனதின் முழுபலனை  நமது மாநில மக்கள்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்வண்ணம்,
இன்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும்  தேசீயக் கொடி ஏற்றவிருப்பதால் 'குடி 'மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சொல்லி இருக்காரே !''

கை மாறிய காதலிக்கு கல்யாணம் :)
               ''5 ஸ்டார் ஹோட்டலில் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் ,நீ அவசியம் வரணும்டா !''
               ''கவலையே படாதே ,வந்து விடுகிறேன்  ,(மனதுக்குள் )உனக்காக இல்லைன்னாலும் என் பழைய காதலிக்காக வந்து தானே ஆகணும் !''

முதலாளிக்கு வந்த நல்ல எண்ணம் :)
              ''மேனேஜர் ,நம்ம தொழிலாளிங்க யாரும் 'கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே'ன்னு  பாடக்கூடாது ...!''
              ''சம்பளத்தை இரண்டு மடங்கு ஆக்கப் போறீங்களா ,முதலாளி ?''
              ''ஊஹும் ...சம்பளத்தைப் பாங்கிலே போட்டுருங்க !''

காதலியின் ஆசையை நிறைவேற்ற இப்படியா துடிப்பது :)      
           ''டார்லிங் , 28  வயசுலே பிள்ளைப் பெத்துக்கிட்டா  உடல்ரீதியா நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க !''     
          ''எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லே ,முதல்லே பெத்துக்க ...தாலியைக்கூட மெதுவா கட்டிக்கலாம் !''

 ருசியில் சிறந்தது  'ராட்டை ' மீனாமே :)
          புலால் மறுத்த காந்தீயவாதிகளும் 
          விரும்பியிருந்தால் உண்டு இருப்பாரோ ...           
           'ராட்டை ' மீனை ! 

24 comments:

 1. இதற்குத்தான் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்பது!!!

  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமே அந்த காலம் வந்திடும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கின்றனர் இளைய தலைமுறையினர் :)

   Delete
 2. இன்றைக்கு இதுவுமா நடக்குது ?
  குடியரசு தினவாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. தலைக்கீழா கொடி பறக்கும் போதே தெரியுதே ,தலைவர் ஏற்றிய கொடிதான்னு :)

   Delete
 3. குடி... குடிஅரசு கொடுக்கும்...! குடிமகனைக் காப்பது கடமையல்லவா...?!

  நா சொல்ல வேண்டியதை நீ சொல்கிறாய்... எல்லாம் நேரம்டா... எங்கிருந்தாலும் வாழ்க...!

  அதுக்கு நீங்க கிணத்தில போடலாம்...!

  ரொம்ப லேட்டா சொல்றீங்க... பத்து வருசத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கனும்...!

  ராட் ‘டை’ வச்சிருக்கேன்... ஆக்கி வச்சிருக்கேன்...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. அது சரி இதைக்காட்டிலும் பெரிய கடமை நமக்கென்ன இருக்கு :)

   பையன் பொறந்தா என் பெயரை வைப்பாள் ,அப்போ புரிஞ்சுக்கோ :)

   போட்ட இடம் தெரியும் ,போன இடம் தெரியுமா :)

   பிள்ளைக்கும் இந்நேரம் பத்து வயதாகியிருக்கும் :)

   இந்த டை கழுத்துக்குள்ளே இறங்கிறதாச்சே:)

   Delete
 4. 1. கல்வியாளர்கள் மற்றும் நல்ல சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் ஆனால் அரசியல் சாக்கடைக்குள் புகுந்து விடாமல் நேர்மையானவர்களாக வந்தால் ந்ல்லது..ஹும் இன்னிக்கு அங்கயும் கொடியேத்தமா...விளங்கிடும்

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. பூவோட சேர்ந்த நாறும் மணக்கும் ,ஆனால் இப்போ ,நாரோட சேர்ந்து பூவும் நாறுதே :)

   Delete
 5. எனது இனிய குடியரசுதின வாழ்த்துகள். த.ம.6

  ReplyDelete
  Replies
  1. குடியரசுக்கு வயது 68 ஆனால் இன்னும் வயசுக்கு வரலையே :)

   Delete
 6. Replies
  1. தாலியைக்கூட மெதுவா கட்டிக்கலாம் என்பதையுமா :)

   Delete
 7. இருந்தாலும் குடிமக்கள் மேல் உங்கள் பாசம் அலாதி
  எங்கிருந்தாலும் வாழ்க வாழவிடுவேனா
  அதுதானே நம் தலைவர்கள் வேண்டுவது
  முதலில்பெத்துக் கொண்டால் அநாவசிய சந்தேகங்கள் வருமே
  தொட்டியில் வளர்க்கும் சில மீன்கள்தான் தெரியும்

  ReplyDelete
  Replies
  1. நாத்திகன் இல்லாத கடவுளைப் பற்றியே நினைப்பது போலவா :)
   வாழு வாழ விடு என்பது காதலின் கொள்கை :)
   டாக்டர் ஆலோசனை என்று சொல்லிக்கலாம் :)
   தொட்டி மீனாவே இருக்கீங்களே :)

   Delete
 8. Replies
  1. முதலாளிக்கு வந்தது நல்ல எண்ணம் தானே :)

   Delete
 9. காதலியின் ஆசையை நிறைவேற்ற துடிக்கலைன்னா..காதலன் ஆக இருக்க முடியுமா....???

  ReplyDelete
  Replies
  1. அதிலும் இந்த ஆசையை நிறைவேற்றலைன்னா ஆம்பளைன்னு சொல்லிக்க முடியுமா :)

   Delete
 10. இனிய இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கடல் கடந்து வந்த வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 11. குடியரசு நாள் வாழ்த்துகள்.நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

   Delete
 12. Replies
  1. செல் வழி சுருக் கருத்துக்கு நன்றி :)

   Delete